HTML5 ல் விளையாட்டுகள்

கடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன் அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது. தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின் விளையாட்டுகளில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இதற்காக தனியான முதலீடோ ,வன்பொருட்களோ அல்லது மென்பொருட்களோ தேவையில்லை. முன்பெல்லாம் கணினியில் விளையாட்டு மென்பொருளை உருவாக்குவதற்காக இதற்கென தனியான தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவாக அமர்ந்து அதிக நேரம் உழைத்து அதிக பொருட்செலவில் உருவாக்கவேண்டிய நிலை இருந்துவந்தது. தற்போது தனியொரு நபரே மிக்குறைந்த நேரத்தில் செலவேஇல்லாமல் மிகஎளிதாக இந்த கணினியின் விளையாட்டை உருவாக்கமுடியும் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்டது.

சமுதாய இணையபக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்,இசை , ஒலிஒளிபடங்கள், விரைவான அசைவூட்டங்கள் என மிக முன்னேறிய நிலையில் இந்த கணினியின் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டுகளில் உள்ளன. இந்த கணினியின் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டுகளை மேம்படுத்துதலும் சந்தைபடுத்துதலும் மிகஎளிதான செயலாகிவிட்டது மேலும் இதற்கென தனியான வன்பொருள் எதுவும் தேவையில்லாததாகிவிட்டது

அதுமட்டுமின்றி பல்வேறுகருவிகள்,தொழில்நுட்பங்கள்,தளங்கள்,போன்றவை இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதற்காக தேவைப்படுகின்றன. ஆயினும் இவையனைத்தும் பின்புலத்தில் இருந்துகொண்டு ஒரு பாமரன்கூட மிகஎளிதாக இதனை உருவாக்கிடுவதற்கு அனுமதிக்கின்றது

மேலும் புதியபுதிய தளங்கள் ,கருவிகள் அவ்வப்போது அறிமுகமாகிக்கொண்டே உள்ளன. தனியானதொரு மென்பொருளில் உருவாக்கிடும் இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளானது அனைத்து பயன்பாட்டுமென்பொருட்களுடனும ஒத்தியங்கிடுமாறு செய்திடவேண்டும் இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதற்காகன செலவானது மிகஅதிகமாகும் ஆனால் இதனை சந்தைபடுத்திடும்போது அதனுடைய விற்பனைவிலையானது மிக்குறைவாக இருந்திடவேண்டும் இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்கும் வழிமுறைகளும் அவ்வப்போது மாறிகொண்டே இருக்கின்றன. அனைத்து பயன்பாடுகளுடனும் மென்பொருட்களுடனும் ஒத்தியங்கசெய்தல் இணையபக்கத்தில் இதனைமேலேற்றிடும் நேரஅளவை மிக்குறைவாக இருக்குமாறு செய்தல் என்பனபோன்ற ஏராளமான காரணிகள் இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதை தீர்மாணிக்கின்றன.

மேற்கூறிய அனைத்து காரணங்கள் ,காரணிகள் ஆகியவற்றை வெற்றிகொண்டு இணையத்தின் மூலம் கணினியின் விளையாட்டுகளை உருவாக்கிடும் மிகச்சிறந்த திறமூல மென்பொருள் கருவியாக HTML5 என்பது விளங்குகின்றது. இது தனியுடமை மென்பொருளைவிட மிகசிறந்ததாக விளங்குகின்றது. இது java scrips ,CSS3 Scripts ஆகிய இணையஉலாவியினுடைய மென்பொருட்களின் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளது அதிக செயல்திறனும் செயலியையும் கொண்டதாகவும் வெளியிலிருந்து வேறு மென்பொருட்கள்எதையும் சாராமலும்,Flash,Silverlight,Flex போன்றபயன்பாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் இந்த HTML5 என்பது உள்ளது. இது எந்த தளத்திலும் செயல்படும் திறன்பெற்றது, அதிகஇடைமுகமும் மிகஎளிதாக பயன்படுத்த தக்கவகையிலும் உள்ளது. மூன்றாவது நபரின் மென்பொருள் எதனையும் இது சாராமல் செயல்படும் திறன்கொண்டது கையடக்கமானது, இருபரிமான முப்பரிமான வரைகளையுடன் செயல்படும்திறன் மிக்கது. குறைந்த அலைகற்றையை கொண்டு மிகக்குறைந்த காலஅவகாசத்தில் இணையபக்கத்தில் மேலேற்றிடும் திறனுள்ளது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்வல்லமை கொண்டது. இயக்கநேரத்தில் நேரடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கின்றது இதனை பற்றி மேலும் அறிந்த கொள்ள

html5games.com/

www.webdesignerdepot.com/2013/10/30-incredibly-addictive-html5-games/

என்ற இணையதள பக்கத்திற்கு செல்க

ச.குப்பன் kuppansarkarai641@gmail.com

இதழ் 23 நவம்பர் 2013

Kaniyam-23 - Desktop PDF
Kaniyam-23 - Desktop PDF
kaniyam-23-Desktop.pdf
View post
1.5 MiB
5609 Downloads
Details...

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: