லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல்

லினக்ஸில் ‘Deja Dup’ உதவியுடன் தரவுகளைக் காப்பெடுத்தல்

~ஆனந்தராஜ்

இயக்குதல்:

நீங்கள் உபுண்டு 11 .10 அல்லது அதற்கு மேல் உள்ள இயங்குதளங்களை இயக்குபவரானால், நீங்கள் இந்த ‘Deja Dup’-ஐ தனியாக நிறுவ தேவையில்லை. நீங்கள் ‘Deja Dup’-ஐ முதன் முதலாக பயன்படுத்தத் தொடங்கும் போது, படத்தில் காட்டியுள்ள படி, இரு பொத்தான்களைக் கொண்ட திரை தோன்றும். இதன் பொதுவான அமைப்புகளின் படி, இந்த மென்பொருளானது Trash மற்றும் Download அடைவுகளைக் காப்பெடுக்க எடுத்துக் கொள்ளாது. அது தவிர கடைசியில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியதெல்லாம் எந்த ஊடகம் வழியே காப்பெடுத்தல் நடக்க வேண்டும் என்பதைத் தான்.

 

‘Deja Dup’-ஆனது FTP, SSH, WebdAV, Windows Share மற்றும் Ubuntu One போன்றவைகளுக்கு ஆதரவளிக்கின்றது. இவ்வாறு அனைத்து அமைப்புகளும் சரியென கண்டபின், ‘Backup now’ எனும் பொத்தானை அழுத்தினால், வேலை தொடங்கி விடும்.

 

 

Periodic Backups:

குறிப்பிட்ட இடைவெளியில் மறுபடியும், மறுபடியும் தானாகவே காப்பெடுக்கும் வசதியினை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். திரையில் தோன்றும் Schedule பட்டனை அழுத்துவதன் மூலம் எப்பொழுது தங்களுக்கு அடுத்த காப்பெடுத்தல் நடக்க வேண்டும் என்பதனை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

மீட்டெடுத்தல் (Restore)

அனைத்து “Backup and Restore” மென்பொருட்களைப் போலவே Deja Dup-ம் தரவுகளை மீட்டெடுக்கும் வசதியினைக் கொண்டுள்ளது. ஆனால் இதன் கடந்த கால காப்புகளிலிருந்து மீட்டெடுக்கும் வசதி, இந்த மென்பொருளைப் பயன்படுத்த வேறு எந்த காரணமும் தேவையில்லை எனும் அளவிற்கு சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.
இதைச் செய்வதற்கு, தேவையான கோப்பின் மேல் ரைட் கிளிக் செய்து ‘Restore from previous version’ என்பதனை தேர்ந்தெடுத்தால் போதும்.

பாதுகாப்பானதா?

‘Deja Dup’ உங்கள் தரவுகளை மறை குறியீடாக (Encrypt) மாற்றித்தான் அனுப்புகிறது. அதனால் நீங்கள் உங்களது கடவுச் சொல்லை (Password) நினைவில் வைத்திருக்கும் வரை உங்கள் தரவுகள் பாதுகாப்பானதே!

ஆங்கில மூலம்: www.freesoftwaremagazine.com/articles/backup_your_data_linux_dejadup

%d bloggers like this: