Gedit – உரை பதிப்பான்

Gedit என்பது ஒரு உரை பதிப்பான் (text editor). பொதுவாக உரை பதிப்பான் மூலம்,உரையை மட்டுமே type செய்ய முடியும்.உதராணமாக ஓர் எழுத்து ஒன்றை  type செய்யலாம்.

 

            ஆனால் Gedit உரை பதிப்பான் மற்ற பதிப்பான்களை விட அதிக சிறப்பு அம்சங்களை  பெற்றுள்ளன.

 

       Gedit னுள்  நுழைந்ததும் edit  ->  Preferences  ->  plugins  என்ற  option-க்கு  செல்லவும்

 

Change Case  : இது ஒரு textcase-ஐ மாற்ற உதவும் plugin ஆகும். 

 

            (i) உங்கள் text editor ல் plugins option ல் change case என்ற check box ஐ தேர்ந்தெடுக்கவும், பின்னர் edit menu-ல் change case என்ற option-ஐ காண்பீர்கள். இப்பொழுது உங்கள் உரை பதிப்பானில் ஏதேனும்  ஒரு உரையை type செய்யவும். பின்னர் அதனை ctrl + A என்ற கீயின் மூலம் தேர்வு செய்யவும். இப்பொழுது  edit menu சென்று  change case என்பதை  தேர்வு செய்யவும் . இவை நான்கு option-களை  காண்பிக்கும்.

 

* All Upper case –> இவை நீங்கள் தேர்வு செய்த உரையை பெரிய எழுத்தாக மாற்றும்.

* All Lower case –> இவை  நீங்கள்  தேர்வு செய்த  உரையை சிறிய எழுத்தாக மாற்றும்.

* Invert case      –> இவை நீங்கள் தேர்வு செய்த உரையை சிறிய எழுத்தில் இருந்து அதை பெரிதாகவும், பெரிய எழுத்தில் இருந்தால் அதை  சிறியதாகவும் மாற்றும்.

*Tile case          –>  உங்களுடைய உரையானது அனைத்தும் சிறிய எழுத்தில் இருந்தால், அதன் முதல் எழுத்தை மட்டும் பெரிய எழுத்தாக மாற்றும் (அல்லது) உங்களுடைய உரையானது அனைத்தும் பெரிய எழுத்தில் இருந்தால், அதன் முதல் எழுத்து மட்டும் சிறிய எழுத்தாக மாற்றும்.

 

Document Statistics :

            இந்த document statistics tool, உங்களுடைய text file ஆனது save செய்யப்பட்டதா (அல்லது) இல்லையா, எந்த பெயரில் text file save செய்யப்பட்டது, எத்தனை வரிகள்(Lines) உள்ளன, எத்தனை வார்த்தைகள்(words) உள்ளன எத்தனை எழுத்துக்கள்(characters) உள்ளன, எத்தனை  bytes எடுத்துக்கொண்டன என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு  Text file-ல் I LOVE LINUX என்ற text உள்ளது என வைத்துக்கொள்வோம். இந்த document statistics –ஆனது

வரிகள்(Lines)–1, வார்த்தைகள்(words)–3, எழுத்துக்கள்(characters with spaces)–12, எழுத்துக்கள்(characters no spaces)–10,  bytes–12.

 

 

External Tools :

            இந்த check box-ஐ தேர்வு செய்து, “Configure Plugin” என்ற option-ஐ தேர்வு  செய்யவும், இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான shell script எழுதி அதனை  உபயோகிக்கலாம்.

 

File Browser Pane :

    “plugin” option க்கு சென்று “File Browser Pane” என்ற check box-ஐ தேர்வு செய்து  Configure Plugin” என்பதை தேர்வு செய்யவும், இதனால் geditor-ன் இடதுபுறம் open செய்யப்பட்ட text file-கள் காட்டப்படும். இதனால் சுலபமாக உங்கள் file-களை தேர்வு  செய்யலாம் .

 

Insert Date/Time :

            இந்த option-ஐ தேர்வு செய்வதன் மூலம் உங்களுடைய text editor-ல்  தேதி/நேரம் (date/time) print ஆகிவிடும். பல்வேறு “date/time” மாதிரிகளை உபயோகிக்க “Use the Selected Format” என்ற option-ஐ தேர்வு செய்வதன் மூலம்  பெறலாம். இதனை தேர்வு செய்ய Edit -> Insert Date/Time என்ற option-க்கு  செல்லவும்.

 

Spell Checker :

            இதனை தேர்வு செய்வதன் மூலம், நீங்கள் type செய்த சொற்களில் ஏதேனும் தவறு உள்ளதா என கண்டுபிடிக்க உதவுகிறது. ஏதேனும் தவறு இருந்தால், அதனை அடிக்கோடிட்டு காட்டும்.இதனை Tools -> Check Spelling (அல்லது) shift+F7 என்ற key-யின் மூலம் பெறலாம்.

 

 

 நாகராஜன், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் B.E Computer Science இறுதி ஆண்டு படிக்கிறார்.

 

   மின்னஞ்சல்       :   knagarajanbtech@gmail.com

   வலை                   :   knagarajanbtech.blogspot.com/

%d bloggers like this: