Torஎன சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம்

Tor என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) என்பது பயனாளர் ஒருவர இணையத்தில் முகமிலியாஇணைந்து தான் பயன்படுத்திய இணைய இணைப்பின் விவரங்கள சாத்தியமான அனைத்து கண்காணிப்புகள் இட கண்காணிப்புகள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக அகற்றி சுதந்திரமாக இணையத்தில்உலாவர உதவிடும் ஒரு வலைபின்னல் கட்டமைப்பாகும்.

அதாவது எந்தவொரு நபரும் தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து கொண்டு முகமிலியாக இணையத்தில் உலருவதற்கு இந்த Torஆனது அனுமதிக்கிறது மிகமுக்கியமாக எந்தவொரு போக்குவரத்து பகுப்பாய்வு வலைபின்னல் உளவு மூலம் பயனாளர் பாதிக்காமல் அவரைப் பாதுகாக்கிறது. முகமிலி இணைய இணைப்பிற்கு மிகவும் பிரபலமானதும் பாதுகாப்பானதுமான விருப்பமாக இந்த Tor எனும் வலைபின்னல் கட்டமைவு அமைந்துள்ளது இந்நிலையில்Tor என்பதரு இணைய உலாவியென குழப்பி கொள்ளவேண்டாம் Tor என்பதஇணைய உலாவியை எளிதாக அனுக உதவிடுமொரு வலையமைப்பாகும் என்ற செய்தியைமட்டும் மனதில் கொள்க மாற்றியமைக்கப்பட்ட மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸின் ESR வலை உலாவியின் உதவியுடன் இந்த Tor வலையமைப்பை நம்மால் அணுகமுடியும் இந்த Tor வலையமைப்பானது1990 இல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு 2002 இல் நடைமுறைபடுத்தப்பட்டு தற்போதுElectronic Frontier Foundation (EFF).எனும் நிறுவனத்தாரால் பராமரித்து மேம்படுத்துப்பட்டுவருகின்றது

இது வெங்காயவழிசெலுத்தி(onion routing)எனும் வழிமுறை கருத்தமைவின் அடிப்படையில் செயல்படுகின்றது அதாவது பயனாளரின தரவுகளை முதலில் மறைகுறியாக்கம் செய்தபின்னர் இந்த Torவலைபின்னலுடைய வெவ்வேறுசுற்றுகளின் வாயிலாக கடத்தப்படுதல் மீண்டும் மறைகுறியாக்கம் செய்தபின்னர் மீண்டும் வெவ்வேறுசுற்றுகளின் வாயிலாக கடத்தப்படுதல் என்றவாறு மீண்டும் இவ்வாறான பணியையே பயனாளர் தரவின்மீது செயல்படுத்தப்படுகின்றது அதாவது வெங்காயத்தோல்போன்று பல்லடுக்கு மறையாக்கத்தின் வாயிலாக பயனாளரின்பாதுகாப்பு இதன்மூலம் உறுதி படுத்தப்படுகின்றது ஆயினும் நாம் அனுப்புகின்ற தரவானது தொடர்புடைய சேவையளர்பகுதிக்கு ஏதொவொரு சுற்றின் வாயிலாக பாதுகாப்பாக சென்றடையும் வரை ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு குறியாக்கம் தொடர்ந்து மறையாக்கம் என்றவாறு இதில் மாற்றியமைத்து கொண்டேயிருக்கம் கடைசியாக சென்றடையும் மிகச்சரியான சேவையாளர் பகுதிக்கு உண்மையான தரவு பாதுகாப்பாக சென்றடைந்துவிடும் அதனால் இடையில் இந்த தரவினை இடைமறித்து எங்கிருந்துவருகின்றது எங்கு செல்கின்றது உள்ளடக்கம் என்னவென யாராளும் அடையாளம் காணமுடியாதவாறு பல்லடுக்கான குறியாக்கம் மறைகுறியாக்கம் செய்து பாதுகாத்திடுகின்றது தனியான பயனாளருக்கு முகமிலி பாதுகாப்பு வழங்குவதுமட்டுமல்லாது இணைய பக்கங்களுக்கும் சேவையாளர் கணினிக்கும் மறைகுறியாக்கசேவையை இது வழங்குகின்றது நம்முடைய சுய அடையாளத்தை மறைத்து கொண்டு குறிப்பிட்ட இணையபக்கத்தை அனுக விரும்புவோர்கள் இந்த Torவலைபின்னலை பயன்படுத்தி கொள்ளலாம் பயனாளர் ஒருவர் தடைசெய்யப்பட்ட பகுதியிலும் பாதுகாப்பாக உலாவருவதற்கு இது பெரிதும் பயன்படுகின்றது BitTorrent போன்ற P2P பயன்பாடுகளின் கோப்புகளையும் இந்த Torவலைபின்னலின் வாயிலாக மிகவும் பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் BitTorrent பயனாளர்களின் 10k அளவுடைய IP முகவரிகளை Bad Apple எனும் தாக்குதலின் போது இந்த Torவலைபின்னலானது மிகவும் சிறப்பாகபாதுகாத்தது என்ற செய்தியின் வாயிலாக இதனுடைய பாதுகாப்பு நம்பகத்தன்மையை நாம் அறிந்து கொள்ளமுடியும்

இது மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸின் இணைய உலாவியை ஆதரிக்குமாறு இதனுடைய விரிவாக்க ஆதரவு பதிப்பு ஒன்று செயல்படுகின்றது என்ற கூடுதல்செய்தியையும் மனதில் கொள்க இது கையடக்க சாதனத்திலும் தேவையான இடத்திற்கு கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ளத்தக்கவகையில் இது கிடைக்கின்றது இது ஒவ்வொருமுறை உலாவவந்துமுடிந்தவுடன் அதனுடைய உலாவந்த வரலாறு முழுவதையும் அதனுடைய குக்கீகளின் இடஅமைவுகளையும் முழுவதுமாக அழித்து நீக்கம் செய்து கொள்கின்றது அதன்வாயிலாக வேறுயாரும் நம்மை தேடிகண்டுபிடித்திட முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாட்டினை செயல்படுத்தி நம்மை பாதுகாக்கின்றது இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது அதைவிட இது ஆண்ட்ராய்டு சாதனங்களிலும்(Orbot எனும் பெயரில்) கைபேசிகளிலும் (Orfox எனும் பெயரில்) ஐஓஎஸ் கைபேசிகளிலும் செயல்படும் திறன்கொண்டது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதனுடைய www.torproject.org/projects/torbrowser.html.en எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க தொடர்ந்து Tor Browser setup.என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இயங்க செய்திடுக உடன் விரியும் திரையில் தேவையான நாம் விரும்பும் மொழியை தெரிவுசெய்து கொள்க அடுத்துதோன்றிடும் திரையில் இந்த பயன்பாடு செயல்படும் கோப்பகத்தை தெரிவுசெய்து கொள்க இதற்காக நாம் பணிபுரியும் கணினியின் திரையைகூட தெரிவு செய்து கொள்ளலாம் இறுதியாக Install. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிறுவுகை செய்து கொள்க

 

%d bloggers like this: