கொலாப்நெட் சப்வெர்சன் எட்ஜ் – நிறுவுதல்

மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களில், பலபேர் சேர்ந்து எழுதும் மூல நிரலை (source code) சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும். இதற்கு subversion என்ற version control மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது.

இந்த subversion மென்பொருளை ஒரு லினக்ஸ் கணிணியில் நிறுவுதல் என்பது பல்வேறு செயல்களை கொண்டது. SVN, Apache, mod-svn, viewvc, mod_idap, mod-ssl போன்ற பல சிறு மென்பொருட்களை நிறுவி, அவற்றை தனித்தனியே configureசெய்ய வேண்டும்.

இந்த செயலையும் எளிதாக்க CollabNet என்ற நிறுவனம், Subversion Edge என்ற மென்பொருள் தொகுப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் Admin access இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் எளிதாக, Browser மூலமாகவே ஒரு Subversion அமைப்பை நிறுவிடலாம்.

CollabNet Subversion Edge – சிறப்புகள்:

  • கட்டற்ற மென்பொருள் AGPL V3

  • SVN, Apache, Viewvc என பல்வேறு மென்பொருட்களை கொண்ட ஒரு தொகுப்பு.

  • மிக எளிதான நிறுவும் முறை

  • Browser மூலமாகவே மொத்த பணிகளையும் செய்யலாம்.

  • SSI மூலம் பாதுகாப்பு

  • LDAP மூலம் User Login

  • பல User, Role களை உருவக்கலாம்.

  • Path based permission தரலாம்

    தரவிறக்கம் download செய்தல்:

    CollabNet SubversionEdge-ஐ தரவிறக்கம் செய்ய open.collab.net-ல் ஒரு புதிய கணக்கு உருவாக்கி, login செய்ய வேண்டும்.

    பின் www.collab.net/downloads/subversion இந்த இணைப்பில், பதிவிறக்கம் செய்யலாம்.
    லினக்ஸ், சோலாரிஸ், விண்டோஸ் ஆகிய ஆப்பரேடிங் சிஸ்டங்களுக்கான பொதிகள் இருக்கும். லினக்ஸை தேர்ந்தெடுத்து download செய்யவும்.

    நிறுவுதல்:

    Subversion edge-ன் tar.gz file-ஐ எங்கு வேண்டுமானாலும் extract செய்து கொள்ளலாம். இதை நிறுவ root user தேவையில்லை. சாதாரண user account போதுமானது. Apache சர்வரை 80 அல்லது 443 port களில் இயக்க மட்டுமே root-ன் அனுமதி தேவை. Edge ஆனது பொதுவாக 18080 port-ல் இயங்குகிறது.

    தேவையான மென்பொருட்கள்:

    1. ஏதேனும் ஒரு லினக்ஸ் கணிணி, எந்த distribution ஆனாலும் சரி.

    2. ஜாவா 6

    Sun/oracle Java 6 JRE என்ற மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
    3. JAVA_HOME என்ற environment variable JRE-ன் PATH ஐ காட்ட வேண்டும்.

    உதாரணம்:
    export JAVA_HOME = /usr/lib/jum/java-1.6.0.sun

    இந்த line-ஐ /etc/profile அல்லது ~/. bashrt-ன் அடியில் சேர்க்கவும். logout செய்து login செய்யவும்.

4. பொதுவாக அனைத்து லினக்ஸ் கணிணியிலும் pythonஏற்கனவே நிறுவப்பட்டு இருக்கும்.

CollabNet Subversion edgeநிறுவுதல் :

பின்வரும் command-களை சாதாரண user ஆக இயக்கவும். Root ஆக அல்ல.

1. Install directoryஐ தயார் செய்தல்

உங்கள் home directory-ல் svn edge-ஐ நிறுவலாம். அல்லது உங்களுக்கு write permissionஉள்ள எந்த ஒரு directory-யிலும் நிறுவலாம்.

உதாரணம்: /home/shrini

2. Download செய்தல்
ஏற்கெனவே open.collab.net தளத்தில் இருந்து download செய்து விட்டோம்.

3. Extract செய்தல்:

tar -xvzf CollabNetSubversionEdge-3.2.2_linux-x86_64.tar.gz

இந்த கட்டளை, csvn என்ற directory-ஐ தருகிறது. இதில்தான் ஒட்டுமொத்த subversion edge உள்ளது.

Subversion edge-ஐ இயக்குதல்:

cd csvn

bin /cdvn start

இந்த கட்டளைகள் svn edge-ஐ இயக்குகின்றன. சிறிது நேரத்தில் இந்த விவரங்களை திரையில் காணலாம்.

http:// localhost:3343/csvn

இந்த முகவரியை browser-ல் இயக்கவும். உங்களுக்காக subversion edge தயார் நிலையில் உள்ளது.

Username : admin

password : admin

உள்ளே சென்று பார்க்கலாமே.

ஏதேனும் பிழைகள் இருப்பின் பின்வரும் கட்டளைகள் மூலம் அறியலாம்.

bin/csvn console

bin/ csvn status

JAVA_HOME Variable இல்லையென்றாலும் edge-ஐ இயக்க முடியாது.

bin/csvn stop

இந்த கட்டளை மூலம் edge-ஐ நிறுத்தலாம்.

edge boot-ன் போதே இயக்குதல்:

cd csvn

sudo -E bin/csvn install

இந்த கட்டளைகள் மூலம் svn edge-ஐ boot செய்யும் போதே இயக்கலாம்.

Support:

இந்த Collabnet Subversion Edge-ன் இயக்கங்களில் ஏதேனும் கேள்விகள் இருப்பின் பின்வரும் வழிகளில் support கிடைக்கும்.

இலவச Community Support:  ctf.open.collab.net/sf/discussion/do/listForums/projects.svnedge/discussion

கட்டண Support: www.collab.net/support/support-programs#svn

WIKI: ctf.open.collab.net/sf/wiki/do/viewPage/projects.svnedge/wiki/HomePage

 – ஸ்ரீனி  ( CollabNet எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார். இந்திய லினக்ஸ் பயனர் குழு – சென்னை – ilugc.in இன் தற்போதைய தலைவர். )

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com
வலை : goinggnu.wordpress.com

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: