எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(6)
-சுகந்தி வெங்கடேஷ்
இதுவரை ஒரு இணையப்பக்கத்தின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தோம். இனி ஒரு இணையப் பக்கத்தின் உட்பொருள்களை எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.
ஒரு இணையப்பக்கம் என்று சொல்லும் போது அதன் உள்ளடக்கங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் அவை உரைகள்,(texts) ஊடகங்கள்(media) ஊடாடும் முறைகள்(Interactive).என்று பிரிக்கப்படுகிறது.
உரைகள் என்று பிரிக்கும் போது தலைப்புகள், பத்திகள், இணையச் சுட்டிகள், பட்டியல்கள் மேற்கோள்கள், முகவரிகள்,தனித்தன்மை (entities) கருத்துகள் ,இணைகூற்றுகள்(caption) தேதிகள், ஆகியவற்றை முக்கியமாகப் பார்க்கலாம ஊடகங்கள் என்று பார்க்கும் போது நாம் அட்டவணைகள், படங்கள், காணொளிகள், கேட்பொலிகள்,(அசைபடங்கள் (animation)என்று பிரிக்கலாம். HTML5ல் மிக முக்கியமான மாற்றங்கள் ஒரு இணையப் பக்கம் பயனாளிகளுடன் எப்படி ஊடாடுகிறது என்பதை மாற்றி அமைப்பதில் அமைந்துள்ளன. அவற்றை ஊடாடுதல் பிரிவில் விளக்கமாக பார்க்கலாம்
இந்தப் பகுதியில் இணையப்பக்கத்தில் வரும் உரைகள் பற்றி பார்க்கலாம். நாம் தலைப்புகளை முதலிலேயே பார்த்துவிட்டோம். இப்போது மற்றவற்றைப் பார்க்கலாம்.
பத்திகள் இவை ஹெச்.டி.எம்.எலில் முதலில் இருந்தே இருக்கின்றன. அவற்றில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
என்று பத்திகளுக்கான இழை இருக்க வேண்டும்
(எ.கா)
பத்திகளுக்கான இழைக்குள் விளக்கங்களை எழுத வேண்டும்
அடுத்து வருவது இணையச்சுட்டிகள். இவை ஒரு இணையத் தளத்தை மற்றொரு இணையத் தளத்தோடு இணைக்கவும், ஒரே இணையத் தளத்தில் உள்ள பல பக்கங்களை இணைக்கவும் பயன் படுகின்றன. அது மட்டுமல்லாமல் ஒரு இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய வேண்டிய கோப்புகளுக்கும் இந்தச் சுட்டிகளைப் பயன் படுத்தலாம், எடுத்துக்காட்டாக இல்லம் என்று எழுதினால் இல்லம் என்ற சொல் இணையத் தளத்தில் முகப்பைச் சுட்டிக்காட்டும். இந்த வரிகளில்  என்பதுஇழைகளின் தொடக்கத்தையும்என்பது இழையின் முடிவையும் குறிக்கும்.href என்பது எதை அழைக்கிறோம் என்று சுட்டி காட்டுகிறது. மேற்கோள்களுக்கு இடையில் இணையப் பக்கத்தின் பெயரைக் குறித்தால் அது அந்த இணையத் தளத்தின் மற்றப் பக்கங்களுக்குச் செல்லும்.
என்ற இழைகளுக்கு அடையாளம் இட்டால் அவற்றை ஒரே இணையப் பக்கத்துள் அமையும் சுட்டிகளுக்குச் சான்றாகக் கொள்ளலாம்.
என்று எழுதி அடையாளமிட வேண்டும். இந்த அடையாளம் உலாவிகளுக்கு மட்டுமே புரியும். பயனாளிகளின் கண்ணுக்குத் தெரியாது. அதாவது நாம் சுட்டிகளின் இழைக்கு விளக்கங்கள் என்று பெயர் வைத்து உள்ளோம். இனி இந்த இழையை சுட்டுகள் கொண்டு அழைக்கலாம்
கணியம் என்று எழுதினால் அது அடுத்த இணையப் பக்கங்களுக்கு எடுத்துச் செல்லும். href குறிக்கும் இடத்தைப் பாருங்கள் அதில் கணியத்தின்முழு இணையப் பக்க முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பயனாளிகள் கணியம் என்ற சொல்லைத் தட்டினால் அது கணியத்தின் இணையத் தளத்திற்கு அது எடுத்துச் செல்லும்
அடுத்த இதழில் ஹெச்.டி.எம்.எல்.5ல் இழையில் ஏற்பட்டுள்ள வரவேற்கத் தக்க மாற்றங்களையும் பார்க்கலாம்
About Author
ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai
%d bloggers like this: