WriteFreely எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

WriteFreely  எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு நம்முடைய சொந்த வாசகர்குழுவிற்கான
அல்லது விவாத குழுவிற்கான கட்டமைவை நாமே உருவாக்கி கொள்ளமுடியும்

 இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இந்த உலகில்  வாழும் நாமனைவரும் ஒருவருக்கொருவர் 
தொடர்புகொள்வதற்கும் ,நம்முடைய அன்றாட பணிகள் அனைத்தையும் முடிப்பதற்கும் இணையத்தை சார்ந்தே
வாழவேண்டிய இக்கட்டான நிலையில் தான் நாமனைவரும் வாழ்ந்துவருகின்றோம் . அதாவது தற்போதைய
சூழலில் இவ்வாறு தொடர்பு கொள்வதற்கான தளங்கள் ஒவ்வொன்றும்ஒரு குறிப்பிட்ட கொள்கையை 
பின்பற்றிடுமாறு அதாவது குறிப்பிட்ட தளத்தினை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக கணக்கு
ஒன்றினை துவக்கவேண்டும் என்றோ அல்லது வேறு ஏதாவதுஒருகணக்கினை இணைக்கவேண்டும் என்றோ 
நம்மை கட்டாயபடுத்தி நாம் விரும்பும் குறிப்பிட்ட இணையச்சேவையை பயன்படுத்தி கொள்ளச் செய்கின்றன
. அதனை தொடர்ந்து நாமும் இணையம் இல்லையென்றால் நம்முடைய வாழ்வே இல்லையென்ற 
அச்சத்தினால் அவைகளுக்கு அடிமையாக வாழத்தலைபட்டுவிட்டோம் .   இவ்வாறான நிலையிருந்த
போதிலும், கடந்த சில ஆண்டுகளில், சிறிய, நெருக்கமான பின்னணியில் உள்ள சமூகங்களின் மறுமலர்ச்சியின்
பயனாக சுதந்திரமாக செயல்படுவதற்காக ActivityPub போன்ற ஒருங்கிணைந்த சமூக வலைபின்னல்களை
உருவாக்குவதற்கான புதிய நெறிமுறைகள், Mastodon.  போன்ற கட்டற்ற தளங்கள் பிரபலமடைந்து
வருகின்றன  இதன்வாயிலாக பொது. மக்கள் இதற்காகவென தனியாக கணக்கு எதையும் துவங்கிடாமல் 
தங்களைப் போன்ற கருத்துடையவர்களுடன் கலந்துரையாடுவதற்காகவும் விவாதிப்பதற்காகவும் குழுக்களை
உருவாக்கி , அதற்காகவென பெரிய, மையப்படுத்தப்பட்ட சேவைகளை பயன்படுத்துகின்றனர், 
அதனடிப்படையில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை வலைபூக்களின் வாயிலாக தங்களுடைய 
குழுவான நண்பர்களிடைய வெளியிடுவதற்காக Tumblr போன்ற தளங்கள் பிரபலமாகி வருகின்றன  
இவைகளில் இருக்கின்ற வசதிகளைமட்டும் தங்களுக்கு தேவையானவாறு குழுக்களை உருவாக்கி கருத்துகளை
பரிமாறிகொள்வதற்காக பயன்படுத்தி கொள்ளலாமேயொழிய பயனாளர்கள் தங்களுக்கு தேவையானவாறான
வசதிவாய்ப்புகளை இவைகளில் கட்டமைவு செய்து கொள்ளமுடியாது ஏனெனில் இவை கட்டற்ற தளங்கள் 
அன்று இவ்வாறான நிலையில் கைகொடுக்க வருவதுதான் WriteFreely எனும் பயன்பாடாகும் . இதனை 
கொண்டு நம்முடைய குழுவிற்கான கட்டமைவுகளை நாமே சுதந்திரமாக உருவாக்கி நடத்தலாம் மேலும்
நம்முடைய தேவைகளுக்கு ஏற்றபடி அதை மாற்றியமைத்திடலாம் மற்றவர்களுடனான குழுக்களை 
உருவாக்குவதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பிறகுழுக்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் சிறிய சமூக 
அளவிலான குழுமுதல் பெரியவலைபின்னல் குழுக்கள்வரை உருவாக்கி கொள்ளலாம் அதிலும் நமக்கென்ற 
தனிப்பட்ட தொனிகளையும் அதற்கேற்ற தொடர்புகொள்வதற்கான விதிமுறைகளையும் நாமே உருவாக்கி 
பராமரித்து கொள்ளலாம் அதாவது தற்போதுள்ள ஃபேஸ்புக் போன்றவைகளுக்கு பதிலாக இதில் நமக்கென்றே
தனியான சமூக குழுக்களை நாமே கட்டமைவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம் நம்முடைய கருத்துகளை 
கொண்ட வலைப்பதிவுகளை பரந்த உலகத்துடன் இணைக்கவிரும்பாத நிலையில் முழுமையான தனிப்பட்ட 
சூழல்களுடனான குறிப்பிட்ட குழுவிற்குள் மட்டும் அமைத்து கொள்வதற்கு இதுமிகப்பயனுள்ளதாக 
இருக்கும் ..அதாவது நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்குள் அல்லது குறிப்பிட்ட கருத்துகளை கொண்ட
நம்முடைய நண்பர்களுக்குள் அல்லது நம்முடைய நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குள் அல்லது
நம்முடைய குறிப்பிட்ட துறையில் இருப்பவர்களுக்குள் தனியாக குழுக்களுக்கான கட்டமைவுகளை நாமே 
உருவாக்கி அதற்காகவென தனியானதொரு ஒரு மெய்நிகர் தனிப்பட்ட சேவையகம் (VPS), ஓரிரு கட்டளை 
வரியுடன் கட்டமைவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம்  இந்த WriteFreely என்பது ஒரு எளிய வலைபூக்களின் 
வாயிலாக நம்முடைய கருத்துகளை குறிப்பிட்ட குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளஉதவும் ஒரு கட்டற்ற
பயன்பாடாகும் இதனை கொண்டு நம்முடைய கருத்துகளை கூறுவதற்காக நம்முடைய கவணத்தை 
எழுதுவதில் மட்டும் செலுத்தினால் போதும் கட்டமைவு செய்வது வடிவமைப்பு செய்வது வெளியிடுவது 
அதன் கொள்ளளவு ஆகியவற்றை பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை மேலும் பார்வையாளர்கள்
நம்முடைய வலைபூவை பார்வையிடும்போது மேல்மீட்பு பட்டிகளுடன் குறுக்கிடுவதோ அல்லது உள்நுழைவு
செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றவேண்டுமென தொந்திரவுசெய்வதோ அல்லது மற்றவர்களுடன் 
பகிர்ந்து கொள்வதற்காகவென நெருக்குதல் செய்வதோ இதில் கண்டிப்பாக ஏற்படாது சுதந்திரமாக நாம் 
கூறவிழையும் கருத்துகளை பயனாளர்கள் படித்து பயன்பெறலாம் இது AGPL. எனும் அனுமதியின் 
அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதன் குறிமுறைவரிகள் கோ எனும் 
கணினிமொழியில் உருவாக்கப்பட்டதாகும் முகப்பு பக்கத்திற்கு மட்டும் ஜாவாஸ்கிரிப்ட் 
பயன்படுத்தி கொள்கின்றது பின்புல த்தில் MySQL அல்லது SQLite தரவுதளத்தினை 
பயன்படுத்தி கொள்கின்றது இது Write.asஎன்ற பெயரில்2014 இல் வெளியிடப்பட்டது 
பின்னர் 2016 இல் Write.as appsஎனும்பயன்பாடாக கட்டளை வரிவாயிலாக வும் 
இணையஉலாவியின் விரிவாக்கமாகவும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்,லினக்ஸ் விண்டோ 
ஆகியவற்றில் செயல்படுமாறு வெளியிடப்பட்டது தற்போது ActivityPub எனும் 
ஒழுங்கமைவுமுறையுடன் பயன்படுத்தி கொள்வதற்கேற்ப கட்டற்ற பயன்பாடாக
வெளியிடப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி கொள்வதற்கு விரும்பினால் 
முதலில் Getting Started guide எனும் விளக்ககுறிப்பை படித்தறிந்து கொள்க 
இதனுடைய வசதிகள் ஒவ்வொன்றும் ஒற்றையான கட்டளைவரியால் செயல்படுமாறு
கட்டமைக்கப்பட்டுள்ளது வெளிப்புற அல்லது மூன்றாவது பயன்பாடு எதையும் இது 
சாராமல்சுயமாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் நம்முடைய தனிப்பட்ட
வலைபூவைமட்டும் வெளியிட விரும்பினால் இதனுடைய Write.as எனும் வசதியை
பயன்படுத்தி கொள்க அதற்குபதிலாக குழுவாக கருத்துகளை பரிமாறி கொள்ள
விரும்பினால் WriteFreely.host எனும் வசதியை பயன்படுத்தி கொள்கஇவ்விரண்டு 
வசதிகளும் WriteFreely என்பதன்கீழ் செயல்படுகின்றது இதில் ஆயிரகணக்கான வலைபூக்களும்
நூற்றுகணக்கான குழுக்களும் உருவாக்கி தற்போது பயன்படுத்தி வருகின்றனர் இதனை பதிவிறக்கம்செய்து 
பயன்படுத்தி கொள்வதற்காக https://writefreely.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க 
%d bloggers like this: