PHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது?

பகுதி – 1

பகுதி – 2

பகுதி – 3

  • PHP எப்படி வேலை செய்கிறது?

 

PHP எப்படி வேலை செய்கிறது?

பயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்து, உலாவியினுடைய முகவரிப்பட்டையில் இணையதளத்தின் முகவரியை கொடுத்து இயக்கும் போது, உலாவி வலைப்பக்கத்தின் பிரதியை கேட்டு  இணைய வழங்கிக்கு கோரிக்கை அனுப்புகிறது.

இணைய வழங்கி அந்த கோரிக்கையை பெற்றுக்கொண்டு அந்த வலைப்பக்கத்தினை தேடி கண்டுபிடித்து பயனரினுடைய உலாவிக்கு அனுப்பி வைக்கிறது. இவையனைத்தும் இணையத்தின் மூலம் கனக்கச்சிதமாக நடைபெறும்.

இணைய வழங்கி வலைப்பக்கத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாது. கேட்ட பக்கத்தினை உலாவிக்கு கொடுப்பதோடு சரி வழங்கியின் வேலை முடிகிறது. உலாவிதான் உள்ளடக்கங்களை காண்பிக்கும் செயல்களில் ஈடுபடுகிறது.

HTML, CSS, JavaScript, jQuery என பல தொழில்நுட்பங்களைக் கொண்டு இன்றைக்கு இணையதளங்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேற்காணும் தொழில்நுட்பங்களின் நிரல்வரிகளைத்தான் உலாவிகளால் புரிந்து கொள்ள முடியுமே தவிர. PHP போன்ற நிரல்களை எவ்வாறு காண்பிப்பது என்பது உலாவிக்கு தெரியாது.

ஒரு வலைப்பக்கத்தில் PHP யின் நிரல்கள் இருந்தால், PHP யின் நிரலை உலாவி மறுபடியும் இணைய வழங்கிக்கு அனுப்பி வைக்கும் அந்த நிரல்கள் PHP pre-processing module க்கு அனுப்பி வைக்கப்படும். வலைப்பக்கத்தை வடிவமைத்தவர் என்ன நிரல் எழுதியிருக்கிறாரோ அதற்கான வெளியீட்டை PHP pre-processing module Web Server க்கு அனுப்பி வைக்கும். அதன்பின்பு Web Server ஆனது வலைப்பக்கத்தில் PHP நிரல் இருக்கும் இடத்தில் PHP pre-processing module அனுப்பி வைத்ததை Substitutes செய்யும். அதற்கேற்றாற்போல் உலாவியானது வலைப்பக்கத்தை நமக்கு காண்பிக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு வலைப்பக்கத்தில் இருக்கும் php நிரல் அந்த உலாவியால் process செய்யப்படாது. php pre-processing module ஆல் process செய்யப்பட்டு அதில் கிடைக்கும் வெளியீட்டைத்தான் உலாவி காண்பிக்கும்.

 

இதை ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் காண்போம். கீழ்காணும் நிரலில் <?php  ?> எனும் சிறப்புக்குறியீடுகள் இருக்கிறது. இந்த குறியீடுதான் உலாவிக்கு php நிரலை உணர்த்துவதற்கான குறியீடு.

<?php – எனும் குறியீடு php நிரல் ஆரம்பமாவதையும், ?> எனும் குறியீடு php நிரல் முடிவடைவதையும் குறிக்கிறது.

 

<!–test1.php –>

<!DOCTYPE html>

<html>
<head>
<title>PHP – Learning</title>
</head>

<body>
<h1>Hello PHP!</h1>
<?php
echo “Hello World!”;
echo “<br />”;
echo “Hello PHP!”;
?>
</body>
</html> 

test1.php

<?php இந்த குறியீட்டிற்கு முன்பு உள்ள வரிகள் அனைத்தும் HTML இன் நிரல் வரிகள். அதன்பின் தொடரும் வரிகள் php நிரல்வரிகள். இந்த வரிகளை web server கண்டுபிடித்து அதற்கான வெளியீட்டை உடனடியாக web browser க்கு அனுப்பி வைக்கிறது. அதை உலாவி நமக்கு காண்பிக்கிறது.

php hello

Test1.php நிரலில் வெளியீடு

page source – இன் வெளியீடு 

<!DOCTYPE html>
<html>
<head>
<title>PHP – Learning</title>
</head>

<body>
<h1>Hello PHP!</h1>
Hello World!<br />Hello PHP!    </body>
</html>

php 2

சிவப்பு நிறத்தில் இருப்பவைதான் php நிரலின் வெயியீடு.

மேற்காணும் வெளியீட்டை HTML மூலமாகவே செய்து விடலாமே ஏன் தனியாக php  – ஐ பயன்படுத்த வேண்டும்? என்று இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இதை ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

வங்கியினுடைய வாடிக்கையாளருக்கு அவர்களுடைய வங்கி எண், பெயர், கணக்கில் இருக்கும் தொகை ஆகியவைகளை காண்பிப்பதற்காக ஒரு வலைப்பக்கத்தை வடிவமைக்கிறோம். அதை HTML இல் வடிவமைத்தால் மற்ற வாடிக்கையாளர்களினுடைய விபரங்களையும் எளிமையாக தெரிந்து கொள்ளலாம். காண்பிக்கும் பக்கத்தின் மீது வைத்து view page source கொடுத்தால் அந்த விபரங்கள் தெரிந்துவிடப் போகிறது. இதை தடுக்கும் விதமாக ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பக்கம் என வடிவமைத்தால் அது மலையளவு கஷ்டமான வேலை. ஒரு வங்கியில் 2-லட்சம் வாடிக்கையாளர் இருந்தால் ஒருவருக்கு ஒரு பக்கம் என 2-லட்சம் பக்கங்களை வடிவமைக்க வேண்டும்.

இன்னொன்று என்னவென்றால் HTML வைத்து உருவாக்கும் பக்கங்கள் static ஆக இருக்கும் ஆகையால் ஒரு பக்கத்திற்காக என்ன வடிவமைத்தமோ அதன் content கள் மாறாது.

அதே நேரத்தில் வாடிக்கையாளரின் விபரங்களை தகவல்தளத்தில் சேமித்து வைத்து அந்த விபரங்களை php மூலமாக பெறும் போது ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரைத் தவிர வேறு யாருடைய தகவல்களையும் யாரும் தெரிந்து கொள்ள முடியாது. அதோடு php யினுடைய இறுதி வெளியீட்டைத்தான் நம்மால் தெரிந்துகொள்ள முடியுமே தவிர அதற்காக உள்ளீடுகளையோ, நிரல்வரிகளையோ தெரிந்து கொள்ள முடியாது. இதனால்தான் PHP பயன்படுத்தப்படுகிறது. இது மாதிரியான பாதுகாப்பு அம்சங்களையும், வசதிகளையும் கொண்டதால்தான் PHP சிறந்து விளங்குகிறது.

இப்ப சொல்லுங்க PHP அவசியம் வேணுமா? வேண்டாம?

 

PHP ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது?

  • HTML மூலமாக உருவாக்கப்படும் பக்கங்கள் அனைத்தும் Static Page என்று அழைக்கப்படுகிறது. அதாவது வலைப்பக்கத்தின் உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே இருக்கும். JavaScript -ஐக் கொண்டு Dynamic Page -களை வடிவமைக்கலாம். Dynamic Page  வடிவமைப்பதற்கான சக்தி மிகுந்த இயந்திரத்தை JavaScript கொண்டிந்த போதிலும் அதன்மூலமாக Client Side மட்டுமே மாற்றங்களை நிகழ்த்த முடியும்.
  • JavaScript -ஐக் கொண்டு Web Server உடன் தொடர்புகொள்ள முடியாது. Web Browser க்குள் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வர முடியும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் JavaScript – ஆல் Database இல் உள்ள தகவல்களை பிரித்து அதன் வெளியீட்டை Web Page இல் காண்பிக்க முடியாது.
  • ஆனால் Database இல் உள்ள தகவல்களை PHP மூலமாக திறமையாக கையாள முடியும். PHP Server Side Scripting Language ஆக இருப்பதோடு, எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையிலும் இருப்பதால். PHP மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் MySQL தகவல்தளத்துடன் PHP சிறப்பாக ஒத்து இயங்குகிறது. MySQL யில் உள்ள தகவல்களை நான் PHP -ஐக் கொண்டு எளிமையாக பெறமுடியும்.

அடுத்து வருவது : PHP Script உருவாக்கும் முறைகள் பற்றி…

PHP Essentials என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு – ஆர்.கதிர்வேல்

(PHP தமிழில் – கணியம் தொடர்)

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: