லினக்ஸ் மின்ட் அடிப்படை -நச்னு நாலு கட்டளைகள்

லினக்ஸ் மின்ட் பயன்படுத்தத் தொடங்கிய தொடக்க நாட்களில் கணினி பற்றிய தகவல்கள்(OS, Processor, RAM ஆகியன பற்றி) எப்படி, எங்கே பார்ப்பது எனத் தேடிக் கொண்டிருந்தேன். அவற்றின் சுருக்கம் தான் இங்கே! சின்னச் சின்ன சில கட்டளைகளைத் தெரிந்து கொண்டாலே போதுமானது! பல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியும். டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள்.

கட்டளை #1:
வன்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள,
sudo lshw
இப்போது பல தகவல்கள் தரப்பட்டிருக்கும். அவற்றை ஒழுங்குபடுத்தி, அட்டவணை வடிவத்தில் பார்க்க,
sudo lshw -short

இந்தத் தகவல்களை html கோப்பாகச் சேமித்துக் கொள்ள,
sudo lshw -html > lshw.html

கட்டளை #2:
உங்கள் கணினியின் பெயர், இயங்கு தளம் பற்றிய தகவல்களை அறிய,
uname -a

கட்டளை #3:
உங்கள் கணினியின் மையச்செயலகம்(CPU) பற்றித் தெரிந்து கொள்ள,
lscpu

கட்டளை #4:
இயங்குதளம்(OS) பற்றிய தகவல்களை மட்டும் அறிய,
uname -v

இன்னும் நிறைய கட்டளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள: www.tecmint.com/commands-to-collect-system-and-hardware-information-in-linux/

%d bloggers like this: