எளிய தமிழில் DevOps-6

Docker Volume

 

கீழ்க்கண்ட உதாரணத்தில் என்னென்ன தரவுகள் மங்கோவிற்குள் செலுத்தப்பட்டன என்பதை ஒரு log ஃபைல் போன்று சேமிப்பதற்கான நிரல் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோப்பு கன்டெய்னருக்குள்ளேயே சேமிக்கப்படும். கண்டெய்னர் தனது இயக்கத்தை நிறுத்தும் போது இதுவும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகவே கன்டெய்னருக்குள்ளேயே சேமிக்கப்படும் இதுபோன்ற தரவுகளை வெளியே எடுத்து லோக்கலில் அணுகுவதற்கு volume என்ற ஒன்று பயன்படுகிறது. இதனைக் கையாள்வது பற்றி கம்போஸ் ஃபைலில் பார்க்கலாம்.


டாக்கர் கம்போஸ் ஃபைலில் volumes என ஒரு பகுதியைக் குறிப்பிட வேண்டும். பின் அதன்கீழ் கண்டெய்னருக்குள் தரவுகள் சேமிக்கப்படும் பகுதியானது, நம் கணினியில் ஒரு லோக்கல் பாதையுடன் mount செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு முறை கண்டெய்னருக்குள் தரவுகள் சென்று சேரும்போதும், அவை இப்பகுதியிலும் சேமிக்கப்படுகின்றன.

இப்போது app.py மற்றும் docker-compose.yml ஆகிய கோப்புகளில் மாற்றம் செய்துள்ளதால் மீண்டும் ஒருமறை அவற்றுக்கான இமேஜ் உருவாக்கப்படுகிறது.

அடுத்து கீழ்க்கண்ட தரவு மாங்கோவிற்குள் செலுத்தப்படுகிறது.

$ curl --header "Content-Type: application/json" --request POST --data '{"lotus":1033333,"tulips":166664}' localhost:5000

இத்தரவு கன்டெய்னருக்குள் data.log என்ற பெயரில் சேமிக்கப்படுவதைக் காணலாம். app.py இயங்கிக் கொண்டிருக்கும் கண்டெய்னருக்குள் செல்ல அதன் தொடக்க எண்ணான 21 என்பது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணானது $ docker ps எனும் கட்டளை மூலம் கண்டறியப்படுகிறது.

$ docker exec -it 21 /bin/sh
# cat tmpfiles/data.log

மேலும் இதே தரவு நம்முடைய லோக்கல் கணினியில் /home/nithya/backup எனுமிடத்தில் சேமிக்கப்படுவதையும் காணலாம்.

இப்பகுதியில் docker, docker-compose, docker volumes ஆகியவற்றின் பயன்பாடுகளைப் பற்றியெல்லாம் பார்த்தோம். அடுத்ததாக ஜென்கின்ஸ் கொண்டு இந்த டாக்கர் இமேஜை எவ்வாறு தானியக்க முறையில் உருவாக்குவது என்று பார்க்கலாம்.

%d bloggers like this: