MP4TOOLS – மல்டி மீடியா மாற்றி

இது  AAC audio மற்றும் AVI/MPG video-வை PSP, iPod மற்றும் Symbian-இவைகளில் பயன்படுத்தப்படும் format-க்கு மாற்றும் திறமை கொண்டுள்ளது.

 

இதனை நிறுவ உங்கள் Ubuntu Menu-வில் Applications -> Ubuntu Software Centre- தேர்வு செய்யவும்.

 

இதில் Edit -> Software Sources -> Other softwares-க்கு செல்லவும்.

 

கீழ்க்கண்ட இரண்டு Repository-களை சேர்க்கவும்.

 

“deb ppa.launchpad.net/teknoraver/ubuntu hardy main”

“deb-src ppa.launchpad.net/teknoraver/ubuntu hardy main”

 

இப்பொழுது கீழ்க்கண்ட கட்டளை(command)யைப் பயன்படுத்தி apt-get list- reload செய்யவும்.

        $ sudo apt-get update

இப்பொழுது நீங்கள் MP4TOOL- நிறுவ தயாராகிவிட்டீர்கள்.

 

பின்வரும் command- பயன்படுத்தி MP4TOOL- install செய்யவும்.

    $ sudo apt-get install mp4tools

   

நமக்கு தேவையான கட்டளைகளின் பட்டியலில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

mk3gp   :   இந்த கட்டளை சாதாரண 3gp file-ஆக மாற்ற பயன்படுகிறது.

 

mks60   :   இந்த கட்டளை High Quality 3gp file-ஆக மாற்ற பயன்படுகிறது. ஆனால் இது சில phone-களில் play ஆகாது.

 

mkamr   :   இந்த கட்டளை சாதாரண AMR file-ஆக மாற்ற பயன்படுகிறது.

 

mkmp4   :   இந்த கட்டளை சாதாரண H.264 MP4 file-ஆக மாற்ற பயன்படுகிறது.

 

mkipod  :   இந்த கட்டளை Apple iPod-க்கு தேவையானப்படி ஒரு படத்தை(Movie) மாற்றி அமைக்க உதவுகிறது.

 

mkpsp   :   இந்த கட்டளை Sony PSP-க்கு தேவையானப்படி ஒரு படத்தை(Movie) மாற்றி அமைக்க உதவுகிறது.

 

dvd23gp :   இந்த கட்டளை DVD- சாதாரண 3gp file-க்கு மாற்றுகிறது.

 

dvd2s60 :   இந்த கட்டளை DVD- High Quality 3gp file-க்கு மாற்றுகிறது.

 

dvd2psp :   இந்த கட்டளை DVD- Sony PSP-க்கு தேவையானப்படி படத்தை(Movie) மாற்றி அமைக்க உதவுகிறது.

 

dvd2ipod    :   இந்த கட்டளை DVD- iPod-க்கு தேவையானப்படி படத்தை(Movie) மாற்றி அமைக்க உதவுகிறது.

 

எந்த ஒரு video-வையும் உங்களுக்கு தேவையான format-ல் மாற்றுவதற்க்கு file path-னை மேலே பட்டியலிடப்பட்ட கட்டளைகளுடன் சேர்த்து  பயன்படுத்திக்கொள்ளவும்.

உதாரணத்திற்கு பின்வரும் command- கவனிக்கவும்.

 

“mk3gp path/to/videofile.avi”

 

இது Videofile.avi என்ற file- 3GP file-ஆக மாற்றியிருக்கும்.

இப்பொழுது இந்த 3GP file-ஆனது பல்வேறு Mobile-களில் பார்ப்பதற்கு தயாராக உள்ளது.

பிரவீன் குமார் . காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரி மாணவர்.

 

            மின்னஞ்சல்  : praveen9482@gmail.com

            வலை          : praveenlearner.wordpress.com

 

 

%d bloggers like this: