MySQLஇற்கும் TiDB எனும் கட்டற்ற புதிய SQL தரவுதளத்ததிற்குமிடையேயான வேறுபாடுகள் யாவை

தற்போது வியாபார நிறுவனங்களனைத்தும் மேககணினியின் அடிப்படைகட்டமைவில் தரவுதளங்களை கையாள உதவவருவதுதான் TiDB எனும் கட்டற்ற புதிய SQL தரவுதளமாகும் இது MySQLஇன் ஒழுங்குமுறையை பின்பற்றுவதுமட்டுமல்லாமல் மிகுதி செயல்கள் அனைத்தும் ஏறத்தாழ SQLஎன்பதை ஒத்திருக்கின்றன ஆயினும் இந்த TiDB ஆனது MySQLஇற்கு சிறிது வித்தியாசமானது அவை பின்வருமாறு

1.பொதுவாக MySQL ஆனது பிரதிபலிப்பு மூலம் அளவிடப்படுகின்றது . பொதுவாக நம்மிடம் ஒரு MySQL மாஸ்டர் ஒன்றும் தரவு ஒவ்வொன்றிற்கும் ஒரு முழுமையான நகலான பல அடிமைகளும் இருக்க வேண்டும்,. பதிலாள்SQL போன்ற பயன்பாட்டு தருக்கம் அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வினாக்கள் அனைத்தும் சரியான சேவையகத்திற்கு அனுப்பப்படுகின்றன இதில் பிரதிபலிக்கும் அடிமைகளுக்கு இடையில் வினாக்கள் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் வெளியீட்டு அளவிடும் பிரிதிபலிப்பசெயலானது படிக்கக்கூடிய கனமான பணிச்சுமைக்காக மிகவும் நன்றாக செயல்படுகின்றது, . இருப்பினும், இது எழுதப்பட்ட கனமான பணிச்சுமைகளுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்துகின்றது, ஏனென்றால் ஒவ்வொரு பிரதிக்கும் தரவின் முழு நகலையும் கொண்டிருக்க வேண்டும். இதை மற்றொரு வழியிலும் பார்க்கலாம் அதாவது MySQL பிரதிபலிப்பானது SQL செயலாக்கத்தை அளவிடுகிறது, ஆனால் இது சேமிப்பகத்தை அளவிடாது

அதற்குபதிலாக TiDB எனும் கட்டற்ற புதிய SQL தரவுதளத்தில் ஒரு TiDB சேவையக அடுக்கின் வாயிலாக ஒவ்வொரு வினாக்களும் கையாளபடுகின்றன வெளியீட்டு அளவிடும்SQL செயலாக்கமானது புதிய TiDB சேவையாளரை சேர்ப்பதன் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றது அதன்வாயிலாக குபேர்நெட் பிரதிபலிப்புதொகுப்பில்செயற்படுத்துவது மிகஎளிய செயலாகின்றதுTiDB சேவையாளர் நிலையற்றதாக இருப்பதால் TiKVசேமிப்பகமே அனைத்து தரவுகளும் நிலைத்திருப்பதற்கு பொறுப்பாளராக விளங்குகின்றது TiKV சேவையாளர்களுக்கிடையே சிறு தொகுதிகளாக அட்டவணையின் தரவுகளை தானகாவே பகிர்ந்து அளிக்கின்றது மூன்று நகல்களை ஒவ்வொரு தரவுப்பகுதிக்கும் TiKV கொத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது ஆனாலும் TiKV சேவையாளரானது முழுமையான தரவு நகலைவைத்திருக்காது ஆயினும் ஒரேநேரத்தில் இது மாஸ்டர் , அடிமை ஆகியஇரண்டையும்வைத்துள்ளது அதன்வாயிலாக தரவு பகுதிக்கு முதன்மைநகலையும் வேறு பகுதிக்கு இரண்டாவது நகலையும் கொண்டுள்ளது

இது SQL செயலாக்க மற்றும் தரவு சேமிப்பக அடுக்குகளை நெருக்கடியில்லாமல் சுதந்திரமாக அளவிடுகிறது. இது முனைமங்களை சேர்ப்பதன் மூலம் படிப்படியாக உயருவதை அளவிடுகிறது இது வன்பொருட்களை சிறந்த முறையில் பயன்படுத்துகிறது

2.MySQL ஆனது இயல்புநிலையில் தரவுகளை தேக்கிடும்பொறியாக B+tree எனும் தரவு கட்டமைவினை கொண்ட InnoDB எனும் வழக்கமான வியாபார தரவுதளத்தினை பயன்படுத்தி கொள்கின்றது

அதற்கு பதிலாக TiDB ஆனது TiKV உடன் சேர்ந்த பேரளவு தரவுகளை கையாளுவதற்கான RocksDB தரவுகளை தேக்கிடும்பொறியாக பயன்படுத்தி கொள்கின்றது

3. MySQLஆனது மையபடுத்தப்பட்ட தொகுப்பான நினைவக அட்டவணைகளை வழக்கமான SQL வினாக்களை கையாளும் Performance Schema வை Tracking key metrics ஆக பயன்படுத்தி கொள்கின்றது

TiDB ஆனது உள்ளக metrics இற்குபதிலாக Prometheus+Grafana எனும் வெளிப்புற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்கின்றது

4.MySQLஇல் வெவ்வேறு அளவிலான அட்டவணையில் புதிய நெடுவரிசையை அல்லது கிடைவரிசையை சேர்த்து அனைத்து முனைமங்களிலும் நிகழ்நிலைபடுத்தி கொள்வதற்காக shardingஎனும் வழிமுறை பின்பற்றபடுகின்றது

TiDBஇல் தனித்தனியாக ஒவ்வொரு முனைமங்களில் நிகழ்நிலைபடுத்தி கொள்வதற்காக தரவு வரையறுக்கப்பட்டமொழி (DDL)எனும் வழிமுறை பின்பற்றபடுகின்றது

5. MySQL இல் எவ்வளவு சிக்கலான வினாக்களையும் கையாள எளிய OLTPவினாவழிமுறை பின்பற்றபடுகின்றது

TiDBஇல்எவ்வளவு சிக்கலான வினாக்களையும் விரைவாக கையாள hybrid transaction/analytical processing (HTAP)வினா எனும் வழிமுறை பின்பற்றபடுகின்றது

%d bloggers like this: