லுபன்டு – ஒரு பார்வை (lubuntu)


லுபன்டு‘ (Lubuntu) இயக்குதளத்தை (OS) ஏன் பயன்படுத்த வேண்டும்?

நாம் வாழும் பூமியை சீர்கெடுக்கும், மின் குப்பைகளின் அளவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தகுந்த அளவு வளருவது, கணிணி குப்பைகளாகும். இம்மின்குப்பைகள் அதிகரிப்பதற்கு, பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, குறைந்த அளவு திறன் கொண்ட, பழங்கணிணிகளை பயன்படுத்த இயலாது என்ற எண்ணம். அப்பழங்கணிணிகளையும் திறம்பட இயக்கவல்ல, இயக்குதளங்களில் ‘லுபன்டு’ மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

லுபன்டுவில் என்ன இருக்கிறது?

பெரும்பான்மையோர் கணிணியில் செய்யும் அனைத்தையும் ‘லுபன்டு’வில் செய்யலாம். மின்னஞ்சல் (Mail), அரட்டை (Chat), இணைய உலாவல் (Browsing), வலைப்பூவில் (Blog) எழுதுவது, நிகழ்படங்களைப் (Video) பார்ப்பது, நிழற்படங்களைத் தொகுப்பது (Photo editing) இப்படி பல.

லுபன்டுவைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன், கவனிக்கப்பட வேண்டியன:

  • உங்கள் கணிணியானது, 32 bit கணிணியா? 64bit கணிணியா என்பதை அறிக.

    • 32bit (i386.iso) ஏறத்தாழ அனைத்து intelகணிணிகளிலும் செயல்படும்.

  • கணிணியின், RAM ( நிகழ்நிலை நினைவகம்) அளவை அறிக.

    RAM-க்கு ஏற்ப, மூன்று விதமான ‘லுபன்டு’ வகைகள் உள்ளன.

  • Alternate Install – 512 MB குறைவான RAM உள்ள கணிணி.

மேலும் அறிந்து கொள்ள: Alternate Install , நிகழ்படம் (15நிமிடங்கள்;ஆங்கிலம்)

  • Minimal Install – 64 MB – 128 MB உள்ள மிகப்பழங்கணிணி.

மேலும் அறிந்து கொள்ள: Minimal Install

  • ஆதரவு காலம்:

    பதிப்புகளும் (versions) , அவற்றின் ஆதரவு காலங்களும்

பெயர்

உருவாக்குனரின் ஆதரவு காலம்

Lubuntu 10.04 *

ஏப்ரல், 2015.

Lubuntu 12.04

அக்டோபர், 2013.

Lubuntu 12.10**

ஏப்ரல், 2014.

Lubuntu 13.04

சனவரி, 2014

*10.04 is no longer supported and does not receive updates for desktop, the kernel is still supported until April 2015. எனவே, இப்பதிப்பை தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது. மேலும்,எளிய வழிமுறைகள் குறைவு.

** 12.04உள்ளதில் அதிக ஆதரவு காலமென்பதால், முதலில் இதனைப் பயன்படுத்திப் பார்க்கவும்.

லுபன்டுபதிப்புகளின் செயல்படு திறன்

பெயர்

ISO அளவு

அடித்தளம்

திரைத் தளம்

Linux kernel

CPUபயன்பாடு

குறைந்த பட்ச RAM

Lubuntu 12.04

722 MB

Ubuntu 12.04

LXDE

3.2.0

1-5%

119 MB

Lubuntu 12.10

726 MB

Ubuntu 12.10

LXDE

3.5.0

1-5%

123 MB

Lubuntu 13.04

720 MB

Ubuntu 13.04

LXDE

3.8.0-19

1-5%

103 MB

பதிவிறக்கம்

‘லுபன்டு’வின் பதிப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கானத் தொடுப்புகளைக் கீழே காணலாம்.

Lubuntu 13.04 (13.04 – 3 வகை)

Lubuntu 12.10 (12.10 – 3 வகை)

Lubuntu 12.04 (12.04 – 2 வகைகள்)

Lubuntu 10.04 ( உதவி ) (10.04)

பி.கு:

எந்த பதிப்பைப் பதிவிறக்கம் செய்தாலும், முதலில் Graphical Install என்ற வகையையே தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு மற்றவற்றை முயற்சிக்கவும்.

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: