“Free Software” உள்ள “Free” பற்றிய விளக்கம்

“Free Software” உள்ள “Free” பற்றிய விளக்கம்

“Free Software” மற்றும் “Free Software Movement”‘இல் குறிப்பிடும் “Free” என்ற வார்த்தைக்கு இலவசம் என்று கடந்த மாத  வெளியிட்டில் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது, ஆனால் இவ்விடத்தில் அதன் மொழிமாற்றம் “சுதந்திரம்” என்பதாகும்.

“Free  Software” என்னும் சொல்லை பொதுவாக இலவசம் என்று பலரும் மொழிபெயர்த்து  வருகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கதாகும். இவ்வரத்தையை  மொழிப்பெயர்க்கும் போது “கட்டற்ற மென்பொருள்” என்று மொழிபெயர்ப்பது உசிதம்.  இது பலருக்கு எளிதில் புரியாது  என்பதால் “சுதந்திர மென்பொருள்” என்று பயன்படுத்தபட்டு வருகிறது. ஆனால்  இதை பொருள் வேறுப்படும்படி “இலவச மென்பொருள்” என மொழிபெயர்ப்பது பிழையாக  கருதப்படும்.

பொதுவாக “Free” என்னும் வார்த்தையை “இலவச தொலைக்காட்சி” என்பது போல புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இது உரிமை பற்றி குறிக்கும் “சுதந்திரம்” என்னும் பொருள்படும்.

எழுதுபவர் :

அருண் பிரகாஷ்,

தொண்டர்,

ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன், தமிழ்நாடு 

www.fsftn.org

arun@fsftn.org

%d bloggers like this: