க்னு/லினக்ஸ் கற்போம் – 2

யுனிக்ஸ் எப்படிப்பட்ட கால கட்டத்திலே யாராலே உருவாக்கப்பட்டது என்று நீங்க கூகுள் செய்து பார்த்து படிச்சு எனக்கு எழுங்கமத்தவங்க அதை படிப்பாங்க.

 

சுருக்கமா இப்போ சொல்லப் போரது இது தான்.

 

(1)  கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் கோடிக்கணக்கான ரூபா விலை. அதுனால எல்லோரும் வாங்கி பயன் படுத்த முடியாது.

 

சின்ன ஊர்லே தெரு மினையிலே மாவு மிஷின் இருக்கு, அங்கே ஒவ்வொருத்தரும் மாவு மொளகா மல்லி எல்லாம் அரைக்கிரத்துக்கு  வரிசேலே காத்திருப்பாங்க இல்லையா? batch processing operating system என்று சொன்னா, மாவு அரைக்கிர மிஷின் தான் நினைவுக்கு வரணும். அதுமட்டுமில்லே, ரேஷன் கடையிலே வரிசை, பஸ் ஸ்டாப்புலே வரிசை, பாங்கு காசை போட இல்லையினா எடுக்க வரிசை. ஆஸ்பத்திரிலே டாக்டரைப் பாக்க வரிசை, மருந்து வாங்க வரிசை  அப்படின்னு வரிசை இல்லாத வாழ்க்கை ஒருகாலத்துலே கிடையாது.

 

அப்படித்தான், கம்ப்யூட்டர் புரொகிராமர்கள் மற்றும் தயாரான புரோகிராமை அப்பப்ப புது டேடடா கொடுத்து ஓட்டுவாங்க.

அப்ப கம்ப்யூட்டர்னா, டேட்டா பிராசசிங்தான். அப்ப் எல்லாம், கிராபிக்ஸ், பாட்டு, படம், சினிமா போன்ற எதுவும் கம்ப்யூட்டர்லே வராது. மாசான்திரம்  சம்பளம் போடரது போன்ற வேலைக்குத்தான் பயன்பாடு இருக்கும்.

 

கம்ப்யூட்டரை ஓட்ட தனியா ஆப்பரேட்டர் பயிற்சி இருக்கும். அதில்லாம வேற யாரையும் தொட விடரதில்லை. பாக்கி எல்லாரும் கண்ணாடி வழியா கம்ப்யூட்டரை பாக்கலாம். அப்போஅதை  Batch processing என்கிற ரீதியிலே தயார் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வச்சிருப்பாங்க.

இப்படி வரிசையிலே செய்யர வேலை கம்ப்யூட்டரை அதிக திறனோட பயன் படுத்தல்லே. அதை பாத்தணும்.

வெயிட் பண்றதைப்போல கஷ்டமான காரியம் எதுவும் இல்லே, உண்மைதானே?

 

அதுக்கு என்ன செய்யலாமமுன்னு பாத்தாங்க. யுனிக்ஸ் வந்து பல வரிசையை காணாம பண்ணிடிச்சு. எப்படி?

 

வேயிட் பண்ணாமே எல்லார் வேலையையும் ஒரேடியா செய்ய அத்தனை கம்ப்யூட்டர் இல்லேன்னா சி பி யூ வேணும்.

அதையும் செஞ்சு பாத்து   அதுக்கு பேரு மல்டிக்ஸ் MULTICS  அப்படின்னு பேரு கூட வச்சாங்களாம். அது எதிர்பாத்ததைப்போல வேலை பண்ணல்லே.

 

பந்தியிலே சாப்பாடு.

அப்ப பாத்து,  விஞ்ஞானிகள் நம்ம ஊர்லே யாரோட கல்யாணத்துக்கு வந்துட்டு பந்தியிலே சாப்பிட்டுவிட்டு போயிட்டாங்களோ? அதுலேருந்து ஒரு நல்ல ஐடியா புடிச்சாங்க. ஒரே ஒரு ஆளு பல பேருக்கு ஒண்ணா சாப்பாடு போடராரு இல்லை.

அப்படி ஒரே சி பி யூ வை வச்சுக்கிட்டு எல்லாருடைய வேலையையும் செய்யரமாதிரி டிசைன் பண்ணிடாங்க.

 

 

இப்ப ஒரு ஐடியா கிடைச்சுதா? இப்ப விரிவா பாக்கலாம்.

 

ஓவ்வொரு யூசர் ப்ரொகிராமையும் ஒரு வரிசையிலே வச்சிச்சுடுவாங்க..இதை வட்ட வடிவமான் வரிசையின்னு சொல்லணும்.. பல யூசர் பொரொகிராம் எல்லாமே மெயின் மெமொரிலே சேந்துடும்,  அது எப்படி வரிசயிலே சேக்கரது அதெல்லாம் அப்புரம் பாக்கலாம்.இப்படி பந்தியிலே பரிமாருகிறமாதிரி எல்லா யூசருக்கும் (ஒரே சமயத்துலே ஒரே ஆளைவச்சு  சாப்பாடு பரிமாருகிர மாதிரி) , கம்புஊட்டர்லே வேலை பண்றதுக்கு ஒரு சாப்ட்வேர் எழுதிட்டாங்க. அதுக்குப்பேரு ஷெட்யூலர்.அங்கே ஒரு அலாரம் கிளாக் மாதிரி ஒரு விஷயம். அதுக்கு டைமர் – Timer –  அதை 200 இல்லையினா 300 மில்லி செகண்டுன்னு செடபண்ணிருவாரு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், இந்த நேரத்தை டைம் ஸ்லைஸ் Time Slice  என்பார்கள். ஒரு புரொகிறாமை ஒரேடியா பண்ணிடாது.

ஆமா,  ஒரே பிரோகிராமை பல பீசா பண்ணி பல இன்ஸ்டால் மெண்ட்லே செஞ்சா, தப்புவராதா?

 

வரும்.

ஆனா தப்புவராம பண்ண யுனிவர்சிடி வாத்தியாருங்க ஹாலிவுட்லே சினிமா படம் பிடிக்கிறதை பாத்டாங்களான்னு தெரியல்லே.

அது லேருந்து ஒரு டெக்னிக்கை புடிச்சு யுனிக்ஸ் புரொகிராமிலே போட்டு அந்த பிரச்சனையை  நல்லாவே சமாளிச்சுட்டாங்க.

அது எப்படின்னு பாத்துருவோம்.

 

சினிமா ஷூட்டிங்

 

இப்போ சினிமா ஷூட்டிங்க்குலேருந்து யுனிக்ஸ் பிடிச்சிட்ட ஒரு அமக்களமான பயன்பாடு என்ன என்று பார்க்கலாம்.

சினிமா, சீய்ரியல் எடுக்கராங்களே அதுலெ துக்கமான ஒரு விஷயம் என்னவென்றால். சினிமா சீரியல் எல்லாத்திலும் ஆட்டொ, உணவு உபசரிப்பு என்று எல்லார் பேரையும் போட்டுருவாங்க. அதிலெ கண்டினியுடி டிபார்மெண்டுலே வேலை பாக்குறவன் பேறு போடரதில்லை.

கண்டினுட்டி  ரொமப முக்கியம். ஏன் தெரியுமா?

ஒரு சினிமா ஷூட்டிங் ஒரே நாளில் எடுத்து முடிஞ்சா பிரச்சனை இல்லை. ஒரே சீனை எடுக்க பல நாள் ஆகும். ஒரே ஷூட்டிங் நடத்துர இடத்திலே பல சினிமா ஷூட்டிங்க் நடக்கும்.

ஒவ்வொருனாளைக்கும் ஷூட்டிங்க் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே  நடந்து முடிஞ்சப்போ  குறிச்சு வச்சிருக்கிறதுலேருந்து, படிச்சு செட் அப் செய்யணும்.  சில சினிமா காட்சியிலே ஹீரோ சட்டைக் கலர் திடீருன்னு  மாறிடும். காயம் வலது கன்னத்திலேரருந்து

இடது கன்னத்துக்கு தாவிடும்.  இதெல்லாம் வராமல் சீன் செட்பண்ரது கண்டினியுட்டி டிபார்ட்மெண்ட் வேலை.

இதுலேருந்து யுனிக்ஸ் சாப்ட்வே எழுதினவங்க  புடிச்சுக்கிடாங்கையா ஒரு முக்கியமான வேலை,

ஒவ்வொரு தடவையயும்  மணியடிக்கிறப்போ, காட்சி மாறிடும்.செஞ்சிட்டிடிருக்கிற வேலையை நிருத்திட்டு. எங்கே நிருத்தினோம், அப்ப சீன்லே என்னா இருந்துதுன்னு சுத்தமா குறிச்சு வச்சுடும் ஒரு சாப்ட்வேர்,

ஒரு புரோகமை ஒரு டைம் ஸ்லைசுலே சிபியு லே சேர்த்து  வலை செய்ய வைக்கிறது, ஒரு சினிமாலே ஒரு காட்சியோட ஒரு பகுதியை  ஷூட்டிங் பண்றமாதிரி. – இங்கே சி பி யு தான்  ஷூட்டிங் நடக்கிற இடம்.

அப்பப்போ ஷூட்டிங் சீன் மாறுதில்லே, அதை  காண்டெக்ஸ் சுவிட்ச் என்று சொல்லுவார்கள்.

ஷூட்டிங்  நடக்குதில்லே, அதை காண்டெஃஸ்ட்  என்பார்கள்.

 

— தொடரும்

 

 

நடராஜன் இவர் ஒரு மின்னணுவியல் அறிஞர். அரசு, தனியார், கல்வி துறைகளில் பெரும் அனுபவம் கொண்டவர். Scientist, Systems Engineer, Development engineer, Manager, General Manager, CEO, Consultant போன்ற பல பதவிகளை வகித்தவர். தனது வலை பதிவுகள் மூலம் தன் கல்வி பணிகளை தொடர்கிறார்.

 

மின்னஞ்சல் : natarajan.naga@gmail.comவலை பதிவு :science-of-good-living.blogspot.com/

 

education-a-pain.blogspot.com/

science-of-spirituality.blogspot.com/
sprituality-is-knowledge.blogspot.com/

%d bloggers like this: