கணியம் – இதழ் 11

வணக்கம்.
கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த மாத கணியம் இதழ் சற்றே தாமதமாகவே வெளிவருகிறது. கடும் மின்தடை மற்றும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி கணியம் இதழை வளர்க்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

உபுண்டு 12.10 மற்றும் அதை சார்ந்த லினக்ஸ் மின்ட் 14 சமீபத்தில் வெளியிடப்பட்டன. fedora உம் தனது அடுத்த பதிப்பை தயார் செய்து வருகிறது.  நமது இயங்கு தளத்தை மேம்படுத்திக் கொள்வதால் விரைவு, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் என பல பயன்கள் கிடைக்கும்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும் இணைய தளத்திலும் வெளியிடப்படுகின்றன. தளத்தை கண்டு உங்கள் கருத்துகளை பகிரவும்.  ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். உங்களுக்கு தெரிந்த தகவல்களை விக்கியில் பகிரவும்
உங்கள் அனைவரின் பேராதரவோடு கணியம், தனது முதல் ஆண்டை நெருங்க உள்ளது. அடுத்த ஆண்டில் பல்வேறு புதிய முயற்சிகளும் படைப்புகளும் நிகழ உள்ளன. இதற்கு மேலும் பல உதவிக்கரங்கள் தேவை. தமிழும் கட்டற்ற மென்பொருளிலும் ஆர்வம் உள்ள அனைவரது உதவியும் தேவை. வீடியோ பாடங்கள், கேள்வி பதில் தளம், நேரடி பயிற்சி     பட்டறைகள், இணைய வழி பயிற்சிகள், அச்சு ஊடக கட்டுரைகள் என பல பணிகள் காத்துள்ளன. வாசகர் அனைவரையும் பங்களிக்க அழைக்கிறோம்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.  ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால்,  மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

பொருளடக்கம்

  • தகவல் தொழில்நுட்ப சட்ட முரண்கள்
  • பி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம்
  • Pidgin Internet Messenger மூலம் முகநூல் அரட்டை (Facebook Chatting)
  • ‘Internal System Error’ Popup -ஐ உபுண்டுவில் விடுவிப்பது எப்படி?
  • BKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள்
  • ஹெச்.டி.எம் . எல் 5  ஒரு பட விளக்கம் -2
  • லின்க் செக்கர் (Link Checker) – பழுதடைந்த இணைப்புக்கான தேடல்
  • பைதான் – 4.கன்ட்ரோல் ஃபிளோ (Control Flow)
  • MySQL- பாகம்: 3 – தகவல்களை சேமித்தல்
  • நெட்வொர்க் card பிரச்சனையும் தீர்வும்
  • ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
  • கணியம் வெளியீட்டு விவரம்
  • கணியம் பற்றி

நன்றி.

ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்

editor@kaniyam.com

%d bloggers like this: