பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

எழுதியவர் மணிமாறான்.

 

அனைவருக்கும் வணக்கம்,

வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினிகள் வாங்க நண்பர்களிடம் நன்கொடை கேட்டோம். பல்வேறு நண்பர்களிடமிருந்து ரூபாய் 50, ரூபாய் 100 முதல் அவர்களால் முடிந்த பல்வேறு நன்கொடைகள் கிடைக்கப்பெற்றது.

இடைப்பட்ட கொரோனா காலங்களில் வாங்க இயலாத காரணத்தினால் கணினிகள் வாங்க தாமதமாகியது. இறுதியாக இந்த மாதம் வாங்கிவிடலாம் என முடிவுசெய்யப்பட்டது.

அதன் தொடக்கமாக, 11-07-2021 அன்று கலில், அப்ரோஸ், மணிமாறன் மற்றும் அஜித் ஆகியோர் சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட்-இல் பல்வேறு கடைகளுக்கு சென்று கணினி விலை அறிந்து வந்தனர்.

பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, “Omega Computronix” எனும் கடையில் வாங்க முடிவு செய்யப்பட்டு 20-07-2021 அன்று சதீஷ், ரவிசங்கர், கலில் மற்றும் மணிமாறன் இவர்களின் உதவியால் வெற்றிகரமாக மூன்று கணினிகள் வாங்கப்பட்டது. Omega Computronix இல் நமது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. மேலும் நமது அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் கூறி விலையில் கூடுமானவரை தள்ளுபடி பெறப்பட்டது. அதற்கும், பல பரிந்துரைகள் கூறி உதவிய ரவிசங்கர் மற்றும் வாசு அவர்களுக்கு நன்றி.

 

கணினி பாகங்களை ஒன்றிணைக்கும் போது…

சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு 24-07-2021 அன்று கணினி பாகங்கள் திலீப், லோகநாதன், ரவிசங்கர், மணிமாறன் மற்றும் கலீல் ஆகியோரின் உதவியால் கொண்டுவரப்பட்டு கணினி பாகங்களை ஒன்று சேர்த்து லதா, கார்க்கி, சதீஷ், விக்னேஷ் உதவியோடு கணினிக்கான இதர தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, மென்பொருட்களை நிறுவி வெற்றிகரமாக கணினி மேஜையில் பொருத்தப்பட்டன.

கணினி பாகங்களை சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு கொண்டுவந்தபோது

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கிய பேருந்து பயணத்தின் போது மணிமாறன், திலீப், லோகநாதன். பிறகு கலிலும் இணைந்துகொண்டார்.

 

சதீஷ்

விக்னேஷ்

கணினிக்கான மென்பொருட்களை நிறுவும்போது. லதா, விக்னேஷ், லோகநாதன் மற்றும் திலீப் ஆகியோரும் இணைந்த்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரி, கபிலன், ஆதினி

மூன்று கணினிகளுக்கும் தமிழ் பெயர்களை வைக்க எண்ணினோம். எனவே வேள்பாரி நாவலில் இடம்பெற்ற பாரி, கபிலன், ஆதினி பெயர்களை வைத்தோம். இவ்வாறே நமது VGLUG அலுவலகத்திற்கு இம்மூவரும் வந்து சேர்ந்தனர்.

 

கணினி பாரி கபிலன் ஆதினி
OS(GNU/Linux) Pop OS Fedora Linux Mint
Processor AMD Ryzen 3 3200G AMD Ryzen 3 3200G AMD Ryzen 3 3200G
Ram DDR4 8GB (3400Mhz) 8GB (2400Mhz) 8GB (2400Mhz)
SSD 240GB 240GB 240GB
Monitor Dell 22″ inch IPS Millenium 18″inch Millenium 18″inch
Motherboard Gigabyte
GA-A320M-S2H
Gigabyte
GA-A320M-S2H
Gigabyte
GA-A320M-S2H

 

பாரி

 

கபிலன்

 

ஆதினி

இம்மூவரையும் VGLUG அலுவலகத்திற்கு கொண்டு வந்தது அவ்வளவு எளிதான காரியமன்று நமது அமைப்பின் பலவருட தொடர் உழைப்பும், அதனைத் தொடர்ந்து பார்த்தும், பாராட்டியும், பங்களித்தும் வந்த பல நல்ல உள்ளங்களின் உதவியாலுமே சாத்தியமானது.

இதனை சாத்தியமாக்க, நன்கொடை அளித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்…❤️🙏

குறிப்பு

VGLUG அலுவலகத்தையும், அங்குள்ள கணினிகளையும் கிராமப்புற, எளிய மாணவ மாணவிகள் தொழிநுட்பங்களை கற்றறிய VGLUG அலுவலகம் எப்போது வேண்டுமானாலும் வந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

முகவரி

VGLUG Foundation
No 416, Ganapathi Nagar, K.K Road,
Villupuram – 605602
தொடர்புக்கு : +917502273418, vpmglug@gmail.com

அன்பு வேண்டுகோள்

இக்கணினிகளின் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவும், மேலும் கணினிகளை(நீலன், மயிலா, முடியன், ….) வாங்கவும், பல ஆக்க பூர்வ செயல்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி உதவவும்.

Account Details

Holder Name VGLUG FOUNDATION
Acc No 64012200086283
IFSC code CNRB0016401
Bank name Canara Bank

நன்கொடை விவரங்களை vpmglug@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

இக்கணினிகளை வாங்க நன்கொடை அளித்தவர்கள் விவரம்

  • Abirami, Chennai
  • Adam, Villupuram
  • Agnes, Chennai
  • AkhilRaj
  • Anandh, Pondy
  • Annapoorani, Villupuram
  • Aravinth Ramesh
  • Arifa, Chennai
  • Arun Bharath, Kanyakumari
  • Arun kaliraja, Bangalore
  • Asarudheen
  • Aswin, Dharmapuri
  • Basha, Pulluru
  • Bhaskar, Andra Pradesh
  • Contributors from Mozilla Tamilnadu
  • Chandru N, Nakkasalem, Perambalur
  • Deiva Suganya, Chennai
  • Devika, Ulunderpet
  • Dhanalakshmi N, Madurai
  • Duraiyarasan, Thanjavur
  • E.P. Sindhan, Belgium
  • Eldho George
  • Gokul, Kovai
  • Guhan Raja
  • Imran, Bangarpet
  • Janani, Villupuram
  • Jayapriya, Villupuram
  • Kalaivani, Ramanathapuram
  • Karthik, Thirukovilur
  • Kishore Hariram
  • Krishna Kumar
  • Kumaran, Hyderabad
  • Kumarappan
  • Lakshmi Priya, Cuddalore
  • Mahesh, Bangalore
  • MDSathees Kumar
  • Mithun, Rasipuram
  • Mohana Shankar
  • Muthazhagan, Chennai
  • Navanee, Chennai
  • Naveen Kumar
  • Naveenkumar K, Kottakuppam, Villupuram
  • Neelakandan
  • Paramesh Iyyapan
  • Praveen, Chennai
  • Praveen Kumar, Chidambaram
  • Raajesh
  • Rajalakshmi, Chennai
  • Rajesh, Nellor
  • Rajeswari, Malaiyanur
  • Rogini R, Villupuram
  • Rohit, Chennai
  • Samyuktha Vijayan, Pollachi (Currently in South Korea)
  • Sathish Avadi, Chennai
  • Sengalvarayan, Kallakuruchi
  • Senthil, Kallakurichi
  • Shreya Prakash, Kerala
  • Soundarya, Ulunderpet
  • Sownder, Bangalore
  • Sree Aravindh
  • Srinivasan, Ulunderpet
  • Sriram, Ulunderpet
  • Suja, Chennai
  • Surendiran S
  • Suresh, Viruthunagar
  • Suresh, Aranthangi
  • Surya, Viruthunagar
  • Thajudeen
  • Varun
  • Vasutharani, Chennai
  • Venkat Pranav
  • Vikram, Seerkazhi
  • Vimal, Jolarpaettai
  • மேலும் 23 பெயர் சொல்ல விரும்பாத நண்பர்கள்.

மொத்தம் கிடைக்கப்பெற்ற நன்கொடை ரூபாய் : 1,14,550

நன்கொடை அளித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் VGLUG சார்பாக மனமார்ந்த நன்றிகள்…❤️🙏தங்கள் அன்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

More details

 

மூலம் : vglug.org/2021/07/29/vglug-new-pc-arrival/

%d bloggers like this: