இரா. அசோகன்

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்

கோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்

பேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1

“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும்…
Read more

ஆராய்ச்சி முடிவுகள் திறந்த அணுகலில் பொதுமக்களுக்குக் கிடைக்க டெல்லி பிரகடனம்

இந்தப் பிரகடனம் இந்தியாவில் பொது நலனுக்காக ஆராய்ச்சி வெளியீடுகளின் அணுகலைத் திறக்கப் பாடுபடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களை உள்ளடக்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது. திறந்த அணுகல் இயக்கம், ‘பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி முடிவுகளை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதை’ இலக்காகக் கொண்டது. இந்தப் பிரகடனத்தின் பங்களிப்பாளர்கள் மற்றும் கையொப்பமிட்டோர், திறந்த அணுகல் இந்தியாவின் உறுப்பினர்கள், மற்றும் புது…
Read more

திறந்த மூல வல்லுநர்கள் தேவை மிகவும் அதிகரித்துள்ளது

லினக்ஸ் அறக்கட்டளை மற்றும் டைஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில், பல திறந்த மூல நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டி வரும் எனப் பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதைவிட அதிகமான நிறுவனங்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தங்கள் திறந்த மூல பதவிகளுக்கு நியமனம் செய்ய மெனக்கெடுகின்றனர். இந்த அறிக்கை திறந்த மூல வேலைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்ற ஒரு தளரா நம்பிக்கையை…
Read more

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்கு திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும்

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன. 141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை…
Read more

அமெரிக்காவில் அமோக வளர்ச்சி அடையும் திறந்த மூல வன்பொருள் நிறுவனம்

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வன்பொருள் தயாரிப்பாளர்களில் அதி வேகமாக வளரும் ஒன்றாக ஏடாஃப்ரூட் எப்படி ஆயிற்று? 2005 இல் எம்ஐடி பல்கலைக்கழக பொறியாளர் லிமார் ஃப்ரீடு இதை நிறுவினார். நீங்கள் திறந்த மூல மென்பொருள்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அனேகமாகத் தினமும் பயன்படுத்தி வருவீர்கள். ஆனால் இவர்கள் செய்வது திறந்த மூல வன்பொருள். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 2013 முதல்…
Read more

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது

ஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை…
Read more

கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளி மாணவர் வெற்றி

2017ஆம் ஆண்டுக்கான கூகிள் நிரலாக்கப் போட்டியில் ஹைதராபாத் பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் மேகந்த் காமகோடி வெற்றி பெற்றார். 78 நாடுகளிலிருந்து சுமார் 3500 மாணவர்கள் இந்தத் திறந்த மூல மென்பொருள் போட்டியில் பங்கேற்றனர். 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள். இவர்கள் திறந்தமூல திட்டங்களில் கொடுக்கப்பட்ட…
Read more

உங்கள் முதல் திறந்த மூல பங்களிப்பை ஐந்து நிமிடங்களில் செய்வது எப்படி

உங்கள் நிரலாக்கத் திறன்களை மேம்படுத்த முதல் வழி நிறைய நிரல்கள் எழுதுவதுதான். இரண்டாவது வழி மற்றவர்கள் எழுதிய நிரல்களைப் படிப்பது. திறந்த மூல திட்டங்களில் பங்களிப்பதே இதற்கு மிகச் சிறந்த வழி. நீங்கள் பல்வேறு நிரலாக்கப் பாணிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் எழுதும் நிரலைப் பற்றியும் அற்புதமான விமர்சனங்களைப் பெறுவீர்கள். முதல் பங்களிப்புகள் (First Contributions) என்ற இந்த திட்டம்…
Read more