அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை – பகுதி 3

கோப்பினை அழித்தல்

கடந்த பதிவுகளில் ஒரு கொள்கலனை உருவாக்கி, அதில் கோப்பினைப் பதிவேற்றி, சரிபார்த்தோம். இப்பதிவில், கொள்கலனிலிருந்து பொருள்களை நீக்குவதற்கு DeleteObjectRequest என்ற கோரிக்கையைப் பயன்படுத்தலாம்.

[code lang=”csharp”]
public async Task<bool> DeleteKey(string bucketName, string key)
{
using (var client = ClientFactory.CreateS3Client())
{
var request = new DeleteObjectRequest
{
BucketName = bucketName,
Key = key
};

try
{
var result = await client.DeleteObjectAsync(request);
return result.HttpStatusCode == HttpStatusCode.NoContent;
}
catch (AmazonS3Exception e)
{
return false;
}
}
}
[/code]

கொள்கலனின் பெயர், பொருளின் அணுக்கத்திறப்பு (object key) ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அக்கொள்கலனிலிருந்து, அப்பொருளை நீக்கிவிடுகிறது. இதற்கான பதிலின் நிலைக்குறியீடு NoContent என்றிருக்குமானால், கொடுக்கப்பட்ட கோப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது என்று பொருள்.

கொள்கலனை அழித்தல்

அடுத்ததாக, நாம் உருவாக்கிய கொள்கலனை அழிப்பதற்கான நிரலைக் காணலாம். இதற்கு DeleteBucketRequest என்ற கோரிக்கையைப் பயன்படுத்தலாம்.

[code lang=”csharp”]
public async Task<bool> DeleteBucket(string bucketName)
{
using (var client = ClientFactory.CreateS3Client())
{
var request = new DeleteBucketRequest()
{
BucketName = bucketName
};

try
{
var result = await client.DeleteBucketAsync(request);
return result.HttpStatusCode == HttpStatusCode.NoContent;
}
catch (AmazonS3Exception)
{
return false;
}
}
}
[/code]

இக்கோரிக்கைக்கு, கொள்கலனின் பெயரை மட்டும் அளித்திருக்கிறோம். கூடுதலாக, கொள்கலனின் பிராந்தியத்தையும் குறிப்பிடலாம். ஆனால், நமது கிளையன்ட்டும், கொள்கலனும் ஒரே பிராந்தியத்தில் இருப்பதால், இக்கூடுதல் தகவலை அளிக்கவேண்டியதில்லை.

%d bloggers like this: