டக்ஸ்மேதுடன்(TuxMath) கணிதம் படியுங்கள்

கணித சூத்திரங்களை கற்பது சில காலங்களாக்வே கடினமானதாக இருந்து வருகிறது. அவை எளிதில் கொள்ளும் படியாக இல்லா விட்டால் சிறிது சிரமம் தான். TuxMath பயன்படுத்துபவர்கள் விரைவாக கணித சிக்கல்களை அவிழ்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை TuxMath விளையாடினால் நியாபகத் திறன் அதிகரிக்கும். இந்த விளையாட்டு மிகுந்த கேளிக்கைகள் நிறந்தது.

Terry Hancock தன் மகனுக்கு கணிதம், வேப்பங்காயாய் கசப்பதாக கூறுகிறார்.அவன் எளிதில் கவனத்தை சிதற விடுவதாகவும், இதன் காரணமாக Terry Hancock சில மணிநேரங்கள் அவனுடன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

Terry-ன் மகன், படித்ததை நினைவில் கொண்டு வருவதில் தான் சிரமப் படுகிறான்.

8 X 9 திற்கோ அல்லது 3 X 4 கிற்கும் கூட விடை காண அவனுக்கு 30 வினாடிகள் தேவைப் படுகின்றன. இது வருந்தத்தக்க நிகழ்வு.

எனினும், அவன் கணிதத் தேர்வுகளில் தோல்வி அடைவது இல்லை.

 

கணித அடிப்படைகளில் தான் அவனுக்கு பிரச்சனை இருப்பது தெளிவாய் தெரிகிறது. மெதுவாக கணக்குகள் செய்வது அவனது நேரத்தை விரையமாக்குகிரது.

கணினியில் பல program-கள் செய்து, நேர வரையறை ஏற்படுத்தி, மெதுவாக வேகத்தை அதிகப்படுத்தி, புதுமையாக சிந்தித்து கணிதம் எளிமையாக கற்கலாம். இதன் மொத்த உருவம் தான் TuxMath ஆகும்.

Math கட்டளையின் தன்மை:

 

இந்த விளையாட்டு, எரிகற்கள் நம் பனிக்கோட்டையை தாக்குவதை போன்ற தன்மை கொண்டது. ஒவ்வொரு எரிகல் அருகிலும், ஒரு கணித புதிர் இருக்கும். நாம் அதை தெளிவித்து விடை எழுதி enter அழுத்த வேண்டும். இப்படி செய்தால் நம் பனிக்கோட்டைகள் காப்பாற்றப் படும்.

இது மிகவும் எளிமையானது, இதன் வரைகலை(graphics) மற்றும் ஒலி அமைப்பு அருமையாக அமைக்கப் பட்டுள்ளது.

இந்த விளையாட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல செல்ல பெரியவர்களுக்கு கூட இது கடுமையானதாக இருக்கும்.

Factoroidகள்:

இந்த விளையாட்டில் எரிகல்லை, சில எண்கள் தட்டச்சு செய்வதன் மூலம் அழிக்கலாம். எடுத்துக் காட்டாக ஒரு கல்லில் 51 என குறிப்பிட்டிருந்தால், 3 அல்லது 17 அழுத்தினால் அதை 3 அல்லது 17 துண்டுகளாக பிரித்து விடும். அந்த கற்கள் முற்றிலுமாக குறைக்கப் பட்ட பின் அவற்றை 0 மூலம் அழித்து விடலாம்.

அது போலவே அந்த கற்களில் பின்னங்கள்(fractions) இருந்தால், எ.டு. 21/51, அதை 17 அல்லது 3 மூலம் தனியாக பிரித்து பின்பு 0 கொண்டு முற்றிலுமாக அழித்து விடலாம்.

இங்கு ஒரு சிறு சூழ்ச்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கற்களை எண்கள் கொண்டு பிரிக்கும் அதே நேரத்தில், ஒளி செலுத்தி அதனை அழித்திடவும் வேண்டும். அது போலவே, எரிகற்கள் நாம் விண்கலனை தாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

கடினமில்லா கணிதம்:

கணிதம் கற்க பல செயலிகள் எனக்கு பரிந்துரைக்கப் பட்டன. ஆனால், வேறு எவையும் TuxMath அளவிற்கு கேளிக்கை நிறந்ததாக இல்லை. நான் முழு மனதோடு இதை பரிந்துரைக்கிறேன். இது ஒரு கட்டற்ற மென் பொருளும் ஆகும்.

டெபியனில்(debian) இதை வெறுமனே ‘tuxmath’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது முக்கிய பிரிவின் (main distribution) கீழ் வருவதாகும். Debian-ன் KDE நிரலில் இது ‘Games → Games for Kids’-ன் கீழ் இடம் பெற்றிருக்கும்.

இதை நீங்களும் அனுபவித்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்!

www.freesoftwaremagazine.com/articles/learning_tuxmath

 

நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த கணியம் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

 

%d bloggers like this: