AcademiX ஒரு அறிமுகம்

காடெமிக்ஸ் குனு / லினக்ஸ் என்பது ஒரு டெபியன் சார்ந்த லினக்ஸ் இயக்கமுறைமை வெளியீடாகும், இது கல்விக்கான பல்வேறு இலவச மென்பொருட்களையும் கொண்டுள்ளது குறிப்பாக இது தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்துநிலையிலும் கல்விபயில்வதற்காவே உதவிடுமாறு இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள திட்டங்கள் அமைந்துள்ளன
அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல், புவியியல், உயிரியல், புள்ளியியல், மின்னணுவியல், அமெச்சூர் வானொலி, வரைகலை, அலுவலகநிருவாகம், நிரலாக்கங்கள் ஆகிய பல்வேறு துறைகளில் இருந்தும் பல்வேறு வகைகளிலான பயன்பாடுகளை நிறுவுகை செய்வதற்கா பயன்பாடுகள் இந்த வெளியீட்டில் உள்ளன. அதுமட்டுமல்லது ஊடாடும் மெய்நிகர் ஆய்வகங்கள், அத்துடன் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மெய்நிகர் நுண்ணோக்கி. இயந்திரமனித ஆய்வகங்கள் ஆகியவை மேலேகூறிய கல்வித் திட்டங்களின் பட்டியலை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்கின்றன.

இதில் ஒரு சிறப்பு பிரிவானது ஆசிரியர்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மேலும் இதிலுள்ள மாணவர் பயன்பாடுகளானது இணையத்தில் நேரடியாக வெளியிடுதல் ஆகிய இரண்டிற்கும் பல்வேறு கட்டுரைகளையும் உள்ளடக்கங்களையும் உருவாக்க அனுமதிக்கின்றது. ஒரேயொரு சொடுக்குதலில் எளிதாக நிறுவக்கூடிய 150 க்கும் மேற்பட்ட கல்வித் திட்டங்களை நிறுவுகை செய்துகொள்ள இது அனுமதிக்கின்றது.

இவைகளுள் ஒரு சில டெபியன் லினக்ஸால் உருவாக்கப்பட்டவைகளாகும், மற்றவை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்டவைகளாகும். Mate அடிப்படையிலான மேஜைக்கணினி சூழலிலான குறைந்த வள பயன்பாடு நவீன உள்ளுணர்வு இடைமுகம் ஆகிய இரண்டிற்கும் இடையே இது ஒரு நல்ல பாளமாக விளங்குகின்றது, இதனால் பழைய கணினிகளில் கூட இந்தவெளியீடுகள் மிகச்சீராக இயங்க முடிகின்ற தன்மையைகொண்டுள்ளன, அதனால் அவை பல்வேறு கல்வி நிறுவனங்களால் பயன்படுத்தி கொள்ளப் படுகின்றன.

இந்த வெளியீட்டில் வழங்கப்பட்ட பெரும்பாலான கல்வி மென்பொருட்கள் குனு ஜிபிஎல் அல்லது பி.எஸ்.டி உரிமங்களின் கீழ் உரிமம் பெற்றவைகளாகும், இதனால் நிலையான பராமரிப்பு செலவு புதுப்பித்தல் செலவு ஆகிய இரண்டு மட்டுமே இந்த அகாடமிக்ஸ் குனு / லினக்ஸ் பயன்படுத்தவிழையும் இறுதி பயனாளரின் செலவுகளாகும். இதன் வெளியீட்டினை நேரடியாக கானொளி காட்சியாகவோ அல்லது வன்ட்டில் நிறுவப்பட்ட ஒரு முழுமையான இயக்க முறைமையாகவோ பயன்படுத்தலாம். இந்த அகாடமிக்ஸ் குனு / லினக்ஸை வகுப்பறையில் ஒரு சோதனை சாலையாகப் பயன்படுத்துவதைகூட சாத்தியமாக்குகிறது.மேலும் விவரங்களுக்கு https://academixproject.com/
எனும்
இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: