Tag Archive: AWS

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை – பகுதி 2

கோப்பினைப் பதிவேற்றுதல் சென்ற பதிவில், நிரல்வழியாக ஒரு கொள்கலனை உருவாக்கினோம். ஆனால் அக்கொள்கலன் இப்போது காலியாக இருக்கிறது. அதில் ஒரு கோப்பினைப் பதிவேற்றலாம். இதற்காக, PutObjectRequest என்ற கோரிக்கையைத் தயாரிக்கவேண்டும். இக்கோரிக்கைக்குத் தேவையான அடிப்படை விசயங்கள் கீழே: BucketName – கொள்கலனின் பெயர். Key – நாம் பதிவேற்றும் பொருளின் அணுக்கத்திறப்பு InputStream – பதிவேற்றுகிற…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை

இதுவரையில் நாம் அடையாள அணுக்க மேலாண்மை பற்றியும், எளிய சேமிப்பகச்சேவை பற்றியும் அறிந்திருக்கிறோம். முந்தைய பதிவுகளில் உருவாக்கிய பயனர்களின் அணுக்கத்திறப்புகளைக் கொண்டு, S3இல் பின்வருவனவற்றைச் செய்துபார்க்கலாம். ஒரு கொள்கலனை உருவாக்குதல் அக்கொள்கலனில் ஒரு கோப்பினைப் பதிவேற்றுதல் நாம் பதிவேற்றிய கோப்பு, சரியான கொள்கலனில் உள்ளதா என சரிபார்த்தல் பதிவேற்றிய கோப்பினை அழித்தல் முதற்படியில் உருவாக்கிய கொள்கலனை…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – S3 – எளிய சேமிப்பகச்சேவை

நிரல்வழிச் செயல்முறைக்கு முன்னதாக, எளிய சேமிப்பகச்சேவையின் (S3) அடிப்படையை தெரிந்துகொள்வது அவசியம். எனவே இப்பதிவில் S3 பற்றி தெரிந்துகொண்டு, அடுத்தபதிவில் செயல்முறையைப் பார்க்கலாம். அமேசானில் பெருமளவு பயன்படுத்தப்படும் சேவைகளில் எளிய சேமிப்பகச்சேவையும் ஒன்று. இதன் அடிப்படைப் பயன்பாடு கோப்புகளைச் சேமித்துவைப்பதாக்கும். S3இல் நமக்கென கொள்கலன்களை (Buckets) உருவாக்கிக்கொண்டபிறகு, அவற்றில், கோப்புகளைச் சேமித்துவைக்கலாம். இவற்றை கோப்பகங்களில் ஒருங்கிணைத்து…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை – பொறுப்புகள்

பொறுப்புகள்: அமேசானின் இணையச்சேவைகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்வதற்கென நிரல்வழி இடைமுகங்கள் (AWS API) உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு மேகக்கணினியிலிருந்து S3யில் ஒரு கோப்பினைச் சேமிப்பதற்கும், எளிய அறிவுப்புச்சேவையின் (Simple Notification Service – SNS) மூலம் ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கும், எளிய வரிசைச்சேவையின் (Simple Queue Service – SQS) மூலம் அதைப் பெற்றுக்கொள்வதற்கும் இவ்விடைமுகங்கள் பயன்படுகின்றன….
Read more

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை – பகுதி 2

குழுக்களை உருவாக்கல்: பயனர்களை உருவாக்கும்போதே, அவர்களை குழுக்களில் சேர்ப்பதற்கான திரையும் காட்டப்படுகிறது. இதன்மூலமாக ஏற்கனவேயுள்ள குழுக்களிலோ, அல்லது புதிய குழுவை உருவாக்கியோ, பயனர்களைச் சேர்க்கமுடியும். தற்சமயம் நம்மிடம் எந்தவொரு குழுவும் இல்லை. எனவே புதியதொரு குழுவை உருவாக்கலாம். குழுவின் பெயரையும், அதற்கான அணுக்கக்கொள்கைகளையும் தீர்மானித்தபின், குழுவை உருவாக்குவது மிகஎளிதான காரியம். குழுவிற்கான பெயரும், அதன் உறுப்பினர்களுக்கான…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை

ஓர் அடுக்குமாடிக்குடியிருப்பின் பராமரிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என சற்று சிந்தித்துப்பார்க்கலாம். அநேகமாக எல்லா அடுக்குமாடிக்குடியிருப்புகளிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பர். அக்குடியிருப்புக்குள் வந்துபோகிற நபர்களையும், வாகனங்களையும் கண்காணித்து, பதிவுசெய்துகொள்வது அவர்கள் வேலை. மேலும், தோட்டப்பராமரிப்புக்கும், துப்புரவுக்கும், மின்சார உபகரணங்கள் பராமரிப்புக்கும், நீர் மேலாண்மைக்கும் என பல்வேறு பணியாளர்கள் அக்குடியிருப்புக்குள் வந்து அவர்கள் வேலைகளைச் செவ்வனே செய்யவேண்டியுள்ளது. இவர்களனைவரும்…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – பாதுகாப்புக்குழுக்கள்

சொந்த தரவுநிலையங்களிலிருந்து இயக்கினாலும் சரி, மேகக்கணினியிலிருந்து இயக்கினாலும் சரி, நம் செயலிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது நமது கடமை. பத்தடி அகலமுள்ள சுவர்களுக்குள் வைத்து, உலகத்தரம்வாய்ந்த பூட்டுகளைகொண்டு பூட்டிவைத்தெல்லாம், இவற்றைப் பாதுகாக்கமுடியாது. நமது செயலியின் சேவையகங்களையும், தரவுதளங்களையும், யாரெல்லாம் அணுகமுடியும், எங்கிருந்து அணுகமுடியும் என்பதுபோன்ற விதிகளை சரியானமுறையில் கட்டமைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அமேசானிலுள்ள மேகக்கணினிகளைப் பாதுகாப்பதற்கான…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – EC2 – மேகத்திலிருந்து ஒரு வலைத்துளி

சென்ற பதிவில் நாம் உருவாக்கிய புதிய மேகக்கணினியின் நிலையென்ன என்பதை அமேசான் தளத்திற்குள் சென்று, EC2 பிரிவின் முகப்புப்பக்கத்தில் காணலாம். நமது கணினி நல்லநிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது என காண்கிறோம். இப்பதிவில், அக்கணினிக்குள் நுழைந்து, ஒரு சிறிய வலைப்பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம். மேகக்கணினிக்குள் நுழைதல்: லினக்ஸ், யுனிக்ஸ் குடும்பக்கணினிகளில் பிறகணினிகளுக்குள் பாதுகாப்பான முறையில் நுழைந்து, வேலைசெய்வதற்கு SSH (Secure…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – EC2 – நெகிழக்கூடிய மேகக்கணினி

பெருநிறுவனங்களுக்கான மென்பொருள் தீர்வினைக் கட்டமைக்கும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்கமுறைமைகளைப் (Operating Systems) பயன்படுத்துவது இயல்பான விசயம். ஒவ்வொரு இயக்கமுறைமையின் அம்சங்களையும் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம், சிறப்பான தீர்வினை வடிவமைக்கமுடியும். இதுபோன்ற சூழலில், அதனை உருவாக்கும் நிரலர்களுக்கு, ஒன்றுக்குமேற்பட்ட இயக்கமுறைமைகளை ஒரே கணினியில் அணுகுவதற்கு, மெய்நிகர் கணிப்பொறிகள் (Virtual machines) பயன்பட்டன. எடுத்துக்காட்டாக, லினக்ஸ் இயக்கமுறைமை…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – அறிமுகம் – உலகளாவிய உட்கட்டமைப்பு

AWS உருவானகதை அமேசான் இணையச்சேவைகள் தொடங்கப்பட்டு பதினைந்தாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அதுகடந்துவந்த பாதையினை சற்றே திரும்பிப்பார்க்கலாம். 2003ம்ஆண்டு: அமேசானின் தொழில்நுட்பக்கட்டமைப்பு (Infrastructure) எப்படியிருக்கவேண்டும் என விவரித்து, கிறிஸ் பின்க்ஹ்மன், பெஞ்சமின் பிளாக் என்ற இருபொறியாளர்கள், தொலைநோக்குப்பார்வையுடன் ஒரு கட்டுரை எழுதினர். இதைத்தொடர்ந்து இம்மாதிரியான உட்கட்டமைப்பு வசதிகளை, ஒரு சேவையாக வழங்குவதற்கும், அதாவது விற்பதற்கும், பரிந்துரைக்கப்பட்டது. இது…
Read more