Wallpaper சுழற்சிகள்

 

விண்டோஸ் பயன்படுத்தி விட்டு, லினக்ஸ் பக்கம் வந்த பின், எனக்கு இருந்த மிகப் பெரும் குறை, wallpaper-ஐ த் தான்தோன்றித்தனமாக(random), ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மாற்றும் வசதி இல்லை. இதற்குத் தகுந்த இலவச லினக்ஸ் மென்பொருள் தான் இந்த WALLCH. [http://wall-changer.sourceforge.net/]

இதனைப் பதிவிறக்க : sourceforge.net/projects/wall-changer/files/latest/download?source=files

பதிவிறக்கியக் கோப்பை நீங்கள் அழுத்தும் பட்சத்தில், நாம் Ubunut Software Center-க்கு அழைத்துச் செல்லப்படுவோம். அங்கு Install என்னும் பட்டனை அமுக்கினால் போதும்.

இதனை நாம் நிறுவிய பின், நமக்குத் தேவையான  wallpaper-களை இதனுள் சேர்த்து விட்டு, சுழற்சிக்கான நேரத்தையும் மாற்றி விட வேண்டும். பின் இதனை இயக்கினால், தானாக நாம் சேர்த்த wallpaper-களெல்லாம் மாறி மாறி வரும்.

சிறப்பம்சங்கள் :

  • wallpaper-களை நாம்  ஆல்பமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதனை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் இதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • படக் கோப்புகள் உள்ள folder-ஐ நேராக சேர்க்கலாம்.
  • wallpaper-ஐ வரிசையாக அல்லது மாற்றி மாற்றி சுழல வைக்கலாம்
  • சுழற்சி நேரத்தையும் நாம் தேர்வு செய்யலாம், அல்லது அதுவே மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ளும்.
  • இந்த மென்பொருள்  மூலம் web cam அல்லது snapshot எடுத்து, wallpaper சுழற்சியில் சேர்க்கலாம்
  • வரலாறு ரொம்ப முக்கியம். இந்த மென்பொருள் நாம்  wallpaper-களை மாற்றி அமைக்கும்  (சேர்க்கும், நீக்கும்) பொழுது, தேதியையும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொள்கிறது. இதுவரை எவ்வளவு நேரம் இந்த மென்பொருள் இயங்கிக் கொண்டுள்ளது, எத்தனை முறை wallpaper-ஐ மாற்றி உள்ளது என்பதையும் கச்சிதமாக கணக்கிட்டுச் சொல்கிறது.
  • எந்நேரமும்  இணைய வசதி உள்ளவர்களுக்கு, உலகத்தின் செயற்கைக்கோள் படத்தை அல்லது விக்கி பீடியா ‘photo of the day’ படத்தை,  அதுவாகவே எடுத்து wallpaper-ஆக வைக்கும். நம் கணினி இயங்க ஆரம்பித்த உடன், இதுவும் அதன் வேலையை ஆரம்பித்து விடும். இதனை நாம் கட்டுப்படுத்தலாம். நாம் விரும்பினால், ஒவ்வொரு wallpaper மாறும் போதும் ஒலியைச் சேர்த்துக் கொள்ளலாம். இதைத் தவிர , இந்த WallCh நிறுவனம் நமக்கென 1000 wallpaper-களை இலவசமாகத் தருகிறது. (சொடுக்கவும்wall-changer.sourceforge.net/downloads/desktop-wallpapers.html

நீங்களும் என்னைப் போல ஒரு wallpaper விரும்பியா? நீங்கள் நிச்சயம் பார்த்து பயன்படுத்த வேண்டிய தளம் -> wallbase.cc . இந்தத் தளம் Creatvie Commons-ல் உள்ளது! வண்ண வண்ண வால்பேப்பர்கள், மாற்றி மகிழுங்கள் !

—-

பெயர்: ஓஜஸ் aoojass@gmail.com ட்விட்டர் : @oojass

வலைப்பூ : நாற்சந்தி – naarchanthi.wordpress.com

நான் அ.ஓஜஸ். உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன். உலகத்தையும், இணையத்தையும், படித்து வருகிறேன்.

%d bloggers like this: