ஹெச்.டி.எம்.எல்-5: ஊடகங்கள்-காணொளி
இணையப் பக்கங்கள் முதன் முதலில் உரைகளை மட்டுமே காட்டி வந்தன. ஆனால் தற்போது உள்ள இணைய உலாவிகள் பலதரப்பட்ட ஊடகங்களைக் காட்டுகின்றன. இணையத்தில் ஊடகங்கள் என்று சொல்லும் போது படங்கள், காணோளிகள் ஒலி, அசைவூட்டங்கள் (animations) என பலவிதங்கள் உள்ளே அடங்கி விடும். ஊடகங்களின் வடிவூட்டங்கள் பலதிறப்பட்டவை. (format) அவை எல்லாவற்றையும் இணையப் பக்கத்தில் காட்ட முடியாது. ஒரு ஊடகம் இணையத்தில் சரியாக வேலை செய்யுமா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள அவற்றின் கோப்பு நீட்சியை(file extenstion) நாம் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்.
இணைய ஊடகங்களில் ஒலி, காணோளிகளின் வடிவூட்டத்தைப் பற்றி இங்கு காணலாம்.
காணொளிகளின் முக்கிய கோப்பு நீட்சிகள்:
(.avi-AVI) மைக்ரோசாப்ஃட் உருவாக்கிய ஒலி வடிவம் இவை எல்லா இணைய உலாவிகளிலும் வேலை செய்யும் என்றாலும் அவை விண்டோஸ் கணினிகள் அல்லாத மற்ற கணினிகளில் சரியாக வேலை செய்வது இல்லை.
(wmv-WMV) இதுவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியது தான். அதனால் விண்டோஸ் கணினிகள் தவிர மற்ற கணினிகளில் வேலஈ செய்ய செருகிகள் (plugins)தேவைப் படுகின்றன.
(.mov-QuickTime)இது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட காணொளி வடிவம். இவை விண்டோஸ் கணினியில் வேலை செய்ய வேண்டுமானால் அதற்கென்று ஒரு செருகிகள் (plugins) தேவைப்ப்படும். இந்த மூன்று வடிவூட்டங்கள் தவிர
(.rm,.ram -RealVideo) (.swf,.flv-Flash)ஆகிய வடிவுட்டங்களும் இணையத்தில் உலா வருகின்றன. இதில் RealVideo குறைந்தbandwidthல் காணொளிகளைக் காட்டுவதால் அவர்ற்றின் தரம் மிகக் குறைவாக இருக்கும். எல்லா இணைய உலாவிகள் எல்லாவற்றுடன் ஏற்கனவே ஈனைந்து வரும் செருகி Flash. இதன் மூலம் காணொளிகள் மட்டுமல்லாது மற்ற அசைவூட்டங்கள், பயனாளிகள் விளையாடும் விளையாட்டுகளாகியவற்றைக் காட்ட உதவுகின்றன.
(.ogx, .spx, .opus-Ogg ) ஒரு திறவூற்று காணொளி வடிவூட்டம்.
இந்த வடிவூட்டங்களை பயன் படுத்துவதில் இருக்கும் பிரச்சனையால் ஹெச்.டி.எம். எல் 5 வருவதற்கு ஒரே கோப்பை நான்கு தனித்தனி வடிவூட்டங்களில் உருவாக்கி object என்ற முறையில் இணையப் பக்கத்தில் சேர்க்க வேண்டி இருந்தது.
இதைத் தவிர்க்க இப்போது(.mp4-mpeg4) என்ற வடிவூட்டம் அறிமுகமாகியுள்ளது.
<video width=”320″ height=”240″ controls autoplay>
<source src=”kaniyam.mp4″ type=”video/mp4″>
<source src=”kaniyam.ogg” type=”video/ogg”>
</video>
என்று எழுதினாலே போதும். இணைய உலாவிகளிப்போது காணொளிகளைச் சரியாக காட்டிவிடும்.
சுகந்தி வெங்கடேஷ் <vknsvn@gmail.com>
இதழ் 23 நவம்பர் 2013