பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம் பக்கத்தில் பதிவேற்றப்படும்.

யார் யார் படிக்கலாம்?
பைத்தான் படிக்க விரும்பும் யாரும் படிக்கலாம்

நான் ஐடி துறை இல்லை. படிக்கலாமா?
தாராளமாகப் படிக்கலாம். உங்கள் கல்விப் பின்னணி இதற்குத் தடையில்லை.

என்னிடம் என்ன இருக்க வேண்டும்?
கணினியும் நல்ல இணைய வசதியும் மட்டுமே போதும். வேறெதுவும் தேவையில்லை.

யார் பாடம் நடத்துவார்கள்?
ஐடி துறையில் அனுபவம் வாய்ந்த மென்பொறியாளர்கள் பயிற்றுவிப்பார்கள்.

பயிற்சிக் கட்டணம் எவ்வளவு?
கொரோனா காலத்தில் ஒடிந்து போய் இருக்கும் சமூகத்திற்குக் கைகொடுக்கும் முயற்சியே இது. எனவே முற்றிலும் இலவசம்.

பயிற்சிக் காலம்
ஒரு மாதம் – தினமும் ஒரு மணி நேரம்

பயிலகம் பக்கம்: www.youtube.com/channel/UCdw_PocG9G8-y4f6wYkz8og

%d bloggers like this: