Information Technology

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 21. சொல்வலையும் சொல்லின் பொருளில் ஐயமகற்றலும்

அடுத்து வரும் நான்கு வாக்கியங்களைப் பாருங்கள். அவன் வீட்டிற்குச் சென்று இட்லி சாப்பிட்டான். பின்னர் அவன் சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு நாற்காலியில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து, அவன் இருக்கையில் இருந்து எழுந்தான். அவன் படுக்கைக்குச் சென்றான், சில நிமிடங்களில் அவன் சத்தமாகக் குறட்டை விட்டான். இயல்மொழி செயலாக்கத்தில், வாக்கியங்களின் பொருளை அறிய கணினி…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 20. தமிழின் தனித்தன்மைகளை வைத்துக் குறியிட்ட உரைகள் தேவையைக் குறைக்க முடியுமா?

சொல்வகைக் குறியீடு ஒரு சவால் மிகுந்த சிக்கலான பணியாகும். ஏனெனில் அகராதியில் இல்லாத தனிப்பெயர்ச்சொற்கள், மற்ற மொழிச் சொற்கள், மாற்று எழுத்துக்கோர்வை, எழுத்துப் பிழைகள், தெரியாத சொற்கள் போன்றவை வரலாம். இயந்திரக் கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்துக்குப் பல சொல்வகைக் குறியீடு செய்யும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இயந்திரக் கற்றல் நுட்பங்களுடன், விதிகள் சார்ந்த அணுகுமுறைகளைக் கலந்தும்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 19. வாக்கியக் கூறு பிரித்தலும், பெயரிட்ட உருபொருள் அடையாளம் காணுதலும்

நாம் எண்ணங்களை சொற்களாலும் வாக்கியங்களாலும் வெளிப்படுத்துகிறோம். எல்லா மொழிகளும் சொற்களையும் வாக்கியங்களையும் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை பல்வேறு வழிகளில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. தொடரியல் (syntax) தொடரியல் என்பது சொற்களை வைத்து எவ்வாறு வாக்கியங்களை அமைக்கிறோம் என்ற வாக்கியக் கட்டமைப்பு ஆய்வு. தமிழ் இலக்கணப்படி எழுவாய் என்பது ஒரு வாக்கியத்தில் செயலைக் காட்டும் சொல்மீது “யார், எது, எவை”…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 18. சொல்வகைக் குறியீடும் குறியிட்ட உரைத்தொகுப்புகளும்

பேச்சறிதல், இயற்கை மொழி பாகுபடுத்தல், தகவல் பெறுதல் மற்றும் தகவல் பிரித்தெடுத்தல் போன்ற இயல்மொழி செயலிகளில் குறியீடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆங்கிலத்தில் பொதுவாக ஒன்பது சொல்வகைகள் உள்ளன என்று பள்ளியில் கற்பிக்கின்றனர்: பெயர்ச்சொல் (noun), வினைச்சொல் (verb), சுட்டிடைச் சொல் (article), பெயருரிச்சொல் அல்லது  பெயரடை (adjective), முன்னிடைச்சொல் (preposition), பதிலிடு பெயர் (pronoun),…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 17. உரையும் பேச்சும் கொண்ட மொழித்தொகுப்பு

மொழியியல் பகுப்பாய்வுக்கு அடிப்படையாக இருக்கும், உரையும் பதிவு செய்த பேச்சும் கொண்ட தொகுப்புகளை, மொழித்தொகுப்பு (corpus) என்று சொல்கிறோம். ஆங்கில மொழித்தொகுப்புகளின் வரலாறு 100 மில்லியன் சொற்கள் கொண்ட பிரிட்டானிய நாட்டு மொழித்தொகுப்பு (BNC), பர்மிங்ஹாம் மொழித்தொகுப்பு, லன்காஸ்டர் ஆங்கில பேச்சுத் தொகுப்பு முதலிய தொகுப்புகள் ஆங்கில மொழிக்குப் பிரபலமானவை. இருமொழி மொழித்தொகுப்புகள் இரண்டு மொழிகளின் மொழிபெயர்ப்பைக்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 16. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம்

வெளியீடு செய்த எழுத்தாளராக ஆவதற்கு இதுதான் வரலாற்றிலேயே சிறந்த காலம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது உண்மைதான். நூலாசிரியர்கள் முன்னர் இருந்ததை விட வாசகர்களை அடைய அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளனர். மேலும் தங்கள் படைப்புகளை வெளியீடு செய்வதில் முன்னை விட அதிகமான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியமே. மேலும் புத்தகங்களை விநியோகம் செய்வதில்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 15. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழை எளிதாகக் கற்பிக்கலாம்

தமிழ் மொழியில் கற்றுக்கொள்ள அதிகமான எழுத்துகள் உள்ளன என்ற ஒரு கருத்து நிலவுகிறது. தமிழில் 12 உயிர், 18 மெய் எழுத்துகள், ஒரு ஆய்த எழுத்து ஆக மொத்தம் 31 எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்தும் ஒவ்வொரு உயிரெழுத்துடன் சேர்ந்து மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன என்பது உண்மைதான். மெய்யெழுத்தை எழுதி, சேர்க்க வேண்டிய…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 14. உங்கள் பிள்ளைகளின் கணினி ஐபேடா, ராஸ்ப்பெரி-பையா?

வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்புகிறீர்களா? நான் ஏன் ஐபாட் வாங்க மாட்டேன் என்பதற்கு ஒருவர் கூறுகையில், “உங்கள் குழந்தைகளுக்கு ஐபாட் வாங்குதல் என்பது உலகத்தை அக்கக்காகப் பிரித்து தனக்கேற்ற மாதிரி திரும்பவும் முடுக்கிக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது பேட்டரி மாற்றவேண்டும் என்றால் கூட வேலை தெரிந்த மற்றவர்களை…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 13. நிரல் எழுதத் தெரியாதவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் தற்குறிகளா?

ஓலைச்சுவடி காலத்திலும் காகிதம் வந்தவுடனும் தொழில் நெறிஞர்களே எழுத்தாளர்களாக பெரிய மனிதர்களின் ஆதரவில் பணியாற்றினர். இதன் விளைவாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பது வாழ்க்கை முறையாயிற்று. பின்னர் எழுதப்படிக்க இயலாதவர்கள் தற்குறி எனப்பட்டனர். நிரலாக்கம்தான் புதிய எழுத்தறிவா? ஏற்கனவே நிரலாக்கம் என்பது தொழில் ரீதியாக நிரல் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் எந்த…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 12. ஏன் திறந்த மூலமும், திறந்த தரவுகளும், திறந்த ஆய்வும்?

இது நாள் வரை பொதுமக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளும், மென்பொருட்களும் பெரும்பாலும் சமூகம், பொதுமக்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாமலே செய்யப்படுகின்றன. ஆராய்ச்சித் தரவும் மென்பொருட்களும் பெரும் செலவில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதேயில்லை. பெரும்பாலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பிறகு விரைவில் அந்தத் திட்டம் தரவுகளை இழந்து விடுகிறது. மென்பொருட்கள் மக்களுக்குப் பயன்…
Read more