நிகழ்வுக் குறிப்புகள் – இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – TamilChairUK – சென்னையில் கலந்துரையாடல்

சனவரி 07, 2019 அன்று மாலை, சென்னை சவேரா விடுதியில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குதல் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்து கொண்டோர்
1. சிவா பிள்ளை, இலண்டன் தமிழ்த்துறை ஒருங்கிணைப்புக் குழு
2. மு. கனகலட்சுமி
3. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், இணை ஆணையர், சென்னை பெருநகர காவல்துறை
4. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை
5. வாசுகி, தலைமை நிலைய செயற்பாட்டாளர், உலகத் தமிழர் பேரவை
6. சி. பெரியசாமி
7. மு. வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ்
8. கு. சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
9. சு. சதாசிவம், சென்னை கிறுத்துவக் கல்லூரி
10. த. சீனிவாசன், கணியம் அறக்கட்டளை
11. கலீல் ஜாகீர், கணியம் அறக்கட்டளை
12. அன்வர், கணியம் அறக்கட்டளை
13. உ. கார்க்கி, கணியம் அறக்கட்டளை
14. சே. அருணாசலம், கணியம் அறக்கட்டளை

சிவா பிள்ளை

அனைவரின் அறிமுகத்துக்குப் பிறகு, சிவா பிள்ளை அவர்கள் இலண்டன் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியான SOAS (School of Oriental and organisational studies, London, UK”) ல் பல நூறாண்டுகள் தொடர்ந்து இயங்கும் வகையில் தமிழ்த்துறை ஒன்று உருவாக்க வேண்டும் என்ற தேவையையும், அதன் வரலாற்றையும் விளக்கினார். உலகின் பிற நாடுகளில் அமைக்கப்படும் தமிழ் இருக்கை ஆய்வுப் பணிகளை மட்டுமே முதன்மையாக கொண்டவை. ஆனால் இலண்டனில் அமைக்கப்படுவது தமிழை தொடக்க நிலை, இடைநிலை, உயர் நிலைகளில் அனைவருக்கும் முழு நேரப் பாடமாக கல்வி தரும் வகையில் ஒரு முழு துறை ஆகும். இதன் மூலம் இலண்டன் பல்கலைக் கழகத்தின் ஆதரவுடன் பிரிட்டனில் உள்ள இளைய தலைமுறையினர், தமிழை முறையாக்க் கற்கவும், அவர்களது கல்வியில் அதிகப் புள்ளிகள் பெறவும் இயலும்.

இலண்டன் பல்கலைக்கழகம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பல்லாண்டுகள் தொடர்ந்து இயங்கும் வகையில், 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் வைப்பு நிதி தேவைப்படுகிறது. அதற்கான நிதி திரட்டுதல் பற்றிய ஆலோசனைகளை அனைவரும் வழங்கினர். தமிழக அரசு, மத்திய அரசு, பல்வேறு கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகளை அணுகலாம் என்று முடிவு செய்யப் பட்டது.

பின்வரும் தன்னார்வப் பணிகள் ஏற்கப் பட்டன. அரசு அமைப்புகளை அணுகுவதில் கனகலட்சுமி உதவுவார். குவைத் தமிழ்ச்சங்கங்களை அன்வர் அணுகுவார். கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகளை பாலகிருஷ்ணன் அணுகுவார். தனியார் நிறுவனங்களை சிதம்பர் தொடர்பு கொள்வார். சென்னையில் அல்லது இலண்டனில் கலை நிகழ்ச்சிகளை நடத்த அக்னி ஏற்பாடு செய்வார்.

ஓரிரு வாரங்களில் அடுத்த சந்திப்பு ஏற்பாடு செய்யப் படும். அதில் அடுத்த கட்ட செயல்கள், முயற்சிகள் விவாதிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு – tamilchairuk.org/

தொடர்புக்கு – tamilchairuk@gmail.com

புகைப்படங்கள் இங்கே –
photos.app.goo.gl/43pQfFAim6TXmbcC9

வேறு ஒரு செய்திக் குறிப்பு இங்கே – worldtamilforum.com/forum/forum_news/london_university_tamil_chair_savera/

%d bloggers like this: