கணியம் – இதழ் 5

‘கணியம்இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உபுண்டு 12.04ன் உலகமே வியந்து கொண்டாடி வருகிறது. 5 ஆண்டுகள் ஆதரவு என்பது வணிக நிறுவனங்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.

இந்த மாத இறுதியில், ஃபெடொரா 17 ம் பதிப்பும் வெளிவருகிறது. க்னு/லினக்ஸ் பயன்பாட்டினை மிகவும் எளிமையாக்கும் ஃபெடொரா மற்றும் உபுண்டு வெளியீடுகள் பற்றிய விவரங்களை நண்பர் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிகச் சிறந்த பட மென்பொருளான GIMP தனது 2.8 ம் பதிப்பை கண்டுள்ளது. வணிக மென்பொருட்களை பல விதங்களில் மிஞ்சும் GIMP பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தரமான மென்பொருட்களை அனைத்து உரிமைகளுடன் உலகிற்கு தொடர்ந்து அளித்து வரும் அனைவருக்கும் நமது நன்றிகள்.

கணியம் இதழ் வெளியீடு எனும் தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

கணியம்தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

இந்த இதழின் கட்டுரைகள் :

 • உபுண்டு 12.04 – என்ன புதுசு? வாங்க.. பார்க்கலாம்!
 • GIMP-ல் இடம்பெறும் 284 எஃபெக்ட்ஸ் மற்றும் இமேஜ் ஃபில்டர்
 • GIMP-ல் False Depth of Field ஒரு விளக்கம்
 • Fedora என்றால் என்ன?
 • அப்டானா ஸ்டூடியோஸ் 3
 • உபுண்டுவில் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) நிறுவுவது எப்படி?
 • Ubuntu Builder- உங்கள் வினியோகத்தை(Distribution) பில்ட் செய்யும் எளிய கருவி
 • க்னு/லினக்ஸ் கற்போம் – 3
 • நீங்கள் ஏன் விண்டோஸ் ஐ விட்டு மாற வேண்டும்?
 • Zimbra desktop
 • நிரலாக்கத்தில் அதிமேதாவியாக இல்லாமல் திறவூற்றுக்கு பங்களிக்க 14 வழிகள்
 • கணிச்சொற் விளக்கம்
 • கிரீன் ப்யூச்சர் வழங்கும் வேலை வாய்ப்பைத் தரக்கூடிய  ஓபன் சோர்ஸ் படிப்புகள்
 • நிகழ்வுகள்
 • உரிமைகள்
 • கணியம் – இது வரை
 • கணியம் பற்றி

நன்றி.

ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்

பதிவிறக்கம் செய்ய :

கணியம்-05
கணியம்-05
kaniyam-05.pdf
3.3 MiB
3096 Downloads
Details...

 

%d bloggers like this: