OCTAVE திறமூலமொழி

 

சிக்கலான கோட்டு சமன்பாடுகள் தீர்வுசெய்ய பயன்படும் Octave எனும் திறமூலமொழி

அறிவியல் ஆய்வுகளிலும் கணிதஆய்வுகளிலும் சிக்கலான கோட்டு சமன்பாடுகள் சாதாரண சமன்பாடுகளை தீர்வுசெய்யவேண்டிய நிலைஉள்ளது அவ்வாறான சிக்கலான கணக்குகளை மிகஎளிதாக தீர்வுசெய்திட Octave எனும் திறமூலமொழி உதவுகின்றது இந்த Octave எனும் மேம்பட்ட மொழியானது திறமூல குழுவின்மூலம் கட்டளைவரிகளின் வாயிலாக சிக்கலான கோட்டு சமன்பாடுகள் சாதாரண சமன்பாடுகளை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன Matlab ஐ பற்றி அறிந்தவர்கள் மிகசுலபமாக அதன் தொடர்ச்சியான

இந்த Octave எனும் திறமூலமொழியை தெரிந்துகொள்ளமுடியும் மிகஅனுபவம் வாய்ந்த கணிதஅறிஞர்கள்கூட தீர்வுகாண அவதிபடும் சிக்கலான கோட்டு சமன்பாடுகளை மிகஎளிதாக தீர்வுசெய்வதற்கான பலஅரிய கருவிகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது அடுக்குக்கோவைகள் ,ஒருங்கமைவு சமன்பாடுகள் வேறுபாட்டு சமன்பாடுகள்,வெவ்வேறு இயற்கணித சமன்பாடுகள் போன்ற மிக சிக்கலான சமன்பாடுகளை இதிலுள்ள செயலிகளின் வாயிலாக மிகச்சுலபமாக தீர்வுகாணமுடியும் மேலும் இது சி ,சி++, போர்ட்ரான் போன்ற மொழிகளில் எழுதபட்ட தகவமைவுகளோடு ஒருங்கிணைந்து செயல்படும் திறன்வாய்ந்ததாகவுள்ளது. இது மிகமேம்பட்ட கணித தீர்வுகாணும் மொழிஎன்பதால் Matlab or Fortran போன்றவற்றை நன்கு அறிந்தவர்கள் இந்த Octave எனும் திறமூலமொழியை பயன்படுத்திடுமாறு கேட்டுகொள்ளபடுகின்றது ஏனெனில் மிகச்சிக்கலான கணித சமன்பாடுகளை இதன்மூலம் தீர்வுசெய்வதற்காக மணிகணக்கில் முயன்றாலும் புதியவர்களுக்கு சோர்வும் வெறுப்பும் ஏற்பட்டுவிடும் என்ற அறிவரையை மனதில் கொள்க இதனுடைய வரைகலையை பயன்படுத்தி தரவுகளை வரைபடமாகவும் அதனைதொடர்ந்து இடைமதிப்புகள் குறிப்பிட்ட மதிப்பு எவ்வாறுஇருக்கும் என யூகித்து கண்டுபிடிக்கவும் முடியும் இது பொது அனுமதிபயன்பாடாக (GNU General Public License)கையடக்கநிலையில் கிடைக்கின்றது.

(இதழ் 23 நவம்பர் 2013 )

ச.குப்பன் kuppansarkarai641@gmail.com

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: