wxPython எனும் பைதான் நிரலாக்க மொழிக்கான கட்டற்றவரைகலை இடைமுகப்பின் கருவித்தொகுப்பு ஒரு அறிமுகம்


wxPython என்பது பைதான் நிரலாக்க மொழிக்கான அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படக்கூடியஒரு வரைகலை இடைமுகப்புின்கருவித்தொகுப்பாகும். அதாவது இதில் உருவாக்கப்படும் கணினிநிரல்தொடரை விண்டோ,மேக்,லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் மாறுதல் எதுவும் செய்யாமலேயே செயல்படுத்தி பயனபெறமுடியும். அவ்வாறு மற்ற இயக்கமுறைமைகளில செயல்படும்போதும் அந்தந்த தளங்களுக்கேயுரிய சொந்த பயன்பாடுகள் செயல்படுவதை போன்று சிறப்புதன்மையுடன் இதில் உருவாக்கிய பயன்பாடும் செயல்படுவதை கண்டுஉணரமுடியும். மேலும் பைதான் நிரலாக்குநர்கள் ஒரு வலுவான, உயர்ந்த செயல்பாட்டு வரைகலை பயனர் இடைமுகத்துடன் கூடிய எளிய நிரல்தொடர்களை உருவாக்க இது அனுமதிக்கிறது.இது ஒருஎளிய கட்டற்ற கருவியாக விளங்குவதால் இதில் உருவாக்கப்படும் மூலக்குறிமுறைவரிகளை யார்வேண்டுமாலும் எளிதாக படித்து புரிந்துகொண்டு தேவையெனில் அந்நிரல் தொடர்களில் தேவையானவாறு திருத்தம் செய்து மேம்படுத்திகொள்ளமுடியும்.

இது C ++ எனும் கணினிமொழியில் எழுதபட்ட அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட மிகப்பிரபலமான wxWidgets எனும் நூலகத்தின் வரைகலை இடைமுகப்பின்கூறுகளை மறைக்கும் பைதான் விரிவாக்க தொகுப்பாக செயல்படுத்தப்படுகிறது.இது மிகவிரைவாகவும் விரிவாக்கதன்மையுடனும் எளிதாக பராமரிப்பு செய்திடும் வகையில செயல்படுவதற்காக Phoenix எனும் செயல்திட்டத்தில் இந்த wxPython கருவியானது செயல்படுத்தபடுகின்றது

நாம் வழக்கமாக எந்தவொரு புதிய கணினிமொழியை கற்றுகொள்கின்றபோது Hello World எனும் முதன்முதலான நிரல்தொடர உருவாக்கி செயல்படுத்தி சரிபார்த்திடுவோம் அல்வா அவ்வாறே இந்த wxPython இலும் Hello World எனும் பயன்பாட்டினை உருவாக்கி சரிபாரத்திடுவோமா

 Hello World 
   # முதலில்  wxPython இன் கட்டுகளை பதிவிறக்கம் செய்திடவேண்டும்அதற்காக .
import wx
   # அடுத்து நாம் உருவாக்கிடும் பயன்பாட்டிற்கான பொருளை உருவாக்கவேண்டும்.
app = wx.App()
   # பிறகு அதற்குஒரு வரைச்சட்டத்தை உருவாக்கவேண்டும்.அதற்கானகுறிமுறைவரி
frm = wx.Frame(None, title="Hello World")
   # அதன்பிறகு அதனை திரையி்ல் காண்பிக்கவேண்டும்.அதற்கானகுறிமுறைவரி
frm.Show()
   # இறுதியாக நிகழ்வு சுழலை (loop) துவங்கிடவேண்டும்.அதற்கான குறிமுறைவரி
app.MainLoop()
  இந்நிலையில் எளியநிரல்தொடர் கணினிமொழி எனக்கூறிவிட்டு ஒரு சிறிய நிரல்தொடரைகூட ஐந்தவரிகளில்  குறிமுறைவரிகளை எழுதுமாறு செய்து-விட்டீர்களே இது ஞாயமா அடுக்குமா என கோபப்படவேண்டாம் ஒரே வரியில் பின்வருமாறு நிரல்தொடரை உருவாக்கலாம் வாருங்கள் 
import wx; a=wx.App(); wx.Frame(None, title="Hello World").Show(); a.MainLoop()

அதுஒன்றுமில்லை ஐயா ஒவ்வொரு கட்டளைவரியும்எதற்காக செயல்படுத்தப்படுகின்றது என தனித்தனிவரிகளில் கொடுத்ததால் நம்முடைய முதன்முதலான நிரல்தொடர் ஐந்துவரியாகிவிட்டது அவ்வளவுதான் இப்போது அவ்வாறான விளக்கம் எதுவும் வழங்காமல் ஒரேவரியில் நிரல்தொடர் முடிந்துவிட்டதல்லவா

அதெல்லாம் சரி நான் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக மேலும் இந்த wxPythonஐ பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள விரும்புகின்றேன் என்பவர்கள் docs.wxpython.org/ , docs.wxpython.org/MigrationGuide.html..ஆகிய இணையதள முகவரிகளுக்கு செல்க என பரிந்துரைக்கப்படுகின்றது . இந்தwxPythonஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவிரும்பினால்wxPythonஇன் 4.0.4 பதிப்பானது தற்போது pypi.org/project/wxPython/4.0.4 எனும் இணையதள முகவரியில் கிடைக்கின்றது .

%d bloggers like this: