கணியம் – இதழ் 1

வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் கணிணித் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வழங்குகிறோம். கட்டற்ற மென்பொருட்களான Free Open source software பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெறும்.

 

கணிணி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில் நுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களைத் தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

 

ஊர் கூடி தேர் இழுக்கும் இச்சேவையில் உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம். உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.


முதல் இதழை அளிப்பதில்  பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.


இந்த இதழின் கட்டுரைகள் :

 • கட்டற்ற மென்பொருள்
 • லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்
 • உபுண்டு நிறுவுதல்
 • உபுண்டு மென்பொருள் மையம்
 • கோப்புகளின் வடிவமைப்பு
 • Panel-ன் அமைப்புகள்
 • Scribus – ஒரு DTP மென்பொருள்
 • Gedit – உரை பதிப்பான்
 • தமிழும் விக்கியும்
 • தமிழ் விக்கிப்பீடியா  ஊடகப் போட்டி
 • விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்
 • விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவன்
 • கார் ஓட்டலாம் வாங்க Torcs
 • MP4TOOLS- மல்டி மீடியா மாற்றி
 • அறிவிப்புகள் – தமிழ் கணினி ஆய்வு பயிலரங்கம்


பதிவிறக்கம் செய்ய :

கணியம்-01
கணியம்-01
kaniyam-01.pdf
Version: 1
3.8 MiB
2929 Downloads
Details...

 

 

33 thoughts on “கணியம் – இதழ் 1

 1. sivakumar

  Srini :

  First of Happy New Year 2012.

  And hats-off to your commitment (obsession !!!) – to bring this Tamil e-Magazine.

  Like every one I too would do the whatever I could do – to make this one of the most popular e-magazine.

  Reply
 2. Vivek

  மின் புத்தகம் நன்றாக இருக்கிறது. அனைவரும் பயன்பெறக்கூடிய ஒன்று. மிக அருமையான முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  Reply
 3. Santhanam

  Very Happy to see this effort, hope this brings out new hope in lots of Tamil medium students who are still computer illiterate. My Heartiest wishes to all concerned.

  Reply
 4. சு. சரவணா

  நல்ல முயற்சி. வாழ்த்துகள்!

  Reply
 5. சிவகுமார்

  நல்ல முயற்சி. இத்துடன் நின்றுவிடாது தொடர்ந்து வெளிவர வாழ்த்துகிறேன்.

  Reply
 6. ananth

  நன்றி…………நன்றி……….. தங்களுடைய முயற்சியை வாழ்த்தி முடிந்த ஒத்துழைப்பை அளிப்போம் மேன்மேலும் வளர ……………

  Reply
  1. editor Post author

   editor@kaniyam.com என்பதே சரி.
   எழுத்து பிழைஐ திருத்தி விட்டோம்.
   நன்றி

   Reply
 7. கதிரேசன்

  தெளிவான எண்ணத்துடன் அருமையான பொருளடக்கம் -கணியம் மேன்மேலும் சிறக்க எனது அன்பு வாழ்த்துக்கள் -கதிர் ஆக்ஸ்போர்ட்

  Reply
 8. வடிவேல் கன்னியப்பன் பிள்ளை

  புத்தாண்டில் நல்லதொரு முயற்சி. தொடர்க.கணியம் பற்றி முழுமையாக அறிய என்போன்றோர்க்கு அரிய வாய்ப்பு. கணியம் பற்றி அரைகுறை அறிவுடையோர்க்கு பயனுள்ள இணைய தளம். வாழ்த்துகளும் பாராட்டுகளும். என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  Reply
 9. M. Fioretti

  Congratulations for this new initiative to spread Free Software. Will you also have an English edition, at least for some articles, e.g. local community news? It would be nice to follow them. Please let me know.

  Best regards, and I wish you a great 2012!

  M. Fioretti
  http://stop.zona-m.net

  Reply
   1. M. Fioretti

    sorry, but I have the feeling that you misunderstood (part of) my question. I do know very well that there are many websites spreading FOSS in English, I myself write on several of them. I specifically asked translations “at least for some articles, e.g. local community news”. I wasn’t asking to spread FOSS tutorials and similar content from Tamil to English speakers, but to spread knowledge of how FOSS is already used in your country, even to readers who unfortunately can’t read Tamil. I for one would be very interested. Thanks for your attention!

    Best Regads,
    M. Fioretti

    Reply
    1. editor Post author

     Thanks for the interest in knowing FOSS activities in India.
     Will do as you said, in the upcoming issues.

     Thanks again for the suggestion and support.

     Reply
 10. D. PRABHU

  கணியம் வெற்றி பெற எனது பங்கு நிச்சியம் உண்டு .இது ஒரு முயற்சி அல்ல ஒரு விதை இது விருட்சம் மாக மாறி பல இன்ப கனிகளை விரைவில் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் .எனது பாராட்டுகள் .எனது மாணவர்களிடம் இதை பகிரிந்து கொள்ள விழைகிறேன் .

  Reply
 11. balaji pillai

  மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  Reply
 12. balaji pillai

  பெரும்பாலான தமிழ் கணினி மொழி பெயர்பளர்கள் செய்யும் தவறை நீங்களும் செயதிர்கள். தமிழர்கள் தமிழ் வழியாக தான் கற்க வேண்டும் என்று நினைகிரர்கலே தவிர முழு கலை சொற்களும் தமிழில் இருக்க வேண்டும் என நினைப்பது இல்லை. file என்ற வார்த்தையை கோப்பு என மொழி பெயர்க்காமல் பைல் என்றாய் பயன்படுத்துங்கள். கோப்பு என படித்தல் மென்பொருளில் வேலை செய்வது கடினமாகிறது .

  Reply
  1. ந.ர.செ. ராஜ்குமார்

   அந்த பெரும்பாலானவர்களில் நானும் ஒருவன். அடைப்புக் குறியில் ஆங்கிலத்திலும் குறிப்பிடப் பட வேண்டும்.

   Reply
 13. செந்தில் குமார் ஜெ

  உங்களுடைய சமுக அக்கறை மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகள்!

  Reply
 14. சோபின் பிராஞ்சல்

  கணியம் என்பதன் பொருள் என்ன?

  Reply
 15. Pingback: Homepage

Leave a Reply