Hybrid PDF என்றால் என்ன?

Hybrid PDF என்பது சாதாரண PDF போலத்தான். ஆனால் இதில் மூல ஆவணம் (source document) இணைந்திருக்கும். இந்த இணைப்பால் ஏதேனும் ஒரு புதுமையான office மென்பொருள் கொண்டு இதில் தேவைக்கேற்றவாறு திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.Hybrid PDF உருவாக்குவது எப்படி?

      1. முதல் கட்டமாக Libre Office-ல் ஆவணத்தை உருவாக்குங்கள். அல்லது Libre Office துணை செய்யும் எந்த ஒரு ஆவணத்தையும் Libre Office-ல் திறந்து கொள்ளுங்கள்.

      2. பின்பு File மெனுவில், “Export as PDF” –ஐ தேர்ந்தெடுக்கவும்.

3. நீங்கள் உருவாக்கும் PDF-ல் “திருத்தத்தக்க ODF கோப்பை(file) நுழைக்க வேண்டுமா?” என்று பொருள்படும் தேர்வுப் பெட்டியை (checkbox) தேர்வு செய்யவும். விண்டோஸ் மற்றும் மேக்கின் உரையாடல் பெட்டிகள் (dialog boxes) மேலே, வட்டமிடப்பட்ட தேர்வுகளுடன் உள்ளன.

4. வேறு தேர்வுகளையும் நீங்கள் மாற்றம் செய்யலாம். எடுத்துக் காட்டாக, படிமைப் பகுதிறன் (image resolution) குறைக்காமல் இருக்கச் செய்யும் தேர்வை பயன்படுத்தலாம். ஆனால், படங்கள் பெரியதாய் இருந்தால் கோப்பின் அளவும் பெரியதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

5. ‘Export’ விசையை(button) கிளிக் செய்து, அதனால் உருவாகும் செய்முறையை சேமிக்கவும்.

6. வாழ்த்துகள்! Hybrid Pdf தயார்!

7. இந்த PDF சாதாரண PDF போலவே PDF ரீடர்களில் திறந்து கொள்ளும். ஆனால், Libre Office-ல் (அல்லது OpenOffice.org, NeoOffice மற்றும் பலவற்றில்) திருத்தத்தக்கதாக (editable) திறந்து கொள்ளும். Libre Office-ல் அந்த PDF-ஐ இழுத்து விட்டும் திறக்கலாம்.

8. இனி நீங்கள் அந்தத் தேர்வுப் பெட்டியில் (checkbox) செய்த தேர்வை நீக்கும் வரை Libre Office-ல் உருவாக்கப்படும் அனைத்து PDF-களும் Hybrid PDF-களாகவே இருக்கும்.

 

 

Hybrid PDF-க்கான ஆங்கில ஒலி ஒளி பயிற்சியை www.youtube.com/watch?v=EuVZcygoZsI –ல் காணலாம்.

 

 

நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

%d bloggers like this: