Collabora Online எனும் திறமூல கருவியின் மூலம் எந்த வகையான ஆவணத்தையும் கையாளுக

Collabora Online எனும் திறமூலகருவியானது பொதுமக்கள் தற்போதுபயன்படுத்தி கொள்கின்ற அனைத்து வகையான கோப்புகளையும் வடிவமைப்புகளையும் ஆதரிக்கிறது. Microsoft 365 , Google Workspace போன்ற பல்வேறு அலுவலகத் தொகுப்புகளுடன் சிக்கலான உரை ஆவணங்கள் ,விரிதாள்களைப் பரிமாறிக்கொள்ளும் இந்தCollabora Online இன் திறனைக் இப்போது காண்போம்
Collabora Online என்பது மேககணினி அல்லது வளாககணினிக்கான திறமூல அலுவலகத் தொகுப்பாகும், இது நம்முடைய தனியுரிமையைப் பாதுகாக்கின்றது அதனோடு நம்முடைய தரவின் முழுக் கட்டுப்பாட்டையும் நாமே வைத்திருக்க நம்மை அனுமதிக்கிறது. கேம்பிரிட்ஜில் உள்ள Collabora Productivity Ltd எனும் நிறுவனத்தாரால் இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளது, இதன் தன்னார்வகுழு உலகெங்கிலும் செயல்படுகிறது. Collabora Online ஆனது LibreOffice எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானது மேலும் இது முதன்மையாக Mozilla Public License 2.0 இன்உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பெற்றுள்ளது. Collabora Online ஆனது எந்தவொரு நவீன இணைய உலாவியிலும் இயங்குகின்ற திறன்மிக்கது, அவ்வாறு ஏதேனும் ஒரு இணையஉலாவியில் இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ள விரும்பினால் அதற்காக கூடுதல் செருகுநிரல்களோ அல்லது துணை நிரல்களோ எதுவுமே தேவையில்லை. இது ஒரு சொல்செயலி(ரைட்டர்), விரிதாள் நிரல் (கால்க்), விளக்கக்காட்சி மென்பொருள் (இம்ப்ரெஸ்) , வரைகலை(டிரா) வடிவமைப்பிற்கான பயன்பாடு உள்ளிட்ட முழுமையான மேககணினி அடிப்படையிலான அனைத்து அலுவலக பயனபாடுகளையும் கொண்ட தொகுப்பை இது கொண்டுள்ளது. இதுமேக்ரோக்கள், இயக்கநேர எழுத்துருவை நினைவகத்திற்கு பதிவேற்றம்செய்தல் ,விரிதாள் பயன்பாட்டிற்கான Sparklines ஆதரவு உள்ளிட்ட இணையத்தின் வாயிலாகவே இயக்கி பயன்பெறக்கூடிய பல்வேறு புதிய வசதிகளை கொண்டுள்ளது . இந்த வசதிகள் மைக்ரோசாப்ட் கோப்பின் தற்போதைய வடிவமைப்பபகளின் சிறந்த கையாளுதல் திறனை நீட்டிக்கிறது.
இசைவுஇயக்கத்தன்மை(interoperability) என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?
பொதுவாக, இசைவுஇயக்கத்தன்மை (interoperability)என்பது வெவ்வேறு சாதனங்கள் அல்லது பயன்பாடுகள் ஒன்றுக்கொன்று முரன்படாமல் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கும் தரவைத் தடையின்றி பரிமாறிக் கொள்வதற்கும் உள்ள திறனைக் குறிக்கிறது. அலுவலகத் தொகுப்புகளின் சூழலில், இசைவு இயக்கத்தன்மை பெரும்பாலும் கோப்பு வடிவமைப்புகளைப் பற்றியது. .doc அல்லது .docx, .xls அல்லது .xlsx, .odt அல்லது, .ods ஆகிய வடிவமைப்பிலுள்ள ஆவணங்கள் Microsoft Word மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது LibreOffice மூலம் உருவாக்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல் பயனாளர்கள் தாம் விரும்பும் ஆவணத்தினை எளிதாக திறக்க, திருத்த, சேமிக்க முடியும். இணையத்தின்நேரடி அலுவலக தொகுப்பு களுக்கும் இது பொருந்தும். Microsoft 365, Google Workspace , Collabora Online ஆகியவற்றுக்கு இடையே கோப்புகளை எளிதாக பரிமாறிக்கொள்ள முடியும் என்பதை உறுதிசெய்வதன் மூலம், இசைவு இயக்கத்தன்மையானது உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் ஒத்துழைப்பை எளிதாக்கவும் உதவுகிறது. இணையத்தின் அனைத்துநேரடி அலுவலக தொகுப்புகளையும் நாம் விரும்பியவாறு பல்வேறு வடிவங்களிலான கோப்புகளாக சேமிக்க முடியும். இவ்வாறான ஆவணங்களை பயன்படுத்த விழைவோர் மற்ற அலுவலகத் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சி ஆகியவற்றுடன் பதிவிறக்கம் செய்து பணிபுரிந்தபின் பதிவேற்றம் செய்திடலாம்.
மேக்ரோக்களை நிர்வகித்தல் , மென்மையான ஆவண கையாளுதலை உறுதி செய்தல் மேக்ரோக்களை கொண்ட ஆவணங்கள் பெரும்பாலும் சிக்கல்களை ஏற்படுத்தும். அவை பொதுவாக ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட நிரலாக்க மொழியில் உருவாக்கப்படுகின்றன. கூகுள் விரிதாளில் மேக்ரோக்களை பதிவுசெய்து திருத்துவது சாத்தியம் என்றாலும், மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தொகுப்பிலுள்ள பயன்பாட்டிற்கான விஷுவல் பேசிக்கில் (விபிஏ)செயல்படுத்தப்பட்ட மேக்ரோக்களை மாற்ற முடியாது, மேலும் அவை கூகுள் பயன்பாட்டு உரைநிரல் மூலம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். VBA மேக்ரோக்களுடன் சொல்செயலியின் ஆவணத்தைத் திறப்பது பிழைகளை உருவாக்குகிறது மேலும் மேக்ரோக்களும் புறக்கணிக்கப்படும் அல்லது முடக்கப்படும் எனும் தகவலை பயனாளர்களுக்குத் தெரிவிக்கிறது.
Collabora Online ஆனது மேக்ரோக்களை ஆதரிக்கிறது அவற்றை ஒரு கொள்கலணிற்குள் (container) சேவையாளர் பக்கத்தில் இயக்குகிறது. இந்த வசதி இயல்பாகவே முடக்கப்பட்டுள்ளது, மேலும் நிர்வாகிகள் இதை வெளிப்படையாக coolwsd.xml எனும் உள்ளமைவு கோப்பில் செயல்படுத்த வேண்டும். அதன் பிறகு, ஒரு ஆவணத்தை பதிவேற்றும்போது பயனர்கள் மேக்ரோக்களை அனும தித்திடுமாறு தேர்வு செய்யலாம். இருப்பினும், இதற்காகபல வரம்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தரவுத்தள ஆதாரங்களை அணுகுவது, பிற (வெளிப்புற) ஆவணங்களை அணுகுவது, வெளிப்புற நிரல்களை அழைப்பது, கட்டுப்பாட்டு வடிவமைப்பு களைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளைச் செய்வது சாத்தியமில்லை.ஆயினும் பல ஆண்டுகளாக, Collabora Online ஆல் ஆதரிக்கப் படுகின்ற குறிமுறைவரிகளும் பொருள்களின் அளவும் கணிசமாக அதிகரித்துவருகின்றது,
Collabora Online: இயக்கநேர எழுத்துருவைநினைவகத்திற்கு பதிவேற்றம் செய்தல்
அலுவலக தொகுப்புகளில் இயங்கக்கூடிய மற்றொரு முக்கியமான வசதி எழுத்துருக்கள் ஆகும். ஒரு குறிப்பிட்ட தளத்தில் கிடைக்காத எழுத்துருக்களைக் கொண்ட ஆவணங்களுடன் பணிபுரிவது என்பது பல்வேறு பிழைகளுடன், எதிர்பாராத வடிவமைப்பு மாற்றங்களையும் உள்ளடக்கத்தையும் முழுமையாக இழக்க நேரிடும்.
Google Workspace அல்லது Collabora Online இல் கிடைக்காத இயல்புநிலை எழுத்துருக்களை மட்டுமேMicrosoft Office ஆவணங்கள் பெரும்பாலும் பயன்படுத்தி கொண்டுவருகின்றன. இந்த சிக்கலை தீர்க்க, அலுவலக தொகுப்புகள் அடிக்கடி விடுபட்ட எழுத்துருக்களை மாற்ற பரிந்துரைக்கின்றன. இது பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் சில நேரங்களில் அது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.பதிப்பு 22.05.7 இன் படி (நவம்பர் 2022 இல் வெளியிடப்பட்டது), Collabora Online, விடுபட்ட எழுத்துருக்களைப் பட்டியலிட்டு அதற்கான மாற்றுகளைப் பரிந்துரைக்கின்றது. இது தேவையான எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சேவையாளரில் சேர்க்கலாம். அதன்பின்னர் அவ்வெழுத்துருக்களை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக இந்த சேவையாளரினுடைய செயல்பாட்டினை நிறுத்தம் செய்திடாமலேயே. புதிய எழுத்துருக்கள் சிறந்த இயங்குநிலைக்காக சில நிமிடங்களில் திருத்தும் அமர்வுகளில் கிடைக்கின்றன.
அவற்றை அடைய, ஆவணத்தில் பதிலுதவி செய்யப்படும்போது காணாமல் போன எழுத்துருக்கள் பற்றிய தகவல்கள் API மூலம் கண்காணிக்கப்படும். ஒரு JSON கோப்பு சேர்க்கப்பட வேண்டிய எழுத்துருக்களின் பட்டியலைச் சேமிக்கிறது. coolwsd.xml எனும்கோப்பு (சேவையக பக்க அமைப்புகள்) அந்த JSON கோப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை மாற்றங்களைச் சரிபார்த்து, விடுபட்ட எழுத்துருக்களைப் பதிவிறக்கம்செய்திடுகின்றது.
Sparklinesஐ ஆய்வுசெய்தல்: விரிதாள்களில் தரவுப் போக்குகளைக் காண்பித்தல்
ஸ்பார்க்லைன்கள் என்பது நம்முடைய விரிதாளினுடைய ஒரு பணித்தாளின் குறிப்பிட்ட ஒரு கலனிற்குள் பொருந்தக்கூடிய சிறிய விளக்கப்படத்துடன், தரவுகளின் போக்குகளைக் காட்சிப்படுத்துகிறது. அந்த மீச்சிறு வரைபடங்கள் கோடுகள், பட்டைகள், நெடுவரிசைகள் உட்பட வெவ்வேறு வடிவங்களில் வருகின்றன. இவை வெவ்வேறு வண்ணங்களையும் கிடைமட்ட/செங்குத்து அச்சையும் ஆதரிக்கின்றன. முடிந்தவரை அதிகமான தரவைக் காட்டுகின்ற உரை ஓட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பெரிய விளக்கப்படங்களைப் போலன்றி, இவை முக்கிய மதிப்புகளுக்குக் குறைக்கப்பட்டு, பொதுவாக அதே கலணில் தரவுக்கு அடுத்ததாக அல்லது பின்புலத்தில் வைக்கப்படுகின்றன. ஸ்பார்க்லைன்கள் பொதுவாக ஒரு கலணிற்கு மட்டுமென்றே வரையறுக்கப் படுகின்றன, ஆனால் ஒரே தரவு வரம்பையும், பதில்செயலை செய்வதற்கான பண்புகளையும் பகிர்ந்து கொள்கின்ற பல ஸ்பார்க்லைன்களை ஒருகுழுவாக ஒன்று சேர்க்கமுடியும்.
ஸ்பார்க்லைன்கள் ஒரு சிறிய குறிப்பு , போக்குகள், வடிவங்கள், புள்ளிவிவர முரண்பாடுகள், அதிகரிப்பு , குறைப்பு ஆகியவற்றை விளக்கமளிப்பதற்கு விரைவான வழியை வழங்குகின்றன. அவற்றுள் வகைகள் பின்வருமாறு:
• வரி விளக்கப்படம்: இடமிருந்து வலமாக வரிகளின் பிரிவுகள் மூலம் புள்ளிகளை இணைக்கிறது மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மாறுகி்ன்ற தரவைக் காண்பிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
•பட்டைவிளக்கப்படம்: கிடைமட்டமாக சீரமைக்கப்பட்ட பட்டைகளைப் பயன்படுத்தி தரவின் வரைகலைப் பிரதிநிதித்துவமாகும், பெரும்பாலும் எண்களிலான தரவுகளை ஒப்பீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
• நெடுவரிசை விளக்கப்படம்: மதிப்புகளின் வரிசையை ஒன்றோடொன்று ஒப்பிடுவதற்கு ஏற்றது; நெடுவரிசைகள் செங்குத்தாக உள்ளன, அவற்றின் நீளம் தரவின் ஒப்பீட்டு அளவு/மதிப்பைக் குறிக்கிறது. வெவ்வேறு வகைகள் அல்லது குழுக்களின் தரவைக் குறிக்க நெடுவரிசை விளக்கப்படங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
ஸ்பார்க்லைனை உருவாக்க, செயல்பாட்டிற்கான உள்ளீட்டு தரவு வரம்பை முதலில் வரையறுத்திடுக (ஒரு நெடுவரிசை அல்லது கிடைவரிசையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கலண்கள்). ஸ்பார்க்லைன் எங்கு தோன்ற வேண்டும் என்பதை முடிவு செய்திடுக. பெரும்பாலான விரிதாள் பயன்பாடுகளில், அதன் பண்புகளை சரிசெய்ய, விளக்கப்பட வகையைத் தேர்ந்தெடுத்து, வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க, மீச்சிறுவிளக்கப்படத்தில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் இந்த பயன்பாடானது இதற்காகவென தனி உரையாடல் பெட்டியை வழங்குகிறது, இது மீச்சிறு விளக்கப்படங்களின் பாணியை எளிதாகவும் காண்பதற்கு வசதியாகவும் மாற்றுகிறது. அலுவலகங்களுக் கிடையில் ஸ்பார்க்லைன்களுடன் ஆவணங்களை பரிமாறிக்கொள்ளும்போது வரைபடங்கள் அவற்றின் வடிவமைப்பை இழக்காமல் சாத்தியமாக்குகின்றது. Microsoft 365, Google Workspace , Collabora Online ஆகியவற்றிற்கு இடையே விரிதாள்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால், .ods கோப்புகளை Google Sheets சரியாகக் கையாளாது என்பதால், பதிவிறக்கம் செய்தல் ,பதிவேற்றம் செய்தலுக்கு Microsoft வடிவமான .xlsxஐப் பயன்படுத்துவதை உறுதிசெய்துகொள்க.
ஆவண பரிமாற்றம் எளிதானது:Collabora Online ஆனது பல புதிய இயங்கக்கூடிய வசதிகளை வழங்குகிறது, மற்ற அலுவலக தொகுப்புகளுடன் ஆவணங்களை பரிமாறிக்கொள்வதை எளிதாக்குகிறது. மேக்ரோ ஆதரவு, இயககநேர எழுத்துருக்களை நினைவகத்தில் பதிவேற்றம்செயதல் எதிர்பாராத வடிவமைப்பு மாற்றங்களைத் தவிர்த்து, தடையற்ற ஆவணக் கையாளுதலை உறுதி செய்கின்றன. அலுவலக பணியை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்த Collabora Online எனும் மேககணினி வாயிலான அலுவலகபயன்பாட்டினைப் பயன்படுத்திகொள்க.

%d bloggers like this: