கணியம் – இதழ் 2

வணக்கம்.

கணியம் முதல் இதழுக்கு கிடைத்த பெரும் வரவேற்புக்கு நன்றி. கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் உங்கள் பராட்டுகளையும் நன்றிகளையும் அர்ப்பணிக்கிறேன்.

தற்போது இணையத்தில், கட்டட்ற மென்பொருட்கள் பற்றிய பல தகவல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை எழுதும் அனைத்து நண்பர்களிக்கும் நன்றிகள். மேலும் புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும், இணைய இணைப்பு இல்லாதவர்களும் படிக்கும் வகையிலும், கணியம் வளர்ந்து வருகிறது. இந்த பிடிஎஃப் கோப்புகளை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இம்மாதம், ரிச்சர்ட் ஸ்டால்மனின் வருகை, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. அவர் உரை கேட்க, அனைவரையும் அழைக்கிறேன். விவரங்கள் உள்ளே.

கணியம்‘ தொடர்ந்து வளர, உங்களது உழைப்பும் தேவை. கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

இந்த இதழின் கட்டுரைகள் :

 • ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்
 • பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள்
 • தட்டச்சுக்கான கட்டற்ற மென்பொருள்
 • Stellarium – வானவியல் கற்போம்
 • மொழிபெயர்ப்போம், வாருங்கள்
 • CAD – Computer Aided Drawing – வரைகலை பயன்பாடுகள்
 • Scribus – ஒரு DTP மென்பொருள் – பாகம் – 2
 • விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை திரும்பக்கொண்டு வருவது எப்படி?
 • வேண்டுகோள்: ஜிகாம்பிரிஸ் – சத்தம் மொழிபெயர்ப்பு
 • Command Line அற்புதங்கள்
 • வாசகர் கருத்துகள்
 • Note pad ++  இலவச உரைப்பான்
 • பிப்ரவரியில் FOSS உலகம்
 • jQuery  வீடியோ வகுப்புகள்
 • ரிச்சர்டு ஸ்டால்மன்
 • இலவச மென்பொருள் குழுமம், தமிழ் நாடு
 • நிகழ்வுகள்
 • உரிமைகள்
 • கணியம் பற்றி

அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

நன்றி.

ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்

பதிவிறக்கம் செய்ய :

 

கணியம்-02
கணியம்-02
kaniyam-02.pdf
Version: 2
3.6 MiB
3385 Downloads
Details...

21 Comments

 1. Raghunathan Semburakkiannan

  Hi Editor/Contributor,

  It’s really good to see computer magazine in tamil with more valuable content. Kudos to contributors and Editor. Keep rocking.

  -Raghu

  Reply
 2. இரா.கதிர்வேல்

  நன்றி. தொடர்ந்து மேலும் சிறப்பாக பணியாற்றுவோம்.

  Reply
 3. Pingback: கணியம் – இதழ் 2 | root@linux

 4. Thomas Ruban

  மின்புத்தகம் பயனுள்ளதாக எளிமையாக உள்ளது. இம்முயற்சி தொடர வாழ்த்துக்கள். மின்புத்தகம் எல்லோருக்கும் பயன்படும் மிக்க நன்றி.

  Reply
 5. V. Hari Hara Prasad

  Very happy to see the part-2. I was expecting a response to my first mail. No problem. some of my questions have been answered. I wish the contributors get the Best of the best.

  Reply
 6. Ashokkumar I

  Nice work….keep it to grow up our country with open source software…

  Reply
  1. Ashokkumar I

   And you can change this wordpress theme for reader friendly…also it increases the traffic..

   Reply
   1. editor (Post author)

    Thanks for the suggestion. Please suggest some neat wordpress.themes.

    Reply
 7. சிங்கப்பூர் சர்மா

  ஆங்கிலத்தில் வருவதுபோல் கட்டற்ற கணினி மென்பொருள் பற்றித் தமிழில் அறிந்துகொள்ள அதிக வாய்ப்பில்லை என்ற குறையைக் கணியம் இதழ் நிவர்த்தி செய்கிறது. புத்தாண்டு தொடக்கம் புதிய கணினித் தொழில் நுட்பங்களை கணியம் வழி காணும் போது பேருவகை அடைகிறோம். புத்தாக்கச் சிந்தனைகளைத் தமிழுலகம் என்றும் வரவேற்கும். -சிங்கப்பூர் சர்மா

  Reply
 8. suresh babu

  tamil lil entha tagavalgalai parparthuku magichi aga ulathu

  Reply
 9. பிரபு கிருஷ்ணா

  மிக அருமை.

  இதே போன்று கற்போம் என்று ஒரு தொழில்நுட்ப மின்னூல் நாங்கள் வெளியிடுகிறோம் , நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்.

  www.karpom.com/p/karpom-e-magazine.html

  Reply
 10. matheshwaran

  நண்பா
  கணிணியம் 2 தரவிறக்க முடியவில்லை உதவுங்க பிளிஸ்

  Reply
  1. editor (Post author)

   We can able to download it.
   Wha error you are getting?

   Reply
 11. S.Giri Kumar

  மிக சிறப்பாய் இருந்தது உங்கள் மின்னூல் . உங்கள் பணி சிறக்கவும் , தொய்வின்றி தொடரவும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகள் .

  என்றென்றும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பொன் நாளாக இருக்கட்டும் .

  அன்பன்
  கிரி குமார்

  Reply
 12. Yogesh

  Nice ..

  Few corrections. Gcompris is pronounced Gee-Com-Pree .. Arun SAG’s article has a spelling error. Fedora REMIX is what he meant. Great effort.


  Yogesh.

  Reply
 13. Rajkumar Ravi

  எங்கள் மனத்தை கவர்ந்தது. நன்றி.

  Reply
 14. நந்தினி சிவசோதி

  இந்நூல் மிகவும் நன்றாக உள்ளது. மேலும் விருத்தியடைய எனது வாழ்த்துக்கள்

  Reply
 15. எஸ்ஸார்

  நல்ல முயற்சி, !!

  தமிழ் நாட்டில் மட்டுமே 7 கோடிபேர்.
  நம்மை ஆண்ட இங்கிலாந்துகாரர்களை விட அதிகமான மக்கள் தொகை.

  ஆனால் தொழில்நுட்பத்தில் வெளிவரும் வார, மாத பத்திரிகைகள் தமிழ் பேசும் நல்லுலகுக்கு தற்போது மிக மிக சொற்பம்.

  உங்கள் முயற்சி சிறப்பான தொடக்கம்..

  Reply
 16. மகேந்திரன்.சு

  தங்களின் மின் இதழை பிடிஎஃப் கோப்பாக மட்டுமல்லாமல் எச்டிஎம்எல் உரையாகவும் வெளியிட்டால் கைபேசியில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  Reply
 17. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  Free software என்பது சில இடங்களில் *இலவச மென்பொருள்* என்றும் சில இடங்களில் *சுதந்திர மென்பாருள்* என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. *கட்டற்ற மென்பொருள்* என்பது Free Software-கு இணையான நல்ல தமிழ்ச்சொல்.

  Reply
 18. mani

  please provide facility for on line reading, so that verifications if any can be accessed easily.

  Reply

Leave a Reply

%d bloggers like this: