Tag Archive: கட்டற்ற மென்பொருள்

பேராலயமும் சந்தையும் 14. முடிவுரை: சந்தை பாணியை நெட்ஸ்கேப் தழுவுகிறது

நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது நீங்கள் வரலாறு படைக்க உதவுகிறீர்கள் என்பது ஒரு விசித்திரமான உணர்வு…. ஜனவரி 22, 1998 இல், நான் முதன்முதலில் பேராலயமும் சந்தையும் வெளியிட்ட சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு, நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியின்…
Read more

பேராலயமும் சந்தையும் 13. மேலாண்மையும் மேகினாட் கோடும்

1997 ஆம் ஆண்டின் முதலாவதான பேராலயமும் சந்தையும் ஆய்வுக்கட்டுரை முன்னர் உள்ள பார்வையுடன் முடிவடைந்தது. அதாவது இணையம் மூலம் தொடர்புகொள்ளும் நிரலாளர்/புரட்சியாளர்களின் மகிழ்ச்சியான குழுக்கள் வழக்கமான மூடிய மென்பொருளின் கட்டளைமுறை உலகத்தைப் போட்டியில் வெல்லும் மற்றும் மூழ்கடிக்கும். பல அவநம்பிக்கை இயல்பு உள்ளவர்கள் இதை ஏற்கவில்லை. மேலும் அவர்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமான முறையில் ஈடுபடத்…
Read more

பேராலயமும் சந்தையும் 12. திறந்த மூல மென்பொருளின் சமூக சூழல்

ஒரு முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் உங்களுக்கு சுவாரசியமான ஒரு பிரச்சினையில் தொடங்கவும் இது என்றுமே பொய்யாகாது: சிறந்த நிரல்கள் படைப்பாளரின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தனிப்பட்ட தீர்வுகளாகத் தொடங்குகின்றன. பின்னர் இந்தப் பிரச்சினை ஒரு பெரிய வகுப்பினருக்குப் பொதுவானதாக இருப்பதால் பரவுகிறது. இது விதி 1 இன் கருத்துக்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறது,…
Read more

பேராலயமும் சந்தையும் 11. சந்தை பாணிக்கு அவசியமான முன்தேவைகள்

நிரலாளர்கள் ஓட்டிப்பார்த்து சோதிக்கக்கூடிய நிரல் தொடக்கத்திலேயே இருக்க வேண்டும் இந்தக் கட்டுரைக்கான ஆரம்பகால மதிப்பாய்வாளர்கள் மற்றும் சோதனை பார்வையாளர்கள் வெற்றிகரமான சந்தை-பாணி வளர்ச்சிக்கான முன்தேவைகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதில் திட்டத் தலைவரின் தகுதிகள் மற்றும் திட்டத்தை வெளியீடு செய்து இணை-நிரலாளர்கள் சமூகத்தை உருவாக்கத் தொடங்கும் போது உள்ள நிரலின் நிலை ஆகியவை அடங்கும்….
Read more

பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்

பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு…
Read more

பேராலயமும் சந்தையும் 9. ஃபெட்ச்மெயில் முதிர்ச்சி அடைகிறது

இப்படியாக ஃபெட்ச்மெயில் நேர்த்தியான மற்றும் புதுமையான வடிவமைப்புடன் மேம்பட்டு வந்தது. நான் தினமும் பயன்படுத்தியதால் எனக்குத் தெரிந்து நிரல் நன்றாக வேலை செய்தது. மேலும் பீட்டா பட்டியல் வளர்ந்து வந்தது. வேறு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடிய அற்பமான தனிப்பட்ட நிரல் திட்டத்தில் நான் ஈடுபடவில்லை என்பது படிப்படியாக எனக்குப் புரிந்தது. யூனிக்ஸ் கணினி மற்றும்…
Read more

பேராலயமும் சந்தையும் 8. பாப்கிளையன்ட் ஃபெட்ச்மெயில் ஆகிறது

SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்பும் அம்சம் – ஒரு பயனர் கொடுத்த அற்புதமான யோசனை பயனர் கணினியின் SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்புவதற்காக ஹாரி ஹோச்ஹெய்சர் (Harry Hochheiser) தனது துண்டு நிரலை எனக்கு அனுப்பியதுதான் திட்டத்தில் உண்மையான திருப்புமுனையாக அமைந்தது. இந்த அம்சத்தை நம்பகமான முறையில் செயல்படுத்தினால், மற்ற எல்லா அஞ்சல்  கொண்டு சேர்க்கும்…
Read more

பேராலயமும் சந்தையும் 7. ரோஜா எப்போது ரோஜா அல்ல?

லினஸின் செயல்முறையை நுட்பமாக ஆய்வு செய்து, அது ஏன் வெற்றிகரமாக இருந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினேன். பிறகு, எனது புதிய திட்டத்தில் (லினக்ஸ் அளவுக்குச் சிக்கலானதோ அல்லது பெரிய அளவிலானதோ இல்லை என்றாலும் கூட) இக்கோட்பாட்டைச் சோதிக்கத் தெரிந்தே ஒரு முடிவை எடுத்தேன். நிரலை மையமாகவும், தரவுக் கட்டமைப்புகளை நிரலுக்கு ஆதரவாகவும் கருதினார்…
Read more

பேராலயமும் சந்தையும் 6. எத்தனை பேர் கவனம் வைத்தால் சிக்கலை அடக்கியாள முடியும்

வழுத்திருத்தம் மற்றும் நிரல் வளர்ச்சியை சந்தை பாணி பெரிதும் துரிதப்படுத்துகிறது என்பதை மேம்போக்காக கவனிப்பது ஒன்று. தினசரி நிரலாளர் மற்றும் சோதனையாளர் நடத்தையின் நுண்மட்டத்தில் அது எப்படி, ஏன் வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது மற்றொரு சங்கதி. இக்கட்டுரையில் (முதல் ஆய்வுக் கட்டுரைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. அதைப் படித்து, தங்களின் சொந்த…
Read more

பேராலயமும் சந்தையும் 5. முன்னதாக வெளியிடுக, அடிக்கடி வெளியிடுக

முன்னதாக வெளியிடுதல் மற்றும் அடிக்கடி வெளியிடுதல் லினக்ஸ் மேம்பாட்டு மாதிரியின் முக்கியமான அங்கமாகும். பெரும்பாலான நிரலாளர்கள் (நானும்தான்) மிகச்சிறியது தவிர மற்ற திட்டங்களுக்கு இது மோசமான கொள்கை என்று நம்பினர். ஏனெனில் தொடக்கப் பதிப்புகளில் வழு நிறைந்திருக்கும். உங்கள் பயனர்களின் பொறுமையை சோதிக்க விரும்ப மாட்டீர்கள். இக்கருத்துதான் பேராலயம்-பாணி வளர்ச்சிக்கான பொதுவான நம்பிக்கையை வலுப்படுத்தியது. பயனர்கள்…
Read more