மேககணினி சேவை வழங்குநர்களைப் பற்றி திறமூல மேம்படுத்துநர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்

 

பொதுவாக மேககணினியில் அடுக்குகளானவை(layer) கணினிகளின் இயக்க நேரத்தில் இணைந்து செயல்படும் வகையில்வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன. அதனை பலர் மேககணினியின் புதிய எல்லையாக கருது வதால்,கடந்த பல ஆண்டுகளாக இவை மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.இருப்பினும்,இது தனிப்பட்ட ஈடுபாட்டுடன் தொழிலகங் களிலும் கணினியிலும் மேககணினியை எவ்வளவு பயன்படுத்துகின்றோம் என்பதை நாம் ஒப்புக் கொள்வதைப் பொறுத்தது ஆகும்.
ஒரு நிரலாளராக இருந்தால்,தன்னுடைய பணியைசெய்வதற்காகவோ அல்லது வேடிக்கையாகவோ கணினியின் மேம்பாட்டை மேகக்கணியில் நகர்த்த விரும்பிடுவோம், ஆயினும் தற்போது ஏராளமான அளவில் மேககணினி வழங்குநர்கள் இருப்பதால் அவர்களுள் எந்த மேககணினி வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும் , குறிப்பாக திறமூல ஆர்வலர்களுக்கு. அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், மேககணினியை தெரிவு செய்வதற்கான நேரடியான வழிகள் பலஉள்ளன.அவ்வாறான தற்போதைய சூழ்நிலையில் திறமூலமேம்படுத்துநர்கள் மேககணினி வழங்குநர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பின்வருமாறு
பொதுவாக மேககணினி சேவை வழங்குநர் தற்போத நாம் பயன்படுத்தி கொண்டு வருகின்ற நம்முடைய இயங்குதளத்தை வரையறுக்க வேண்டியதில்லை
அடுத்ததாக மேககணியில் மென்பொருளை உருவாக்கிடுவதற்காக, நம்முடைய சொந்த miniature எனும் மேககணினியை உருவாக்கலாம் அல்லது வேறொருவரின் மேககணினியின் பயன்படுத்திகொள்வதற்கான நேரத்தை(time) வாங்கலாம் என்றவாறான இரண்டு வாய்ப்புகள் நாம் தெரிவுசெய்வதற்காக தயாராக உள்ளன.
நமக்கென சொந்தமாக உருவாக்குவது மிகவும் வேடிக்கையான செயலாக உள்ளது. நம்முடை தொகுதிக்கு(cluster), போதுமான பங்களிப்பாளர்கள் கொடுக்கப்பட்டால், அது பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால், நடைமுறை வரம்புகள் எதுவுமில்லா மல் மென்பொருள் மேம்படுத்திட வேண்டுமெனில், நம்முடை சொந்த மேககணியை இயக்குவது யதார்த்தமானதாக இருக்காது. ஒரு மேககணினியின் நேரத்தினை வாங்குவதில் நம்முடைய கணினியின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். மேககணினி வழங்குநர் என்பவர் நமக்கும் மெய்நிகர் உள்கட்ட மைப்புக்கும் இடையே ஒரு விற்பனை யாளராவார். நமக்கு கணினியின் பயன்கள் தேவை, எனும்போது அதனை மேகணினி வழங்குநர்கள் நமக்கு விற்க ஆர்வமாக உள்ளனர்.
நாம் ஒரு புதிய மடிக்கணினியை அலமாரியில் இருந்து வாங்குவது போலவே, அதனுடன் வரும் மூடிய மூல bloatware என்பதை நாம் பயன்படுத்திடுமாறு யாரும் நம்மை கட்டாயப்படுத்தப் போவதில்லை. மேககணினியில் இடத்தை வாடகைக்கு எடுக்கும்போது, எத்தனை லினக்ஸ் கொள்கலண்களை(containers) வேண்டுமானாலும் இயக்கலாம், ஆனால் அந்த கொள்கலண்களை உருவாக்கி வரிசைப்படுத்த நாம் பயன்படுத்துகின்ற இடைமுகம் , அந்தகொள்கலண்கள் இணைக்கும் உள்கட்டமைப்பு ஆகியவை திறமூலமாக இல்லாதவைகளாகும். நம்முடைய மேககணினி இடைமுகத்தை OS ஆகவும், நம்முடைய கொள்கலன்களை அப்பாச்சி httpd, Postfix, Dovecot போன்ற பலவற்றின் வாய்ப்பாகவும் கருதலாம்
திறமூல இடைமுகத்தை இயக்க, OpenShift (upstreamOKD செயல்திட்டத்தின் அடிப்படையில்) போன்ற திறமூல பணியகத்தினை இயக்கிடுவதற்காக தேர்வு செய்க AWS (ROSA) இல் சேவை, என்பது நமக்கான வாய்ப்புகளை முதலில் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக அதற்கானமேடையில் வைக்கிறது.
மேககணினி என்பது வேறொருவரின் கணினி, எனவே நம்முடைய வழங்குநரை நம்பி செயல்படவேண்டியநிலையில் நாம் உள்ளோம்
நாம் கணினியில் அல்லது அதைச் சுற்றியுள்ள கருவிகளில் பணிபுரிந்தால், நாம் ஏற்கனவே மேகக்கணியைக் கையாளுகின்றோம் என்பதுதான் நடைமுறயில் உண்மையான அர்த்தமாகும். இணைய உலாவியின் உள்ளே ஒரு பயன்பாடு இயங்கும் போது, அது வேறொருவரின் கணினியில் (அதாவது, ஒரு நிறுவனத்தின் சேவையகங்களின் வரிசையாக) இயங்குகிறது என்ற மேககணினியின் அடிப்படையை புரிந்துகொள்க.
நம்முடைய தனிப்பட்டதரவுகள், நிறுவனதரவுகள், வாடிக்கையாளர் தரவுகள் ஆகியவை யாருடைய வன்பொருளில்உள்ளது என்பதைப் பற்றி சிந்திக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஒரு மேம்படுத்துநராக, பணிப்பாய்வுகளை நாம் உருவாக்கும் கருவித்தொகுப்பைக் கருத்தில் கொள்வதற்கும் காரணம் இருக்கிறது. நாம் ஒரு மேககணினி வழங்குநருடன் பதிவுபெறுவதால், நாம் ஒரு குறிப்பிட்ட கருவித்தொகுப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படலாம் என்று அர்த்தமன்று. நம்முடைய சொந்த மேம்பாட்டு சூழலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என நாம் பயப்படுவதால், சேவையிலிருந்து இடம்பெயர தயங்கக் கூடாது.இவ்வாறான நிலையில் நம்முடைய சூழல், CI/CD pipeline, வெளியீட்டு மாதிரி ஆகியவற்றை நிலையானதாக உருவாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்ற சரியானவழங்குநரைத் தேர்வு செய்க.மேகக்கணியில் மேம்படுத்துல் செய்வது என்பது கணினியில் மேம்படு்த்தல் செய்வதையேக் குறிக்கிறது
இதுவரை மேககணினியில் எதையும் உருவாக்கவில்லை எனில், அது நமக்கு அந்நியமாகத் தோன்றலாம், ஆனால் மேகக்கணியில் உருவாக்குவது நம்முடைய கணினியில் உருவாக்குவதை விட வித்தியாசமானது அன்று. அவ்வாறு ஏதேனும் இருந்தால், பல ஆண்டுகளாக நிறுவுகைசெய்து பயன்பாட்டில் இருக்கக்கூடிய நல்ல மேம்படுத்துதல் நடைமுறைகளை இது செயல்படுத்துகிறது.
அது மேகக்கணினியில் இருந்தாலும் அல்லது விசைப்பலகையில் இருந்து ஒரு அங்குல தூரத்தில் இருந்தாலும், கருத்தில் கொள்ள வேண்டிய மேம்படுத்திடும் சூழல் உள்ளது. இதில் நாம் கண்காணிக்க, நிர்வகிக்க புதுப்பிக்க வேண்டிய நூலகங்கள் நம்மிடம் உள்ளன. தொடரியல், நிலைத்தன்மை, மாறியின் பெயர்கள், செயலிகள் வழிமுறைகள் போன்ற பலவற்றிற்கு உதவும் IDE கூட நம்மிடம் உள்ளது. ஒரு நல்ல மேககணினி வழங்குநர் நாம் பயன்படுத்த விரும்புகின்ற அனைத்து கருவிகளையும் பயன்படுத்தகொள்ள நம்மை அனுமதிக்கின்றார், அவை உரை திருத்தி, கொள்கலன்-நட்பு IDE, அல்லது மேககணி-அறிவு IDE. ஆகியவைகளாகும்
திறந்த தரநிலைகள் இன்னும் முக்கியம்
கணினியின் முனைங்களில்(nodes) நம்மை முட்டாளாக்கிகொள்ள விடாதீர்கள். எண்மங்கள் ஆனவை offsiteஇல் நசுக்கப்படுவதால், நம்முடைய தரவை கருப்புப் பெட்டியில் வைக்க வேண்டும் என்று அர்த்தமன்று. மேகக்கணியின் அடித்தளம் திறந்த நிலையில் இருப்பதை OpenStack உறுதிசெய்கிறது, இது மேககணினி மேம்பாட்டினையும், நிர்வாகத்தையும் முன்னெப்போதையும் விட நம்முடைய மேசைக் கணினிககு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. திறந்த கொள்கலன் முன்முயற்சியின் பணியானது, கொள்கலன்களைத் திறந்த நிலையில் வைத்திருக்க Podman ,LXC போன்ற பயன்பாடுகளை இயக்கியுள்ளது (daemon இல்லாத root இல்லாதது). திறந்த தரநிலைகள் ,திறந்த விவரக்குறிப்புகள் நம்முடைய பணிக்கான சிறந்த தீர்வைத் தேர்வுசெய்ய ஒரு மேம்படுத்துநராக நம்மை அனுமதிக்கிறது.மேகணினி வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது, குறைந்த அளவில் எதற்கும் தீர்வு காண வேண்டாம்.
நாமே ஒரு திறமூலமேககணினியை உருவாக்க முடியும்
மேககணினி ஏற்கனவே இணையத்தின் பெரும்பகுதியை இயக்குகிறது, ஆனால் அது இன்னும் அதிக திறனைக் கொண்டுள்ளது. திறமூல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திறமூல மேககணினி வழங்குநர்களை ஆதரிப்பது முக்கியம், ஆனால் அதை உருவாக்க உதவுவதும் முக்கியம். மேககணினியானது, நமது தனிப்பட்ட கணினிகள், இணையம், நமது அன்றாட சமூககுழுக்ங்களைப் போலவே, அதை உருவாக்குவதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு மட்டுமே திறமூலமாக இருக்கும்.திறமூலத்தைப் பயன்படுத்தி மேகக்கணியில், எல்லா இடங்களிலும் திறமூலத்தை வெளியிடமுடியும் என்ற செய்தியையும் மனதில் கொள்க

%d bloggers like this: