Author Archive: இரா. அசோகன்

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 14. உங்கள் பிள்ளைகளின் கணினி ஐபேடா, ராஸ்ப்பெரி-பையா?

வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்புகிறீர்களா? நான் ஏன் ஐபாட் வாங்க மாட்டேன் என்பதற்கு ஒருவர் கூறுகையில், “உங்கள் குழந்தைகளுக்கு ஐபாட் வாங்குதல் என்பது உலகத்தை அக்கக்காகப் பிரித்து தனக்கேற்ற மாதிரி திரும்பவும் முடுக்கிக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது பேட்டரி மாற்றவேண்டும் என்றால் கூட வேலை தெரிந்த மற்றவர்களை…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 13. நிரல் எழுதத் தெரியாதவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் தற்குறிகளா?

ஓலைச்சுவடி காலத்திலும் காகிதம் வந்தவுடனும் தொழில் நெறிஞர்களே எழுத்தாளர்களாக பெரிய மனிதர்களின் ஆதரவில் பணியாற்றினர். இதன் விளைவாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பது வாழ்க்கை முறையாயிற்று. பின்னர் எழுதப்படிக்க இயலாதவர்கள் தற்குறி எனப்பட்டனர். நிரலாக்கம்தான் புதிய எழுத்தறிவா? ஏற்கனவே நிரலாக்கம் என்பது தொழில் ரீதியாக நிரல் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் எந்த…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 12. ஏன் திறந்த மூலமும், திறந்த தரவுகளும், திறந்த ஆய்வும்?

இது நாள் வரை பொதுமக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளும், மென்பொருட்களும் பெரும்பாலும் சமூகம், பொதுமக்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாமலே செய்யப்படுகின்றன. ஆராய்ச்சித் தரவும் மென்பொருட்களும் பெரும் செலவில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதேயில்லை. பெரும்பாலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பிறகு விரைவில் அந்தத் திட்டம் தரவுகளை இழந்து விடுகிறது. மென்பொருட்கள் மக்களுக்குப் பயன்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 11. பெரு நிறுவனங்களின் தமிழ் சேவைகளை நம்பியே இருந்தால் என்ன?

கூகிள், ஆப்பிள், முகநூல், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மொழி பற்றிய சேவைகள் பலவற்றை இலவசமாகத் தருகின்றன. எடுத்துக்காட்டாக கூகிள் தரும் மொழிக் கருவிகளைப் பற்றி விவரமாகப் பார்ப்போம். கூகிள் ஜி-போர்ட் – தமிழில் தட்டச்சும் சொல்வதெழுதலும் ஜி-போர்ட் என்பது ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனங்களுக்காக கூகிள் உருவாக்கிய மெய்நிகர் விசைப்பலகை செயலியாகும். தற்போது…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 10. கணினிக்குத் தமிழ் கற்றுக் கொடுப்போம் வாருங்கள்

பண்டைய காலத் தமிழர் இலக்கியப் படைப்புகளை மனப்பாடம் செய்து காத்தனர் இறையனார் களவியல் அல்லது அகப்பொருள் உரையை உருவாக்கியவர் நக்கீரர். இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு வாக்கில். இவர் தாம் செய்த களவியல் உரையை வாய்மொழியாகத் தம் மகனார் கீரங்கொற்றனாருக்கு உரைத்தார். கீரம் கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்தார். இவ்வாறாக இந்த உரை அடுத்தடுத்து…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 9. உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா?

தாய்மொழியை இழந்தால் தாயை இழந்ததுபோல் பரிதவிப்போம் என்பது மிகையாகாது “பல புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளைப் போலவே வளரும் காலத்தில் நான் தமிழ் பேசவில்லை. என் கல்லூரிப் பருவத்திலும் வயதுவந்த பின்னும் என் பெற்றோரைத் திட்டிக் கொண்டிருந்தேன், ஏன் எனக்குக் குழந்தைப் பருவத்திலேயே தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை என்று. வயது வந்தபின் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது

நுகர்பொருள் ஆய்வக அறிக்கையின்படி இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் சுமார் 200 மில்லியன் உள்ளனர், அவர்களில் 69 மில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 1981 முதல் 1995 வரை பிறந்த தலைமுறையை ஆங்கிலத்தில் மில்லேனியல் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு, ஊடகம், எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களுக்கு அடுத்து வந்த…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 7. “ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்” இதுதான் நியதியா?

ஆக்ஸ்போர்ட் மொழியியல் பேராசிரியர் ஜீன் அட்சிசன் சொல்கிறார், “ஒரு மொழியின் பரவல் அதைப் பயன்படுத்துபவர்களுடைய சக்தியைச் சார்ந்தது, அம்மொழியின் உள் அம்சங்களைப் பொருத்தது அல்ல.” தமிழின் பயன்பாட்டைக் கட்டாயமாக்கும் ஒரு நாட்டைத் தமிழர்கள் அமைத்தால் மட்டுமே தமிழ் வளரவும் செழிக்கவும் முடியும் என்று சிலர் உறுதியாக நம்புகின்றனர். எடுத்துக்காட்டாக இதோ ஒரு கட்டுரை. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி?

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டலான் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படுகிறது. வெற்றிபெற்ற ஆட்சியாளர்களால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட கட்டலான் மொழி இப்பொழுது 9 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. உலகில் 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த மொழியை கற்றுத் தருகின்றன. 400 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் பிரசுரிக்கப்படுன்றன. பேரிடர்களை சந்தித்துப் பிழைத்து…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 5. பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம் தணிய வாய்ப்பு உள்ளதா?

ஆங்கிலம் மற்ற மொழிகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கிறதா? உலகமயமாக்கல், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பேரலைகளின் மேல் ஏறி உலகில் இதுவரை எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. சீன அல்லது ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் வேற்று மொழியாளர்களுடன் பேசும் போது அவர்களும்…
Read more