துருவங்கள் – அத்தியாயம் 14 – உடன்கட்டை

உடன்கட்டை

அன்று வெள்ளிக்கிழமை, சுரேஷ் மற்றும் தீப்தியின் திருமனத்திற்கு முந்தைய நாள். சுரேஷின் பார்ம் அவுஸ் அவன் திருமனத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகிக்கொண்டிருந்தது. அவன் பார்ம் அவுஸ் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் கோவலம் கடற்கரையை தாண்டி ஒரு இடத்தில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு மரங்களை கொண்டு முழுவதும் காம்பவுன்ட் சுவர்கள் எழுப்பி அமைக்கப்பட்டிருந்தது. ஈசிஆர் ரோட்டில் இருந்து சுரேஷின் பார்ம் அவுஸ்ஸுக்கு சொன்னையிலிருந்து பாண்டிக்கு போகும் திசையில் இடதுபுறம் திரும்பி ஐநூறு மீட்டர் சென்றாலே வந்துவிடும். பார்ம் அவுஸின் ஆரம்பத்தில் ஒரு ப்ரம்மாண்ட நுழைவாயில் இருக்கும், அங்கு இரண்டு செக்யூரிட்டிக்கள் இருபத்து நான்கு மணிநேரமும் காவல் இருப்பார்கள். திருமனத்திற்காக அந்த நுழைவாயிலில் அதிக காரவலர்கள் இருந்தர். உள்ளே வரும் ஒவ்வோரு காரையும் சோதனையிட்டு உள்ளே அனுப்பினர். நுழைவாயிலுக்கு அடுத்து சில தூரம் அடர்ந்த சவுக்கு மரங்கள் இருக்கும் அதை கடந்து வந்தால் பார்ம் ஆவுஸ் நிலப்பரப்பின் நடுவில் ஒரு அழகிய அரண்மனை போன்ற வீடு தெரியும். அந்த வீட்டின் அளவில் மூன்று மடங்கு அதிக நிலப்பரப்பில் வீட்டை சுற்றி அழகிய பூந்தோட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பூந்தோட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து வீட்டின் நூழைவாயில் போகும் வழியில் அடர்ந்த பூங்கொடிகள் படர்ந்த வளைவுகள் இருந்தன. திருமனத்திற்காக அந்த வளைவுகளில் அழகிய மின்விலக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அடர்ந்த பூங்கொடிகள் கொண்ட வளைவுகள் வீட்டின் நூழைவயில் செல்லும் வழியில் மட்டுமல்லாமல் வீட்டை சுற்றி இருக்கும் பூந்தோட்டத்தின் நான்கு திசைகளிளும் வீட்டிற்கு செல்லும் வழி போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. பூந்தோட்டத்தை சுற்றி எத்தனை கார்கள் வேண்டுமானாலும் நிருத்தும் அளவிற்கு சமவெளிப்பகுதியை சுரேஷின் திருமனத்திற்கு வரும் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனார். கார்கள் நிற்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சமவெளிப்பகுதி பூந்தோட்டத்திற்கும் சவுக்கு மரங்களுக்கும் இடையே தற்காளிகமாக அமைக்கப்பட்டிருந்தது. ஈசிஆர் ரோட்டில் இருந்து பார்த்தால் சுரேஷின் பார்ம் ஆவுஸ், ஏதோ வெறும் சவுக்கு மரங்கள் தோட்டம் போன்று தான் தெரியும், ஆனால் நுழைவாயிலை தாண்டி சவுக்கு மரங்களை கடந்து வந்தால்தான் சுரேஷ் பார்ம் ஹவுஸின் உண்மையான அழகு கண்ணில் புலப்படும்.

சுரேஷின் திருமணத்திற்கு, ரிசப்ஷன் மேடை, பார்ம் ஹவுஸ் வீட்டின் வலது புறம் அமைக்கப்பட்டிருந்தது. விருந்தினர் பார்ம் ஹவுஸ் நுழைவாயிலில் இருந்து காரை ஓட்டிக்கொண்டு சவுக்கு மரங்களை கடந்து வந்தால், அடுத்து இருக்கும் கார்கள் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு அதற்கு அடுத்து இருக்கும் பூந்தோட்ட வளைவுகளில் ஏதேனும் ஒன்றில் நுழைந்து வீட்டின் நுழைவாயிலுக்கு அருகாமையில் வர ரிசப்ஷன் மேடை வீட்டின் வலது புறத்தில் தென்படும். ரிஷப்ஷன் மேடையின் எதிரே நான்கு பேர் அமரக்கூடிய வட்ட வடிவிலான ரிஷப்ஷன் டேபில்கள் ஏராளமாய் போடப்பட்டிருந்தன. சுரேஷின் திருமண நிகழ்வுகள் அவன் திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு தெரியும்படி செய்ய வேண்டும் என்பதில் மதன் உறுதியாக இருந்தான். அதனால் இசையமைப்பாளர்கள் நடத்தும் நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு சவுண்ட் சிஸ்டங்கள் ஏற்பாடு செய்யும் ஒரு நிறுவனத்தை மதன் சுரேஷின் திருமணத்திற்காக லீசுக்கு எடுத்தான். கார் பார்க்கிங் ஏரியாவில் கார்கள் பார்க்கிங் செய்வதற்கு இடையூறு இல்லாதபடி மிகப்பெரிய 16×9-98”-8k-OLED ஸ்கிரீன் செட்டப்பை நான்கு திசைகளிலும் நிறுவினான். அவை பார்ப்பதற்கு ஒரு மினி சினிமா ஸ்க்ரீன்கள் போன்று இருந்தது. வருபவர்களுக்கு துல்லியமான ஒலி வழங்க வேண்டும் என்று மதன் டால்பி அட்மாஸ் துள்ளிய ஒலியை எழுப்பும் ஸ்பீக்கர்களை 9.2.4 செட்டப்பில் நிறுவினான். அதன்படி ரிஷப்ஷன் நடக்க இருக்கும் மேடைக்கு இரு பக்கங்களிலும் இரண்டு ஸ்ப்பீங்கர்களும், இரண்டு சப்ஊப்பர்களும், ரிஷப்ஷன் டேபில்கள் போடப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி டால்பி அட்மாஸ் 9.2.4 செட்டப்பில் ஏழு ஸ்பீக்கர்களையும் நிறுவினான். மேற்கொண்டு நான்கு சீலிங் ஸ்பீக்கர்கள் சீலிங்கில் இருக்க வேண்டும் என்பதால் மேடைக்கு எதிரில் விருந்தினர்கள் அமர வைக்கப்பட்டிருக்கும் ரிஷப்ஷன் டேபில்கள் இருக்கும் இடத்திற்கு மேலே இரண்டு கம்பிகளை சிறிது இடைவெளி விட்டு இரு திசையிலும் இருக்கும் சவுக்கு மரங்களில் கட்ட வைத்து அந்த கம்பிகளின் உதவியுடன் ரிஷப்ஷன் டேபில்கள் உள்ள இடத்திற்கு மேலே வெட்டவெளியில் உயரமாக நான்கு அட்மாஸ் ஸ்ப்பீங்கர்கள் தொங்குமாறு செய்தான். ரிஷப்ஷன் மேடைக்கு அருகாமையில் வலதுபுறம், பூந்தோட்டத்தின் உள்ளே, ரிஷப்ஷன் மேடையை பார்க்கும்படியும் ஆனால் விருந்தினர்கள் ரிஷப்ஷன் டேபிளில் உட்கார்ந்தால் தெரியாதபடியும் ஒரு சிறிய மறைவான இடத்தில் பந்தல் போடப்பட்டு ஆடியோ மற்றும் வீடியோ கண்ட்ரோலர்களையும், ஆம்லிப்பையர்களையும் வைத்திருந்தனர். ஆடியோ மற்றும் வீடியோ கண்ரோலர்களை இயக்க ஒரு சவுண்ட் எஞ்சினியரை அந்த நிறுவனம் அனுப்பியிருந்தது.

மதனின் பெற்றோர்களும், அவன் தங்கையும், தங்கையின் கணவருடன் அவள் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். மதன் குடும்பத்தினருக்கு வீட்டின் மாடியில் ஒரு ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று மாலை, கார்த்திகாவின் வீட்டிலிருந்தும் கார்த்திகாவின் அப்பாவும் அம்மாவும் கார்த்திகாவுடன் வந்தனர். அவர்களுக்கும் வீட்டில் ஒரு ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரு வீட்டினர்களின் ரூம்களும் அடுத்தடுத்து இருந்தன. மதன் காலை முதல் சுரேஷின் வீட்டில் இருந்தாலும் அவன் அன்று முழுவதும் அந்த வீட்டின் உள்ளே செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை, ஸ்க்ரீன்கள் மற்றும் சவுண்ட் சிஸ்டம் நிறுவும் பணியில் அவனுக்கு அந்த நாள் சென்றுகொண்டிருந்தது. இதனால் கார்த்திகா அன்று மாலை வந்ததை கூட அவனால் கவனிக்க முடியவில்லை.

திருமணத்திற்கு வந்த மதனின் தங்கை, தீப்தி இருக்கும் ரூமிற்கு உதவியாக இருக்க சென்றாள். ‘என்னக்கா இன்னும் ரெடி ஆகலையா’ மதனின் தங்கை தன் கைக் குழந்தையுடன் உள்ளே நுழைந்தவாறு தீப்தியிடம் கேட்டாள். ‘ப்யூட்டிசியன் இன்னும் வரல, லோட்டாயிடுமோன்னு பயம்மா இருக்கு’ தீப்தி பதற்றத்துடன் கூறினாள். ‘ஏன் டென்ஷன் அறீங்க, லொகேஷன் ஷேர் செஞ்சிட்டீங்கள்ள, வந்துடுவாங்க. நீங்க ரிலாக்ஸா இருங்க’ மதனின் தங்கை தீப்தியை ஆறுதல் படுத்தினாள். அப்போது கதவை திறந்தபடி ‘என்ன இன்னும் அப்படியே இருக்க? ரெடியாகலையா?’ கார்த்திகா உள்ளே வந்து தீப்தியை கட்டிப்பிடித்துக்கொண்டாள். ‘எப்பக்கா வந்தீங்க’ என்று தீப்தி கார்த்திகாவை பார்த்து கேட்க, ‘இப்பத்தான், வந்ததும் நேராக உன்னை பார்க்கனும்னு தேடிக்கிட்டு வரேன்’ கார்த்திகா கூற, ‘பொய்தான?’ தீப்தி கார்த்திகாவை கலாய்க ‘சும்மார்ரி’ என்று கார்த்திகா புன்னகையுடன் கூறினாள். அப்போது அங்கு இருந்த மதனின் தங்கையை கார்த்திகா பார்த்ததும் ‘ஹாய், என் பேர் கார்த்திகா’ என்று கூறி தன் கையை நீட்டினாள். மதனின் தங்கையும் ‘ஹாய்’ என்று கார்த்திகாவின் கைகளை குலுக்கினாள். இருவருக்கும் இருவரும் யார் என்று அப்போது தெரியாது. அந்த ரூமில் அப்போது இருவரையும் பற்றி தெரிந்தவள் தீப்திதான். அங்கிருந்த தீப்தி இருவரும் கை குலுக்குவதை பார்த்து புன்னகைத்தாள். மதனின் தங்கையை கார்த்திகாவிற்கு அறிமுகப்படுத்த தீப்தி ஆயத்தமாகி ‘கார்த்திகா அக்கா, இவங்க..’ தீப்தி முடிப்பதற்குள். தீப்தியின் ரூம் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டன. இப்போது உள்ளே வந்தது சுரேஷ், ‘என்னடி ரெடியாகலையா?’ சுரேஷ் தீபதியை கேட்க ‘நான் என்ன ரெடி ஆகமாட்டேன்னா சொன்னேன், ப்யூட்டிசியன் இன்னும் வந்து சேரல’ தீப்தியும் தன் பங்கிற்கு புலம்பினாள். ‘சரி டென்ஷனாகாத, வந்துருவாங்க’ என்று சுரேஷ் தீப்தியிடம் சொல்லிவிடு அங்கிருந்தவர்களை பார்த்தான். அவன் கண்களுக்கு முதலில் கார்த்திகா தென்பட்டாள். ‘எப்ப வந்தீங்க கார்த்திகா?’ சுரேஷ் கேட்க ‘இப்பத்தான் பியூ மினிட்ஸ் பேக்’ கார்த்திகா பதில் கூறினாள். சுரேஷ் அடுத்து மதனின் தங்கையை அவள் கைக்குழந்தையுடன் பார்த்தான். ‘காருவாச்சி, எப்படி வந்த? என் மருமகன் என்ன பண்றான்? தூங்குறானா?’ சுரேஷ் மதனின் தங்கையை அவளின் குழந்தையின் கன்னத்தை கிள்ளிய படி நலம் விசாரித்தான். ‘அப்பா அம்மா வரல?’ சுரேஷ் மதனின் தங்கையை கேட்க, ‘ரூம்ல இருக்காங்க’ மதன் தங்கை பதில் கூறினாள். ‘ஹஸ்பண்ட் வரல?’ சுரேஷ் கேட்க ‘அவர் தான் வண்டி ஓட்டிக்கிட்டு வந்தாரு, ரூம்ல இருக்கார்’ மதனின் தங்கை கூறினாள். இப்போது மீண்டும் ரூம் கதவுகள் திறந்தன. ‘தேங்காட் இப்பவாச்சும் வந்தீங்களே’ தீப்தி உள்ளே வந்த பியூட்டிசியனை பார்த்து கூறினாள். ‘சாரி மேடம் கொஞ்சம் ரூட் கன்பியூஷன் அகிடுச்சு, வெளியே இருந்து பாக்குறதுக்கு வெறும் காடு மாதிரி இருந்தது, பார்ம் ஹவுஸ் உள்ள வந்த பிறகுதான் அதோட உண்மையான அழகு தெரிஞ்சது’ அவர்கள் கூறியதும் தீப்தி சுரேஷை பார்த்து புன்னகைத்தாள். ‘சரிங்க, நாம ஆரம்பிக்கலாம்’ என்று தீப்தி கூறியதும் ப்யூட்டிசியன் வந்த வேலையை தொடங்கினார். மதனின் தங்கை அவள் குழந்தையுடன் அமற, கார்த்திகாவும் அமர்ந்தாள். ‘அப்புறம் கருவாச்சி, லைப் எப்படி போகுது’ சுரேஷ் மதனின் தங்கையிடம் கேட்க ‘டேய், அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு, இப்பவாவது ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிடு, அவங்க ஹஸ்பண்ட் நீ இப்படி கூப்பிடுறது கேட்டார்னா என்ன நினைப்பார்’ சுரேஷ் மதனின் தங்கையை கூப்பிடுவதை தீப்தி தட்டிக்கேட்டாள். ‘என் தங்கச்சிய நான் எப்படி வேணும்னாலும் கூப்பிடுவேண்டி, யார் எப்படின்னா நெனச்சிக்கட்டும், கருவாச்சின்னா கருப்பா இருக்குற பொண்ணுன்னு அர்த்தமில்ல, தமிழச்சின்னு அர்த்தம், அவளோட கலையான முகம் யாருக்கும் வராது டீ, என்ன சொல்றீங்க கார்த்திகா? கரெக்ட் தானே?’ சுரேஷ் தீப்தியிடம் சொல்லிக்கொண்டே கார்த்திகாவை பார்த்தபடி கேட்க ‘உண்மையிலேயே ரொம்ப அழகா இருக்காங்க’ கார்த்திகாவும் மதனின் தங்கையை பார்த்தபடி புன்னகையுடன் கூறினாள். ‘என்ன வச்சு காமிடி தான பண்றீங்க?’ மதனின் தங்கை சிரித்துக்கொண்டே சுரேஷிடம் கேட்டாள். ‘சீரியசா சொல்லுறேண்டி, பக்கா தமிழ் பொண்ணு யாருன்னு யாராவது கேட்டா என் தங்கச்சிடான்னு உன்னத்தான் நான் சொல்லியிருக்கேன், வேணும்னா தீப்திய கேளு?’ சுரேஷ் கூற தீப்தி மேக்கப் போட்டுக்கொண்டே சிரித்தாள். ‘அவங்களோட உண்மையான அண்ணன் கூட உன்ன மாதிரி ஐஸ் வைத்திருக்க மாட்டார்டா’ தீப்தி சுரேஷை பார்த்து கூற ‘அவன் கிடக்கிறான் வெலக்கென்ன, இப்ப கூட பாரு, முக்கியமானவங்க வந்திருப்பாங்களே, அவங்கல வந்து மீட் பண்ணலாம்னு இருக்கானா, இன்னைக்கு காலைல பாத்தா மரத்துல தொங்கிக்கிட்டு இருக்கான்டி, கேட்டா டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ரிசப்ஷன் டேபிள் ஏரியாவுக்கு நேரா தொங்கவிடனுமாம், அவன் திருந்தவே மாட்டான்டி’ சுரேஷ் தீப்தியிடம் கூறினான். அதுவரை மதனின் தங்கை யார் என்பதை தெரிந்திராத கார்த்திகா, சுரேஷ் மதனின் தங்கையை உரிமையுடன் செல்லப்பேரிட்டு கூப்பிடுவதையும், சுரேஷும் தீப்தியும் பேசியதை வைத்து சுரேஷுக்கு மிக நெருங்கிய நண்பனின் தங்கை என்பதை உணர்ந்தாள். ‘யார் அந்த முக்கியமானவங்க?’ தீப்தி சுரேஷிடம் கேட்க ‘அது, அதான், அவனோட தங்கச்சி ஃபேமிலியோட வந்திருக்கா, அவன் அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்க, அவங்கலத்தான் முக்கியமானவங்கன்னு சொன்னேன்’ சுரேஷ் தீப்தியிடம் கூறிவிட்டு ‘நீங்க வந்தது அவனுக்கு தெரியுமாம்மா?’ சுரேஷ் மதனின் தங்கையிடம் கேட்க ‘வந்ததும் எங்கடா இருக்கேன்னு போன் பண்ணேன், வந்து பார்க்கிறேன்னு சொன்னான். இன்னும் வரல’ மதனின் தங்கை பதில் அளித்தாள். ‘அவனுக்கு பொண்ணு பாக்க போனீங்களே என்னாச்சு?’ சுரேஷ் கேட்க ‘அத ஏன் கேட்குறீங்க, அப்பா எவ்வளவோ கஷ்டப்படுறார், அவன் ஜாதகத்துல வேர செவ்வாதோஷம் இருக்குறதால நிறைய அலைய வேண்டி இருக்கு, அப்படியே செவ்வாதோஷம் இருக்குற பொண்ணோட ஜாதகம் வந்தாலும் ஏதோ எட்டு பொருத்தம் வரணுமாம். அப்படி ஒரு பொண்ணு ஜாதகம் வந்து பொண்ணு பாக்க அப்பா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு அவன ஊருக்கு பொண்ணு பாக்குற நாளுக்கு ஒரு நாள் முன்னாடியே வரச்சொன்னார். ஆனா அவன் நேரா பொண்ணு வீட்டுக்கு வந்தான். எந்திரன் படத்துல ரஜினி ரோபோவ கிரியேட் பண்ணிட்டு தாடி வளர்த்துக்கிட்டு வீட்டுக்கு வருவாரே அது மாதிரி வந்தான். அப்பா பயங்கர டென்ஷன் ஆகி கத்திட்டார். உனக்கு ஜென்மத்துக்கும் கல்யாணம் ஆகாதுடான்னு சொல்லிட்டு கடைக்கு போய்டார். அம்மாவும் ரொம்ப கவலைப்பட்டு அழுதுட்டே ஏன்டா இப்படி இருக்க, தாடி எடுக்குறதுதானேடான்னு கேட்டாங்க, அதுக்கு அவன், இது தாம்மா என்னோட உண்மையான முகம், இத மறச்சா தான் எனக்கு கல்யாணம் ஆகும்னா அப்படியாப்பட்ட கல்யானமே வேண்டாம்னு சென்னான். எனக்கென்னமோ அவன் லவ் பெய்லியர்னு தோனுது, அதையும் அவன் கிட்ட கேட்டேன். யாராவது மனசுல இருந்தா சொல்லு நான் அப்பா கிட்ட சொல்லி அவங்க வீட்டுக்கு போய் பேசி பார்போம்னு கேட்டேன். மூடிட்டு உன் வேலைய பாருடின்னு சொல்றான், ஒரு வேல அவனோட லவ்வர்கு கல்யாணம் ஆயிடுச்சோ என்னமோ, வீடே ரொம்ப வெறிச்சோடி இருக்குண்ணா. நான் அங்க போனா என் பையன பார்த்தாத்தான் அப்பா முகத்துல கொஞ்சம் சிரிப்பு வருது. அப்பா அண்ணங்கிட்ட பேசுறதில்ல, நீங்களாச்சும் அவனுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்கன்னா? எனக்கென்னமோ அவன் ரொம்ப டிப்ரஷன்ல இருக்குற மாதிரி தோணுது, ரூம்ல தனியா வேற இருக்கான், பயமா இருக்கு’ மதனின் தங்கை சுரேஷையும் தீப்தியையும் பார்த்து கேட்டாள். ‘நீ பயப்படும் அளவுக்கு ஒன்னும் இல்லம்மா, எங்களோட மேரேஜ் கன்பார்ம் ஆனத தெரிஞ்ச நாளுக்கு முன்னாடி இருந்தத கம்பேர் பண்ணா இப்ப அவன் எவ்வளவோ மேல். நார்மலாகிட்டான்னே சொல்வேன். அவன்லாம் கிடைக்கலன்னா ரொம்ப எக்ஸ்ட்ரீமுக்கு போற அளவுக்கு எது மேலயும் ஆசப்படமாட்டாம்மா, கெடச்சா சந்தோஷம், கிடைக்கலன்னா இருக்கவே இருக்கு அவனோட ஃபர்ஸ்ட் லவ் லினக்ஸ், போடா மயிருன்னு போயிட்டே இருப்பான், கொஞ்ச நாள் போகட்டும், அவனே வந்து எனக்கு மேரேஜ் பண்ணி வைக்க போறீங்களா, இல்லையான்னு கேட்பான் பாருங்க’ சுரேஷ் மதனின் தங்கையிடம் ஆறுதலாக கூறினான். இதை கேட்டுக்கொண்டிருந்த கார்த்திகாவுக்கு அவர்கள் பேசுவது மதனை பற்றித்தான் என்று பலமாக தோன்றியது, அவர்கள் பேசிக் கொண்டிருந்த நபருக்கு கல்யாணம் ஆகாமலும், காதல் தோல்வியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதையும் மிக முக்கியமாக, அவர் ஒரு லினக்ஸ் விரும்பி என்பதை வைத்து பார்த்தால் அது மதனாக தான் இருக்க முடியும் என்று கார்த்திகாவால் யூகிக்க முடிந்தது. அந்த காதல் தன்னுடைய காதல்தான் என்றும் அருகில் குழந்தையுடன் அமர்ந்திருப்பவரின் அண்ணன் மதன் தான் என்பதையும் கார்த்திகாவால் கணிக்க முடிந்தது, ஆனால் உறுதியாக நம்ப முடியவில்லை. ‘யாரோ சொல்லி இப்பதான் முடி வெட்டி தாடியை ட்ரிம் பண்ணி வச்சிருக்கான்’ மதன் தங்கை கூற ‘என் அம்மா தான் கூப்டு திட்டினாங்க, கல்யானத்துக்கு சாமியார் மாதிரி வராத டா, கொஞ்சம் ஒழுங்கா வாடான்னு சொன்னாங்க’ சுரேஷ் கூறினான்.

ஒரு வழியாக மதன் ஏவி கன்ரோலர்களை வைத்திருக்கும் இடத்திற்கு வந்தான். அங்கு சவுண்ட் இன்ஜினியர், லைவ் மிக்ஸிங் செட்டப் செய்து முடித்து அவர் கொண்டுவந்த லேப்டாப்பில் ஒன்றை லைவ் மிக்‌ஸிங்கை கன்றோல் சொய்யும் சாப்ட்வேரில் எல்லாம் சரியாக உள்ளனவா என்று சரிபார்த்துக்கொண்டிருந்தார். ‘என்ன சரண், எல்லாம் கரெக்டா இருக்கா, டெஸ்ட் பண்ண ஆரம்பிக்கலாமா?’ மதன் அந்த சவுண்ட் இன்ஜினியரிடம் கேட்டான். ‘செக் பண்ணிட்டு இருக்கேன் ப்ரோ’ என்று சரண் பதில் அளித்தான். ‘சரண், நீ உண்மையிலேயே சவுண்ட் இன்ஜினியரிங் முடிச்சிருக்கியா?’ மதன் கேட்க ‘ப்ரோ நான் இன்னும் ஸ்கூலே முடிக்கல’ சரண் பதில் அளித்தான். ‘அப்புறம் எப்படி?’ மதன் கேட்க ‘எங்க கம்பெனியோட ஓனர் இருக்கார்ல, நீங்க கூட பேசி இருப்பீங்க, அவர் என் அண்ணாதான். நான் இந்த மாதிரி ஈவண்ஸ் போய் லைவ் மிக்‌ஸிங் கத்துக்கிட்டேன்’ சரண் கூறினான். ‘இந்த மாதிரி ஈவன்ஸ்ல எந்தமாதிரி மியூசிக் ப்ளே பண்ணுவீங்க?’ மதன் கேட்க ‘இந்த மாதிரி ஈவன்ஸ்ல வெறும் டிஜே தான். அதுவும் எல்லாம் முடிஞ்சு கடைசியா ஆரம்பிப்போம், நாலு இல்ல ஐந்து மணி நேரம் ப்ளே பண்ணுவேன். அதுக்குள்ள ஏர்லி மார்னிங் வந்துடும். என் அண்ணன் டிஜேக்கின்னு ஒரு தனி கலைக்‌ஷன் வெச்சிருக்கான் அத ஸ்டார்ட் பண்ணிட்டு நான் பாட்டுக்கு மிக்‌ஸிங் பண்ணிக்கிட்டு இருப்பேன், அவ்வலவுதான்’ சரண் கூற ‘அப்ப இளையராஜா ஏஆர்ஆர் மியூசிக் லாம் கிடையாதா?’ மதன் கேட்க ‘அதெல்லாம் டீஜேல போட மாட்டாங்க ப்ரோ’ சரண் கூறினான். ‘சரி, உன்கிட்ட எக்ஸ்ட்ரா லேப்டாப் இருக்கா?’ மதன் கேட்க ‘இருக்கு’ என்று சொல்லிவிட்டு சரண் அவனிடம் இருந்த இன்னொரு லேப்டாப்பை எடுத்து வைத்தான். மதன் அதை ஆன் சொய்ய வின்டோஸ் லாகின் ஸ்க்ரீன் வந்து நின்றது. ‘ப்ரோ அதுல எதுவும் டெலிட் பண்ணாதீங்க, என்னோட பர்ஸ்னல் லேப்டாப்’ சரண் கூற ‘நான் லாகினே செய்யமாட்டேன்’ மதன் சொல்லிக்கொண்டே தன்னிடம் இருந்த ஒரு யுஎஸ்பி பென்டிரைவ்வை லேப்டாப்பில் சொருகினான். ‘என்ன ப்ரோ, சாங்ஸ் ஏத்திக்க போறீங்களா?’ சரண் கேட்டுக்கொன்டிருந்தபோதே மதன் அந்த லேப்டாப்பை ரீபூட் செய்து கீபோர்டில் Esc கீயை அழுத்தி கொண்டே இருந்தான். ‘எதுக்கு ப்ரோ பயாஸ் போறீங்க?’ சரண் கேட்டுக்கொன்டிருந்தபோதே மதன் பயாசில் செக்யூர் பூட்டை டிசேபிள் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தான். நல்ல வேலையாக டிசேபிள் செய்யப்பட்டிருந்தது, மதன் பூட் சீக்வென்ஸ்ஸில் யூஏஸ்பி ட்ரைவ் முதலாக வருமாரு செய்துவிட்டு பயாசில் அவன் செய்த மாற்றங்களை சேவ் செய்துவிட்டு மீண்டும் லேப்டாப்பை ரீபூட் செய்தான். லேப்டாப்பில் சில நொடிகளில் லினக்ஸ் பூட்டாகும் ஸ்க்ரீன் வந்தது. அடுத்த சில நொடிகளில் மதன் அவன் உருவாக்கி வைத்திருக்கும் மியூசிக் சாப்ட்வேர் முகப்பு தோன்றியது. ‘ப்ரோ என் லேப்டாப்ல என்ன இன்ஸ்டால் பண்ணீங்க? என்ன சாப்ட்வேர் இது?’ சரண் சற்று பதற்றத்துடன் கேட்டான். ‘பயப்படாதடா, உன் லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்க் நான் டச் பண்ணல, இப்ப உன் லேப்டாப் என்னோட பென்டிரைவ்ல இருந்து பூட் ஆகி இருக்கு’ மதன் கூற ‘பென்டிரைவ்ல இருந்து எப்படி பூட் பண்ணுவீங்க?’ சரண் கேட்க ‘லினக்ஸ் லைவ் யுஎஸ்பி கேள்விப்பட்டு இருக்கியா?’ மதன் கேட்க ‘லினக்ஸ்னா?’ சரண் பதில் கேள்வி கேட்க ‘லினக்ஸ் விண்டோஸ் மாதிரி ஒரு ஓஎஸ், அத யுஎஸ்பி பெண்டிரைவில் இருந்து கூட பூட் பண்ணலாம், இப்ப என்னோட யுஎஸ்பில இருக்குறதும் அதுமாதிரி ஒரு லினக்ஸ் லைவ் யுஎஸ்பி லினக்ஸ்தான். அதுல ஆட்டோமேட்டிக்கா நான் எழுதின ஒரு அப்ளிகேஷன் ரன் பண்ற மாதிரி செட்டப் செய்து வெச்சிருக்கேன்’ மதன் விலக்கினான். ‘என்ன சாப்ட்வேர் இது’ சரண் கேட்க ‘பெருசா ஒன்னும் இல்ல. ஜஸ்ட் ஒரு மியூசிக் பிளேயர், சாங்ஸ் ப்ளே பேக் மட்டும் இல்லாம இதுல சாங்ஸ் ப்ளே பண்றப்ப ஹியூமன் வாய்ஸ் மட்டும் எடுத்துட்டு வெறும் மியூசிக் மட்டும் அவுட்புட் கொடுக்குற மாதிரி ப்ரோக்ராம் பண்ணி வெச்சிருக்கேன். அதுமட்டுமில்லாம சாங்ஸ் ப்லே பண்றப்ப அந்த சாங்கோட லிரிக்சும் சேர்ந்து வர மாதிரி பண்ணி இருக்கேன்’ என்று மதன் கூறியபடி அவன் முன்னே இருந்த லேப்டாப்பில் இருந்த சாப்ட்வேரை காண்பித்தான். ‘சூப்பர் ப்ரோ, லிரிக்ஸ் எப்படி?’ சரண் கேட்டு முடிப்பதற்குள் ‘இன்டர்நெட்ல இருந்துதான் டவுன்லோட் பண்றேன், கிடைக்காத பாட்டுங்களுக்கு நானே லிரிக்ஸ் டைப் பண்ணிக்கிட்டேன், அது மட்டும் இல்லாம இதுல ஒரு வாய்ஸ் சர்ச் எஞ்சினும் இருக்கு, நீ இந்த சர்ச் பட்டன அழுத்திட்டு ஏதாவது ஒரு பாட்டோட வரிகல பேசினா உடனே அந்த பாட்ட ஆட்டோமேட்டிக்கா டிடக்ட் பண்ணி காட்டும்’ மதன் விளக்கமாக கூறினான். ‘உன் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணு, லிரிக்ஸ் வேணும்னா இன்டர்நெட் வேணும். ஆன் பண்ணிட்டு, ஏதாவது ஒரு பாட்டோட லைன்ஸ் பேசு’ மதன் சரணை பார்த்து சொல்லிவிட்டு தான் எழுதிய சாப்ட்வேரில் இருந்த சர்ச் பட்டனை அழுத்தினான். சரணும் லேப்டாப்பில் அருகே வந்து ‘தேனி காத்தோட தேன கலந்தலே’ என்று சில வரிகளை கூறினான், அடுத்த நொடியில் மதன் எழுதிய சாப்ட்வேர் சரண் பாடிய வணக்கம் சென்னை படத்தில் வரும் பாடலை தேடி காட்டியது. ‘சூப்பர் ப்ரோ, ப்ளே பண்ணுங்க’ சரண் கேட்க மதனும் ப்ளே செய்தான், அப்போது அந்த சாப்ட்வேர் பாடலில் வரும் ஹியூமன் வாய்ஸ் மட்டும் இல்லாமல் கரோக்கே மட்டும் ப்ளே செய்தது, சாப்ட்வேரின் கீழ் பகுதியில் பாடலின் வரிகள் காண்பிக்க பட்டிருந்தது, மேல் பகுதியில் பாடலின் இசைக்கு ஏற்றார்போல் சின்த் விசுவலைஸ் செய்யப்பட்ட வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. ‘பென்டாஸ்டிக் ப்ரோ, இரு மாதிரி ஒரு சாப்ட்வேர் நான் இப்பத்தான் பார்க்கிறேன்’ சரண் கூற ‘எனக்கு பாட்டு கேட்கும் போது கூடவே சேர்ந்து பாடுற பழக்கம், அதனால இப்படி ஒரு சாப்ட்வேர் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு, அதான் எழுதிட்டேன். கீழ இருக்குற லிரிக்ஸ் தேவையில்லன்னா சின்த் விசுவல்ஸ மட்டும் புல் ஸ்கிரீன் பண்ணிக்கலாம்’ என்று மதன் சொல்லிக்கொண்டே லேப்டாப்பில் அவன் சாப்ட்வேரை புல் ஸ்கிரீன் செய்தான். பாடலின் இசைக்கு ஏற்றபடி லேப்டாப்பின் திரையில் அழகாக சின்த் விசுவல்கள் தோன்றின. ‘ப்ரோ, உங்க சாப்வேர, இங்க நாம செட்டப் பண்ணி வச்சிருக்கிற ஏவி சிஸ்டங்கள்ல ப்ராட்காஸ்ட் பண்ணலாமா’ சரண் கேட்க ‘நானே அதுக்குத்தான் உன்கிட்ட லேப்டாப் வாங்கினேன், என்னோட லேப்டாப்ல இருந்து வர ஏவி ஸ்ட்ரீம்ஸையும் கேமராமேன் ரிஷப்ஷன்ல இருந்து கொடுக்குற ஸ்ட்ரீம்களையும் உன்னால மிக்ஸ் பண்ணி நம்ம ஏவி சிஸ்டங்களில் கொடுக்க முடியுமா’ மதன் சரணை பார்த்து கேட்க ‘கொடுக்க முடியுமாவா, மொதல்ல உங்க கிட்ட இருக்குற லேப்டாப்ல இந்த எச்டிஎம்ஐ கேபிள் கனெக்ட் பண்ணுங்க’ சரண் சொல்லிக்கொண்டே எச்டிஎம்ஐ கேபிலின் மரு முனையை தன் மிக்‌ஸிங் கன்சோலில் இனைத்தான். அடுத்த நொடி சரண் வைத்திருந்த லேப்டாப்டில் மிக்‌சிங் கன்சோலை கன்ட்ரோல் செய்யும் அப்பளிகேஷனில் மதன் எழுதிய சாப்ட்வேரின் வீடியோவும், ஆடியோவும் தோன்றியது. ‘சூப்பர், சோ, சோர்ஸ் ஜஸ்ட் கேபிள் மூலம் ஜாயின் பண்ணா போதுமா?’ மதன் கேட்க ‘அவ்வளவுதான் ப்ரோ, எத்தன அப்ஸ்ட்ரீம் சோர்ஸ் வேண்டுமானாலும் இந்த கன்சோலில் ஜாயின் பண்ணிக்கலாம், எங்க கேமராமேன் அனுப்பபுர ஏவி ஸ்ட்ரீம்ஸ் இங்க அப்பியர் ஆகும், எந்த ஆடியோ மற்றும் வீடியோ ஸ்ட்ரீம் ப்ராட்காஸ்ட் பண்ணனுமோ அத நான் இங்க செலக்ட் பண்ணிப்பேன், ப்ரோ உங்க ஏவிய இப்ப ப்ராட்காஸ்ட் பண்ணி நம்ம காலைல இருந்து செட்டப் பண்ண சிஸ்டம் டெஸ்ட் பண்ணிக்கலாமா?’ சரன் மதனிடம் கேட்க ‘சரி’ மதன் சொல்லிவிட்டு அவன் சாப்ட்வேரில் மதன் வழக்கமாக கேட்கும் ப்ளேலிஸ்ட் ஓப்பன் செய்தான். முதலாவதாக தால் என்னும் இந்தி படத்தில் வரும் தால் சி தால் பிஜிஎம் இருந்தது ‘இந்த ஏஆர்ஆர் பேன்ஸ்ஸ திருத்தவே முடியாது பா, சரி, ப்ளே பண்ணலாமா?’ சரண் கூறிக்கொண்டே அவன் கன்சோல் சாப்ட்வேரில் எல்லா செட்டிங்கையும் சரிபார்த்து மதனிடம் இருக்கும் லேப்டாப்பில் இருந்து வரும் ஏவி ஸ்ட்ரீம்களை ப்ராட்காஸ்ட் செய்யும்படி ரெடியாக வைத்தான். ‘இப்ப ப்ளே பண்ணுங்க’ சரன் கூறியவுடன் மதன் தன் சாப்ட்வேரில் ப்ளே பட்டனை அழுத்தினான், அழுத்தியவுடன் அந்த பாடலின் முதலாவதாக வரும் ப்ரிக்யூஷன் இசை, சுரேஷின் பார்ம் ஹவுஸ் முழுவதும் கேட்கும்படி மதன் செட்டப் செய்து வைத்திருந்த டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்களில் ஒலிக்க ஆரம்பித்தது. பார்ம் ஹவுசின் நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டிருந்த மினி தியேட்டர்களை போன்ற ஒஎல்இடி ஸ்கீன்கள், மதனின் சாப்ட்வேரில் இருந்து வரும் பாடலுக்கேற்ற சின்த் விசுவல்களை காண்பிக்க ஆரம்பித்தது. டால்பி ஸ்பீக்கிளில் இருந்து வரும் ஒலியையும், ஒஎல்இடி ஸ்க்ரீன்களில் வரும் சின்த் விசுவல்களையும் பார்த்தவுடன் பார்ம் ஹவுசில் இருந்த எல்லோருக்கும் ஏதோ ஒருவித புதிய விதமான உணர்வை அனுபவித்தனர். பலர் அந்த அனுபவத்தை இப்போது இருக்கும் லேட்டஸ்ட் சினிமா தியேட்டரில் உணர்ந்திருப்பதாக பேசிக்கொண்டனர். பார்ம் ஹவுசில் இருந்த பலர் ஒலி எங்கிருந்து வருகிறது என்று தேடி மதனும் சரணும் அமர்ந்திருந்த மிக்ஸிங் கன்சோல் கூடாரத்திற்கு வந்து பார்த்து சென்றனர். ‘ப்ரோ சூப்பர், நீங்க இதுக்குத்தான் டால்பி 9.2.4 செட்டப் வச்சீங்களா? உங்க சாப்ட்வேர் சாங்ஸ் எந்த பார்மெட் இருந்தாலும் ப்ளே பண்ணுமா?’ சரன் கேட்க ‘gstreamer ப்ரேம் வெர்க் யூஸ் பண்றதால என் சாப்ட்வேர்னால எந்த ப்ராட்மெட்ல இருக்கும் ஆடியோ வீடியோ பைலையும் ப்ளே பண்ண முடியும்’ மதன் கூற ‘சூப்பர் ப்ரோ’ சரன் தன் ஏவி கன்சோல் சாப்ட்வேரில் ஆடியோ சேனல்களின் ஆம்பிப்பிக்கேஷனை அட்ஜஸ்ட் செய்து கொண்டு மதனை பாராட்டினான். சரன் அட்ஜஸ்ட் செய்ய டால்பி ஸ்பீக்கர்களில் இருந்து வரும் ஒலி சுரேஷ் பார்ம் ஹவுசில் ஏற்படும் எதிரொலிக்கு ஏற்றவாறு கட்சிதமாக பொருந்தியது.

தீப்தியின் ரூமில் ‘உன் அண்ணன் ஆரம்பிச்சிட்டான் போல’ சுரேஷ் மதனின் தங்கையை பார்த்து கேட்டான் ‘அவனேதான்’ மதனின் தங்கை கூறும் போதே அவள் தோள் மீது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சற்று சினுங்க ஆரம்பித்தது. ‘நான் பாப்பாவ ரூமில் தூங்க வச்சிட்டு வரேன்’ மதனின் தங்கை சுரேஷிடம் சொல்லிவிட்டு தீப்தியின் ரூமில் இருந்து வெளியே சென்றாள். அவள் வெளியே சென்றதும் ‘சுரேஷ், நீங்க இவ்வலவு நேரம் மதன பத்தித்தான பேசிக்கிட்டு இருந்தீங்க?’ கார்த்திகா சுரேஷை பார்த்து கேட்க ‘அப்ப உங்க பக்கத்துல குழந்தையோட உட்கார்ந்து இருந்தது மதனோட தங்கச்சின்னு தெரியாதா?’ சுரேஷ் கூறியதும் கார்த்திகா மதனின் தங்கையை மீண்டும் பார்க்க ரூமை விட்டு வெளியேறினாள். ‘ஏன்டி நீ மொதல்லையே சொல்றதில்லையா, நான் ரெண்டு பேரும் ஒன்னா இருக்காங்களே ஆல்ரெடி இன்ரட்யூஸ் ஆகி இருப்பாங்கன்னு நெனச்சேன்’ சுரேஷ் தீப்தியிடம் கேட்டான் ‘விடுங்க, லைட்டா இப்பத்தான் பத்தி இருக்கு, என்ன நடக்குதுன்னு பாப்போம்’ தீப்தி சிரித்துக்கொண்டே ரிசப்ஷனுக்கு ரெடியானாள்.

கார்த்திகா மதனின் தங்கை அவள் ரூமுக்கு செல்வதை பார்த்து பின்தொடர மதனின் தங்கை அவள் ரூமுக்குள் சென்று விட்டாள். அவள் சென்ற ரூம் தன் பெற்றோர் இருக்கும் ரூமுக்கு அடுத்து இருந்ததை பார்த்து கார்த்திகா புன்னகைத்தாள். இப்போது எப்படி மதனின் ரூமிற்கு போவது என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த எல்லா ரூம்களில் மினரல் வாட்டர் வைக்க வந்து கொண்டிருந்தனர். கார்த்திகா அவர்களிடம் போய் தன் ரூமுக்கு இரண்டு பாட்டில்களும் மதனின் ரூமிற்கு நான்கு பாட்டில்களும் எடுத்துக்கொண்டாள். நேரே மதனின் ரூம் கதவை தட்டினாள். கதவை திறந்த மதனின் தங்கை ‘உள்ள வாங்க’ என்று கார்த்திகாவை அழைத்தாள். ‘அம்மா இது கார்த்திகா அக்கா, தீப்தி அக்காவோட ப்ரண்ட்’ என்று மதனின் தாயாருக்கு கார்த்திகாவை அறிமுகப்படுத்தினாள். ‘வாட்டர் பாட்டில் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்’ கார்த்திகா தன்னிடம் இருந்த பாட்டில்களை மதனின் அம்மாவிடம் கொடுத்தாள். ‘உட்காரும்மா’ மதன் அம்மா கார்த்திகாவை பார்த்து சொன்னார். அப்போது மதனின் தந்தை உள்ளிருந்து வந்தார், ‘மாப்பிள்ளை பொண்ணு ரெடி ஆகிட்டாங்களாம்மா’ மதனின் தந்தை கார்த்திகாவிடம் கேட்க ‘ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க சார்’ என்று கார்த்திகா கூறினாள். கார்த்திகாவின் கண்கள் மதன் ரூமில் இருக்கின்றானா என்று தேடிக்கொண்டிருந்தது. அப்போது மதன் தங்கையின் கணவர் உள்ளிருந்து வந்தார். கார்த்திகா அமர்ந்திருந்ததை மதன் தங்கையின் கணவர் கவனிப்பதை மதனின் அம்மா கவனித்தார். ‘தீப்தியின் ப்ரண்ட் மாப்ள, வாட்டர் பாட்டில் கொடுத்துட்டு போக வந்தாங்க’ மதனின் தாயார் கூறினார். ‘அங்க ரெடி பண்ணிட்டாங்களா?’ மதன் தங்கையின் கணவர் கார்த்திகாவை பார்த்து கேட்க ‘பண்ணிக்கிட்டு இருக்காங்க’ என்று கார்த்திகா பதில் அளித்தாள்.’அப்ப நான் வரேன்’ என்று சொல்லிவிட்டு கார்த்திகா மதனின் ரூமில் இருந்து வெளியே வந்தாள்.

கார்த்திகா தன் ரூமில் உட்கார்ந்து இருந்தாள். கார்த்திகாவின் அப்பாவும் அம்மாவும் பயண களைப்பில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திருடா திருடா படத்தில் வரும் தீ தீ தித்திக்கும் தீ பாடல் இசை ஒலிக்க துவங்கியது. ஏஆர்ஆர் இசையை கேட்டவாரே ரூமின் ஜன்னல் ஓரத்தில் வந்து நின்றாள். ஜன்னலில் இருந்து தெரிந்த ஒஎல்இடி ஸ்கிரீனில் இசைக்கு ஏற்றவாறு சின்த் விஷுவல்கள் கண்களுக்கு இதமாக வந்து சென்றுகொண்டிருந்தன. கார்த்திகா மற்றவற்றை மறந்து சிறிது நேரம் ஏஆர்ஆர் இசையை ரசித்தபடி இருந்தாள். அதே வேளையில் ஏவி மிக்சிங் கன்சோல் இருக்கும் இடத்தில் மதனும் சரணும் அவர்கள் நிறுவிய ஏவி சிஸ்டம்களில் இருந்து வரும் இசையையும் சின்த் விசுவல்களையும் ரசித்தபடி அவர்கள் அந்த சிஸ்டம்களுக்கு போகும் சிக்னல்களை சரிபார்த்து கொண்டிருந்தனர். ‘ப்ரோ, பேசாம நீங்க எங்க கம்பெனில ஜாயின் பண்ணுங்க ப்ரோ, இந்த மாதிரி ஏவி செட்டப்ப இதுவரைக்கும் என் அண்ணன் செட் பண்ணி நான் பார்ததில்ல, அவன் கஸ்டமரே பாக்குறாங்கன்னு சொன்னப்போ சொதப்ப போறாங்கன்னு நெனச்சேன், அப்படித்தான் பல இடத்துல நடந்திருக்கு, ஆனா நீங்க வேர லெவல் ப்ரோ’ சரண் மதனை பார்த்து பாராட்டினான். ‘அதுவும் ஒஎல்இடி ஸ்க்ரீஸ் எல்லாம் 8k ரெசல்யூஷன்ல சின்த் விஷுவல்ஸ் காட்டும்போது சூப்பரா இருக்கு’ சரண் தான் ரசித்துக் கொண்டிருப்பதை மதனிடம் கூறினான். ‘நீ பாக்காததா?’ மதன் தன்னடக்கத்துடன் கூறினான். ‘இந்த ஏஆர்ஆர் சாங்ஸ், இதெல்லாம் எப்ப வந்தது ப்ரோ, இவ்வலவு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வெச்சு ஒருத்தரால மியூசிக் கம்போஸ் பண்ண முடியுமா, நான் ஆல்மோஸ்ட் எல்லா சேனலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டேன். யூசுவலா இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் டிஜே ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் என்னால கரெக்டா உட்கார வைக்க முடியும், ஆனா உங்க ஏஆர்ஆர் பாட்டுங்களால ரெண்டே பாடல்ல உட்கார வச்சிட்டேன். உண்மையிலேயே ஏஆர்ஆர் ஒரு ஜீனியஸ்தான் ப்ரோ’ சரண் கூற மதன் புன்னகையுடன் பாடலை ரசித்துக் கொண்டிருந்தான். பாடலின் மூன்றாவது நிமிடம் முப்பத்து நான்காவது நொடியில் வந்த அழகான மெல்லிய குரலுடன் தென்றல் காற்றும் சேர்ந்து பாடுவது போன்ற இசை டால்பி ஸ்பீக்கர்களில் ஒலித்தது ‘வாட்? ப்ரோ, ஏர்ப்ளே எபக்ட், கவனிச்சீங்களா?’ சரண் உணர்ச்சிவசப்பட்டு மதனிடம் கேட்டான் ‘ஏர்ப்ளே எப்பக்ட்?’ மதன் புரியாமல் கேட்க ‘அந்த லேடி வாய்ஸ் சேர்ந்து காத்தும் பாடிக்கிட்டே வீசுர மாதிரி இருக்கு பாத்தீங்களா? அதுதான் ஏர்ப்ளே எபக்ட், நான் ஒரு சில சாங்ஸ்ல தான் இது மாதிரி கேட்டிருக்கேன், ஆனா ஏஆர்ஆர் இருபது வருஷத்துக்கு முன்னாடி இத யூஸ் பண்ணி இருக்கார் பாருங்க’ சரன் மெல்ல மெல்ல ஏஆர்ஆர் ரசிகனாக மாறி கொண்டிருப்பதை மதன் பார்த்து ரசித்தான்.

ரிஷப்ஷன் டேபில்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களில் விருந்தினர்கள் உட்கார்ந்து இசையை ரசித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். கார்த்திகா தன் ரூமில் இருந்து ரிஷப்ஷன் டேபிள்கள் இருந்த இடத்துக்கு வந்தாள். அப்போது ரிஷப்ஷன் டேபிலில் உட்கார்ந்திருந்த ஒரு முதியவர் ‘தண்ணீர் கொஞ்சம் கொடுக்க முடியுமா?’ என்று கார்த்திகாவிடம் கேட்டார். கார்த்திகா உடனே வீட்டின் உள்ளே தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருந்தவர்களிடம் ஒரு பாட்டில் கொண்டு வந்து அந்த முதியவரிடம் கொடுத்தாள். அவள் அங்கு உட்கார்ந்து இருந்தவர்கள் யாருக்கும் தண்ணீர் வழங்கப்பட வில்லை என்பதை உணர்ந்தாள். உடனே மீட்டும் வீட்டினுள் சென்று தண்ணீர் பாட்டில்களை ஓவ்வோரு ரிஷப்ஷன் டேபிள்களில் உள்ளவர்களிடம் கொடுக்க தொடங்கினாள். காரதிகா தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கும் இடமும் மதன் உட்கார்ந்து இருக்கும் கன்சொல் ஏரியாவும் அருகே இருந்தாலும் மதன் உட்கார்ந்திருக்கும் இடம் செடிகளுக்கு மறைவில் இருந்தால் இருவரும் பார்த்துக் கொள்ள வாய்ப்பின்றி இருந்தது. சரண் பாடல் கேட்டபடி இருக்க அவன் மொபைலில் அழைப்பு வந்தது, ‘சொல்ரீ..’ சரண் அவன் கேர்ல்ப்ரண்டிடம் பேச ஆரம்பித்தான். பல நிமிடங்கள் பாடலை ரசித்தபடி சரண் பேசிவிட்டு மொபைல் வைத்தான். ‘மேட்டரே இல்லன்னாலும் போன் பண்ணி மொக்க போட்ரா’ சரண் மதனிடம் கூற மதன் புன்னகையுடன் தன்னிடம் இருந்த லேப்டாப்பை பார்த்துக்கொண்டிருந்தான். ‘ப்ரோ, நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?’ சரண் கேட்க மதன் புன்னகைத்தான். ‘அப்போ லவ் பெய்லியர்?’ சரண் கேட்க ‘நானே நொந்து போய் இருக்கேன்’ மதன் கூற ‘அப்ப கன்பார்ம் லவ் பெய்லியர், என்ன உங்க எக்ஸ் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாங்களா?’ சரண் கேட்க மதன் புன்னகையுடன் அமைதியாக இருந்தான். அங்கிருந்த அனைத்து ரிஷப்ஷன் டேபிள்களில் கார்த்திகா தண்ணீர் பாட்டில்களை வைத்து முடித்தாள். ரிஷப்ஷன் மேடைக்கு அருகில் முதல் வரிசையில் இருந்த ரிஷப்ஷன் டேபிள்களில் தண்ணீர் பாட்டில்களை கார்த்திகா வைக்க ஆரம்பித்தாள். டென்டில் அமர்ந்திருந்த சரண் அவன் இடத்தை விட்டு எழுந்து ரிஷப்ஷன் மேடைக்கு அருகில் வந்தான். கார்த்திகா தண்ணீர் பாட்டில்களை வைத்து வந்து கொண்டிருப்பதை பார்த்த சரண் ‘அக்கா எங்க இடத்துலயும் மினரல் வாட்டர் கொடுப்பீங்களா?’ என்று செடிகளுக்கு மறைவில் இருந்த டென்டை கான்பித்தான். கார்த்திகா அந்த டென்டை பார்த்தாள், கம்ப்யூட்டர் மானிட்டருக்கு பின் யாரோ அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. கார்த்திகா தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்களை டென்டில் வைக்க சென்றாள். டென்டின் அருகே சொல்ல சொல்ல மானிட்டரின் பின் இருந்த மதனின் முகம் கார்த்திகாவுக்கு மொல்ல மொல்ல தெரிய ஆரம்பித்தது. கார்த்திகா மதன் அருகில் வந்து நின்றாள். லேப்டாப்பில் மூழ்கியிருந்த மதன் யாரோ எதிரில் நிற்பது கண்டான். மெல்ல தலையை தூக்கி பார்க்க கார்த்திகாவின் அழகிய முகம் தெரிந்தது. கார்த்திகாவை பார்த்தவுடன் மதன் எழுந்தான். கார்த்திகா மதனை பார்க்க மதனும் கார்த்திகாவை பார்த்தவாறு இருந்தான். சில நொடிகள் இருவரும் பார்த்தவாறு இருந்தனர். இதை கவனித்துக் கொண்டிருந்த சரண் அவர்கள் அருகில் வந்து ‘ப்ரோ இவங்கள உங்களுக்கு தெரியுமா?’ என்று கேட்க மதன் எதையும் பேசவில்லை, கார்த்திகாவும் தன் கையில் இருந்த பாட்டிலை அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். கார்த்திகா செல்வதை கண்டு மதன் அவன் உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு விலகி கார்த்திகாவை பின்தொடர்ந்து சென்று ரிஷப்ஷன் மேடைக்கு அருகில் முன்பு சரண் நின்ற இடத்தில் நின்றான்.

உள்ளே தண்ணீர் பாட்டில் எடுக்க சென்ற கார்த்திகா வீட்டில் இருந்து வந்துகொண்டே மதன் தன்னை பார்க்க நின்று கொண்டிருப்பானா இல்லை அவன் வேலையை பார்த்துக் கொண்டிருப்பானா என்ற கேள்வியுடன் ரிஷப்ஷன் டேபில்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தாள். அவள் ஆசைப்பட்டதை போல் மதன் ரிசப்ஷன் மேடை பக்கத்தில் அவளுக்காக காத்திருந்தான். மதன் தன்னை பார்ப்பதை கவனித்த கார்த்திகா கண்டும் காணாததுமாக மெல்ல நடக்க ஆரம்பித்தாள். கார்த்திகா மதன் அருகில் வந்து கொண்டிருக்கும் போது காதலன் படத்தில் வரும் இந்திரையோ இவள் சுந்தரியோ என்ற அழகிய பாடல் கார்த்திகா நடந்து வருவதற்கு ஏற்ப இசைக்க தொடங்கியது, இசை தொடங்கியவுடன் கார்த்திகா நின்றுவிட்டாள். மதன் தான் வேண்டுமென்றே இதை இசைக்க வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து மதனை கோபப்படுவது போல் பார்த்தாள். மதன் கார்த்திகா தன்னை தவறாக நினைக்கிறாள் என்று எண்ணி நான் இதை செய்யவில்லை என்பது போல் கையை காண்பித்தான். உள்ளே சரண் தான் அடுக்கி வைத்திருந்த ப்ளேலிஸ்டில் ஏதோ விளையாடிவிட்டான் என்று உணர்ந்த மதன் சரணை பார்க்க சரண் சிரித்துக்கொண்டிருந்தான். கீழே இருந்து ஒரு சிறு கல்லை எடுத்து சரண் இருக்கும் இடத்தை பார்த்து எரிந்தான். அந்த கல்லை சரண் அழகாக பிடித்துக் கொண்டு சிரித்தான். மதனும் சரணும் செய்வதை பார்த்த கார்த்திகா சிறு புன்னகையுடன் தண்ணீர் பாட்டில்களை வைத்து மதனை கடந்து சென்றாள். கார்த்திகா சென்றவுடன் மதன் சரணை பிடித்து அடிக்க நகர்ந்தான், அதை சரியாக யூகித்த சரண் மதனிடம் சிக்காமல் இருக்க ரிஷப்ஷன் ஏரியாவை நோக்கி ஓட முயன்றான், ஆனால் மதனிடம் சரண் சிக்கிக்கொண்டான். ‘அக்கா, இங்க பாருங்க என்ன அடிக்க வராரு’ சரண் கார்த்திகாவை பார்த்து சொல்லும் போதே சரணின் வாயை மதன் மூடினான். கார்த்திகா திரும்பி பார்க்க மதன் சரணை பிடித்து வாயை மூடிக் கொண்டிருந்தான். கார்த்திகா பார்க்க தொடங்கியவுடன் மதன் சரணை விட்டுவிட்டு மீண்டும் அமைதியானான். தண்ணீர் பாட்டில்களை வைத்து விட்டு கார்த்திகா மதனையும் சரணையும் பாத்துக்கொண்டே அவர்களை தான்டி சென்றாள். கார்த்திகா சென்றவுடன் மீண்டும் மதன் சரணை பிடிக்க முற்பட்டான். சரண் உடனே ரிஷப்ஷன் ஏரியாவில் நுழைந்துவிட்டான். பின்னால் சிறு சத்தத்தை கேட்ட கார்த்திகா மதன் சரணை துரத்திக் கொண்டிருப்பதை கண்டாள். மதன் கார்த்திகா மீண்டும் பார்பதை கண்டு அமைதியானான். மதன் தன்னை பார்த்து அமைதியானதை கண்டு உள்ளுக்குள்ளே சிரித்தவாறு கார்த்திகா திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள்.

ஒரு வழியாக மதனும் சரணும் மிக்ஸிங் கன்சோல் டெண்டிற்கு வந்து அமர்ந்தனர். ‘ஏண்டா அந்த பாட்ட போட்ட, அதுவும் கரெக்டா அவ வரும்போது?’ மதன் சரணை பார்த்து கேட்டான். ‘பயங்கர கெமிஸ்ட்ரி ப்ரோ உங்க ரெண்டு பேருக்கும், அப்படி பாத்துக்கரீங்க. இருந்தாலும் ஒரு எக்ஸ் லவ்வர அப்படி பாக்கக்கூடாது ப்ரோ, பாத்தாலும் பாத்துக்காம போயிடனும்’ சரண் மதனுக்கு அட்வைஸ் கொடுத்தான். இருவரும் சில வினாடிகள் பேசிக்கொள்ளவில்லை, ‘உங்களுக்குள்ள என்ன தான் நடந்தது?’ சரண் கேட்க ‘பழசெல்லாம் கேட்காதடா, என்னால அவ ரோம்ப கஷ்டப்பட்டுட்டா, நடக்கக்கூடததெல்லம் நடந்துடுச்சு, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்’ மதன் வருந்தி கூற ‘என்ன ப்ரோ சொல்றீங்க, அவ்வளவு தூரத்துக்கு போய்ட்டீங்களா? நம்பவே முடியல, உங்களையும் அந்த அக்காவையும் பார்த்தா அப்படி பண்றவங்களா தெரியலையே, வயித்துல எதுவும் கொடுத்துடலையே?’ சரண் கேட்க ‘உன் வாயில டாமக்ஸ் ஊத்த, என் கனவுல கூட அந்த நோக்கத்தில் நான் அவல நினைச்சி பாத்ததில்லடா’ மதன் கூற ‘அதான பாத்தேன், நைன்டிஸ் கிட்ஸ் ஆவது மேட்டர் வரைக்கும் போரதாவது, பட் யூ டூ லுக் மேட் பார் ஈச் அதர், பேட் லக் ப்ரோ’ சரண் மதனை சமாதானப்படுத்தினான். ‘வெறுப்பேத்த தான சொன்ன’ மதன் கேட்க ‘சத்தியமா வெருப்பேத்தத்தான் சொன்னேன்’ சரண் கூற மதன் சரணை பிடித்து முதுகில் மொத்தினான். மீண்டும் இருவரும் வந்து அமர்ந்தனர். ‘ப்ரோ பட் தட் சாங், எப்படி ப்ரோ தேடி கண்டுபிடிக்கரீங்க, என்னா மியூசிக், என்னா லிரிக்ஸ், யாரு ப்ரோ அந்த பாட்டு எழுதியது, வைரமுத்துவா? ஒரு அழகான தேவதைய அப்படியே கன் முன்னாடி கொண்டு வரார் ப்ரோ. வைரமுத்து இப்படி கூடவா தூய தமிழ்ல பாட்டு எழுதுவார்?’ சரண் கேட்க ‘வைரமுத்துவும் இது மாதிரி எழுதுவார், அத ரசிக்கத்தான் இங்க ஆள் இல்லை, இந்த பாட்ட எழுதியது வேற ஒருத்தர். குற்றாலக் குறவஞ்சி கேள்விப்பட்டிருக்கியா? சிற்றிலக்கியம்? குறத்திப்பாட்டு? தமிழ்?’ மதன் கேட்க ‘சாரி ப்ரோ, இங்கிலீஷ் மீடியம்’ சரண் கூற ‘அதுவும் சரிதான், தமிழ் மீடியத்துல மட்டும் என்ன வாழுது, எல்லாம் மக்கப் அடிச்சித்தான தமிழ்ல மார்க் வாங்குறாங்க, எக்ஸாமும் அத்தான எதிர்பார்கிறது, ஆனா ஒவ்வொரு இலக்கியத்தையும் புரிஞ்சிக்கிட்டா அதுங்க லெவலே வேற, பை த வே, இந்த பாட்ட எழுதினவர், திரிகூடராசப்ப கவிராயர், ஏய்டீன்த் செஞ்சுரில வாழ்ந்த ஒரு புலவர், அவர் எழுதிய குற்றாலக்குறவஞ்சில வர லிரிக்ஸ் தான் இந்த பாட்டுக்கு யூஸ் பண்ணி இருக்காங்க’ மதன் கூற ‘எப்படி ப்ரோ இவ்வலவு டீட்டெயில்ஸ் சொல்றீங்க’ சரண் கேட்க ‘விக்கிக்பீடியாவ பாத்து சொல்லிட்டு இருக்கேன்’ மதன் சிரித்துக்கொண்டே கூற சரணும் சிரித்தான்.

பொழுது சாய விருந்தினர்கள் வந்தபடி இருந்தனர். பார்ம் ஹவுசில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்த்து எல்லோரும் வியந்தனர். அங்கு செய்யப்பட்டிருந்த ஏவி செட்டப்பை பார்த்து பலபேர் இதே போல் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் செய்ய வேண்டும் என்று சரணிடம் சொல்லி அவன் அண்ணனின் காண்டாக்ட் நம்பரை வாங்கிச்சென்றனர். ‘ப்ரோ தயவு செஞ்சு எங்க கம்பெனிக்கு அட்வைசரா வாவது வந்துடுங்க, இவ்வலவு டிமான்டையும் எங்களால சமாளிக்க முடியாது’ சரண் மதனை பார்த்து கூற ‘என்ஜாய்’ மதன் சிரித்துக்கொண்டே கூறினான். மதனின் தங்கை மதனை தேடிக்கொண்டு அங்கு வந்தாள். ‘எங்கெல்லாம் தேடுறது, அம்மா உன்ன கூப்பிடுறாங்க’ மதனின் தங்கை கூற, ‘எதுக்கு’ மதன் கேட்க, ‘போய் டிரஸ் மாத்துடா, இப்படியேவா பங்ஷன் அட்டன் பண்ண போற?’ மதனின் தங்கை கேட்க ‘ஏன் இதுக்கென்னவாம்?’ மதன் கூற ‘ப்ரோ போய் டிரஸ் மாத்துங்க ப்ரோ, நமக்காக இல்லன்னாலும் உங்க ப்ரண்டுக்காகவாவது மாத்துங்க ப்ரோ, இப்படியே மேடையில கிப்ட் கொடுக்க போனீங்கன்னா நல்லா இருக்காது ப்ரோ’ சரண் கேட்டுக்கொண்டான். மதன் மிக்ஸிங் கன்சொல் இருக்கும் இடத்தை விட்டு ரிசப்ஷன் டேபிள் ஏரியாவை கடந்து போகும் போது சிறிது தூரத்தில் கயலின் அம்மாவும் மாமாவும் உட்கார்ந்து இருந்தனர். ‘நீ ரூமுக்கு போ நான் பின்னாடியே வரேன்’ மதன் தன் தங்கையிடம் கூறிவிட்டு கயல் அம்மா உட்கார்ந்து இருந்த இடத்திற்கு வந்து நின்றான். ‘வாப்பா, எப்படி இருக்க?’ கயலின் மாமா கேட்க ‘நல்லா இருக்கேன் சார். கயல் வரல?’ மதன் கேட்க ‘சுரேஷ் உன்கிட்ட விஷயம் சொல்லலியா? குருவுக்கு லீவு கிடைக்கல, எமர்ஜன்ஸின்னு சொல்லிட்டு தான் அவன் இங்க வந்திருக்கனும், கயலும் கன்சீவா இருக்குறதால ட்ராவல் பண்ண வேணாம்னு டீசைட் பண்ணிட்டாங்க’ கயல் அம்மா கூற மதன் மௌனமாக இருந்தான். ‘சரி, ஏதாவது வேணும்னா என்ன கூப்பிடுங்க, நான் அந்த டென்டுக்குள்ள தான் இருப்பேன்’ என்று மதன் மிக்ஸிங் கன்சொல் டென்டை காண்பிக்க ‘இதெல்லாம் உன் ஏற்பாடாப்பா?’ என்று கயல் மாமா கேட்க ‘ஏன் சார்? நல்லா இல்லையா?’ மதன் கேட்க ‘அட நீ வேற, இப்பதான் இது மாதிரி பர்ஸ்ட் டைம் பார்க்கிறேன். சூப்பரா பண்ணியிருக்கீங்க, இத பண்ணவங்க காண்டாக்ட் கொடு, அடுத்த முற விசேஷத்துக்கு புக் பண்ணிடலாம்’ கயல் மாமா கூற ‘இதோ கூப்பிடுறேன்’ என்று மதன் சரணை கூப்பிட்டு கயலின் அம்மாவுக்கும் மாமாவுக்கும் அறிமுகப்படுத்தினான். ‘உள்ள கொஞ்சம் வேல இருக்கு, நீங்க பேசிக்கிட்டு இருங்க’ என்று மதன் சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு வந்தான்.

‘எங்கடா இருந்த, சீக்கிரம் ரெடியாகி கீழ வா’ என்று மதன் அம்மா கூறிவிட்டு மதன் வீட்டினர் எல்லோரையும் அழைத்துக்கொண்டு ரிசப்ஷனுக்கு சொன்றார். கார்த்திகாவின் ரூமில் கார்த்திகாவின் அப்பா ‘மா, லேட் ஆகுது நாங்க கீழ போறோம் நீ வா’ என்று சொல்லிவிட்டு கார்த்திகாவின் பெற்றோர் கீழே சென்றனர். ஒரு வழியாக மதன் ரெடியாகி அவன் வாங்கி வைத்திருந்த கிப்ட் எடுத்துக்கொண்டு ரூமை பூட்ட வெளியே வந்தான். அதே சமயம் பக்கத்து ரூமையும் யாரோ பூட்டுவதுபோல் இருந்தது. கதவை பூட்டிவிட்டு திரும்ப அங்கு கார்த்திகா. காலில் போட்டுக் கொண்டிருக்கும் அழகிய காலணிகளை மறைத்துக் கொண்டிருக்கும் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பச்சை நிற லஹிங்காவும், அதே அளவிற்கு வேலைப்பாடுகளுடன் கூடிய அதே பச்சை நிற லாங் லஹிங்கா டாப்சும், அதற்கு ஏற்றார்போல் பச்சை நிர துப்பட்டாவும், கழுத்தில் அம்மா கொடுத்த அழகிய தங்க நெக்லஸ்ஸும் போட்டுக்கொண்டு, தன் இரு கைகளிலும் இரண்டு கிப்ட் பாக்ஸ் வைத்துக்கொண்டு ரூமை பூட்ட ஒரு தேவதை சிரமப்பட்டுக் கொண்டு இருப்பதை மதன் கவனித்தான். யாரோ பக்கத்து ரூமை பூட்டிவிட்டு தன்னை பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து கார்த்திகா திரும்ப அங்கு மதன். வழக்கம்போல் கருப்பு நிற அடிடாஸ் ஷூ, கருப்பு நிற ஜீன்ஸ், கருப்பு நிர பெல்ட், வெண்மை நிர ப்ளெய்ன் வீ நெக் டீ-ஷர்ட், சுரேஷின் அம்மா சொன்னதால் ட்ரிம் செய்து வைத்த வைக்கிங் தாடியும், தாடியுடன் சண்டை போடும் முறுக்கு மீசையும், காதல் தோல்வியால் வந்த டிப்ரஷனை விரட்டியடிக்க ஜிம்மிற்கு சென்று ஏற்றி வைத்திருந்த உடம்பு கொண்ட ஒரு காளை தன்னை பார்ப்பதை கார்த்திகா கண்டாள். வழக்கம் போல் இருவரும் சில நிமிடங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். மதன் கார்த்திகாவின் கையில் இருந்த பூட்டை கேட்பதுபோல் கையை நீட்ட அவளும் தன் கையில் இருந்த பூட்டை கொடுத்தாள். மதன் கார்த்திகாவின் ரூமை பூட்டி விட்டு சாவியை அவளிடம் கொடுத்தான். கார்த்திகா முன்னே நடக்க மதன் கார்த்திகா போகட்டும் பிறகு போவோம் என்று காத்திருந்தான். ஆனால் கார்த்திகா சிறிது தூரம் சென்றதும் மதன் தன்னை பின் தொடர வில்லை என்று தெரிந்து அங்கேயே நின்றாள். இதை கவனித்த மதன் கார்த்திகாவை பின்தொடர ஆரம்பித்தான்.

கார்த்திகாவும் மதனும் கீழே இறங்கி சுரேஷும் தீப்தியும் ரெடியாகி கொண்டிருந்த ரூமின் கதவருகில் வந்தனர். கதவை திரந்து கார்த்திகா உள்ளே வந்து ‘இன்னும் ரெடியாகலையா, எல்லாரும் நீங்க ரெடி ஆகிட்டீங்கன்னு ரூம்ல இருந்து ரிசப்ஷனுக்கு கிளம்பிட்டாங்க’ என்று கூற ‘வாவ், அக்கா க்ரீன்ல கலக்குறாங்க’ ஏற்கனவே ரெடியாகி உட்கார்ந்திருந்த தீப்தி கார்த்திகாவை பார்த்து கூறினாள். ‘டீ, என்ன, ஜூவல்ரி ஷாப் மாடல் ஆக்கிட்டாங்களா?’ கார்த்திகா தீப்தி போட்டிருந்த தங்க நகைகளை பார்த்து கிண்டல் செய்தாள். ‘உங்க கல்யாணத்தப்பவும் நீங்க இப்படித்தான் இருக்க போறீங்க, அப்ப இருக்கு உங்களுக்கு’ தீப்தி கார்த்திகாவை எச்சரித்தாள். ‘என்ன சுரேஷ், நீங்கதான் லேட்டா?’ கார்த்திகா சுரேஷை பார்த்து கேட்க, மேக்கப் போடுபவர்களை சில நொடிகள் இருக்க செய்து ‘எல்லாம் இவதான், நானே சிப்பிலா பண்ணிக்குறேன்டி, புரப்பஷ்னல் மேக்கப் எல்லாம் வேணாம், லேட் ஆகும்னு சொன்னா கேட்கல’ சுரேஷ் கூறினான். ‘மதன் அண்ணா எங்க?’ என்று தீப்தி சுரேஷை பார்த்து கேட்க ‘வெளியத்தான் நின்னுக்கிட்டு இருக்காரு’ கார்த்திகா கூறினாள். சுரேஷ் கதவருகே போய் ‘டேய், ரூம் வரைக்கும் வந்துட்டு, உள்ள வரதுக்கு என்ன?’ என்று மதனை திட்டிவிட்டு உள்ளே இழுத்தான். மதன் உள்ளே வந்து மூவரையும் பார்த்துவிட்டு அமைதியாக நின்றான். ‘என்னனா அமைதியா இருக்கீங்க? எப்படி இருக்கு மேக்கப்’ தீப்தி மதனை கேட்க ‘ரொம்ப அழகா இருக்கும்மா’ சுரேஷ் சொல்லிவிட்டு அமைதியானான். ‘அவ்வளவுதானா?’ தீப்தி மதனை மீண்டும் கேட்க ‘அது வந்து, நீ போட்டுட்டு இருக்குற கோல்ட் வேய்ட் எவ்வலவு தேரும்னு தோராயமா கணக்கு போட்டுக்கிட்டு இருந்தேன், அதான் வேற எதுவும் சொல்ல முடியல’ மதன் தீப்தியை கலாய்க்க ‘நீங்களுமா’ தீப்தி மதனை முறைத்தவாரே கேட்க ‘நகைச்சுவை’ மதன் சிறு புன்னகையுடன் தீப்தியை சமாதானப்படுத்த கார்த்திகாவும் தீப்தியை பார்த்து புன்னகைத்தாள். ‘அசிங்கப்பட்டா ஆட்டோக்காரீ’ சுரேஷும் தன் பங்கிற்கு தீப்தியை கலாய்க்க ‘வேனாம், புருஷனாக போற, மறியாத கொடுக்கனும்னு யோசிச்சு வெச்சிருக்கேன், திட்ட வைக்காத’ தீப்தியும் சுரேஷை செல்லமாக திட்டினாள். சில வினாடிகள் கழித்து ‘மச்சி, கயலும் குருவும் கால் பண்ணி இருந்தாங்க, மேரேஜ் ரொம்ப மிஸ் பன்றாங்களாம். அவங்க கொடுக்க இருந்த கிப்ட கார்த்திகா கிட்ட அனுப்பிட்டாங்களாம், அதை நீயும் கார்த்திகாவும் சேர்ந்து கொடுக்கனும்னு விருப்பப்படுறாங்க’ சுரேஷ் கூற மதன் அதை கேட்டு அமைதியாக இருந்தான். ‘டேய் வாய தொரடா, சேர்ந்து கொடுக்க உனக்கு அப்ஜக்‌ஷன் இல்லையே?’ சுரேஷ் கேட்க ‘டேய், என்னடா கேல்வி இது, அவங்களுக்காக இத கூட செய்ய மாட்டேனா, அவங்க வரலைன்றதே கயல் அம்மா சொல்லி கேள்விப்பட்ட வேண்டி இருக்கு, உங்களுக்கு விஷயம் தெரியும்ல, என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல?’ என்று மதன் வருத்தத்துடன் கேட்க, ‘டேய், தேவையில்லாம டென்ஷன் ஆகாத, இன்னைக்கு காலையில தான் கயல் கால் பண்ணி சொன்னாங்க, நீ பிசியா இருந்துட்ட, நானும் உன்ன மீட் பண்ண முடியல, இப்பத்தான் சொல்லிட்டேன்ல, ப்ரீயா விடு, கார்த்திகா உங்களுக்கு எந்த அப்ஜக்‌ஷனும் இல்லையே?’ என்று சுரேஷ் கார்த்திகாவை பார்த்து கேட்க, ‘இத நீங்க கேட்கனுமா, எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல’ என்று கூறினாள்.

தீப்தியும் சுரேஷும் அவர்கள் வீட்டின் பூஜை அறைக்கு முன் அமர தீப்தியின் குடும்பமும் சுரேஷின் குடும்பமும் சூழ்ந்து இருக்க புரோகிதர் நிச்சயதாம்பூலபத்திரிக்கை வாசிக்க இரு வீட்டாரும் தட்டை மாற்றிக்கொண்டனர். இந்த காட்சிகள் நேரடியாக வெளியில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டன. ரிஷப்ஷன் ஏரியாவில் அமர்ந்திருந்த விருந்தினர் அங்கு அமர்ந்தவாறே அந்த காட்சிகளை கண்டு களித்தனர். நிச்சயம் முடிந்து இரு வீட்டாரும் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் நலங்கு வைத்து சம்பிரதாயங்களை ஆரம்பித்தனர்.ஒருவழியாக அங்கு நடக்க வேண்டியவை முடித்து மணமக்களை ரிஷப்ஷன் செல்ல அனுமதித்தனர். சுரேஷின் அம்மா சுரேஷையூம் தீப்தியையும் வழிநடத்தி செல்ல மணமக்களை சூழ்ந்த வாரு குடும்பத்தினர் செல்ல, மதனும் கார்த்திகாவும் கடைசியாக பின்னால் வந்தனர். மணமக்கள் நடந்து வருவதை ரிஷப்ஷன் ஏரியாவில் அமர்ந்திருந்த விருந்தினர் பெரிய ஒஎல்இடி ஸ்க்ரீன்களில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது மதன் தன் கையில் இருந்த மொபைலில் இருந்த ஒரு அப்ளிகேஷனை ஓபன் செய்தான். அது கன்சோல் ஏரியாவில் சரணின் ஸ்பேர் லேப்டாப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் மதனின் ம்யூசிக் அப்ளிகேஷனுடன் மதன் க்லவுடில் இயக்கிக்கொண்டிருக்கும் வீபிஎன் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. மதன் ப்ளே லிஸ்டில் இருந்து ஏஆர்ஆர் சன் டிவிக்காக 1995 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக போட்டுக்கொடுத்த நாதஸ்வர இசை பிஜிஎம் இசைக்க செய்தான். முதலில் வந்த நாதஸ்வர இசையை கேட்டதும் கன்சோலில் அமர்ந்திருந்த சரண் மதன் இயக்கிக்கொண்டிருக்கும் லேப்டாப்பில் உள்ள ப்ளேலிஸ்டை பார்த்தான். ஆது மாறியிருந்ததை சரண் உணர்ந்தான். மதன் தன் மொபைல் மூலம் ப்ளேலிஸ்டை மாற்றியிருக்கிறார் என்று உணர்ந்து புன்னகைத்தபடியே தன் மிக்ஸிங்கை தொடர்ந்தான். அந்த நாதஸ்வர இசை டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்களில் ஒலித்தவுடன் வந்திருந்த விருந்தினர் அனைவரின் கவனமும் ஒஎல்இடி ஸ்க்ரீகளுக்கு திரும்பியது. அப்போது தீப்தியும் சுரேஷும் ரிஷப்ஷன் மேடைக்கு வருவதை எல்லோரும் திரையில் பார்த்தனர். பீஜிஎம்மின் இருபத்து ஐந்தாவது நொடியில் ஆரம்பிக்கும் பேஸ் இசை சுரேஷின் பார்ம் ஹவுசின் அனைத்து திசையிலும் எதிரொலிக்க அந்த இடமே வேறொரு உலகில் இருப்பதை போன்ற உணர்வை விருந்தினருக்கு ஏற்படுத்தியது. எல்லோரும் மணமக்கள் வரும் அழகையும் ஏஆர்ஆர் இசையையும் ஒன்று சேர ரசித்துக் கொண்டிருந்தனர். மதன் தன் கையில் எதையோ செய்தவுடன் இசை தொடங்கியதை உணர்ந்த கார்த்திகா மதனை பார்த்து சிறு புன்னகைத்தாள். முன்னே சென்று கொண்டிருக்கும் சுரேஷ், அந்த நாதஸ்வர இசையை மதன் தான் கச்சிதமாக அவர்கள் ரிஷப்ஷன் வரும்போது இசைக்க வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி அதை தீப்தியிடம் காதோரமாக கூறினான். அதை தீப்தி சுரேஷின் தாயாரிடம் நடந்துகொண்டே காதோரமாக கூறினாள். சுரேஷின் தாயார் மதன் எங்கே இருக்கின்றான் என்று பின்னால் பார்த்தார். மதனும் கார்த்திகாவும் பின்னால் நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்த சுரேஷின் தாயார் அவர்கள் இருவரையும் முன்னே வரச்சொன்னார். கார்த்திகாவும் மதனும் மனமக்களுக்கு பின் வந்து நின்றனர். ஒஎல்இடி ஸ்க்ரீனில் பார்த்துக்கொண்டிருந்த விருந்தினர்கள் மனமக்களுக்கு பின் வரும் இருவரும் யார் என்று வினவ தொடங்கி இருந்தனர். கயலின் அம்மாவும் மாமாவும் கார்த்திகாவையும் மதனையும் ஸ்கிரீனில் பார்த்தவுடன் புன்னகைத்தனர். மதன் தங்கையும் மதன் தங்கையின் குழந்தையுடன் அமர்ந்திருந்த மதன் தங்கையின் கணவரும் மதன் மற்றும் கார்த்திகா இருவரும் சேர்ந்து வருவதை பார்த்தவுடன் ‘அந்த பொண்ணு நம்ம ரூமுக்கு வந்த பொண்ணு தான?’ மதன் தங்கையின் கணவர் மதன் தங்கையிடம் கேட்க ‘அவங்க தான்’ என்று கூறினாள். ‘உன் அண்ணன் தாடி விட்டுக்கிட்டு திரிஞ்சதுக்கு காரணம் இவங்க தானா?’ மதன் தங்கையின் கணவர் கேட்க ‘நீங்க உங்க எக்ஸ் லவ்வர பார்த்தா கூட போய் நிப்பீங்களா?’ மதனின் தங்கை தன் கணவனை மடக்க ‘அந்த பொண்ணு எக்ஸ் லவ்வரா இல்லாம இருந்தா?’ மதன் தங்கையின் கணவர் மதன் தங்கையை பார்த்து கேட்க மதனின் தங்கைக்கு கார்த்திகா தான் மதன் மனதில் இருப்பவராக இருக்குமோ என்ற சந்தேகம் வலுவடைந்தது. மதனின் தங்கையும் அவள் கணவரும் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த மதனின் தாயார் ஒன்றும் புரியாமல் மதனின் தந்தையை பார்க்க, அவர் ஒன்றும் பேசாமல் மதனின் தாயாரை பார்த்தார்.

வேறு ஒரு டேபிலில் ‘அங்க பாத்தீங்களா?’ கார்த்திகாவின் தாயார் கார்த்திகாவின் தந்தையை பார்த்து கேட்க அவர் புன்னகைத்தார். ‘என்ன சிரிக்கிறீங்க, அப்ப உங்களுக்கு அவங்க ஒண்ணா இருக்கிறது சம்மதமா?’ கார்த்திகா அம்மா கேட்க, ‘ஏண்டி, எத்தன வாட்டி நான் கார்த்திய வீட்ல இருந்து வேலை பார்க்க சொல்லியிருப்பேன், பொண்ணு பார்க்க வரவங்களுக்கு வசதியா இருக்கும்னு தான் அவல வீட்ல இருந்து வேலை பார்க்க சொன்னேன், அப்பல்லாம் கேட்காதவ, அந்த சம்பவம் நடந்ததுல இருந்து வீட்ல இருந்து தான் வேல பார்குரா, ஆனா நான் பொண்ணு பார்க்க ஒருத்தன கூட கூட்டிட்டு வரல, அப்பவே உனக்கு தெரியல?’ கார்த்திகா அப்பா கூற, ‘அப்புறம் ஏன் அவள கொடுக்க மாட்டேன்னு அந்த பையன் கிட்ட சொன்னீங்க?’ கார்த்திகா அம்மா கேட்க ‘நீயும் புரிஞ்சுக்காம பேசாதடி, நான் கொடுக்க மாட்டேன்னு சொல்லலடி, அவன் ஏத்துக்கிட்டா மட்டும் போதுமா, அவன் பேமலி என் பொண்ண ஏத்துக்காம போட்டாங்கன்னா நாம எப்படி நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டு என் குடும்பம் உன்ன ஏத்துக்காம கஷ்டப்ப்டோமோ அப்படித்தான்டி அவங்களும் படுவாங்க, அவனுக்கு கொடுக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா அவன் குடும்பத்தோட சம்மதத்தோடத்தான் என் பொண்ன அவனுக்கு கொடுப்பேன். இதெல்லாம் அவனுக்கு சொல்றதுக்குல்ல அவன் அவசரப்பட்டுட்டான்’ கார்த்திகாவின் அப்பா கார்த்திகாவின் அம்மாவிடம் கூறினார். ‘தேவ இல்லாம ரெண்டு பேரும் சேர்ந்து என் பொண்ண அழ வெச்சீங்க’ கார்த்திகா அம்மா கார்த்திகா அப்பாவைப் பார்த்து கூற ‘லவ் பண்ணா எல்லாத்தையும் படனும் டீ’ கார்த்திகா அப்பா புன்னகையுடன் கூறினார்.

தீப்தியும் சுரேஷும் ரிஷப்ஷன் மேடைக்கு வந்தவுடன் பரிசு கொடுக்க நின்றிருந்த விருந்தினர்கள் மனமக்களுக்கு பரிசுப்பொருட்களை கொடுக்க தொடங்கினர். கார்த்திகா கயல் அம்மாவை பார்த்தவுடன் அங்கு சென்று விட்டாள். மதன் நேராக மிக்ஸிங் கன்சோல் டென்டிற்கு சென்றான். ‘நீங்கதான மாத்துனது?’ சரண் மதன் தன் மொபைல் மூலம் ப்ளேலிஸ்ட் மாற்றியதை சரண் கேட்டான். ‘உங்க பொண்ட்ரைவ் நீங்க கொடுக்கலைன்னாலும் நான் திருடிக்கிட்டு போகக்போறேன், உங்க பீஜிஎம் சொலக்‌ஷனெல்லாம் டாப் க்ளாஸ் ப்ரோ, அதுவும் கல்யாணம் பண்ணிக்க போர மாப்பிள்ளையும் பொண்ணும் நடந்து வரும்போது வந்த அந்த மியூசிக் அட்மாஸ்பியர் தூக்கி விட்டுச்சு ப்ரோ, எல்லாரும் ஒஎல்இடி ஸ்க்ரீனத்தான் பாத்துட்டு இருந்தாங்க, நீங்களும் உங்க எக்‌ஸும் ஸ்க்ரீன்ல வரும்போது என்னாலயே நம்ப முடியல, இவ்வளவு நேரம் என் கூட இருந்தவரா இப்படி இருக்காருன்னு ஆச்சரியமா இருந்துச்சு, இப்பவும் சொல்றேன், உங்க ரெண்டு பேருக்கும் பயங்கர கெமிஸ்ட்ரி ப்ரோ, நான் மட்டும் இல்ல, உங்கள ஸ்க்ரீன்ல பார்த்த எல்லோரும் அப்படித்தான் சொல்லுவாங்க பாருங்க’ சரண் மதனை பார்த்து கூற மதன் வெட்கத்துடன் புன்னகைத்தான். கார்த்திகாவின் பெற்றோர்கள் மனமக்களுக்கு பரிசு கொடுக்க மேடைக்கு வந்தனர், ஆனால் கார்த்திகா அவர்களுடன் மேடை ஏறவில்லை, ‘வாங்க சார். எங்க கார்த்திகா கூட வரல’ சுரேஷ் கார்த்திகாவின் பொற்றோர்களை பார்த்தவுடன் கேட்க ‘அவ கயல் அம்மா கிட்ட பேசிக்கிட்டு இருக்கா, எனிவே கங்க்ராட்ஸ் தம்பி, வாழ்த்துக்கள் தீப்தி’ கார்த்திகாவின் தந்தை கூறி கார்திகாவின் பெற்றோர்கள் தங்கள் கொண்டு வந்த பரிசை சுரேஷ் மற்றும் தீப்தியிடம் கொடுத்தனர். அவர்கள் கொடுப்பதை மதன் சரணின் மிக்‌ஸிங் கன்சோலில் கவனித்தான். அந்த சம்பவம் நடந்து முடிந்து இப்போதுதான் அவன் கார்த்திகாவின் தந்தையை பார்க்கின்றான். அவன் மனதில் குற்ற உணர்ச்சி மீண்டும் தலைதூக்கியது. சில நிமிடங்கள் கழித்து மதனின் தங்கையும் மதனின் பெற்றோர்களும் மேடைக்கு வந்தனர். ‘டேய் மருமகனே, நல்லா தூங்கினியா, எங்க உன் மாமன மேடைக்கு கூட்டிக்கிட்டு வரலையா’ சுரேஷ் மதன் தங்கையின் குழந்தையை பார்த்து கேட்க ‘அவன் இங்க தான் எங்கேயோ இருக்கான்’ மதனின் தங்கை கூறினாள். ‘ரொம்ப தேங்ஸ் பா, கல்யானத்துக்கு வந்ததுக்கு, எங்க நீங்க யாரும் வராம மதன மட்டும் அனுப்பி வைக்க போறீங்கன்னு இருந்தேன்’ சுரேஷ் மதனின் தந்தையை பார்த்து கூற ‘என் பொண்ணு கல்யாணத்துக்கு நீங்க குடும்பத்தோட வரும்போது, நாங்க வராம போயிடுவோமா, வாழ்த்துக்கள், அம்மா தீப்தி, இனிமே உன் அம்மாவ மட்டும் பாத்துக்காம மாமியாரையும் அம்மா மாதிரி பாத்துக்கணும்’ மதனின் தந்தை தீப்தியை பார்த்து கூற ‘இவ்வளவு நாள் அவ பாத்துக்காமலா இருந்தா, சுரேஷோட அம்மாவுக்கு ஏதாவது ஒன்னுன்னா அவதான் மொதல்ல போய் நின்னா’ மதனின் அம்மா மதன் அப்பாவிடம் தீப்தியை பற்றி பெருமையாக கூறும் போது தீப்தி அழகாக வெட்கப்பட்டாள்.

வந்திருந்த விருந்தினர்கள் பெரும்பாளானோர் பரிசு பொருட்களை கொடுத்து விட்டு பக்கத்தில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்றிருந்தனர். அப்போது கார்த்திகா மிக்ஸிங் கன்சோல் இருந்த இடத்துக்கு வந்தாள். கார்த்திகா வருவதை மதன் கவனிக்கவில்லை, அவன் தன் சாப்ட்வேர் இயங்கிக்கொண்டிருக்கும் லேப்டாப்பில் மூழ்கி இருந்தான், சரண் கார்த்திகாவை பார்த்ததும் ‘ப்ரோ அங்க பாருங்க’ என்று மதனிடம் கூற மதன் கார்த்திகா காத்திருப்பதை பார்த்தான். ‘நான் போய் கிப்ட் ஒன்னு கொடுத்துட்டு வந்துடரேன்’ மதன் சரனிடம் கூற ‘நீங்க ரெண்டுபேரும் உன்மையிலேயே எக்‌ஸ் லவ்வர்ஸ்தானா?’ சரன் கேட்க ‘நான் உன்கிட்ட அவ என்னோட எக்ஸ் ன்னு சொன்னேனா?’ மதன் சரணை பார்த்து புன்னகையுடன் கூற ‘ப்ரோ?? என்ன சொல்றீங்க? அப்ப’ சரண் சொல்லி முடிப்பதற்குள் மதன் அங்கிருந்து நகர்ந்தான். கார்த்திகாவும் மதனும் தங்களுக்கு பின்னால் யாரும் பரிசு கொடுக்க நிற்கவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு மேடை எறினர். கார்த்திகா வந்தவுடன் தீப்பியை கட்டிப்பிடித்துக்கொண்டாள். ‘இப்பதான் உங்க ரெண்டு பேருக்கும் இங்க வர தோணுச்சா, அப்டியே போட வேண்டியதுதானே’ சுரேஷ் இருவரையும் பார்த்து திட்டினான். ‘நாங்க எவ்வளவு நேரம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம், மத்தவங்க வெயிட் பண்ண கூடாதில்ல, எனிவே, ஹாப்பி மேரிட் லைப்’ கார்த்திகா சுரேஷிடமும் தீப்தியிடமும் தன் கொண்டு வந்த பரிசில் ஒன்று கொடுத்தாள். கார்த்திகா கொடுத்து முடிந்ததும் மதன் ‘உங்களுக்கு கங்க்ராட்ஸ் வேற சொல்லனுமா, என்ன பொறுத்தவரைக்கும் ஆல்ரெடி ஹஸ்பன்ட் அண்ட் வைஃப் மாதிரித்தான் இருந்தீங்க, இப்ப என்ன ஊர்ல இருக்கிறவங்களும் அப்படியே கூப்பிடப்போராங்க, அவ்வளவுதான், இந்தா புடி’ என்று இருவரையும் பார்த்து கூறிவிட்டு தன் கையில் இருந்த கிப்டை கொடுத்தான். ‘வாழ்த்துரதையும் திட்ராமாதிரியே சொல்றான்பாரு, நாதர்ஸ்’ சுரேஷ் தன் பங்கிற்கு மதனை திட்டினான். மதன் கொடுத்து முடித்ததும் கார்த்திகா மதனை பார்த்து கயலின் கிப்டை கொடுக்கலாமா என்று கேட்பதுபோல் பார்க்க, மதன் தன் கையில் இருந்த மொபைலை எடுத்து கயலுக்கு வீடியோ கால் செய்தான். அடுத்த முனையில் கயலும் குருவும் மொபைல் திரையில் வந்தனர். மதன் தன் முகத்தை காட்டாமல் கயல் மற்றும் குரு நேராக தீப்தியையும் சுரேஷையும் பார்க்கும்படி சொய்தான். ‘அடியே தீப்தி, என்னடி கழுத்துல, ஒரு நகைக்கடையே இருக்கு’ கயல் தன் பங்கிற்கு தீப்பியை ஓட்டினாள். ‘நீங்களும் ஓட்டாதிங்கக்கா’ தீப்தி கூற ‘அப்ப எனக்கு முன்னாடி யாராவது இத சொன்னாங்களா?’ கயல் கேட்க ‘அதான் கார்த்திகா அக்கா இருக்காங்களே’ என்று தீப்தி கூறியவுடன் மதன் பிடித்திருந்த மோபைலை கார்த்திகா பக்கம் திருப்பினான். ‘அடிப்பாவி எப்படி இப்படி எல்லாம் டிரஸ் பண்ண ஆரம்பிச்ச, உன்ன வந்து பேசிக்கறேன்’ கயல் கார்த்திகாவின் அழகை பார்த்து வியந்தாள். ‘யோவ் மொக்க, அப்படியே நம்ம பார்ட்னர் பக்கம் திருப்புங்க’ என்று குரு மதனுக்கு கூற மதனும் சுரேஷ் பக்கம் தன் மொபைலை திருப்பினான். ‘பார்ட்னர், நேரா பொட்டி படுக்கை எடுத்துட்டு இங்க வந்துடுங்க, உங்களுக்காக ஹனிமூனுக்கு தனி வீடு காத்துக்கிட்டு இருக்கு’ குரு கூற ‘ரெடி பண்ணி வைங்க பார்ட்னர், அங்கதான் வந்துக்கிட்டு இருக்கோம்’ சுரேஷ் கூற தீப்தி சுரேஷின் முகத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டாள். சுரேஷுக்கு அப்பொழுது ஒன்று தோன்றியது ‘மச்சி, கயலும் குருவும் பேசுறத அப்படியே பெரிய ஸ்க்ரீன்ல வரவழைக்க முடியுமா?’ சுரேஷ் மதனை பார்த்து கேட்க ‘மொபைல்ல இருக்குறது எப்படி இங்க இருக்குற ஏவில கொண்டு வர முடியும்?’ தீப்தி சுரேஷை சந்தேகமாக கேட்க ‘டோன்ட் அண்டர் எஸ்டிமேட் த பவர் ஆப் இன்ட்ரோவர்ட்ஸ் தீப்தீ’ என்று சுரேஷ் கூற, ‘அப்படின்னா’ என்று கார்த்திகா கேட்க ‘ஊமக்கோட்டானுங்கல சாதாரனமா எடை போடக்கூடாது கார்த்திகா’ கார்த்திகாவிடம் சொல்லிவிட்டு மதனை பார்த்து ‘என்னடா நான் சொன்னது கரெக்ட் தானே’ என்று கேட்டான். மதன் சுரேஷை சில நொடிகள் முறைத்துவிட்டு ‘கயல் ஒரு நிமிஷம் ஹோல்ட் போட்றேன்’ என்று கயலிடம் கூறி கயலின் காலை ஹோல்டில் வைத்துவிட்டு மதன் சரணுக்கு கால் செய்தான். ‘சரண், என்னோட லேப்டாப்ல இருந்து வர ஆடியோ ஸ்ட்ரீம ப்ராக் காஸ்ட் பண்ணு அப்படியே எக்ஸ்ட்ரா ஒரு வீடியோ ஸ்ட்ரீம் கூட வரும் அதையும் ப்ராட்காஸ்ட் பண்ணு’ என்று சரணிடம் கூறினான். அதன்படி சரணும் மதனின் சாப்ட்வேர் இயங்கிக்கொண்டிருக்கும் லேப்டாப்பில் இருந்து வந்த இரண்டு ஸ்ட்ரீம்களையும் மிக்‌ஸிங் கன்சோலில் ப்ராக்காஸ்ட் செய்யும்படி வைத்தான். உடனே மதனின் மொபைல் ஸ்கிரீன் நான்கு புறங்களிலும் வைக்கப்பட்டிருந்த ஒஎல்இடி ஸ்க்ரீன்களில் பெரிதாக தெரிந்தது. மதனின் சாப்ட்வேர் இயங்கிக்கொண்டிருக்கும் லேப்டாப்பில் இருந்த சர்வர் எப்படி மதன் மொபைலில் இயங்கிக்கொண்டிருக்கும் க்லைன்டின் கட்டளைக்கேற்ப ப்ளேலிஸ்டை மாற்றியதோ அதே வழியில் இப்போது மதனின் மொபைலில் இருந்து வந்துகொண்டிருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ ஸ்ட்ரீம்களை மிக்‌ஸிங் கன்சோலுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. ‘கயல் இப்ப நீங்க ரெண்டு பேரும் லைவ் ரிலேல இருக்கீங்க’ சுரேஷ் வீடியோ காலில் இருக்கும் கயலை பார்த்து கூறிய வார்த்தைளும் ப்ராட்காஸ்ட் ஆனது. அங்கு கயல் ஒன்றும் புரியாமல் ‘என்ன லைவ் ரிலே?’ என்று சுரேஷை பார்த்து கேட்க மதன் தன் கையில் இருந்த மொபைலை மெதுவாக ஒஎல்இடி ஸ்க்ரீன்கள் வைக்கப்பட்டிருந்த திசையை நோக்கி திருப்பினான். இவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருப்பதும் தானும் தன் கணவரும் பெரிய ஸ்க்ரீனில் தெரிவதையும் பார்த்த கயல் ‘அமேசிங், யாரு நம்ம மேட்னேன் வேலையா’ என்று கயல் கேட்க ‘வேற யாரு அவனே தான்’ என்று சுரேஷ் கூறினான். மேடையில் நடப்பது அப்படியே ப்ராட்காஸ்ட் ஆவதால் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பதை விருந்தினர்கள் எல்லோரும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். பப்பே பரிமாறப்பட்டு கொண்டிருக்கும் இடத்திலும் எல்லோரும் தங்கள் கையில் உணவை வைத்தபடி ஒஎல்இடி ஸ்க்ரீனில் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தனர். ‘சரி, அப்ப கொடுத்துடலாமா?’ என்று கார்த்திகா மதனை பார்த்து கேட்க மதனும் தலை அசைத்தான். கார்த்திகா வீட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு கார்த்திகா மதனிடம் முதன் முதலாக பேசியதால் மதன் மிகவும் மகிழ்ந்தான். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவள் தெரியாமல் அவனிடம் பேசிவிட்டாள் என்று எண்ணி தன் முகத்தில் வந்த சந்தோஷத்தை அடக்கினான். கார்த்திகா, தீப்தி, சுரேஷ் மற்றும் மதன் எல்லோரும் தெரியும்படி மதன் தன் மொபைலை தூக்கிப் பிடித்துக் கொண்டே கயல் அனுப்பிய கிப்டை கார்த்திகாவும் மதனும் சேர்ந்தவாறு மனமக்களிடம் வழங்கினர். ‘விஷ் யூ ஹேப்பி மேரிட் லைப்’ என்று கயலும் குருவும் ஒருசேர மொபைலில் வாழ்த்து தெரிவித்தது அங்கிருந்த ஒஎல்இடி ஸ்க்ரீனில் அழகாய் தெரிந்தது, விருந்தினர்கள் எல்லோர் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது.

‘தீப்தி, அந்த கிப்ட் ஸ்ப்பெஷலி பார் யூ’ கயல் கூறியவுடன் ‘அதென்ன ஸ்பெஷல், ஓப்பன் பண்ணு பாப்போம்’ என்று சுரேஷ் கூறினான். ‘லேடிஸ் சம்பந்தப்பட்டது ஏதாவது இருக்கப்போகுதுடா, லைவ் ரிலே வேர போய்க்கிட்டு இருக்கு’ மதன் கூற விருந்தினர்கள் அப்படி என்ன கிப்டாக இருக்கும் என்று ஆர்வத்துடன் பார்த்தனர். ‘சென்சார் பன்ற அளவுக்கு சீக்ரெட் இல்லை’ என்று கயல் கூற ‘அப்ப உடனே பிரிடி’ என்று சுரேஷ் தீப்பியிடம் கூறினான். தீப்தியும் அந்த கிப்டை பிரித்தாள், அது ஓர் அழகிய தங்க காசுமாலை, அதில் பதினாறு லஷ்மி உருவம் பொதித்த தங்க காசுகள் கோற்கப்பட்டிருந்தன. அதை பார்த்ததும் தீப்தி சிரித்தாள், ‘அக்கா உங்க லொள்ளு பார்டருக்கு போனாலும் போகாதே, அங்கிருந்து கொடுத்து விட்டு கலாய்க்கிறீங்க’ என்று தீப்தி கூறினாள். ‘இருந்தாலும் பதினாறு லஷ்மி தாங்காதுங்க, ஒன்னு ரெண்டு ஆம்பள புள்ளைங்கள பாத்துக்குறோம்’ சுரேஷ் தன் பங்கிற்கு கயலிடம் புலம்பினான். ‘அந்த காசு மாலைய அப்படியே திருப்பி பாருங்கள்’ என்று கயல் கூற, தீப்தி காசு மாலையை திருப்பினாள். அப்போது பதினாறு லஷ்மி உருவத்திற்கு பதிலாக பதினாறு முருகர் உருவங்கள் இருந்தன. ‘உங்களுக்கு எத்தன லஷ்மி வேணுமோ அத்தன லஷ்மி வெச்சிக்கோங்க, எத்தன முருகர் வேணுமோ அத்தன முருகர் வெச்சிக்கோங்க, ஆனா மொத்தம் பதினாறு வரனும், என்னடி தீப்தி கணக்கு கரெக்டுதான?’ கயல் கூறியவுடன் தீப்தி ‘அக்கா லைவ் ரிலேல இருக்கீங்கக்கா, பெரியவங்க எல்லாம் பாத்துட்டு இருக்காங்க அக்கா’ வெட்கத்துடன் சிரித்த படி கூறினாள். ‘அடிங்கோ, அவங்க காலங்காலமா சொன்னது தான் நானும் சொல்லியிருக்கேன், பதினாறு பெத்துக்கோன்னு, அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாங்க’ கயல் சிரித்தபடி கூறினாள். கயலின் அம்மாவும் மாமாவும் நடப்பதை பார்த்து சிரித்தபடி இருந்தனர். ‘சுரேஷ், உங்க மேரேஜ நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்’ என்று கயல் சுரேஷிடம் கூறிவிட்டு ‘தேங்ஸ் மதன், அட்லீஸ்ட் எல்லோறையும் நேர்ல பார்க்க வச்சிட்டீங்க’ கயல் மதனுக்கும் நன்றி தெரிவித்தாள். ‘இருங்க கட் பண்ணிடாதீங்க, உங்க ப்ரண்ட் கார்த்திகா பாடுறத கேட்காம போரிங்களே’ சுரேஷ் கார்த்திகாவை பார்த்துக்கொண்டே கயலிடம் கூற ‘ஆமாமா, அவ வாய்ஸ் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு’ கயலும் ஆர்வத்துடன் இருந்தாள். ‘கிப்ட் கொடுக்க வந்தது ஒரு குத்தமா?’ கார்த்திகா சுரேஷை பார்த்து கேட்க ‘அக்கா எங்களுக்காக பாடுங்கக்கா, வேனும்னா கம்பெனிக்கு மதன் அண்ணாவையும் பாட சொல்றேன், என்ன மதன் அண்ணா, ரெண்டு பேரும் சேர்ந்து பாட போரீங்களா, இல்ல தனித்தனியாகவா?’ தீப்தி மதனை கோர்த்து விட்டாள். மதனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை, ‘ரெண்டு பேருக்கும் கரெக்டா டைம் பாத்து செஞ்சு விடுறதே பொழப்பு, இல்ல?’ மதன் இருவரையும் பார்த்து கேட்டான். ‘கேட்டதுக்கு பதில் சொல்றா, சோலோவா? இல்ல டூயட்டா?’ சுரேஷ் கேட்க, ‘முதல்ல அவங்க பாடட்டும்’ மதன் ஒருவழியாக ஒத்துக்கொண்டான். ‘ஒக்கே கார்த்திகா நீங்க மொதல்ல ஸ்டார்ட் பண்ணுங்க’ சுரேஷ் கூற கார்த்திகா சற்று தயக்கத்துடன் ‘வாய்ஸ் மட்டுமா?’ கேட்க ‘மச்சான் இருக்கும்போது மியூசிக்கா பஞ்சம், இந்தாங்க முதல்ல அவன் போன பிடிங்க’ என்று சுரேஷ் மதனின் மொபைலை அவனிடம் இருந்து வாங்கி கார்த்திகாவிடம் கொடுத்தான். ‘டிப்ரஷன்ல இருக்கும் போது சாப்ட்வேர் ஒன்னு ரெடி பண்ணான், அது மூலமாத்தான் அனேகமா இப்ப நாம பேசுறத ப்ராட்காஸ்ட் பண்ண வெச்சிக்கிட்டு இருக்கான். அதுல கரோக்கே மோட் ஒன்னு இருக்கு, இந்த சர்ச் பட்டனை க்ளிக் பண்ணிட்டு உங்களுக்கு பிடிச்ச சாங்ல இருந்து ஒரு ரெண்டு மூணு வார்த்தை சொல்லுங்க, உடனே உங்களுக்கு பிடிச்ச பாட்ட தேடி கண்டுபிடித்து அந்த பாட்ட லாக் பண்ணும், அப்புறம் இந்த கரோக்கே பட்டனை பிரஸ் பண்ணா, மியூசிக் மட்டும் வரும், ஹியூமன் வாய்ஸ் பில்டர் பண்ணிடும்’ சுரேஷ் கார்த்திகாவிடம் விளக்கமாக கூறினான். கார்த்திகா சில வினாடிகள் அமைதியானாள். ‘ஸ்டார்ட் பண்ணலாமா’ என்று கார்த்திகா கேட்க தீப்தியும் சுரேஷும் ஆம் என்று தலையை அசைத்தனர். கையில் இருந்த மதனின் மொபைலில் கயலும் குருவும் தன்னை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை கார்த்திகா கண்டு புன்னகைத்தாள். கார்த்திகா தன் சாப்ட்வேர் இயக்க தயாராவதை கண்டு தான் எழுதிய சாப்ட்வேர் சொதப்பாமல் இருக்க வேண்டும் அதுவும் தன் மனதுக்கு பிடித்தவள் இயக்கப்போகும் போது எந்த பிழையும் ஏற்படக்கூடாது என்று மதன் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தான். கார்த்திகா மதனின் க்ளைண்ட் அப்ளிகேஷனில் இருந்த சர்ச் பட்டனை அழுத்த அது வாய்சுக்கு காத்திருந்தது, அப்போது கார்த்திகா ‘ஆற்றங்கரை புதரில் சிக்கி ஆடும் நுரை போலே’ என்று காதலன் படத்தில் வரும் காற்றுக்குதிரையிலே பாடலில் வரும் வரிகளை கூறினாள். உடனே அந்த பாடல் அப்ளிகேஷனில் முதல் வரிசையில் வந்து நின்றது, அதன் அருகில் ஒரு கரோக்கே பட்டன் இருந்தது, அதை அழுத்தியதும் அந்த பாடலில் வரும் இசை தொடங்கியது. ஏஆர்ஆரின் பேஸ் கிட்டாரும் பியானோவும் சுரேஷ் பார்ம் ஹவுசை நிரப்பியது. விருந்தினர்கள் மட்டுமல்லாமல் சாப்பிடும் இடத்தில் பரிமாறிக்கொண்டு இருந்த வேலையாட்களும் வந்த இசையை கேட்டு கார்த்திகாவை ஒஎல்இடி ஸ்கிரீனில் பார்க்க தொடங்கினர். ஒஎல்இடி ஸ்க்ரீன்களில் கார்த்திகாவின் முகம் மிகவும் அருகே தெரிந்ததால் சரண் மதனின் மொபைலில் இருந்து வரும் வீடியோ ஸ்ட்ரீமை மட்டும் எடுத்துவிட்டு ரிஷப்ஷன் மேடையை போக்கஸ் செய்துகொண்டிருக்கும் கேமராமேன்களிடத்தில் இருந்து வந்த ஸ்ட்ரீம்களை பயன்படுத்த ஆரம்பித்தான். மேடையில் இருந்த கார்த்திகா, தீப்தி, சுரேஷ் மற்றும் மதன் நால்வரும் பெரிய திரைகளில் நன்றாக தெரிந்தனர். ப்ராட்காஸ்ட் செய்யப்பட்டு கொண்டிருந்த வீடியோ ஸ்ட்ரீம் ஸ்விட்ச் ஆனதை மதனும் கவனித்தான். ‘காற்றுக் குதிரையிலே என் கார்குழல் தூது விட்டேன்’ என்று கார்த்திகா பாடியவுடன் அடுத்தடுத்து வந்த இசை டால்பி சவுண்ட் சிஸ்டத்தில் எதிரொலித்தவுடன் அங்கிருந்தவர்களுக்கு மெய்சிலிர்த்தது. ‘காற்றுக் குதிரையிலே என் கார்குழல் தூது விட்டேன்’ என்று கார்த்திகா இரண்டாவதாக பாடும்போது மதனை பார்த்தாள். கார்த்திகா தன்னிடம் பேச காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்கிறாள் என்று மதன் உணர்ந்தான். ‘ஆற்றங்கரை புதரில் சிக்கி ஆடும் நுரை போலே’ என்று பாடியவுடன் மதன் கார்த்திகாவை பார்த்தான். தன்னால்தான் கார்த்திகா பல இன்னல்களுக்கு ஆளானாள் என்று நினைத்து மதன் மிகவும் வேதனையுடன் கார்த்திகாவிடம் மன்னிப்பு கேட்பது போல் பார்த்தான். கார்த்திகாவும் அவன் என்ன என்னுகிறான் என்று உணர்ந்தவுடன் அவள் கண்களில் நீர் சுரந்தது. கார்த்திகா பாடி முடித்ததும் தீப்தி கார்த்திகாவை கட்டிப்பிடித்துக் கொண்டாள். அங்கிருந்தவர்கள் அனைவரும் கார்த்திகாவை கைதட்டி பாராட்ட தொடங்கினர். சுரேஷ் மதன் இருவரும் கார்த்திகாவால் இப்படியும் பாட முடியுமா என்று வியந்து பாராட்டி கைதட்டினர். தூரத்தில் அமர்ந்திருந்த மதன் தங்கையின் கணவர் மதன் தங்கையிடம் ‘எனக்கு ஒரு சந்தேகம்’ கூறியவுடன் மதனின் தங்கையும் ‘எனக்கும் அதே சந்தேகம் தான்’ என்று முடித்தாள். கார்த்திகா மதனின் மொபலை மதனிடம் கொடுத்தாள். இப்போது மதன் பாட வேண்டிய தருணம். மதன் மவுனமானான். சில நொடிகள் கழித்து ‘இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும், அவள் பாதச் சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்’ என்று கூறியவுடன் அவன் எழுதிய அப்ளிகேஷனில் மேயாத மான் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வரும் மேகமோ அவள் பாடல் முதலாவதாக வந்து நின்றது. அதுவரை பேசிக்கொண்டிருந்த சிலர் மதன் கூறிய வார்தைகளால் கவரப்பட்டு அவன் என்ன பாட போகிறான் என்று ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தனர். மதன் கரோக்கே பட்டனை அழுத்தினான். சந்தோஷ் நாராயணனின் மெல்லிய கீபோர்ட் இசை அழகாய் எல்லோர் மனதிலும் படர ஆரம்பித்தது. ‘மேகமோ அவள், மாயப்பூ திரல்’ என்று மதன் பாட தொடங்கியவுடன் கார்த்திகா தன்னைத்தான் மதன் நினைத்து பாடுகின்றான் என்று உணர்ந்தாள். பாடலின் மெல்லிய இசையால் மதனின் ஒவ்வொரு வார்த்தைகளும் கேட்பவர்களுக்கு தெளிவாய் புரிந்தது, பலரும் மதன் பாடுவதை பார்த்து மதன் தன் காதலியை நினைத்து பாடுகின்றான் என்று நினைத்தனர். ‘உன் நியாபகம் தீயிட, விரகாயிரம் வாங்கினேன், அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன்’ என்று உருக்கமுடன் பாடும்பொழுது அவனை அறியாமல் அவன் கண்கள் கலங்கின. மதனின் மொபைல் அவன் முகத்தின் அருகில் இருந்ததால் கயலும் குருவும் மதனின் உணர்வுகளை தெளிவாக கண்டனர். அதுவரை தலைகுனிந்து இருந்த கார்த்திகா மதனை பார்த்தாள். அவன் கண்கள் கலங்கியது கண்டு அவளும் கலங்கினாள். மதன் பாடி முடித்தவுடன் சுரேஷை பார்த்து ‘சாரிடா, சந்தோஷமான நேரத்தில் தேவையில்லாம’ என்று கண்கள் கலங்கியவாறு சொல்லி முடிப்பதற்குள் சுரேஷ் மதனை கட்டித்தழுவினான். மதன் தன் கண்களை யாரும் பார்க்காதவாறு துடைத்துக்கொண்டான். அங்கிருந்த எல்லோரும் எழுந்து நின்று மதனின் பாடும் திறனை பாராட்டினர். கார்த்திகாவால் அவள் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை இருந்தாலும் மேடையில் எல்லோரும் கவனிக்கின்றனர் என்று உணர்ந்து கண்ணீரை அடக்க கஷ்டப்பட்டு கொண்டிருந்தாள். அதை கவனித்த தீப்தி கார்த்திகாவின் இடது கையை தன் இரு கைகளால் பிடித்து கவலைபடாதே அக்கா என்பது போல் பார்த்தாள்.

ஒருவழியாக கைதட்டல்கள் நின்றது. மதன் கயல் மற்றும் குரு வீடியோ காலில் இருந்த அப்ளிக்கேஷனை பொரிது படுத்தினான். இதை கவனித்த சரண் உடனே வீடியோ ஸ்ட்ரீமை மதன் மொபைலுக்கு மாற்றினான். கயலும் குருவும் ஒஎல்இடி ஸ்க்ரீன்களில் தோன்றினர். கயல் மதனை பார்த்து ‘மறுபடியும் அவளை அழ வச்சிட்டீங்க இல்ல?’ கூற எல்லோருக்கும் கயல் மதனின் காதலியை பற்றித்தான் கூறுகின்றாள் என்று உனர்ந்தனர். ‘அவங்கதான் என்ன மொதல்ல அழவச்சாங்க’ என்று மதன் கார்த்திகா முதலில் பாடியதை சுட்டிக்காட்டினான். ‘வாட் கேன் ஐ சே, இனிமே அவளுக்கு மட்டும் இல்லாம உங்களுக்கும் எல்லாம் நல்லது நடக்கனும்னு கடவுள்ட சேர்த்து வேண்டிக்கிறேன்’ கயல் கூற ‘என்ன இருந்தாலும் உங்க ப்ரண்டுக்குத்தான் பர்ஸ்ட் ப்ரியாரிட்டி, இல்ல?’ மதன் கேட்க ‘ஆமா, அவதான் எனக்கு மொதல்ல, நீங்க இரண்டாவது ப்ரீயாரிட்டிதான்’ கயல் புன்னகையுடன் கூறினாள். கவனித்துக்கொண்டிருந்த விருந்தினர்களும் மற்றவர்களும் மேடையில் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் கார்த்திகாவின் பெற்றோருக்கும், கயலின் அம்மாவிற்கும், சுரேஷின் அம்மாவிற்கும் கயலும் மதனும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று நன்றாக புரிந்தது. மதனின் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் அங்கு என்ன நடக்கின்றது என்று ஓரளவிற்கு புரிந்தது. மதனின் தங்கை மதனின் அப்பாவை பார்க்க அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் மேடையை பார்த்துக்கொண்டிருந்தார்.

‘தேங்க்ஸ் சுரேஷ் அண்ட் தீப்தி பார் திஸ் மெமரிஸ், மறக்கமுடியாத எக்ஸ்பீரியன்ஸ், நேர்ல பார்போம்’ கயல் சுரேஷை பார்த்து கூறினாள். ‘யோவ் பார்ட்னர். இதோ கிளம்பி வந்துகிட்டே இருக்கோம்’ சுரேஷ் குருவிடம் கூற ‘சீக்கிரம் வாங்க பார்ட்னர் எல்லாம் ரெடியா இருக்கு’ குருவும் கூறினான். கயலும் குருவும் நன்றி சொல்லிவிட்டு வீடியோ காலில் இருந்து விடைபெற்றனர். கார்த்திகாவும் தீப்தியின் கைகளையும் சுரேஷின் கைகளையும் குலுக்கிவிட்டு ‘ஹாப்பி மேரிட் லைப்’ என்று சொல்லிவிட்டு உடனே மேடையில் இருந்து கீழே இறங்க தயாரானாள். அந்த வார்த்தைகளை கூறும்போது அவள் குரல் உடைந்து காணப்பட்டது. கார்த்திகா கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். சுரேஷ் மதனை பார்க்க மதன் சுரேஷை பார்த்தான். கார்த்திகா கீழே இறங்கி தன் பெற்றோரிடம் போகாமல் ரிஷப்ஷன் ஏரியாவை விட்டு என்ட்ரன்ஸிற்கு நடப்பதை மதன் கவனித்தான். மதனுக்கு கார்த்திகா ஏதோ தவறு செய்ய போகிறாள் என்று தோன்றியது. உடனே மதனும் கார்த்திகா போகின்ற திசையில் கீழே இறங்கி சென்றான். தீப்தி கார்த்திகாவும் மதனும் சென்றதை பார்த்து ‘என்னடா’ என்று சுரேஷிடம் கேட்க ‘அதான் பின்னாடி போறான்ல, ஒன்னும் ஆகாது பயப்படாதே’ என்று சுரேஷ் தைரியத்தை கொடுத்தான்.

கார்த்திகா பார்ம் ஹவுஸ் எண்ட்ரன்ஸ் நோக்கி வேகமாக நடந்தாள். வழியில் பார்ப்பவர்கள் கார்த்திகாவை பாராட்டினர். தன் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு அவர்களின் பாராட்டை பெற்ற படி கார்த்திகா நடந்தாள். கார் பார்க்கிங் ஏரியாவில் பலர் கார்த்திகாவை பார்த்து பாராட்டுக்களை தெரிவித்தனர். அவற்றை பெற்றுக்கொண்டு கார்த்திகா கார் பார்க்கிங் ஏரியாவை கடந்து சென்றாள். நீண்ட சவுக்கு மரங்களை கடக்கும் போது கார்த்திகாவின் மனம் போராட்டக்களத்தில் இருந்தது. என்ட்ரன்ஸ் வந்தவுடன் அங்கு இருந்த காவலர்கள் கார்த்திகாவை பாராட்டினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு கார்த்திகா வெளியில் வந்தாள். அவளின் இடது பக்கம் ஈசிஆர் நெடுஞ்சாலை செல்லும் வழி, வலது பக்கம் வங்கக்கடல், கார்த்திகா கடலை நோக்கி வேகமாக நடந்தாள். மதனும் கார்த்திகாவை பின் தொடர்ந்து பார்ம் ஹவுசின் என்ட்ரன்ஸ் வந்தடைந்தான். அவனும் பலரின் பாராட்டுக்களை பெற்ற வாரே அங்கு வந்திருந்தான். என்ட்ரன்ஸில் இருந்த காவலர்கள் மதனை பாராட்டி கொண்டிருந்தனர். ஒருவழியாக மதன் பார்ம் ஹவுஸ் விட்டு வெளியே வந்தான். ஒரு காவலரிடம் ‘அண்ணா, எனக்கு முன்னாடி ஒருத்தர் பாடினாங்கல்ல, அவங்க இங்க வந்தாங்களா? எந்த பக்கம் போனாங்க?’ என்று மதன் கேட்க ‘பீச் பக்கம் போணாங்கப்பா? ஏம்பா ஏதாவது பிரச்சனையா?’ என்று அந்த காவலர் கேட்டார். ‘முப்பது நிமிஷத்துல நாங்க ரெண்டு பேரும் ரிட்டர்ன் ஆகலைன்னா கொஞ்சம் கல்யாண மாப்பிள்ளை கிட்ட இன்பார்ம் பண்ணுங்கன்னா’ என்று மதன் அந்த காவலரிடம் கூறிவிட்டு கார்த்திகா சென்ற வழியில் ஓடினான். காவலர் ஒருவித குழப்பத்துடன் மதன் செல்வதை கவனித்தார்.

கடற்கரையின் ஆரம்பத்தில் ஒரே ஒரு மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது, சுற்றிலும் யாரும் இல்லை, நிலவின் வெளிச்சம் கடலில் மிதந்து கொண்டிருந்தது. கார்த்திகா நேராக கடல் நோக்கி வேகமாக ஓடினாள். அந்த ஒரே ஒரு மின்விளக்கின் வெளிச்சத்தால் வந்த கார்த்திகாவின் பிம்பம் அவலுக்கு முன்னால் கடல் நோக்கி ஓடியது. அந்த பிம்பம் கடலுக்குள் செல்லும் போது வேறொரு பிம்பமும் பின்னால் வந்தது. கார்த்திகா சட்டென்று நின்றாள். பின்னால் யாரோ ஒருவர் இருக்கின்றார் என்று உணர்ந்து சற்று நிதானமாக திரும்பினாள். அங்கு மதன் தன் கைகளை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். கார்த்திகா மதனை பார்த்துவிட்டு மீண்டும் கடல் பார்த்தவாரு திரும்பிக்கொண்டாள். சில வினாடிகள் அங்கே எதுவும் அசையவில்லை, அலைகளை தவிர. ‘எதுக்கு இங்க வந்தீங்க?’ கார்த்திகா கடல் நோக்கி பார்த்தபடி மதனை கேட்க ‘இதே கேள்விய உங்களிட்ட கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்’ மதன் குதர்கமாக கேட்க கார்த்திகாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது அடக்கிக் கொண்டாள். ‘நான் சாகப்போறேன்’ என்று கார்த்திகா கூற ‘உங்க வீட்ல, நல்ல விஷயம் செய்றதுக்கு முன்னாடி நேரம் காலம் பாக்க மாட்டீங்களா, உங்க அப்பாதான் கம்யூனிஸ்டுன்னா உங்க அம்மாவாச்சும் பொண்ணுகிட்ட தற்கொலை பண்ணிக்க நல்ல நேரம் எதுன்னு சொல்லிக்கொடுத்திருக்கவேனாமா?’ மதன் வேண்டுமென்றே கார்த்திகாவை சீண்டினான். கார்த்திகா கோபத்துடன் மதன் அருகில் வந்து நின்றாள். ‘இன்னொரு முறை என் அப்பா அம்மாவை இழுத்த, கண்டிப்பா செருப்பால அடி வாங்குவ’ கார்த்திகா பொங்கினாள். ‘அவ்வளவு பாசம் இருக்குறவ கடல் கிட்ட வரதுக்கு முன்னாடி அவங்கல நெனச்சு பார்திருக்கனும்ல?’ மதன் எதிர் கேள்வி கேட்டான். கார்த்திகா மதனை பார்த்தவாறு இருந்தாள். சற்று கோபம் தணிந்தது. அலைகள் வந்து போய் கொண்டிருக்கும் இடத்தில் அலைகள் தொடாதவாறு ஒரு இடத்தில் போய் அமர்ந்தாள். மதனும் அவள் அருகில் போய் அமர்ந்தான். கார்த்திகா கைகளை தன் கால் முட்டிகளின் மேல் வைத்துக்கொண்டு தன் முகத்தை கைகளினிடையே குனிந்து வைத்துக் கொண்டு அழுதாள். மதன் எதுவும் பேசாமல் அவள் அருகில் அமர்ந்து கையில் கிடைக்கும் சிறு சங்குகளை எடுத்து கடலில் போட்டுக் கொண்டிருந்தான். கார்த்திகா சில நிமிடங்கள் அழுது விட்டு கண்களை துடைத்துக் கொண்டு மதனை பார்த்தாள். அவன் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சிறு சங்குகளை எடுத்து போட்டுக் கொண்டிருந்தான். ‘பேச்சுக்காவது ஏன் அழர, அழாதன்னு சொல்லலாம்ல?’ கார்த்திகா கண்களை துடைத்துக் கொண்டு மதனை பார்த்து கேட்டாள். ‘நம்ம மூலை ஏமோஷன்ச கன்ரோல் பண்ண நிறைய செக்பான்ட்ஸ் வெச்சிருக்காம், அத எல்லாத்தையும் ஒடச்சிக்கிட்டு வரதுதான் அழுகயாம், அந்த அழுகை நமக்குள்ள இருக்குறத விட வெளிய வந்துட்டா நல்லதாம். இண்டர்நெட்ல யாரோ ஒரு சைக்காலஜிட் எழுதினத படிச்சேன்’ மதன் கிண்டலடித்தான். இதை கேட்டதும் பக்கத்தில் இருந்த கார்த்திகா சற்று பெரிய கல்லை எடுத்து மதன் மீது வீச முயன்றாள். ‘அது பெரிய கல், சின்னதா எடு’ மதன் கார்த்திகா கல்லால் அடிக்க வருவதை பார்த்து நகர்ந்து விட்டான். கார்த்திகாவின் மனது அமைதி அடைந்தது. மதன் அவள் பக்கத்தில் இருந்தது அவளுக்கு ஒரு வித அனுபவத்தை கொடுத்தது. அவன் பேசும் பைத்தியக்காரத்தனத்தை மீண்டும் அவள் ரசிக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாள். கார்த்திகா மீண்டும் கடலை பார்த்தவாறு அமர்ந்தாள். மதன் மீண்டும் கார்த்திகாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

‘எதுக்கு கயல் கிட்ட அப்படி சொன்ன?’ கார்த்திகா மதனிடம் கேட்க ‘நீதான என்ன இன்னைக்கு முதலில் அழவச்ச? உன்னை யாரு அந்த பாட்டு பாட சொன்னது? நீ என்ன பாத்து பாடும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?’ மதன் தன் மனதில் இருந்ததை கூறினான். அதற்கு கார்த்திகா ‘நீ பாடும் போது என்னால அங்க நிக்க முடியல, ஏந்தான் பசங்க லவ் பெயிலியருக்கு மட்டும் இந்த பாட்டு எழுதுறவங்க இப்படி எழுதுறாங்களோ’ கார்த்திகா வருத்தப்பட்டாள். ‘ஏன் இந்த முடிவுக்கு வந்த?’ மதன் கார்த்திகாவை பார்த்து கேட்டான். ‘என்ன வேற என்ன பண்ண சொல்ற, உன்னோட இருந்ததை என்னால மறக்க முடியல, என் அப்பா அம்மாவ விட்டுட்டும் என்னால வர முடியால, எங்க வீட்லயும் எனக்கு வயசாகிட்டே போகுது இன்னும் கல்யாணம் ஆகலையேன்னு ரொம்ப கஷ்டப்பட்ராங்க, எனக்கும் உன்ன பிரிஞ்சதுல இருந்து நார்மலா இருக்க முடியல, இதெல்லாம் யோசிக்குறப்போ பேசாம செத்துடலாம்னு தோனுச்சு’ கார்த்திகா கூற மதன் அமைதியாக கார்த்திகாவை பார்த்தான். சில வினாடிகள் கார்த்திகா எதுவும் கூறாமல் கடலை பார்த்துக்கொண்டிருந்தாள். ‘நான் செத்திருந்தா என்ன பண்ணி இருப்ப?’ கார்த்திகா கடலை பார்த்தவாறே மதனிடம் கேட்க ‘நானும் செத்திருப்பேன்’ மதனும் கடலை பார்த்தவாறே கூறினான். ‘காதலுக்காக உயிரை விடுவது ஸ்டுப்பிடிட்டின்னு சொன்ன மதன் எங்க போனாரு?’ கார்த்திகா கேட்க ‘இப்பவும் அதைத்தான் சொல்றேன், காதலுக்காக உயிரை விடுவது ஸ்டுப்பிடிட்டின்னு, ஆனா என்னால ஒரு பொண்ணு தன் உயிர விடுரான்னா அவளுக்காக நான் என் உயிரை விடுவது தான நியாயம். எனக்கு தெரிஞ்சு 80ஸ் 90ஸ்ல உயிரை விட்ட லவ்வர்ஸ் எல்லாம் இப்படித்தான் முடிவு எடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்’ மதன் கூறினான். மதன் சொன்னவுடன் கார்த்திகா மதனை பார்த்தாள், மதன் சிரித்தபடி கார்த்திகாவை பார்த்தான். சில வினாடிகள் இருவரும் எதுவும் பேசாமல் கடல் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். ‘என் வீட்ல நீயும் நானும் சேர்ந்து படம் பார்த்ததை என்னால மறக்கவே முடியல, நீ வேர பிரிஞ்சு போய்டியா, அந்த குணா படம் என்ன போட்டு கொண்ணு கிட்டு இருந்துச்சு. உன்ன மிஸ் பண்ணிட்டோமேன்னு டெய்லி உள்ளுக்குள்ள அழுதுக்கிட்டு இருந்தேன், அப்பத்தான் ஆபீஸ்ல ஒரு இன்சிடென்ட் நடந்துச்சு’ கார்த்திகா கூறி முடிப்பதற்குள் ‘தெரியும், டீம் லீட் ஆக்கிட்டாங்களாமே’ மதன் கூற ‘யாரு தீப்தியா?’ கார்த்திகா கேட்க ‘கயல், அதுமட்டுமில்லாம உங்க அப்பா யாருன்னு சொன்னாங்க’ மதன் கூறினான். ‘அவகிட்ட நான் சொல்லவேனான்டீன்னு சொல்லி இருந்தேன்’ கார்த்திகா கூற ‘அவங்க சொன்னதுனால தான் உன் குடும்பத்த பத்தி எனக்கு தெரிய வந்துச்சு. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு புரிஞ்சது. உன் அப்பாவ பார்த்தா மொதல்ல அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும்னு இருக்கேன்’ மதன் கூறினான். ‘கயல் சொன்னதால தான் என் நம்பர ஆபீஸ் இன்ப்ரால நுழைஞ்சு எடுத்தியா?’ கார்த்திகா கேட்க ‘உன்கிட்ட அடி வாங்கிட்டு ரிட்டர்ன் வரும்போதே தீப்தியும் சுரேஷும் நம்பர் இருக்கான்னு கேட்டாங்க, உன் நம்பர் அப்ப என்கிட்ட இல்ல, அதுவே எனக்கு கொஞ்சம் உருத்தலா இருந்துச்சு. அவங்க உன் நம்பர கொடுத்து என்ன பேச சொன்னாங்க, நான் வேணாம் உங்க மூணு பேருக்குள்ள இருக்குற ப்ரண்ஷிப் என்னால கெட வேணாம்னு சொல்லிட்டேன். ஆபீஸ் இன்ப்ராக்குள்ள நுழைஞ்சது தற்செயலா நடந்ததுதான். உன் நம்பர எடுக்கனும்னு நுழையல, உள்ள போக போக உன் நம்பர எடுக்க வாய்ப்பு கெடச்சது, எடுத்துட்டேன்’ மதன் விளக்கமாக கூறினான். ‘சிஐஎஸ்ஓ ஸ்க்ரீன்ல வந்தப்ப எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அவங்க உன்ன சரண்டர் ஆக சொல்லியிருந்தா கண்டிப்பா நீ போய் சரண்டர் ஆயிருப்ப, என்னலத்தான உனக்கு அப்படி நடக்க போகுதுன்னு யோசிக்க யோசிக்க அழுகையா வந்துச்சு’ கார்த்திகா மதனிடம் கூறினாள். மதன் எதுவும் பேசவில்லை, மீண்டும் இருவரும் மவுனமானார்கள். ‘உன் அப்பா ஆசைப்பட்டபடி வீட்ல இருந்து வேலை பார்க்க ஆரம்பிச்சிட்ட, பொண்ணு பாக்க வந்தாங்களா?’ மதன் கார்த்திகாவை கேட்க ‘என்ன பொன்னு பாக்க வற்றது இருக்கட்டும், நீ பொண்னு பாக்க போனியாமே? என் கிட்ட சொன்ன அதே டைலாக்க உன் அம்மாகிட்டயும் சொன்னியாம்?’ கார்த்திகா கேட்க ‘யாரு சுரேஷா?’ மதன் கேட்க ‘உன் தங்கச்சி, சுரேஷ்கிட்ட பொலம்பிக்கிட்டு இருந்தாங்க. நீயும் உன் அப்பாவும் பேசுவதில்லையாம்?’ கார்த்திகா கேட்க ‘என் கதைய விடு, உன் கதைக்கு வா?’ மதன் கேட்க ‘என்னன்னு தெரியல, அந்த இன்சிடென்ட்ல இருந்து என் அப்பா யாரையும் பொண்ணு பாக்க கூப்பிடல, வந்தவங்கள கூட பிறகு பார்க்கலாம்னு அனுப்பி வெச்சிட்டதா கேள்விப்பட்டேன்’ கார்த்திகா கூறினாள். ‘நான் பண்ணதுக்கு இன்னேரத்துக்கு உனக்கு கல்யாணம் ஆகி வயிறு வீங்கியிருக்கும்னு நெனச்சிருந்தேன். ஆபீஸ் கான்ப்ரன்ஸ் மீட்டிங்ல உன்ன பாத்தப்பதான் இன்னும் எதுவும் நடக்கலைன்னு தெரிஞ்சிக்கிட்டேன்’ மதன் கூறினான்.

‘ஆஸ்பிட்டல்ல சுரேஷ் அம்மா முன்னாடி என்ன வெச்சு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தீங்க இல்ல? ரெண்டு பேரயும் தொடப்பக்கட்ட எடுத்து நாலு சாத்து சாத்தலாமான்னு வந்துச்சு. சுரேஷ் அம்மா இருந்ததால அடக்கி கிட்டு இருந்தேன். அப்பக்கூட நான் உன் கூட வராததுதான் உனக்கு தப்பா தோணுச்சு இல்ல?’ கார்த்திகா கேட்க ‘என் அப்பா கிட்ட போய் நான் பேச வேணாமா?’ மதன் கேட்க கார்த்திகா கடலை பார்க்க ஆரம்பித்தாள். மதன் மீண்டும் மௌனமானான். ‘எனக்கு உன் அப்பா அம்மாவ பகச்சிக்கிட்டு உன்ன கட்டிக்க துளி கூட விருப்பம் இல்லை, அப்பவும் நான் அதைத்தான் சொன்னேன். அந்த காலண்டர் பாத்து தொலைச்சேன், உன் அப்பா வேர அப்படி சொன்னதும் பயங்கரமா டென்ஷனாயிடுச்சு, அவர பத்தி கேள்விப்பட்டதுல இருந்து எனக்குள்ள குற்ற உணர்ச்சி இருந்துக்கிட்டே இருக்கு’ மதன் தன் மனதில் உள்ளதை கூறினான். கார்த்திகா மதனை பார்க்க மதன் கடல் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். சில நெடிகள் மவுனமாக கழிந்தன. ‘அந்த சாப்ட்வேர் நீயே ரெடி பண்ணியா?’ கார்த்திகா கேட்க ‘அது ஒரு சாதாரண மியூசிக் ப்ளே பேக் சர்வர் சாப்ட்வேர், நீ எனக்கு வாட்டர் பாட்டில் வைக்க வரும்போது ஒரு லேப்டாப்ல இருந்தேன்ல, அதுலத்தான் அந்த சர்வர் ரன் ஆகிட்டு இருக்கு. என் மொபல்ல அந்த சர்வர ஆக்‌ஸஸ் பண்ண ஒரு ஆன்ராய்ட் க்ளைன்ட் அப்ளிகேஷன் எழுதி வச்சிருந்தேன். அந்த க்ளைன்ட் மூலம் ஏவி ஸ்ட்ரீம்ஸ அந்த சர்வர் வாங்கி சரண் கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்த மிக்ஸிங் கன்சோலுக்கு அனுப்பும், அப்படித்தான் கயல் கூட நாம பேசினது ப்ராட்காஸ்ட் ஆச்சு’ மதன் விலக்கினான். ‘அவர் பேர் சரணா?’ கார்த்திகா கேட்க ‘ஆமாம், ரொம்ப ஜாலியான பையன், இன்னும் ஸ்கூல் கூட முடிக்கல, ஆனா அவன் அண்ணனுக்கு சைட்ல வேலை செய்கிறான். இந்த ஏவி இன்ஸ்ட்ருமென்ட்ஸ் எல்லாம் அவன் அண்ணனோடதுதான்’ மதன் சரணை பற்றி கூறினான். ‘இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் எல்லாம் அவங்களோடதுதான் ஆனா அத எங்க வைக்கனும் எப்படி வைக்கனும்னு நீதான் டிசைன் பண்ணியாமே, காலையில மரத்துல தொங்கிக்கிட்டு இருந்தியாமே?’ கார்த்திகா சிரித்தபடி கேட்க ‘டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்ஸ்மா, கண்ட எடத்துல வைக்கக்கூடாது, கரெக்டா வெச்சாத்தான் அதுக்கு உண்டான எஃபக்ட் கிடைக்கும். இன்னைக்கு ப்ளே பண்ண ஏஆர்ஆர் பிஜிஎம் எல்லாம் கேட்க எப்படி இருந்துச்சு, அதுக்கு காரணம் இந்த சவுண்ட் சிஸ்டம் தான்’ மதன் விலக்கினான். ‘உன்மை தான், அதுவும் நாலு பக்கமும் இருந்த ஒஎல்இடி ஸ்க்ரீன்ஸ்ல வந்த விசுவல்ஸ், டிரைவின் தியேட்டர்ல படம் பார்த்த மாதிரியே இருந்துச்சு. கயல், குரு, நாம எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தது ஸ்க்ரீன்ல வந்தப்ப பார்க்க செமையா இருந்துச்சு, ரொம்ப தேங்க்ஸ், இப்படி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொண்டு வந்ததுக்கு’ கார்த்திகா மதனை பாராட்டினாள். ‘நாம கிப்ட் கொடுத்தவுடனே முடித்திருக்கலாம், தேவையில்லாம பாட்டு பாடி, எமோஷனல் ஆகி, இப்ப இங்க உட்கார்ந்து கிட்டு இருக்கோம்’ மதன் நடந்ததை யோசித்து வெளியில் வேதனைப்பட்டாலும் நடந்தது ஒருவிதத்தில் நல்லதுக்குத்தான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான். மதன் இதை கூறியவுடன் அதே சிந்தனை கார்த்திகாவின் மனதிலும் தோன்றியது, இருவரும் சிறு புன்னகையோடு கடல் அலைகளை பார்த்து ரசிக்க தொடங்கினர். மீண்டும் சில வினாடிகள் மௌனமாய் கடந்தன.

‘யாராவது லினக்ஸ் சம்மந்தப்பட்டது ஏதாவது சின்னதா கேட்டா கூட அவங்க கிட்ட மணிக்கணக்கா உட்கார்ந்து பேச ஆரம்பிச்சிடுவேன். எனக்கே தெரியும் ஒரு சில பேர் பல்ல கடிச்சிக்கிட்டு கேட்டுக்கிட்டு இருக்காங்கன்னு, ஒரு சில பேர் ஏன்டா இப்படி பிளேடு போட்ரன்னு டைரக்டாவே கேட்பாங்க’ மதன் கடல் அலைகளை பார்த்துக்கொண்டே கூற தொடங்கினான் ‘அப்ப எல்லாம் நான் ஏன் இப்படி பேசுறேன்னு எனக்கே கடுப்பா இருக்கும், நீ என் லைஃப்ல வந்து நான் பேசுறது ரசிச்சி கேட்கும்போதுதான் எனக்கே கான்பிடன்ட் வந்தது, நான் கரட்டாத்தான் பேசுறேன் மத்தவங்க தான் ஒழுங்கா கேட்கலைன்னு. நீ இல்லாம வேற ஒருத்தி வந்து நான் பேசுறது கேட்டுட்டு உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரனுக்கு வாங்கப்பட்டுட்டோமோன்னு வேதனப்படப்போரா, அத நெனச்சாத்தான் கல்யாணம் பண்ணிக்கவே கொஞ்சம் பயமா இருக்கு, பேசாம அப்படியே இருந்துடலாமான்னு தோனுது’ மதன் தன் ஆழ்மனதில் இருந்ததை கார்த்திகாவிடம் கூறினான். ‘அதனாலத்தான் சாமியார் வேஷம் போட்டுக்கிட்டு பொண்ணு பாக்க போனியா? உன் அப்பா ரெம்ப வருத்தப்பட்டாராம், உன் தங்கச்சி சொல்லிக்கிட்டு இருந்தாங்க’ கார்த்திகா மதனை கிண்டல் செய்தாள். ‘தாடி வந்தா அதுக்கு நான் என்ன பண்றது. அப்ப தாடியோட சாமியார் மாதிரி இருந்தான் பாரு, அவன் தான் உண்மையான மதன். இதெல்லாம் வெறும் வேஷம், சுரேஷ் கல்யாணத்துக்கு போட்டது’ மதன் கூற ‘அந்த சாமியார் பொண்ணு பாக்க போன பொண்ணா நான் இருந்திருக்கனும்’ கார்த்திகா வெட்கத்துடன் கூற ‘இருந்திருந்தா? பாத்துட்டு என்ன சொல்லியிருப்ப?’ மதன் கேட்க கார்த்திகா வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே கடலில் தவழும் நிலவை பார்த்தாள். நிலவின் அழகை போல் கார்த்திகாவின் முகமும் வெட்கத்தில் அழகானது. ‘அதான் வாய் வரைக்கும் வந்திடுச்சில்ல, சொல்றதுக்கென்ன?’ மதன் கார்த்திகாவை பார்த்து புன்னகையுடன் கேட்க கார்த்திகா மதனை பார்த்துக்கொண்டே இருந்தாள். மதன் மெதுவாக எழுந்து உட்கார்ந்திருந்த கார்த்திகாவின் முன் வந்து தன் இரண்டு கால்களையும் பின்னால் நீட்டியவாறு மடக்கி முட்டியிட்டு ‘இந்த சாமியார கட்டிக்க சம்மதமா?’ என்று கேட்டவாறு தன் இரு கைகளையும் நீட்டி கார்த்திகாவின் பதிலுக்காக காத்திருந்தான். கார்த்திகாவின் கண்கள் மதனை பார்த்தவாறு இருந்தது. மதன் கார்த்திகாவின் வாழ்வில் வந்ததில் இருந்து நடந்த முக்கிய நிகழ்வுகள் அவள் கண் முன்னே வந்து சென்றன. கார்த்திகாவால் மறக்க முடியாத அந்த நாள், கார்த்திகாவும் மதனும் அவள் வீட்டில் படம் பார்த்த அந்த நாளில் கார்த்திகா மதனின் கைகளை பிடித்துக் கொண்டு படத்தில் வந்த கதாநாயகனும் கதாநாயகியும் இறந்ததற்காக ஒரு துளி கண்ணீர் சிந்தியது அவள் கண் முன்னே வந்தது. அவள் பிடித்துக்கொண்ட அந்த கைகள் இப்போது அவளுக்காக காத்திருக்கின்றது என்பதை பார்க்க கார்த்திகாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அப்பெரு மகிழ்ச்சியுடனே கார்த்திகா தன் இரு கைகளையும் மதனிடம் ஒப்படைத்தாள். மதன் கார்த்திகாவின் கைகளை தன் கைகளில் தாங்கியபடி இரு கைகளும் ஒரு சேர அவள் கைகளில் முத்தமிட்டான். தன் கைகளை எடுத்து மதனின் முகத்தில் வைத்து மதனின் நெற்றியில் கார்த்திகா முத்தமிட்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். முன்பு வலது பக்கம் அமர்ந்திருந்த மதன் தற்போது கார்த்திகாவின் இடது பக்கத்தில் வந்து அமர்ந்தான். இருவரும் சில நிமிடங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி இருந்தனர்.

‘அடுத்து உன் அப்பாவா?’ மதன் தன் அடுத்த கவலையை யோசிக்க ஆரம்பித்தான். ‘நான் இருக்கேன்ல, கவலப்படாத’ கார்த்திகா மதனை ஆறுதல் படுத்தினாள். ‘உங்க வீட்ல முடிஞ்சாலும் எங்க வீடு இருக்கும்மா, மெய்னா என் அப்பா’ மதன் கூறும்போதே ‘நீ சொல்ற மாதிரியெல்லாம் உங்க அப்பா இல்ல, என்கிட்ட எவ்ளோ நல்லா பேசினார் தெரியுமா, உன் அம்மாவும் ரொம்ப பாசமா பேசினாங்க. உன் தங்கச்சி, தங்கச்சி ஹஸ்பண்ட், அவங்களோட குட்டி பாப்பா, எல்லோரும் நல்லா பழகுறாங்க’ கார்த்திகா மதனிடம் கூற ‘நீ எப்ப அவங்கல மீட் பண்ண’ மதன் கேட்க ‘உன் தங்கச்சிய தீப்தி மேக்கப் ரூம்லதான் மீட் பண்ணேன். மீட் பண்ணும் போது அவங்க தான் உன் தங்கச்சின்னு கண்டுபிடிக்க முடியல, அவங்க வெளிய போகும்போதுதான் சுரேஷ் உங்க தங்கச்சின்னு சொன்னார். அவங்கல பாலோ பண்ணி போகும்போது என் ரூம் பக்கத்து ரூம் தான் உங்க ரூம்னு தெரிஞ்சது. வாட்டர் பாட்டில் வைக்கிற சாக்குல அப்படியே ஒரு விசிட் அடித்சேன்’ கார்த்திகா கூறினாள். ‘டிடெக்டிவ் வேல எல்லாம் பாத்திருக்க’ மதன் கூற ‘எல்லாம் இந்த சாமியார் தரிசனத்துக்காக தான்’ கார்த்திகா மதனின் தோளில் குத்தினாள். ‘யார் உனக்கு தோள்ல குத்த கத்துக் கொடுத்தாங்க?’ மதன் தன் தோள் பட்டையை தேய்த்தவாறே கேட்க ‘பார்டர்ல இருக்காளே அவதான். செமத்தியா குத்துவா, பயங்கரமா வலிக்கும்’ கார்த்திகா கூற ‘பாவம் மிலிட்டரி’ மதன் சிரித்தான். ‘உன் மொபைல் கொடு நல்ல நல்ல ஏஆர்ஆர் பீஜிஎம்லாம் வெச்சிருக்க, நான் என் மொபைலுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிக்கறேன்’ கார்த்திகா மதனின் மொபைலை வாங்கினாள். ‘மொபைல்ல கொஞ்சமாத்தான் இருக்கு பிளேபேக் சர்வரில்தான் நிறைய இருக்கு’ மதன் கூற ‘பரவால்ல இருக்குறத கொடு’ என்று கார்த்திகா வாங்கி தன் மொபைலுக்கு அனுப்பி கொண்டிருந்தாள். அப்போது அலைபாயுதே மேரேஜ் பிரப்போசல் என்று ஒரு பைல் இருந்தது. அதை கார்த்திகா ப்ளே செய்தாள். அலைபாயுதே படத்தில் முப்பத்து ஓரு நிமிடம் முப்பத்து ஆறாவது நொடியில் வரும் அலைபாயுதே கண்ணா பாடலின் புல்லாங்குழல் பிஜிஎம் இசைக்க தொடங்கியது. சில நொடிகள் கேட்டவுடன் கார்த்திகா ‘இது அலைபாயுதே கண்ணா பாட்டுதானே, எப்படி புல்லாங்குழலுக்கு கன்வெர்ட் பண்ண?’கார்த்திகா மதனை பார்த்து கேட்க ‘இல்லம்மா, இது அதே பாட்டோட ஒரிஜினல் புல்லாங்குழல் பிஜிஎம், அந்த படத்தில் கரைக்டா ஷக்தியோட அக்கா ஷக்தியோட அப்பா கிட்ட ஷக்தியோட லவ்வ பத்தி ஓப்பன் பண்ணுவா, அப்ப லேசா பேக்ரவுன்ட்ல இந்த பிஜிஎம் வரும்’ மதன் விரிவாக கூறினான். இசை சில நெடிகள் நகர்ந்தது, ‘கனிந்த உன் வேனுகானம் காற்றில் வருகுதே’ என்ற வரிகள் வயலினில் வாரும்போது கார்த்திகாவும் ஸ்ருதி மாறாமல் அந்த வரிகளை பாடினாள். மதன் அவள் பாடுவதை கண்டு புன்னகைத்தான். ‘ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா’ என்று கார்த்திகா வயலின் இசைக்கேற்ப பாடிக்கொண்டே மதனின் வலது கையை தன் இரு கைகளால் பிடித்துக் கொண்டு தன் தலையை மதனின் தோளில் சாய்த்துக்கொண்டாள். இசை உடனே முடிந்தது. ‘டக்குன்னு முடிஞ்சிருச்சு?’ கார்த்திகா மதன் கைகளை கட்டிப்பிடித்தவாறே கேட்டாள். ‘பிஜிஎம் நா சின்னதாத்தான் இருக்கும்’ மதன் சிரித்துக்கொண்டே கடல் அலைகளை பார்த்தவாறே கூறினான். மீண்டும் இருவரும் சில நிமிடங்கள் மவுனமானார்கள். ‘என்கிட்ட ஒரு ஷெல் ஸ்கிரிப்ட் பேர்ல ஒரு பைட்தான் சர்வர் கொடுத்து திருட்டுத்தனமா ப்ரொடக்‌ஷன்ல ரன் பண்ண வெச்சல்ல, அத பத்திரமா வச்சிருக்கேன், என் அட்மின வேர பேட் வேர்ட்ல திட்டி இருந்தல்ல?’ கார்த்திகா மதனுடன் நடந்த முதல் உரையாடலை நினைவு கூற்ந்தாள். ‘புரிஞ்சிடுச்சா? போட்டு கொடுத்துடாதம்மா புண்ணியமா போகும்’ மதன் வேண்டினான். ‘பொழச்சி போ, மன்னிச்சிட்டேன். பர்ஸ்ட் டைம் என்ன பாத்து ஒரு பாட்டு பாடினியே நியாபகம் இருக்கா?’ என்று கேட்க ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ மதன் பாடலின் முதல் வரியை பாடினான். ‘அபீஸ்ல நீ என்ன பாத்து பாடுனத எப்ப நினைச்சி பார்த்தாலும் அந்த நாள் எனக்கு தூக்கம் வராது, உன் நியாபகமாவே இருக்கும்’ கார்த்திகா கூற ‘ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?’ மதனும் இப்போது தன் தலையை தன் தோளில் இருந்த கார்த்திகாவின் தலையின் மீது வைத்து கடல் அலைகளை பார்த்தவாறு கேட்டான். கார்த்திகாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் கலங்கியது. அவள் எதுவும் பேசவில்லை.

இருவரும் ஒருவர் தலை மீது ஒருவர் தலை வைத்து கடல் தந்த தென்றல் காற்றில் நிலவு மிதக்கும் அழகையும் அலைகள் வந்து செல்லும் அழகையும் ரசித்தவாறு இருந்தனர். அப்பொழுது மின் விளக்கு எரிந்து கொண்டிருந்த இடத்தில் கார்கள் வந்து நின்றன. முதல் காரில் சுரேஷும் தீப்தியும் இறங்க கடல் அருகே இருவர் ஒருவர் தலை மீது இன்னொருவர் வைத்து உட்கார்ந்து இருப்பது தெரிந்தது. கார்த்திகாவின் அப்பாவும் அம்மாவும் காரை விட்டு இறங்கினர். பின்னால் வந்த காரில் மதன் குடும்பத்தார் வந்து இறங்கினர். ‘நீங்க இங்கேயே இருங்க’ என்று சுரேஷ் மற்றவர்களை கூறிவிட்டு அவனும் தீப்தியும் அந்த இருவரையும் நோக்கி நடந்தனர். ‘என்னடா நடக்குதிங்க?’ சுரேஷ் மதன் கார்த்திகாவின் அருகில் மெதுவாக வந்து கேட்டான். யார் என்று கார்த்திகாவும் மதனும் திருப்ப அங்கே சுரேஷும் தீப்தியும் நின்றிருந்தனர். மதனும் கார்த்திகாவும் சுதாரித்துக்கொண்டு எழுந்தனர். தூரத்தில் இரு குடும்பத்தாரும் நின்றிருந்தது தெரிந்தது. ‘உன்கிட்ட மட்டும் தான்டா சொல்ல சொல்லிட்டு வந்தேன்’ மதன் சுரேஷிடம் கேட்க ‘மயிரு, நீங்க எறங்கி போனதுமே ரெண்டு பேர் வீட்லயும் தேட ஆரம்பிச்சுட்டாங்கடா, எவ்வளவு நேரம் நானும் சமாலிக்கிறது. கரெக்டா ரெண்டு வீட்டுக்காரங்களும் ரூம்ல இருக்கும்போது வந்து சொல்லிட்டார்’ சுரேஷ் மதனை கடித்துக் கொண்டான்.

மதன் பின் கார்த்திகாவின் கைகளை பிடித்து கூட்டிக்கொண்டு கார்த்திகாவின் தந்தையிடம் வந்தான். கார்த்திகாவின் கைகளை அவள் தந்தையின் கையில் ஒப்படைத்தான். ‘உங்க கிட்ட நான் ரெண்டு விஷயம் பேசனும்’ என்று கார்த்திகாவின் தந்தையிடம் கேட்க அவரும் தலையசைத்தார். ‘முதல் விஷயம், என்ன மன்னிச்சிடுங்க’ என்று சொல்லி முடித்தவுடன் மதன் கார்த்திகாவின் தந்தை மற்றும் தாயின் கால்களில் விழ முனைந்தான். ‘நில்லுப்பா, எதுக்கு இப்ப இதெல்லாம்’ கார்த்திகாவின் தந்தை மதனை தடுத்து நிறுத்தினார். ‘நீங்க யாரு, உங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாம உங்கள தப்பா பேசிட்டேன். உங்களைப்பத்தி தெரிஞ்சதும் என்னால நிம்மதியா தூங்க முடியல, என்ன மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க’ மதன் கேட்க ‘அட என்னப்பா, சின்ன விஷயத்துக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, உன் மேல எங்களுக்கு எந்த கோபமும் இல்ல’ கார்த்திகாவின் தந்தை மதனை ஆறுதல் படுத்தினார். ‘இப்ப இரண்டாவது விஷயம், அப்ப கேட்டதைத்தான் இப்பவும் கேட்கப் போறேன். உங்க மகள என்னால ராணி மாதிரி வச்சு பாத்துக்க முடியலன்னாலும் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய கொடுக்க முடியும்னு நம்புறேன். என்ன நம்பி என் கூட உங்க பொண்ண அனுப்புங்க’ மதன் கார்த்திகாவின் பெற்றோர்களை வணங்கி கேட்டுக்கொண்டான். ‘அப்ப கோபப்பட்ட மாதிரி கோபப்படாம நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்பன்னு நம்புறேன், உனக்கு கொடுக்க கூடாதுன்னு எங்களுக்கு நோக்கமில்லை, உனக்கு பிடிச்சா மாதிரி உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கும் என் மகள பிடிக்கனும், அப்படி பிடிக்கலைன்னா என்ன ஆகும்னு எங்களுக்கு கொஞ்சம் தெரியும், அரேன்ஜ் மேரேஜ்ல குலம் கோத்திரம் அப்படிங்கற பிரச்சனையெல்லாம் இருக்காது, லவ் மேரேஜ் அப்படி இல்ல, உங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டு வந்து என் பொண்ண கூட்டிகிட்டு போ’ கார்த்திகாவின் தந்தை மதனை கேட்டுக்கொண்டார்.

மதன் தற்போது தன் தந்தையிடம் பேச வந்தான். மதன் வருவதற்குள் மதனின் தந்தை கார்த்திகாவின் பெற்றோரிடம் சென்றார். ‘வணக்கம் சார், நான்தான் மதன் அப்பா, காஞ்சிபுரத்தில் மளிகை கடை வெச்சிருக்கேன். நீங்களும் என் பையனும் பேசியதை கேட்டேன். நீங்க அனுமதிச்சீங்கன்னா உங்க மக கிட்ட ரெண்டு வார்த்த பேசிக்கறேன்’ மதனின் அப்பா கார்த்திகாவின் அப்பாவிடம் கேட்டார். ‘என்ன சார் இதெல்லாம் கேட்டுக்கிட்டு, கார்த்தி, இங்க வாம்மா’ என்று கார்த்திகாவின் அப்பா மதனின் அப்பாவிடம் கார்த்திகாவை வரவழைத்தார். ‘நீதானம்மா எங்க ரூமுக்கு வந்து தண்ணி கொடுத்துட்டு போன?’ மதன் அப்பா கார்த்திகாவிடம் கேட்டார். கார்த்திகா ஆமாம் என்பது போல் தலை ஆட்டினாள். ‘எவ்லோ நாளா அவன உனக்கு தெரியும்?’ மதன் அப்பா கார்த்திகாவை கேட்க ‘கிட்டத்தட்ட ஒரு வருஷமா தெரியும்’ கார்த்திகா பதில் கூறினாள். ‘அவன புடிச்சிருக்கா?’ மதன் அப்பா கேட்க. கார்த்திகா ஆமாம் என்பது போல் தலை ஆட்டினாள். ‘ஏன்?’ மதன் அப்பா கேட்க கார்த்திகா ‘சொல்லிக்கிட்டே போகலாம், அவர் லினக்ஸ் பற்றி எனக்கு செல்லி கொடுத்தது, கயலுக்காக அருவா எடுத்தது, வெனும்டே என்ன வம்புக்கு இழுக்கிறது, நிறைய இருக்கு’ கார்த்திகா கூறினாள். இதை கேட்டதும் மதனின் தந்தை சிரித்தார். ‘நீங்க ரெண்டு பேரும் பாடுறத இன்னைக்குத்தான் நேர்ல பார்த்தேன், ரொம்ப நல்லா பாடுறீங்க’ மதன் தந்தை இருவரையும் பாராட்டினார். மதனின் தந்தை கார்த்திகாவின் தந்தையை பார்த்து ‘சார், என் ஊர்ல கோயில் அதிகம். அந்த கோயிலுக்குள்ள இருக்குற சாமிய தான் கையெடுத்து கும்பிட்டு இருக்கேனே தவிர சாமி பேரை சொல்லிக்கிட்டு திரியிர எவனையும் நான் மதிச்சதில்ல. ஈரோட்ல பொறந்த அந்த தாடிக்கார மனுஷன் சொன்னத தான் இப்பவும் என் வாழ்கையில நான் பாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். நானே வந்து சொன்னாலும் உன் புத்திக்கு புரியாத எதையும் நம்பாதன்னு சொல்லிட்டு போனார்ல, என் புத்திக்கு குலம் கோத்ரம்லாம் புரியல சார். அதனால நான் அதை பெரிசா எடுத்துக்கிட்டதே இல்ல. உங்க மகள எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க, நாங்க பத்திரமா பாத்துக்கறோம். எப்ப உங்க வீட்டுக்கு வரனும்னு கேட்டு சொல்லுங்க, குடும்பத்தோடு வந்து பொண்ணு கேட்கிறோம்’ மதன் அப்பா கூறியவுடன் கார்த்திகாவின் அப்பா அவரை கையெடுத்துக் கும்பிட்டார்.

அங்கிருந்த எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. கார்த்திகா கண்கள் கலங்க மதனின் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற வந்தாள் ‘அதெல்லாம் வேணாம்மா. நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்’ என்று மதனின் தந்தை கார்த்திகாவை வாழ்த்தினார் ‘பார்போம் சார்’ என்று மதனின் தந்தை கார்த்திகாவின் தந்தையிடம் கூறிவிட்டு விடைபெற்றார். அவர் வரும் பாதையில் மதன் நின்றிருந்தான். மதனிடம் வந்தவர் அவனை பார்த்தார். மதன் தலை குனிந்து நின்றிருந்தான். ‘ஒரு பொண்ண லவ் பண்றேன் அவலத்தான் கட்டிக்கப்போறேன்னு அப்பவே சொல்லி இருக்கலாம்ல, தேவையில்லாம எதுக்கு வேற ஒரு பொண்ணு பாக்க ஒத்துக்கிட்ட?’ மதன் தந்தை மதனை பார்த்து கேட்டார். ‘எனக்கே அவ இப்பத்தான் ஓகே சொன்னா’ என்று மதன் முனுமுனுத்தான். ‘என்னது?’ என்று மதன் அப்பா கேட்க ‘ஒன்னும் இல்லப்பா’ என்று மதன் பயந்தவாறு கூறினான். ‘மாப்ள வாங்க போகலாம்’ என்று மதன் அப்பா மதனை பார்த்துவிட்டு மதன் தங்கையின் கணவரை கூப்பிட்டார். ‘நீங்க கார்கிட்ட போங்க மாமா, குழந்தைய கொடுத்துட்டு வந்துடறேன்’ என்று மதன் தங்கையின் கணவர் சொன்னார். மதன் தந்தை காரை நோக்கி நடந்தார். மதன் தன் தாயிடம் வந்தான், அங்கு மதனின் தங்கையும், தங்கையின் கணவரும் நின்றிருந்தனர். ‘யோவ் மச்சான், கங்கிராட்ஸ்யா, சீக்கிரம் எனக்கு மருமகள பெத்துக் கொடு’ என்று மதன் தங்கையின் கணவர் முதலில் மதனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சும்மா இருங்க மாமா’ மதன் தன் தங்கையின் கணவரை பார்த்து கூறினான். ‘ஏன்டா, என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல?’ மதன் தங்கை மதனை அடித்தாள். ‘வீட்ல ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம்ல, அப்பா கேக்குறதும் நியாயம் தானடா, அவர் உனக்காக எவ்வளவு அலைந்தார் தெரியுமா?’ மதனின் தாயார் வருத்தப்பட்டார். ‘நீயும் அப்பா மாதிரியே பேசும்மா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாம்மா என்ன கட்டிக்க சம்மதிச்சா, எதுவும் கன்பார்ம் ஆகாம எப்படிம்மா அப்பா கிட்ட வந்து சொல்ல முடியும்’ மதன் விரிவாகக் கூறினான். ‘கார்த்திகா, இங்க வாங்க, அம்மா பார்க்கனுமாம்’ என்று மதன் தங்கை தூரத்தில் இருந்த கார்த்திகாவை கூப்பிட்டாள். ‘நாங்க வண்டிக்கிட்ட இருக்கோம்’ என்று கூறிவிட்டு கார்த்திகாவின் பெற்றோர் அங்கிருந்து காரை நோக்கி நடந்தனர். கார்த்திகா மதனின் தங்கையிடம் வந்தாள். ‘தீப்தி அக்கா மேக்கப் ரூமில் பாத்தப்ப கூட சொல்லலையே அண்ணி?’ மதன் தங்கை கார்த்திகாவை பார்த்து கேட்க ‘அப்ப நீங்க தான் அவரோட தங்கச்சின்னு தெரியாது நாத்ததாரே, மன்னிச்சிடுங்க’ கார்த்திகாவும் மதன் தங்கைக்கு பதில் அளித்தாள். ‘என் பையன நல்லபடியா பாத்துப்பியா?’ மதன் அம்மா கேட்க ‘நீங்க உங்க மகன நல்லா பாத்துப்பியான்னு கேட்கறீங்க, அவரு, உங்கள நல்லா பாத்துப்பியான்னு கேட்குறாரு. நீங்க கவலையே படாதீங்க அத்த, எல்லாரயும் நல்லபடியா பாத்துக்கறேன்’ என்று கார்த்திகா பதில் அளித்தாள். ‘வாழ்த்துக்கள் சிஸ்டர்’ மதன் தங்கையின் கணவர் கார்த்திகாவை பார்த்து வாழ்த்தினார். ‘தேங்க்ஸ் அண்ணா’ என்று கார்த்திகா கூறினாள். ‘சரிடி குழந்தை புடி, மாமா வண்டி கிட்ட இருக்காரு’ என்று கூறிவிட்டு மதன் தங்கையின் கணவர் அங்கிருந்து நகர்ந்தார். ‘இருங்க நானும் வரேன்’ என்று சொல்லிவிட்டு கார்த்திகாவின் தங்கையும் அங்கிருந்து நகர தொடங்கினார். ‘அப்ப நானும் போயிட்டு வரேன், உங்க வீட்டுக்கு எப்ப வரனும்னு சீக்கிரம் சொல்லி அனுப்புங்க’ என்று மதன் அம்மா கூற ‘கண்டிப்பா’ என்று கூறி கார்த்திகா வழியனுப்பி வைத்தாள். மதனின் தங்கை காரிடம் போவதை கண்ட சுரேஷ், மதன் தங்கையின் கணவரிடம் வந்து ‘ப்ரதர், ஒரு சின்ன ரிக்வெஸ்ட், கார்த்திகா பேரண்ஸ கொஞ்சம் பார்ம் ஹவுஸ்ல ட்ராப் பண்ணிட்ரீங்களா. எனக்கு உங்க மச்சான் கிட்ட ஒரு சின்ன வேலை இருக்கு, பின்னாடி வந்துடறோம்’ சுரேஷ் கேட்க ‘அதுக்கு போய் ஏன் கேட்டுக்கிட்டு, நான் கூட்டிட்டு போறேன்’ என்று சொன்னார். ‘அப்படியே மதன் தங்கையையும் நான் வரும்போது கூட்டிக்கிட்டு வரேன், அவங்களுக்கும் மதன் கிட்ட பேச வேண்டி இருக்கு, தப்பா நினைச்சுக்காதீங்க?’ சுரேஷ் கேட்க ‘என் மச்சானுக்கு ஏதோ பெருசா பிளான் பண்ரீங்க, என் குழந்தை இங்க இருக்கட்டுமா? இல்ல கூட்டிட்டு போகவா?’ என்று மதன் தங்கையின் கணவர் கேட்க ‘குழந்தை ஒன்னும் பிரச்சனை இல்ல’ என்று சுரேஷ் கூறினான். அதன்படி மதன் தங்கையின் கணவர் கார்த்திகாவின் பெற்றோரையும் தன் காரில் அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு சென்றார்.

தற்போது அங்கு சுரேஷ், தீப்தி, கார்த்திகா, மதன், மதனின் தங்கை மற்றும் மதன் தங்கையின் குழந்தை இருந்தது. ‘தீப்தி, பாப்பாவ வாங்கிக்கடி’ சுரேஷ் கூற தீப்தி மதன் தங்கையிடம் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள். ‘ஏன்டா, அவ்லோ பெரிய பார்ம் ஹவுஸ்ல, அட்டாச்சுடு பார்க்கெல்லாம் இருக்கு, அங்க நீங்க ரொமான்ஸ் பண்ண இடம் இல்லையா? ரெண்டு வீட்டையும் அலயவட்டுட்டு இங்க ஒருத்தர் தல மேல இன்னொருத்தர் தலை வெச்சிக்கிட்டு நிலாவ ரசிக்கரீங்க’ சுரேஷ் சொல்லிக்கொண்டே தன் வலது கை இடுக்கில் மதனின் தலையை சொருகி, முதுகில் மெத்த ஆரம்பித்தான். ‘கருவாச்சி, நீயும் வந்து சாத்துடி’ என்று சொன்னதும், ‘ஆமாம், என்கிட்ட கூட சொல்லாம லவ் பண்ணான்ல, இந்தா வாங்கிக்க’ மதன் தங்கை சொல்லிவிட்டு மதனை நன்றாக மொத்த ஆரம்பித்தாள். தன் அம்மா தன் மாமாவை மொத்துவதை பார்த்து மதன் தங்கையின் குழந்தை கைதட்டி சிரித்தது. அதை பார்த்து தீப்தியும் கார்த்திகாவும் சிரித்தனர். ‘டேய் இருங்கடா, கேப் விட்டு அடிங்கடா’ அடி தாங்காமல் மதன் கூற சுரேஷும் மதன் தங்கையும் அடிப்பதை நிருத்தினர். ‘இப்பத்தான் நான் உன்ன லவ் பண்றேன்னு ஓத்துக்கிட்டு இருக்கா, இதுக்கு மேல தான் டா நாங்க லவ்வர்ஸ் பண்ற இந்த ரொமான்ஸ் எல்லாம் கத்துக்கணும்’ மதன் சொல்ல சுரேஷும் தீப்தியும் அதிர்ச்சி அடைந்தனர். ‘அப்ப நாங்க வரதுக்கு முன்னாடி நீங்க தல மேல தல வெச்சிக்கிட்டு இருந்ததுக்கு பேரு ப்ரண்ஷிப்? உங்களுக்கு ரொமான்ஸ்னா என்னன்னே தெரியாது?’ சுரேஷ் கடுப்பாகி கார்த்திகாவையும் மதனையும் ஒருசேர கேட்க அப்பாவிகளாக ஆமாம் என்பது போல் இருவரும் தலை ஆட்டினர்.’கல்யாணம் பண்ணிக்கிட்டு வீ ஆர் ஸ்டில் லவ்வர்ஸ்னு சொல்லிக்கிட்டு திரிய போறீங்க?’ சுரேஷ் மீண்டும் மதனையும் கார்த்திகாவையும் பார்த்து கேட்க இருவரும் வழக்கம் போல் மீண்டும் அப்பாவிகளாக தலையசைத்தனர். ‘மவன’ என்று சொல்லிவிட்டு சுரேஷும் மதன் தங்கையும் மறுபடியும் மதனை மொத்த ஆரம்பித்தனர். அடி தாங்காமல் மதன் சுரேஷ் காரை நோக்கி ஓடினான். எல்லோரும் சுரேஷ் காரில் புறப்பட்டு பார்ம் ஹவுஸ் வந்து சேர்ந்தனர்.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: