இரண்டுக்கும் மேற்பட்ட மதிப்புகளைப் பொறுத்து ஒரு taraget variable எவ்வாறு அமைகிறது எனக் காண்பதே multi-variate analysis ஆகும். Parallel coordinates என்பது இத்தகைய multi dimensional data-வைக் காண்பதற்கு உதவும் வரைபட வகை ஆகும்.
இங்கு plotly மற்றும் matplotlib மூலம் இத்தகைய வரைபடங்கள் வரைந்து கட்டப்பட்டுள்ளது. ‘SalePrice’ எனும் categorical variable-க்கு தரவுகள் எவ்வாறு சீராகப் பரவியுள்ளது என்பதை இந்த வரைபடம் காட்டும். இதை வைத்து இதில் ஏதாவது trend உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம். Plotly மூலம் வரையும் போது, ஒவ்வொரு column-லும் உள்ள min மற்றும் max மதிப்புகளை அதன் range-ஆக கொடுக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். இந்த வரைபடம் ஒரு html கோப்பாக interactive முறையில் சேமிக்கப்படுகிறது.