ProjectMadurai திட்டத்தின் நூல்களை கிண்டில் கருவிகளுக்காக 6 inch PDF மாற்றுதல்

ProjectMadurai.com தளத்தில் பல பழம் பெரும் இலக்கியங்கள் HTML வடிவிலும் A4 PDF வடிவிலும் வழங்கப் படுகின்றன.

கிண்டில் மற்றும் பல ஆன்டிராயுடு கருவிகளில் (<=4.2.x) இன்னும் தமிழ் சரியாகத் தெரிவதில்லை.

அவற்றில் தமிழ் நூல்கள் படக்க 6 அங்குல PDF கோப்புகள் பயன்படுகின்றன.

GNU/Linux இயக்குதளத்தில் உள்ள கருவிகளைக் கொண்டு, Project Madurai தளத்தில் உள்ள அனைத்து நூல்களையும்

6 அங்குல PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

1. கோப்புகளின் பெயர்களை பிரித்தெடுத்தல்.

www.projectmadurai.org/pmworks.html

இங்குதான் எல்லா நூல்களும் உள்ளன.

LibreOffice Spreadsheet ல் இந்த பக்கத்தை நகலெடுத்து ஒட்டுக.

“unicode”  என்ற நிரலை நகல் செய்க.

கோப்புகளின் பெயரை மட்டும் ஒரு தனி உரை ஆவணத்தில் ஒட்டி சேமிக்கவும்.

cat pm.txt

pmuni0001.html

pmuni0002.html

pmuni0002.html

pmuni0002.html

pmuni0002.html

2. wget மற்றும் python script மூலம் எல்லா நூல்களையும் பதிவிறக்கம் செய்தல்

cat dl-wget.py

import urllib

import os

book = open(“pm.txt”).readlines()

for filename in book:

    filename = filename.strip()

    print “Downloading ” + filename

    bookurl = “http://www.projectmadurai.org/pm_etexts/utf8/” + filename

    command = “wget -E -H -k -K -p –max-redirect 0 –domains www.projectmadurai.org -e robots=off ” + bookurl

    os.system(command)

மேற்கண்ட பைதான் நிரலை இயக்குக.

python dl-wget.py

இப்போது எல்லா நூல்களும் பதிவிறக்கம் செய்யப்படும்.

மொத்தம் 593 html கோப்புகள் கிடைக்கின்றன.

 

 

3.

PDF ஆக மாற்றுதல்.

wkhtmltopdf என்ற மென்பொருள் html கோப்புகளை A4 pdf ஆக மாற்ற உதவுகிறது.

6 அங்குல pdf ஆக மாற்ற பின்வரும் கட்டளை உதவுகிறது.

wkhtmltopdf -s A6 –minimum-font-size 40 -B 5 -L 5 -R 5 -T 5  source.html destination.pdf

இப்போது, பதிவிற்றம் செய்துள்ள எல்லா html கோப்புகளையும் பின் வரும் shell script மூலம் 6 அங்குல pdf ஆக மாற்றுவோம்.

 

 

for i in *.html; do orig=`basename $i .html`; echo “Converting $orig”; wkhtmltopdf -s A6 –minimum-font-size 40 -B 5 -L 5 -R 5 -T 5  $i.html $orig-6-inch.pdf; done

 

 

இப்போது, இந்த கோப்புகளை கிண்டில் போன்ற கருவிகளில் எளிதாகப் படிக்கலாம்.

6 அங்குல pdf கோப்புகளின் தொகுப்பு இங்கே உள்ளது.

bit.ly/project-madurai-kindle-books

நூல்களின் இங்கிருந்து ஒப்பிட்டு அறியலாம்

bit.ly/project-madurai-kindle-books

எல்லா கருவிகளிலும் தமிழ் படித்து மகிழ்க.

%d bloggers like this: