வேதியியல் விளையாட்டு – kalzium

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும்  வேதியியல்  பொருட்கள்  தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு  கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில் உருவாக்க பட்டதே “கால்சியம்”.


கால்சியம் என்பது கட்டற்ற ஆவர்த்தன அட்டவணை (Periodical table) மென்பொருள். இது தனிமிங்களை பற்றிய விவரங்கள் அறிந்து  கொள்ள உதவும் தொழில்நுட்பம். இதில் தனிமங்களைப் பற்றிய ஏராளமான தகவல்களும், அவைகளின் படங்களும் நமக்கு கிடைக்கும்.  ஆவர்த்தன அட்டைவனையில் தொகுதி ஆவர்த்தனம், பண்புகள், மாறுபட்ட குடும்பமிங்களின் பட அமைப்பு, தனிமங்களின் தனிப்பண்புகளை இணைத்து வரை படம் உருவக்குதல் முதலியவைகளை இந்த மென்பொருளில் எளிதாக செய்யலாம். முளைக் கூறுபொருன்மை,   உஷ்ண நிலை மாறும் பொழுது தனிமங்களின் இயிற்பியல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள இம்மென்பொருள் உதவுகின்றது.

மேலும் விபரங்களுக்கு:edu.kde.org/kalzium/ என்ற இணையத்தளத்திற்கு செல்லவும்

கட்டுரை எழுதியவர் : சிந்துஜா சுந்தர்ராஜ், கேந்திர வித்தியாலையா
sindhuja0505@gmail.com

kalzium

 

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: