Open Source Software

களை கட்டிய கட்டற்ற மென்பொருள் திருவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

எப்படித் தொடங்கினோம்? முதன்முதலில் கட்டற்ற மென்பொருளுக்கு என நிகழ்வு ஒருங்கிணைக்கலாமா என தமிழறிதத்தின் செயலாளர் சரவண பவானந்தன் ஐயா தமிழ் இணையம் 100 நிகழ்ச்சியில் கேட்டார். கணியம் சீனிவாசன், இங்கே இருக்கிறார், அவரிடம் கேளுங்கள் என்று சொன்னேன். அன்று விழுந்தது தான் இவ்விதை! அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக, சரவண பவானந்தன் ஐயா, சீனிவாசனிடம் கேட்டுக் கொண்டே…
Read more

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம்….
Read more

Web Development Fundamentals – இணைய வழிப் பயிற்சி

அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம், எதிர்வரும் தொழில்நுட்ப உலகம் இணையம் மற்றும் தொடர்பியல் சார்ந்து பல வளர்ச்சிகளை கட்டமைக்கவுள்ளது. அதற்கான மனிதவளங்களை மேம்படுத்திட பல அரங்கங்களும் தயாராகிவருகின்றன. நம் முன்னெ இருக்கும் இந்த தொழில்நுட்ப கற்றலுக்கான போட்டியில் உங்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டி நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய Chiguru Colab நிறுவனத்தின்…
Read more

எளிய தமிழில் Computer Vision 18. எந்திரனுக்குப் பார்வை மென்பொருளாக ஓபன்சிவி

ராஸ் (ROS) தொகுப்பில் கணினிப் பார்வைக்கு ஓபன்சிவி (OpenCV)  ராஸ் (Robot Operating System – ROS) என்பது எந்திரன்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டற்ற திறந்தமூல இயங்குதளத் தொகுப்பு. இது ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்கு மட்டுமல்லாமல் வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் எந்திரன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முதன்மை கணினிப் பார்வை மென்பொருளாக கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவியைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்….
Read more

எளிய தமிழில் Computer Vision 11. படங்களை வகைப்படுத்தல் (image classification)

“ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது (A picture is worth a thousand words)” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது பக்கம் பக்கமாக எழுதிப் புரிய வைக்கக் கடினமான ஒரு சிக்கலான கருத்தை ஒற்றைப் படத்தில் தெரிவிக்க முடியும் என்பதே இதன் பொருள். ஆனால் கணினிகளைப் பொறுத்தவரை, அவை ஒரு படத்தில்…
Read more

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள் அல்லவா! அதனால் பலரும் பங்களிக்க வருவார்கள். அப்படிப் பங்களிக்க வருபவர்களுக்கு உதவியாக, 1. மென்பொருள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? 2….
Read more

விசுவல் ஸ்டூடியோ கோடியம் – கோட் – வேறுபாடு என்ன?

விசுவல் ஸ்டூடியோ கோட்(Visual Studio Code) என்பதன் திறந்த மூல வடிவம் தான் விசுவல் ஸ்டூடியோ கோடியம்(Visual Studio Codium) .  இல்லையே! விசுவல் ஸ்டூடியோ கோட்(VS Code) என்பதே கட்டற்ற மென்பொருள் தானே! என்று யோசிப்பவர்களா நீங்கள்! நானும் உங்களைப் போலத் தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையில் விசுவல்…
Read more

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு – மாநாட்டுக் குறிப்புகள்

இரண்டு நாட்களாக இயங்கலையில் நேரலையில் களை கட்டியிருந்த கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு இன்று மாலையுடன் இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டுக் குறிப்புகள்: 1) திறமூலத் தமிழ் நிரல் தொகுப்பில் தொடங்கிய அமர்வுகள், தமிழ் இணையக் கல்விக் கழக அமர்வில் நிறைவடைந்தன. மொத்தம் பதினோரு அமர்வுகள். 2) ஒவ்வோர் அமர்வும் தித்திக்கும் தேனாக இருந்தது. நேரலையில்…
Read more

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல்…
Read more

எளிய தமிழில் Computer Vision 1. ஐம்புலன்களில் கண்களே முதன்மை!

ஐம்புலன்களில் கண்களை நாம் உயர்வாகக் கருதக்காரணம் நம் வேலைகளைச் செய்யவும், பல இடங்களுக்குச் சென்று வரவும், எழுதப் படிக்கவும் பார்வை இன்றியமையாததாக உள்ளது. மற்ற எல்லாப் புலன்களையும் விட கண்ணால் பார்க்கும் தகவல்களை செயலாக்கவும் சேமிக்கவும் நம் மூளை அதிக இடத்தை ஒதுக்குகிறது. ஆனால் அது ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கும்வரை நாம் நம் கண்களின் அருமையைப்…
Read more