‘ Internal System Error ‘ Popup -ஐ உபுண்டுவில் விடுவிப்பது எப்படி?

Apport என்பது ஒரு பிழைத்திருத்தம் செய்யும் கருவி. இது தானாகவே சிதைவு அறிக்கைகளை (Crash Reports) உற்பத்தி செய்கிறது. Apport -ஆனது உபுண்டு 12.04 வெளியீட்டில் முன்னிருப்பாகவே செயல்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

உபுண்டு 12.04 பதிப்பினை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஒரு முறையாவது “Sorry, Ubuntu 12.04 has experienced an internal error” இந்த செய்தியினை பெற்றிருப்பீர்கள்.

Apport Tool -ல் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாது. இது உண்மையான பிழைகளை சரி செய்யாது. இந்த எரிச்சலூட்டும் பாப் அப்களை நாம் Disable செய்ய முடியும்.

Apport Tool –Disable செய்வதற்கு:

gksu gedit /etc/default/apport

இந்த கட்டளையினை முனையத்தில் கொடுத்து செயல்படுத்தினால் gedit உரைதிருத்தியில் apport கோப்பு திறக்கப்படும். அதில் enabled -ன் மதிப்பினை ‘1’ லிருந்து ‘0’ என மாற்றம் செய்து கோப்பினை சேமித்து விட்டு மூடி விடவும்.

இந்த படிகளை நாம் செய்து முடித்து விட்டால் apport -ன் தொல்லை நமக்கு இனிமேல் இருக்காது.

தற்காலிகமாக இயக்க:

sudo service apport start force_start=1

கட்டளையினை முனையத்தில் கொடுக்கவும்.

Apport Tool –னை Re-Enable செய்ய:

Apport Tool தேவைப்பட்டால் gksu gedit /etc/default/apport

கட்டளையினை முனையத்தில் கொடுத்து enabled=1 என மாற்றம் செய்து கோப்பினை சேமிக்கவும். சேமித்த பிறகு Apport Tool முன்பு போல வேலைசெய்யும்.

www.webupd8.org/2012/06/how-to-get-rid-of-internal-system-error.html

இரா.கதிர்வேல்

gnutamil.blogspot.in

%d bloggers like this: