GIMP-ல் False Depth of Field(மாய மண்டலவாழம்) ஒரு விளக்கம்

   C:\Users\jophine\Desktop\DOF02.jpg

இப்பகுதியில் GIMP—ல் Depth Of Field உருவாக்கம் பற்றி அறியலாம். பிம்பங்களை மங்கலாக்கி ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை முன்நிறுத்தும் முறையைத் தான் photography—ல் Depth Of Field(DOF) அல்லது மண்டலவாழம் என்போம்.

DOF விளக்கம்:

ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து, “ஒளியியலில், சிறப்பாக திரைப்படம் மற்றும் புகைப்படத்துறை சார்ந்தவற்றில், DOF என்பது, ஒரு காட்சியில், மிக அருகில் தோன்றும் உருவத்தின் ஏற்றுக்கொள்ளத்தக்க தெளிவான இடைவெளி ஆகும். ஒரு லென்சில் துல்லியமாக ஒரே ஒரு தூரத்தை தான் கவனிக்க முடியும் என்றாலும் கூட, கவனிக்கும் தூரத்தின் எல்லா திசைகளிலிருந்தும் sharpness படிப்படியாக குறைந்துகொண்டு வரும். இதனால் இயல்பு நிலையில் DOF-ன் உள் unsharpness புலப்படாது.”

DOF-ஐ விவரிக்க நாம் இரு வகையான புகைப்படங்களை பயன்படுத்தலாம். ஒன்று நிலவெளி புகைப்படம் மற்றொன்று உள்ளறை புகைப்படம். நிலவெளியை எடுத்துக் கொண்டால், படத்தில் உள்ள அனைத்தும் தெளிவாய் தெரிய வேண்டும். இதற்கு அதிக DOF தேவைப்படும். உள்ளறை புகைப்படத்திலோ, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மட்டும் கவனம் இருக்குமாறு, பின்னணியில் உள்ள மற்றவை மங்கித் தெரிய வேண்டும். இதற்கு குறைந்த DOF இருந்தால் போதுமானது.

புகைப்படக் கருவியில் f-எண்ணை அதிகரித்தால் (லென்ஸ் துவாரத்தின் விட்டத்தைக் குறைத்தல்) DOF அதிகரிக்கும். இந்த துவாரத்தின் அளவை கட்டுப்படுத்துவது தான் பலரும் அறியாத கலை (சில கருவிகளில் இது சாத்தியமே இல்லை). இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று தள்ளி நின்று பெரிதாக்கம் செய்வது(zoom) , மற்றொன்று GIMP உபயோகிப்பது!

 

துவக்கப் பாடம்:

ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தில் இடம் பெற்றுள்ளவை அலாஸ்காவில் பூத்துக் குலுங்கும் டெய்சி மலர்கள் ஆகும். நாம் அதில் ஒன்றை மட்டும் கவனம் செலுத்தி DOF-ஐ அறியலாம். இதற்கு பின்னணியில் இருக்கும் பூக்கள் மேலும் பின்னால் தள்ளி இருப்பது போல் தெரிய வேண்டும். நான் பொதுவாக அசல் file-லுக்கு ஒன்று அல்லது இரண்டு நகல்கள் எடுப்பது வழக்கம். இந்த எடுத்துக் காட்டிற்கு குறைந்த பட்சம் ஒரு நகல் தேவை.

Layer சாரளத்தில் உள்ள Copy Layer ஐக்கானை அழுத்தவும்.

இப்போது Free Select கருவியை பயன்படுத்த வேண்டும். சொடுக்கியால் பூவை தேர்ந்தெடுக்கவும்.


ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தில் இடம் பெற்றுள்ளவை அலாஸ்காவில் பூத்துக் குலுங்கும் டெய்சி மலர்கள் ஆகும். நாம் அதில் ஒன்றை மட்டும் கவனம் செலுத்தி DOF-ஐ அறியலாம். இதற்கு பின்னணியில் இருக்கும் பூக்கள் மேலும் பின்னால் தள்ளி இருப்பது போல் தெரிய வேண்டும். நான் பொதுவாக அசல் file-லுக்கு ஒன்று அல்லது இரண்டு நகல்கள் எடுப்பது வழக்கம். இந்த எடுத்துக் காட்டிற்கு குறைந்த பட்சம் ஒரு நகல் தேவை.

Layer சாரளத்தில் உள்ள Copy Layer ஐக்கானை அழுத்தவும்.

இப்போது Free Select கருவியை பயன்படுத்த வேண்டும். சொடுக்கியால் பூவை தேர்ந்தெடுக்கவும்.

நல்ல நிலை மாற்றத்தை பெற Feather Edge-ஐ தேர்ந்தெடுக்கவும்.

பூவை தேர்ந்தெடுத்தவுடன் Layers சாரளத்தின் Paths Tab-ல் உள்ள Path Tool-ஐ தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பூவுக்கான தேர்வை (அல்லது வெறு எந்த தேர்வையும்) சேமித்தல் நல்ல பழக்கம் ஆகும்.

மேல் Layer-ல் வலது கிளிக் செய்து Color To Alpha-வை தேர்ந்தெடுக்கவும். இது படத்தின் பின்னணியை நீக்குமாறு பரிந்துரைக்கும்.

Invert Selection தேர்ந்தெடுத்தால் பூவைத்தவிர மற்றனைத்தையும் நீக்கிவிடலாம். இதற்கு Delete-ஐ கிளிக் செய்யவும். இப்போது பின்னணி நீக்கப்பட்டிருக்கும். அந்த லேயரில் உள்ள Eye Icon கிளிக் செய்தால் பூ மறைந்துவிடும். பிறகு கீழ் Layer-ஐ தேர்ந்தெடுக்கவும். இப்போது மீண்டும் Invert Selection தேர்ந்தெடுத்தால் அந்த பூ மட்டும் தேர்வாகும்.

Select->Grow வில் பிக்சல் அளவை 15-ஆக மாற்றவும்.

 

Resynthesis பயன்படுத்தி பூவை நீக்கிவிடவும்.

நம் தேர்வை நீக்குவதற்கு Resynthesis ஒரு நல்ல முறை. அது பூவை முழுவதுமாக நீக்கினாலும் ஐயம் இல்லை, நமக்கு தேவை அந்த selection மட்டுமே

 

Filter->Gaussian Blur உபயோகித்து பின்னணியை உங்கள் விருப்பம் போல மங்கச் செய்யவும். நான் 100-200 Gaussian Blur பயன்படுத்தினேன். அதன் தோற்றம் இப்படி இருந்தால் போதுமானது.

இப்போது மேல் Layer-ல் உள்ள Eye-ஐ கிளிக் செய்யவும். பூ மீண்டும் தோன்றும்.

 

அவ்வளவு தன். வேண்டுமானால் சில Tweak மற்றும் Level-களை மாற்றிக் கொள்ளலாம். இரண்டு Layer-களிலும் தனித் தனியாக மாற்றம் செய்ய முடிவதால், இது நல்ல முறையில் பயனளிக்கும்.


இறுதியாக பின்னணியில் சிறிது darkness சேர்த்த பிறகு.

முன்பு                                                                              பின்பு

 

பெரும்பாலான புகைப்படங்களுக்கு இது போதுமானது. பல அடுக்குகளாக பிம்பங்கள் தெரியும் போது சிறிது மேம்பட்ட வேலைப்பாடுகள் தேவைப்படும்.

மேம்பட்ட பாடம்:

கீழே உள்ள படத்தில் கவனிக்க வேண்டியவை.

  • இந்த படத்தில் Geek கோப்பை தான் முன்னிற்க வேண்டிய பிம்பம்.
  • மூன்று அடுக்குகள் பின்னணியில் உள்ளன. Geek கோப்பை கம்பீரமாக முன்னிற்க, இம்மூன்று அடுக்குகளும் மங்கலாக தெரிய வேண்டும்.
  • இரண்டிற்கும் நடுவில் ஒரு கோப்பை உள்ளது (இடைநிலை). இதுவும் மங்கித் தெரிய வேண்டும். ஆனால் பின்னணியில் உள்ள அடுக்குகள் அளவிற்கு அல்ல. ஏனெனில், அது வெகு தொலைவில் இல்லை. அதனால், அதை பிரித்துக் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
  • இதில் ஒரு மேடையும் இடம்பெற்றுள்ளது. இம்மேடையின் ஒரு பகுதி மங்கலாகவும், மற்றொரு பகுதி மிகத் தெளிவாகவும் தெரிய வேண்டும். இதற்கு Gradient Blur தேவைப்படும்.

 

 

நாம் பயன்படுத்தப் போகும் புகைப்படத்திற்கு நான்கைந்து நகல்கள் எடுத்துக் கொள்ளவும்.

படத்தில் உள்ள ஒவ்வொரு கோப்பையையும் தேர்ந்தெடுக்கவும். தேர்வை Path ஆக சேமிக்கவும் (இது பின்னால் தேவைப்படும்).

 

 

மேல் Layer-ல் இரண்டு கோப்பைகளையும் தேர்வு செய்து Resynthesize Plugin-ஐ பயன்படுத்தவும்.

 

Resynthesize கோப்பைகளை முழுவதுமாக நீக்கியிருக்காது. பரவாயில்லை.

இந்த Layer-ஐ இறுதி Layer-ஆக மாற்றவும். இந்த இறுதி Layer-ருக்கு கீழாக புகைப்படத்தின் ஒரு நகலை Layer-ஆக சேர்க்கவும். மற்ற Layer-களுக்கு சென்று கோப்பைகளின் பின்னணியை அகற்றவும் (முன்பு Path-ஆக சேமித்ததை நினைவில் கொள்க. அதை இப்போது பயன்படுத்தலாம்).

நீக்கும் முன்பு Layer-களை Color To Alpha-வாக மாற்றி Invert Selection பயன்படுத்த மறக்க வேண்டாம்.

இப்போது முன்னணியில் உள்ள கோப்பை, நடுநிலையில் உள்ள கோப்பை மற்றும் கோப்பைகள் அற்ற பின்னணி மாத்திரம் மீதம் இருக்கும் (கீழே உள்ள படத்தைப் பார்க்க).

 

“Background Only” Layer-ஐ தேர்வு செய்து Gaussian Blur செய்யவும்.

 

 

பார்ப்பதற்கு ஓரளவு பரவாயில்லை. ஆனால் படத்தில் உள்ள மேசை பார்ப்பதற்கு சரியாக இல்லை.

Background Only Layer-ஐ வலது கிளிக் செய்து Layer Mask-ஐ சேர்க்கவும்.

தேவையான மாற்றங்கள் செய்யவும்.

 

 

Blend Tool-ஐ பயன்படுத்தவும்.
Gradient-ஐ மேசையின் பின்பக்கத்திலிருந்து முன்பக்கமாக நகர்த்தவும்.

 

 

இப்போது பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கிறது. மேலும் மேம்படுத்த விரும்பினால், முன்னணியில் உள்ள கோப்பையை நகலெடுத்து Mask சேர்க்கவும். இது கோப்பையின் வடிவத்திற்கு மங்கல் தன்மையை சேர்க்கும்.

அவ்வளவு தான். தேவையான மாற்றங்கள் மனம் விரும்பியவாறு செய்யவும்.

 

 

 

 

முன்பு

 

பின்பு

 

 

 

 

நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

மின்னஞ்சல் : jophinep@gmail.com

%d bloggers like this: