தமிழ்99 – ஸ்டிக்கர்கள் – நீங்களே அச்சடிக்கலாம்

 

 

 

தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.

 

தமிழ்99 விசைப்பலகை முறை, தமிழில் தட்டச்சு செய்வதை எளிதாக்குகிறது.

இதன் சிறப்புகள் –
1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு
2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம்.
3. பழகுவது எளிது.
4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிந்து கொள்கிறோமோ அந்த வகையில தான் இது செயற்படும் விதமும் அமைந்திருக்கிறது. அதாவது, உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்பது தான் இவ்விசைப்பலகையின் அடிப்படை.
5. மிக வேகமாக தட்டச்சு செய்யலாம். விரல்களை அயர வைக்காது.
6. இது பல தமிழறிஞர்கள் ஒன்று கூடி கலந்து பேசி உருவாக்கி, சோதித்துப் பார்த்து தமிழக அரசால் கணித்தமிழுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விசைப்பலகை
7. 247 தமிழ் எழுத்துக்களை 31 விசைகளில் அடக்குகிறது இந்த விசைப்பலகை வடிவமைப்பு.

அனைத்தையும் விட முக்கியமான விசயம், இதைப் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. romanised / அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை மட்டும் பயன்படுத்த வேண்டாம். முதலில் கொஞ்ச நாள் தமிங்கிலத்தில் எழுதிப் பழகி விட்டு அப்பாவுக்கு காகிதத்தில் கடிதம் எழுதும்போது என்னை அறியாமல் appa eppadi irukkeenga? ungkaL katitham kaNdeen என்று எழுதும் அளவுக்கு உள்மனதில் இந்த எழுத்து முறை பதிந்து விடுகிறது.

 

 

www.tamil99.org சென்று தமிழ்99 பற்றி நன்கு அறியலாம்.

 

 

ஏன் தமிழ்99 சிறந்த தமிழ் விசைப்பலகையாகக் கருதப்படுகிறது?
blog.ravidreams.net/tamil99/

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?
blog.ravidreams.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

 

 

தமிழ்99 முறையை எளிதில் பழக, ஸ்டிக்கர் தயாரித்து உள்ளோம்.

அதன் படம் இதோ.

 

tamil-letters

 

5 mm  x  5 mm அளவில் கட்டமும் அதனுள் எழுத்தும் சேர்த்து உருவாக்கியுள்ளோம்.
இந்த PDF கோப்பை அருகில் உள்ள ஸ்டிக்கர் அச்சடிக்கும் கடையில் சென்று,
அச்சடித்து, ஸ்கோரிங் செய்து கொள்க.

 

பின் ஒவ்வொரு எழுத்தாகப் பிரித்து, உங்கள் மடிக்கணிணி அல்லது கணிணி விசைப்பலகையில்
எளிதாக ஒட்டிக் கொள்ளலாம்.

பின் தமிழ்99 முறையில் எளிதாக தமிழில் தட்டச்சு செய்து மகிழுங்கள்.

 

PDF கோப்பை பதிவிறக்கம் செய்க

Tamil-letters-for-sticker-print
Tamil-letters-for-sticker-print
tamil-letters-for-sticker-print.pdf
34.0 KiB
444 Downloads
Details...

 

ஸ்டிக்கரின் மூலக்கோப்புகள் ( நிறம், அளவு போன்ற மாற்றங்கள் செய்ய )

Tamil99 Stickers Source Files
Tamil99 Stickers Source Files
tamil99-stickers.zip
1.2 MiB
118 Downloads
Details...

10 Comments

 1. ஜெகதீஸ்வரன்

  இசுலாமிய நாடுகள் சிலவற்றில் அரபு மொழியில் தட்டச்சுக் கருவிக்கான எழுத்துருக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன். வெளிநாடுகளிலிருந்து வாங்கிவரப்படும் மடிக்கணினிகளிலும், கைப்பேசிகளிலும் ஓரத்தில் அரபு எழுத்துருக்கள் இருக்கின்றன. தமிழ் விக்கிப்பீடியா 10 ஆண்டு கொண்டாடத்தில் விருந்தினர் ஒருவர் அரசின் ஒரு சட்டம் மூலமாக இங்கும் தமிழ் தட்டச்சு முறையை அறிமுகம் செய்யலாம் என்றார். பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும் இந்த விடயத்தினைப் பற்றி தமிழ் ஆர்வளர்களும், தமிழ் இயக்கங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  இது போன்ற சிறந்த முயற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.

  Reply
 2. Pingback: Tamil Language & Tamil Typewriter / Tamil99 Layout Keyboards in Ubuntu 14.04 | oppili

 3. Pingback: Tamil99 Keyboard Layout | oppili

 4. பிரஸீ

  என்க்கு phonetic keyboard தான் சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன் ….

  Reply
 5. Pingback: Tamil / Tamil99 Keyboard for Windows (including link to Tamil Fonts) | oppili

 6. இ.பு.ஞானப்பிரகாசன்

  வெகு காலமாக எனக்கு இடர்ப்பாடளித்து வந்த ஒரு சிக்கலைத் தாங்கள் நிரந்தரமாகத் தீர்த்து வைத்து விட்டீர்கள்! மிகவும் நன்றி!

  நான் தொடக்கத்திலிருந்தே தமிழ்99-இல்தான் தட்டெழுதி வருகிறேன். ஆண்டுக்கணக்கிலான பழக்கம் காரணமாக, விசைப்பலகை மீது தமிழ் எழுத்துக்களை ஒட்டாமல், கணினித் திரையில் தமிழ்99 விசைப்பலகையைப் பார்த்துக் கொண்டே தட்டெழுத வேண்டிய தேவை இல்லாமல், இப்படி எந்த ஒரு வகையிலும் தமிழ் எழுத்துக்களைப் பாராமலே என் உயரளவு வேகத்தில் தட்டெழுதும் திறன் எனக்குக் கைவந்து விட்டாலும், எனக்குள் அந்தத் தன்னம்பிக்கை முழுமையாக ஊன்றாததால் எழுத்தை விசைப்பலகையில் ஒட்டாமல் எழுதும்பொழுது எங்கே தவறாக எழுதி விடுவோமோ என்கிற சிறு அச்சம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருப்பதால், அதனாலேயே பிழை நேர்ந்து விடுகிறது. ஆகையால், ஒவ்வொரு முறை விசைப்பலகையை மாற்றும்பொழுதும் தமிழ் எழுத்துக்களை விசைப்பலகையில் ஒட்டி வைத்துதான் ஆக வேண்டியிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் வெள்ளைக் கோந்துத்தாள் (sticker) ஒன்றில் விசைகளின் அளவுக்குக் கட்டம் வரைந்து, அதற்கு உள்ளே தமிழ், ஆங்கில எழுத்துக்களை எழுதி, அவற்றை வெட்டி விசைப்பலகையில் ஒட்டிக் கொண்டிருந்தேன். மணிக்கணக்கில் நேரமெடுக்கும் மிகச் சிரமமான இந்த வேலையை இந்த முறை செய்யத் தேவையில்லாமல் ஆக்கி விட்டீர்கள்! மிக்க நன்றி! மிக மிக நன்றி! இந்தக் கட்டுரையை நான் முடிந்த அளவுக்குப் பரப்புவேன்! மிக்க மகிழ்ச்சி!

  Reply
 7. இ.பு.ஞானப்பிரகாசன்

  ஒரு சிறு வேண்டுகோள் தோழரே!

  இந்தக் கோந்தடையில் (sticker) கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் மட்டும்தான் வெளியிட்டிருக்கிறீர்கள். இது கறுப்பு விசைப்பலகைக்கு மட்டும்தானே பொருந்தும்! இதே போல் வெள்ளைப் பின்னணியில் கறுப்பு எழுத்துக்கள் கொண்ட ஒரு கோந்தடையையும் வெளியிட்டீர்களானால் வெள்ளை விசைப்பலகை வாங்குபவர்களும் பயனடைவார்களே! செய்வீர்களா? நன்றி! வணக்கம்!

  Reply
 8. இ.பு.ஞானப்பிரகாசன்

  பழைய பதிவாயிற்றே, என் கருத்து பார்க்கப்படுமோ இல்லையோ என்று ஐயுற்றேன். என் கருத்துரையைப் பார்த்ததுமில்லாமல் உடனடியாக நடவடிக்கையும் எடுத்து விட்டீர்கள்! மிக்க நன்றி! மிகவும் மகிழ்ச்சி!

  Reply
 9. Pingback: Getting ibus to work for Tamil input | My Blog

 10. Rajini Raja

  No stickers available for grantha consonants.

  Reply

Leave a Reply

%d bloggers like this: