இந்திய அளவிலான விக்கிமூலம் மெய்ப்புப் பார்க்கும் போட்டி – தமிழ் முதலிடம்

இந்திய அளவில் நடைபெற்ற விக்கிமூலம் புத்தகங்கள் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் 15869 பக்கங்களை மெய்ப்புப் பார்த்து தமிழ் இரண்டாவது முறையும் முதலிடம் பிடித்தது.

விக்கிமூலம்

கட்டற்ற இலவச இணைய நூலகமான விக்கிமூலமும் திட்டங்களில் ஒன்று. இத்திட்டம் கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் தொகுப்பாகும். அதாவது நாட்டுடைமையாக்கப்பட்ட / பொதுக்கள உரிமங்களில் (Nationalised / Public Domain) இருக்கும் நூல்களின் தொகுப்பை இத்தளத்தில் காணலாம். ஆங்கில விக்கிமூலம் (en.wikisource.org/) 2003ல் தொடங்கப்பட்டது.

நாட்டுடைமையாக்கப்பட்ட / பொதுக்கள உரிமங்களில் இருக்கும் நூல்கள், அந்தந்த மொழிகளுக்கான இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, ஒளி எழுத்துணரி (OCR) மென்பொருள் மூலம் எழுத்துக்கள் உணரப்பட்டு, தொகுத்தலுக்கு (Editing) ஏற்ப மாற்றப்படுகின்றன. இவ்வாறு மென்பொருள் மூலம் மாற்றப்பட்ட புத்தகத்தில் ஒரு சில பிழைகள் இருக்கலாம். பின்னர் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தன்னார்வலர்களால் மெய்ப்பு (Proof reading) மற்றும் சரிபார்க்கப்படுகிறது (Validate). ஒரு நூலின் மொத்தப் பக்கங்களும் மெய்ப்பு/சரிபார்க்கப்பட்ட பின்பு அப்புத்தகம் பல்வேறு கருவிகளுக்கு ஏற்றவாறு (/கணினி//) பல்வேறு வடிவங்களில் (epub/mobi/pdf/odt) மின்னூலாக வெளியிடப்படுகின்றன. இவ்வாறு வெளியிடப்படும் மின்னூல்கள் அனைத்தும் பொதுக்கள உரிமத்தின் கீழ் வெளியிடப்படுவதால் இம்மின்னூல்களை யாவரும் கட்டற்ற முறையில் கொள்ளலாம். இதன்மூலம் வெளியிடப்படும் மின்னூல்களில் பல்வேறு திரை அளவுகளுக்கேற்ப எழுத்துருவை மட்டும் பெரிதாக்கி பார்க்கும் வசதி, ஏதேனும் வார்த்தையை கண்டு பிடிக்கும் வசதி பல சிறப்பம்சங்கள் உள்ளன.

தமிழ் விக்கிமூலம்

2007 ல் தமிழ் விக்கிமூலத்திற்கான இணையதளம்(https://ta.wikisource.org/) துவங்கப்பட்டது. இதுவரையில் 2000+ நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றப்பட்டு மெய்ப்புப் பார்க்கப்பட்டு வருகிறது. இன்றைய தேதி வரையில் 260க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் சில நூறு தன்னார்வலர்களால் மட்டுமே மெய்ப்புப் பார்க்கப்பட்டு பெற்றுள்ளன.

விக்கிமூலம்

உலகளவில் ஒப்பீடும் போது இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே முதல் 10 இடத்திற்குள் உள்ளது. எனவே இந்திய மொழி ஊக்குவிக்கும் பொருட்டு அவ்வப்போது பார்க்கும் போட்டிகள் CIS (Centre for Internet & Society) நிதியுதவியுடன் நடத்தப்படுகின்றன. போட்டியின் முடிவில் , இந்திய அளவிலும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதுவரை மூன்று முறை விக்கிமூலம் மெய்ப்புப் போட்டி நடைபெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விக்கிமூலம் போட்டியில் 72 தன்னார்வலர்களால் 91 புத்தகங்களின் 15869 பக்கங்களை மெய்ப்புப் பார்த்து 47607 புள்ளிகளுடன் இரண்டாவது முறையும் பிடித்தது. அசாமி (27868 புள்ளிகள்) மற்றும் இந்தி (20367 புள்ளிகள்) முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தன.

இப்போட்டியில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களையும் தமிழ் விக்கிமூலம் தன்னார்வலர்களான (3289 பக்கங்கள்) மற்றும் சத்யா (2602 பக்கங்கள்) ஆகியோர் பிடித்தனர் என்பது கூடுதல் சிறப்பு.

புள்ளிவிவரங்கள்

உலகளவில் மொத்தப் பக்கங்கள் (411696 பக்கங்கள்) அடிப்படையில் தமிழ் விக்கிமூலம் 7 வது இடத்திலும், மெய்ப்புப் பார்க்கப்பட்ட பக்கங்களின் (125220 பக்கங்கள்) அடிப்படையில் 6வது இடத்திலும் உள்ளது (tools.wmflabs.org/phetools/statistics.php). இதுவே இந்திய மொழிகளில், மொத்தப் பக்கங்களில் தமிழ் இரண்டாம் இடத்திலிலும் (பெங்காலி முதலிடம்), மெய்ப்புப் பார்க்கப்பட்ட பக்கங்களின் அடிப்படையில் முதலிடத்திலும் உள்ளது (wikisource.org/wiki/Wikisource:Indic_Wikisource_Stats).

விக்கிமூலம் - உலக மொழிகளுடன் ஒப்பீடு

விக்கிமூலம் – உலக மொழிகளுடன் ஒப்பீடு

 

விக்கிமூலம் -  இந்திய மொழிகளுடன் ஒப்பீடு

விக்கிமூலம் – இந்திய மொழிகளுடன் ஒப்பீடு

தமிழ் விக்கிமூலத்தில் பங்களிக்க

கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள உதவிக் காணொளிகளைப் பார்க்கவும்

விக்கிமூலம் அறிமுகம் – www.youtube.com/watch?v=VPDoe5oz128
புதிய கணக்கு / மெய்ப்பு பார்த்தல் – www.youtube.com/watch?v=XDOiaaZ71Tg

மெய்ப்பு உதவி :
www.youtube.com/watch?v=DE2D1iTnpJI
www.youtube.com/watch?v=Wb6DGu_jzto
www.youtube.com/watch?v=a_FWm3aXKgM
www.youtube.com/watch?v=D4T9OgWG2fM

மேலும் தொகுத்தல் உதவிக்கு ta.wikisource.org/s/3pct என்ற இணைப்பில் காணலாம்.

இது தவிர வேறு ஏதேனும் உதவிக்கு ta.wikisource.org/s/3yt என்ற இணைப்பில் தங்களது கேள்விகளை கேட்கலாம்.

தமிழ் விக்கிமூலத்தில் மேலும் பல ஆயிரம் நூல்கள் பதிவேற்றப்பட இருக்கின்றன. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டால் மொத்த நூல்களின் அடிப்படையில் இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் பெறும். ஆனால் அப்புத்தகங்களையெல்லாம் மெய்ப்புப் பார்க்க போதிய அளவில் தன்னார்வலர்கள் இல்லை என்பது வருத்தமான செய்திதான்.

கல்லூரி மாணவர்களுக்கு விக்கிமூலம் பற்றிய பயிற்சி பட்டறைகளும் தமிழ் விக்கிமூலம் குழுவினரால் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. தங்கள் கல்லூரிகளிலும் இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் நடத்த எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

விக்கிமூலத்தில் தன்னார்வலர்களால் மெய்ப்புப் பார்க்கப்பட்டு வெளியிடப்படும் ஒவ்வொரு மின்னூலிலும், அந்நூலை மெய்ப்புப்பார்த்த தன்னார்வலர்களின் பெயர்கள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் விக்கிமூலத்தில் தாங்கள் பங்களிப்பதன் மூலம் தங்களுக்கு விருப்பமான (சிறுகதை/நாவல்/கவிதை/வரலாறு/அறிவியல்) நூல்களை வாசிப்பதோடு அந்நூல்கள் புதுவடிவம் பெற்று மின்னூலாக வெளியிடவும் உதவும்.

– லெனின் குருசாமி – guruleninn@gmail.com

%d bloggers like this: