Libreoffice-formula-vs-Microsoft-equation-editor

 இன்றைய கணினி உலகில் Microsoft Office என்ற வார்த்தையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலராலும் Microsoft Office பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல பள்ளிகளில் மாணவர்கள் Microsoft Office-ஐ ஒரு பாடமாகவே பயில்கின்றனர். MS Office-க்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகள், பள்ளிகளிலும் கணினி பயிற்சி மையங்களிலும் வழங்கப்படுவதை பரவலாக காணமுடிகிறது. இதனால் MS Office பலரது அன்றாட பணிகளின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இருப்பினும்,இது போன்ற எளிய அல்லது இதை விட கடினமான சூத்திரங்களை MS Office-ல் எத்தனை பேருக்கு உள்ளீடு செய்யத் தெரியும் ?

 

கணிதத்துறை மாணவர்கள் பெரும்பாலும் தங்களுடைய பணிகளுக்கு LaTeX-ஐ(ஒரு கட்டற்ற மென்பொருள்) பயன்படுத்துகின்றனர். LaTeX-ஐக் கொண்டு எவ்வளவு கடினமான வடிவமைப்பினையும் உருவாக்கலாம். ஆனால் LaTeX-ஐப் பயன்படுத்துவதற்கு, அதனைப் பற்றி ஓரளவிற்கு தெரிந்து கொண்டால் தான் பயன்படுத்த இயலும்.

 

என்னைப் போன்ற கற்றுக்குட்டிகள் LaTeX-ஐப் பயன்படுத்துவது சற்று கடினம் தான். ஆனாலும் LibreOffice-ல், LaTeX அளவிற்கு இல்லாவிட்டாலும், சிறப்பாக கடினமான சூத்திரங்களை விரைவாகவும், சுலபமாகவும் உள்ளீடு செய்யலாம். MS Office XP, MS Office 2003 போன்றவற்றில் உள்ள Microsoft Equation Editor 3.0 வை வைத்து எதுவும் செய்ய முடியாது. சற்று கடினமான சூத்திரங்களை உள்ளூடு செய்யும் பொழுது குழப்பத்தினால் சில சமயம் உள்ளீடு செய்யப்போகும் சூத்திரத்தையே மறக்க நேரிடலாம். இதற்கு பதிலாக Mathtype என்ற வர்த்தக மென்பொருளை பயன்படுத்தலாம். ஆனால் இதனை தோராயமாக $50க்கு பெறலாம் அல்லது திருட்டுத்தனமாக (Pirated) பயன்படுத்தலாம். Microsoft Office 2007 -ல் Equation Editor சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் LibreOffice Formula வுடன் போட்டி போட இயலாது.

 

 

LibreOffice Writer-ல் Insert > Object > Formula செல்வதன் மூலம் சூத்திரங்களை உள்ளீடு செய்யலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் Formula Command Boxமூலம் எளிதாகவும் விரைவாகவும் உள்ளீடு செய்யலாம்.

 

 

 

 

எ.டு. (LibreOffice Writer -ல் பயன்படுத்தப்படும் சில சூத்திர சுருக்கங்கள் )

Eg. Command

Formula Output

x_1

x^2
x over y
%alpha
int from{0} to{1} x
sqrt{x}
left lbrace binom{a}{b} right rbrace

 

மேலும் விபரங்களுக்கு,

wiki.documentfoundation.org/images/a/ae/0700MG33-MathGuide3.3.pdf

(Creative Commons License)

இந்த 26 பக்க கோப்பில் LibreOffice Formula-வைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை தகவல்கள் உள்ளன.

Microsoft Office-ஐ விட LibreOffice Office பல வகைகளிலும் சிறந்தது. இதுவரைக்கும் 3 முதுகலை கணித ஆய்வறிக்கைகளை LibreOffice Formula-ன் உதவியுடன் சிறப்பாக முடித்துள்ளேன். நீங்களும் LibreOffice Formula வை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

படம் உதவி :
பிரவீணா, M.SC(கணிதம்) 2010-2012, அழகப்பா பல்கலைகழகம், காரைக்குடி

 

இது காரைக்குடியில் இருந்து லெனின். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறேன். கடந்த 4 வருடங்களாக உபுண்டு லினக்ஸை பயன்படுத்தி வருகிறேன். வாய்ப்பளித்த கணியம் இதழிற்கு நன்றி.

e-mail : guruleninn@gmail.com

%d bloggers like this: