Great Cow Graphical BASICஎனும்நிரலாக்கங்களின் பதிப்பாளர் ஒருஅறிமுகம்


Great Cow Graphical BASIC என்பது உருவப்பொத்தான் அடிப்படையிலான ஒரு நிரலாக்கங்களின் பதிப்பாளராகும். மேலும் இது நிரலாக்கங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE) ஆகவும் திகழ்கின்றது இது பயனாளர்கள் கட்டளைவரிகள் எதையும் மனப்பாடம் செய்யாமலேயே நிரலாக்கங்களை உருவாக்க அனுமதிக்கின்றது. மிகமுக்கியமாக எந்தெந்த கட்டளைவரிகள் எங்கெங்கு வரவேண்டும் என்ற அடிப்படையை கூட மனப்பாடம் செய்திடாமல் அல்லது அறிமுகமே இல்லாதவர்களும் இதனை பயன்படுத்தி நிரலாளராக வளரமுடியும் அதாவது இதற்கு முன்னர் எந்தவொரு நிரலாக்கத்தையும் செய்யாத புதியவர்களும் அல்லது துவக்க நிலையாளர்களும் கூட மிகஎளிதாக சிரமபடாமல்நிரலாளராக வளருவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், BASIC எனும் கணினி மொழி போலவே, இது முற்றிலும் இலவசமாகும்!
இது BASIC உடன் இறுக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது – இது ஒரே மாதிரியான சில்லுகள் அனைத்திலும் பணிபுரியும் தன்மைகொண்டது, மேலும் GCBASIC நிரல்களை நேரடியாக பதிவேற்றுகிறது, சேமிக்கிறது. இதனோடு எந்தவொரு உரை பதிப்பானையும் இணையாக வைத்துகொண்டு இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு பெரியநிரலாக்க குறிமுறைவரிகளை நகலெடுத்து ஒட்டி பரிமாறிகொள்ளலாம்!, மேலும் உருவப் பொத்தான்களை விட்டு வெளியேற வசதியாக இருக்கும்போது GCB நூலகங்களை பதிவே ற்றிகொள்கின்றது, இந்த நிரலாக்கங்களை வேறு எந்த பெரிய நிரலையும் போல திருத்தம் செய்திடலாம்.
தற்போது, இது விண்டோஇயக்கமுறைமையில் மட்டுமே செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது மேலும்இதுசெயல்படுவதற்காக NET Framework 1.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு தேவைப்படுகின்றது.இது 8 பிட் Microchip PIC, Atmel AVR மீச்சிறு கட்டுபாட்டாளர் ஆகியவைகளுக்கான கட்டற்ற அடிப்படை தொகுப்பாகும் – இதை வேடிக்கையாகவும் எளிமையாகவும் செய்ய 1000 க்கும் மேற்பட்ட மீச்சிறு கட்டுபாட்டாளர்களை கருவிகளுடன் ஆதரிக்குமாறு செய்யப்பட்டுள்ளது.இது – மீண்டும் மீண்டும் பயன்படுத்திடும் assembly கட்டளைகளின் தேவையை நீக்குதல், திறமையான குறிமுறிவரிகளை உருவாக்குதல் ஒரு மீச்சிறு கட்டுபாட்டாளர் வகைக்கு எழுதப்பட்ட குறிமுறைவரிகளை எடுத்து மற்றொரு மீச்சிறு கட்டுபாட்டாளரில் இயக்குவதை எளிதாக்குதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது . மிகமுக்கியமாக மீச்சிறு கட்டுபாட்டாளரைப் பயன்படுத்துவதற்கும் நிரல்படுத்துவதற்கும் உள்ள சிக்கலை அகற்றுவதே இந்த வடிவமைப்பின் அடிப்படை நோக்கமாகும். இது துவக்க நிலையாளர்களுக்கு ஏற்றது, assembly மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பாத அல்லது விரும்பாதவர்களுக்கும் அனுபவமிக்க மீச்சிறு கட்டுபாட்டாளர் நிரலாளர்களுக்கும் ஏற்றது. இது விண்டோ, ஆப்பிள் லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படுமாறுக் கிடைக்கின்றது. இதனுடைய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:
இது பயன்படுத்த எளிமையான, பயனுள்ள மொழி,யாக விளங்குகின்றது இது ஒரு செந்தர அடிப்படை ஓட்டக் கட்டுப்பாட்டு (flow control) அறிக்கைகள் உருவாக்குவதற்கும் ஒன்றுசேர்ப்பதற்கும் ஒன்றிலிருந்து பிரித்து கழித்திடவும், பயன்படுகின்றது மிகமுக்கியமாக பூலியன் செயல்பாடுகள் ஒப்பீடுகளுக்கான ஆதரவு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறப்பு உத்தரவுகள் எதுவும் இல்லாமல், தரவு அட்டவணைகளை உருவாக்குதல், மிகசிக்கலான கணக்கீடுகளை எளிதாக செய்தல, மிகச்சிறிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய குறிமுறைவரிகளை கொண்டது TinyAVRஇக்கான குறிமுறைவரிகளை எழுதி, அதை 18F-க்கு எளிதில் மாற்றியமைக்கலாம், சிப்பின் கடிகார வேகத்தைப் பொறுத்து அனைத்து தாமத கட்டளைகளையும் தானாகவே மீண்டும் கணக்கிடுகிறது
மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் gcbasic.sourceforge.net/Typesetter/index.php/Home எனும் இணையதள முகவரிக்கு செல்க

%d bloggers like this: