மோசில்லா பொதுக்குரல் திருவிழா – ஏப்ரல் 14 2021 – நாள் முழுதும்

உங்களது குரலை “Mozilla பொதுக்குரல் திட்டத்திற்கு” கொடையளியுங்கள்…
நாள் : 14-ஏப்ரல்-2021
இடம் : எந்த இடத்தில் இருந்தும்…

commonvoice.mozilla.org/ta

எப்படி பங்களிக்கலாம்?

திரையில் காட்டப்படும் சொற்களை படித்து பதிவு செய்யலாம். அல்லது பிறர் படித்தவற்றைக் கேட்டு சரியா தவறா என சொல்லலாம்.

 

என்ன கருவி வேண்டும்?

இணைய இணைப்பு, கணினி, மோசில்லா உலாவி அல்லது மொபைல் கருவி, மோசில்லா உலாவி

 

காணொளி பாடங்கள்:

www.youtube.com/watch?v=uzIvQJfp2Zs
www.youtube.com/watch?v=Ne1wnOnZWcI
www.youtube.com/watch?v=XSI57bFq3yk

 

அறிமுக நிகழ்வு :
meet.google.com/kcu-info-vss

நேரம் : காலை 10:00 மணிக்கு (இந்திய நேரம்)

நாள் – 14-ஏப்ரல்-2021

 

நிகழ்ச்சி ஏற்பாடு – கணியம் அறக்கட்டளை, ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகம்-கனடா, மொசில்லா தமிழ்நாடு, நூலக நிறுவனம்-இலங்கை, தமிழ் விக்கிப்பீடியர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம்-கனடா

 

மோசில்லா பொதுக்குரல் திருவிழாவில் பங்கு பெற்று, நாள் முழுதும் பங்களிக்க வேண்டுகிறோம்.

நாளை மட்டுமல்ல. எல்லா நாட்களிலும் சிறிது நேரம் தொடர்ந்து பங்களிக்கலாம்.

 

நன்றி.

 

 

மோசில்லா பொதுக்குரல் பங்களிப்புகள் பற்றிய விவரங்களுக்கு –

தமிழ் பொதுக் குரல் – திறந்த தமிழ்த் தரவுகளின் அணுக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி பேசுவோருக்கு உதவுங்கள்!

 

திறந்த தமிழ்த் தரவுகளின் அணுக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி பேசுவோருக்கு உதவுங்கள்!

தமிழ்ச் சமூகம் தொடர்பில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? உங்கள் குரலைக் கொடையளித்து தமிழ் பேசுவோருக்கான திறந்த, அணுக்கத்திறனுடனான தொழில்நுட்பங்களை மேம்படுத்த உதவுங்கள். ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகமானது மொசில்லா தமிழ்நாடு, கணியம் அறக்கட்டளை, நூலக நிறுவனம், தமிழ் விக்கி, அண்ணாமலை கனடா ஆகியவற்றுடன் இணைந்து பொதுக் குரல் திட்டத்தினையும் தமிழ்க் கணிமைக்கு அதன் முக்கியத்துவத்தினையும் பரவச் செய்யும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறது.

இன்றே பங்களியுங்கள்! (தளத்திற்கான தொடுப்பு)

 

ரெலிகிராம் குழுவில் உரையாடுக!

 

உதவி தேவை எனில் கூகிள் குழுவிலும் கேக்கலாம் (மின்னஞ்சல் digital-tamil-studies@googlegroups.com)

நான் என்ன செய்ய வேண்டும்? 

மொசில்லா இணையத்தளத்திற்குச் சென்று, அங்கே தரப்படும் எளிய திறந்த தமிழ்ச் சொற்றொடர்களை வாசியுங்கள் அல்லது திருத்துங்கள். உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி, லீடர்போடில் வெளிப்படையாகத் தெரியப்படுத்தினால் உங்கள் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படும்.
பொதுக் குரல் தளம் என்றால் என்ன? 

மொசில்லா, பயர்பொக்ஸ் என்னும் பெயரிலான இணைய உலாவியை உருவாக்கிய ஓர் இலாப நோக்கற்ற நிறுவனம். இப் பொதுக் குரல் திட்டமானது திறந்த குரல் தரவுத் தொகுப்புகளின் அணுக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது. பயனர்கள் தமிழ்ச் சொற்றொடர்களை வாசிப்பதனூடாக, எவரும் பயன்படுத்தக்கூடிய திறந்த அணுக்கத்துடனான குரல் தரவுத் தொகுப்புகளை உருவாக்குவதில் பங்களிக்கின்றனர். மொசில்லா பொதுக் குரல் திட்டத்தின் “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை” இங்கே வாசிக்கலாம்.

இது தமிழ்ச் சமூகத்திற்கு எவ்வாறு பயன்படும்? 

நவீன கணிமை, தரவுகளினாலேயே இயங்குகிறது! எனினும், திறந்த தமிழ் மொழித் தரவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இத்தரவுத் தளம் தமிழ்க் குரல் மற்றும் கணிமை, பேச்சு அறிதல் அங்கீகரிப்பு, பேச்சு இணைப்பாக்கம், அணுகுதிறனுடைய தொழில்நுட்பங்கள் தொடர்பான கற்கைகளை மேற்கொள்ள விரும்புவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

 

பங்களிப்பதற்கு எனக்கு உதவி தேவை!

பங்களிப்பு தொடர்பான உதவிக்கு, பொதுக் குரல் சமூகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் (அனைத்து வளங்களும் தமிழில் உள்ளன)

 

தொடர்புக்கு – KaniyamFoundation@gmail.com

Telegram Group – t.me/TamilCV

%d bloggers like this: