kaniyam foundation

நிகழ்வுக் குறிப்புகள் – சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் கணியம்

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவில் உத்தமம் சார்பில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் மற்றும் மின்ஊடகங்களில் போலிச் செய்திகளை கண்டறிதல் எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கணியம் அறக்கட்டளை சார்பாக திரு. செல்வமுரளி அவர்கள் கலந்துகொண்டு, தமிழில் கட்டற்ற மென்பொருள், கட்டற்ற மென்பொருளின் வழியாக தமிழ்…
Read more

கோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்

நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும்…
Read more

பைதான் நிரலாக்கப் பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்

24.03.2019 அன்று பைதான் பயிற்சி இனிதே நடைபெற்றது. 9 பேர் கலந்து கொண்டனர். நித்யா எளிய முறையில் பைதான் அடிப்படைகளை விளக்கினார். பின்வரும் பைதான் கூறுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பைதான் நிறுவுதல் Loops Conditional Operations Strings List Tuple File I/O கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி   நன்கொடை விவரங்கள் – வரவு…
Read more

சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு

சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும். ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு…
Read more

தமிழில் பைதான் நிரல் மொழி – செய்முறைப் பயிற்சி – மார்ச்சு 24 2019 – தாம்பரம், சென்னை

பைதான் நிரல் மொழி, கற்க எளிதானது. எல்லாத் துறைகளுக்குமான நிரல்கள் எழுதும் திறன்கள் கொண்டது. கணியம் அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு தொடர் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்த உள்ளோம். முதல் பயிற்சியாக பைதான் மொழி. இப்பயிற்சிக்கு பைதான் மொழி கற்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – மார்ச்சு 24, 2019 ஞாயிறு நேரம் – காலை…
Read more

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய…
Read more

கணியம் அறக்கட்டளை பெப்ரவரி 2019 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை பெப்ரவரி 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,…
Read more

NLP பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை – நிகழ்வுக் குறிப்புகள்

கணியம் அறக்கட்டளை  சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 05.02.2019 இயல்மொழி ஆய்வுக் கருவிகள்  பயிற்சிப் பட்டறை (Natural Language Processing Workshop) நடத்தப்பட்டது. திரு. இலட்சுமிகாந்தன், இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட மாணவர்கள் ஏற்கெனவே பைதான் மொழி கற்றிருந்ததால், நேரடியாக NLTK, SpaCy பைதான் நிரல் தொகுதிகள் வழியே பயிற்சி அளிக்கப்பட்டது. பின்வரும்…
Read more

1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

கணியம் அறக்கட்டளை   அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – அட்டைப்படம் உருவாக்கம்

சங்க இலக்கியங்க மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கம் நிகழ்வு பிப்ரவரி 10, 2019 அன்று நடைபெற்றது. கலந்து கொண்டோர் அன்பரசு அன்வர் தகவல் உழவன் த. சீனிவாசன் கருவெளி இராசேந்திரன் (இணைய வழியில்) லெனின் குருசாமி (இணைய வழியில்) முதலில் GIMP பற்றிய அறிமுகம் தரப்பட்டது. பின் ஒரு உதாரண அட்டைப்பட உருவாக்கிய பின், அனைவரும் அட்டைப்படங்கள்…
Read more